Thursday, May 24, 2007

சென்னை டூ திருச்சி !!!

கோப்ஸ் => கார் ஓட்ட ரொம்பவே புடிக்கும் => அது எவ்வளவு நேரம் ஆனாலும்...
53 நாட்களில், 6000கிமீ. தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தாச்சி.
(முழுக்க முழுக்க நானே ஒட்டுனது.)
About this Esteem Vx :- My close friends car... Fully loaded....
Sport steering wheel with rally art accessories.
Pioneer 6series mp3 player with 12" pioneer woofer with 9 series 4way amp.
Petrol Milage :- 18kms in highways, 12km in city traffic ( with A/c)
Gas Milage :- 22kms in highways , 16kms in city traffic (with A/c)
(no ducalty gas connection, its RTO regirstered / approved )

கதைக்கு போவோம்...

போன வருடம் செப்டம்பர் மாதம், விடுமுறைக்கு சென்றேன்...போய் இறங்கி ஒரு இரண்டு நாள் தங்கச்சி வீட்டுல இருந்துட்டு,அப்புறம் திருச்சி போவதாக இருந்தது.., ஒரு சனிக்கிழமை நண்பர்கள் திருச்சி'ல இருந்து வந்து என்னை கூட்டிட்டு போவதாக சொல்லிட்டாங்க.. (அட, ராக்போர்ட், இல்ல பல்லவன்'ல தனியா வரேன், ரெயில் நிலையத்துல வந்து என்னை பிக்கப் பண்ணிடுங்க'னு எவ்வளவோ சொல்லியும், கேட்க்காம கிளம்பிட்டாங்கே.....)

நான் பிளான் போட்டது, சென்னை'ல இருந்து , லஞ்ச்'க்கு அப்புறம் ஒரு 4pm கிளம்பி, திருச்சிக்கு ஒரு 11pm போயிடலாம்'னு.. ஆனா, திருச்சி'ல உள்ள நம்ம பாசக்கார பய புள்ளைங்க, 7pm உனக்கு ஒரு வெல்கம் பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்கோம் ,(வேற எங்க? அதே "அண்ணாமலை'ல தான்)
சோ ஒழுங்கு மரியாதை'யா அதுக்கு முன்னால வர பாரு'னு ஒரு குண்டை போட்டுட்டாங்கே...
(சனிக்கிழமை'யா வேற போச்சா, அன்பு கட்டளை'ய ஏற்க வேண்டியதா போச்சி......)


சொன்னப்படி என் நண்பர்கள் இரண்டு பேர், திருச்சி'ல இருந்து காலை'ல 7am கிளம்பி விழுப்புரம் ரெயில்வே கேட் கிட்ட 9.15am க்கு வந்துட்டாங்க..(around 140 kms, average speed 100 to130km/hr... early morning no traffic,free road, super power car with super tallented driver (my close friend தான்)).

வழக்கம் போல, விழுப்புரம் ரெயில்வே கேட்'ல ட்ராபிக்... (அடிகடி இந்த ரூட்'ல போறவங்கள கேட்டு பாருங்க).. எல்லாம் சரி ஆகி அங்க இருந்து நண்பர்கள் சென்னை'யை வந்தடைய 12.15pm ஆச்சு.. அப்புறம் வீட்ல சீக்கிரம் போறத்துக்கு மொக்கைய போட்டு, சமாதானம் படுத்தி, ஒரு வழியா 12.40pm க்கு கிளம்பியாச்சி... காரை நானே ஒட்டுறேனு, கிளப்பி அந்த ஏரியா தாண்டுறத்துக்குள்ள , ஏசி கார்'ல, முகம் பூரா வேர்த்துடுச்சி....... பின்ன என்னங்க...இங்க ரெண்டு பக்கமும் சைட்(side) ரியர் வீயூ கண்ணாடி'ல பார்த்தே ஒட்டி பழகி, அங்க சைட் ரியர் வீயூ கண்ணாடி இருந்தும், அதை fold பண்ணிட்டான் என் நண்பன்.... (சென்னை ட்ராபிக்'ல அதை ஒபன் பண்ணிட்டு போன, அதன் தலை'க்கு யாருமே கியாரண்டி கொடுக்க முடியாது.)இருந்தும், அடம் புடுச்சி, ஒரு வழியா அதை ஒபன் பண்ணினா , ரெண்டாவது சிக்னல்'ல ஒரு ஆட்டோகாரார், இறங்கி வந்து பொருப்புணர்ச்சியுடன், அதை திரும்பியும் fold பண்ணிட்டு போயிட்டார்..ஏன்டா'னு கேட்டா, அவருக்கு போக இடைஞ்சலா இருந்ததாம்...........என்னத்த சொல்ல? அந்த gap'la எப்படிதான் போவாங்களோ....( tallented guys drives easy)

அதுக்கு அப்புறம், நான் highways'la ஒட்டிக்கிறேன்'னு நண்பன் கிட்ட காரை கொடுத்துட்டு, சும்மா வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.. (அட 100% figures'a மட்டுமே)

அப்போ மணி 1.50pm ஆச்சி... கூட வந்த நண்பன் சென்னை'க்கு புதுசு'னு எனக்கு, spencers,besant nagar, anna university, IIT,கூவம் எல்லாம் கண்டிப்பா பார்க்கனும்'னு ஒரு புது பிட்'a போட்டுடான்.. எவ்வளவு சொல்லியும் கேட்கல. சரி'னு அவனுக்கு எல்லத்தையும் காட்டிட்டு, அப்புறம், வண்டிக்கு gas fill பண்ணிட்டு வேளச்சேரி concord'la வந்து காரை நான் ஒட்ட ஆரம்பித்த போது, மணி 4pm.
(of course with the side rear view mirrors he he he )

கியர மாத்தி, பிரேக் அடிச்சி, எவன் எங்க வந்து விழுவானோ'னு full concentration'la வண்டி ஒட்டுற சுகம், அது வெளிநாட்டு'ல carpet road'la 200km fast'la ல போனாலும் கிடைக்காது...( i miss them)
(என்ன நான் சொல்லுறது)அப்படி'யே நல்லா கதை பேசிக்கிட்டு ரொம்ப enjoy பண்ணிக்கிட்டு போக்கிட்டு இருந்த போது, SRM college தாண்டி ஒரு 1 km'ல வண்டி'ல இருந்து ஒரு டப், டப், டப்'னு ஒரு சத்தம்..என்ன'னு வண்டிய ஒரம் கட்டி பார்த்த, பின் டயர் ஒன்னு நடுவுல பல்லை காட்டி சிரிச்சிக்கிட்டு இருந்துச்சி...ஆனா பஞ்சர் ஆகல..சரி'னு ஸ்டெப்னி மாத்திட்டு வண்டிய கிளப்பும் போது மணி 5.30pm..
அதுக்குள்ள வீட்ல இருந்து ஒரு 10 போன் கால், திருச்சி நண்பர்களிடமும் 10 போன் கால்..இப்ப தான்டா மேல்மருவத்தூர்'ல இருக்கோம்'னு சொன்னது தான், போட்டு தாழிச்சிடாங்கே... என்னை இல்ல, அந்த மத்த நண்பனை.......

அப்படி இப்படி'னு , எனக்குல் இருந்த திறமை'ய வச்சிக்கிட்டு வண்டிய வேகமா ஒட்டி, திண்டிவனத்துக்கு 6.15pm போயாச்சு.....
எப்படியும் திருச்சிக்கு போக 11 மணி ஆகிடும்'னு நம்ம கூட இருந்த நண்பர்களுக்கு தெரிஞ்சி, saturday night'a கார்'ல கொண்டாடுவோம்'னு ஒரு பழரச கடை முன்னாடி நிப்பாட்ட சொல்லி எல்லதையும் வாங்கி கார்'ல அடுக்கி, விழுப்புரம் போறத்துக்குல்ல, (மீன் கொத்தி வேலை'யை காட்டி), தூங்கிட்டாங்க....

அப்புறம் என்ன, தனிக்காட்டு ராஜா'வா, (ஏய் வண்டி slow பண்னு, ஏய் கியர் ய மாத்து, ஏய் லெப்டு ஒடி'னு எந்த பிக்கலும் புடுங்கலும் இல்லாம) என் இஷ்டத்துக்கு வண்டிய ஒரு Toyota Innova 'voda போட்டி போடாம, அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து திருச்சி போறப்ப மணி 11 ஆச்சி....
(அதுக்குள்ள , ஆயிரத்தெட்டு போன் கால் வந்துடுச்சி.)

சென்னை'ய சுத்தி பார்க்கனும்'னு இருந்த நண்பன், அங்க போன வருத்து எடுத்துடுவாங்க'னு பாதி வழில இறங்கி டவுன் பஸ் புடிச்சிஅவன் வீட்டுக்கு போயிட்டான்.....

அப்புறம் நண்பர்களை பார்க்க போனா,என் வெல்கம் பார்ட்டி நான் இல்லாமையே, சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.... ஆனா, பாசக்கார பயப்புள்ளைங்க, என் தலை'ல அந்த பார்ட்டி செலவை கட்டிட்டாங்க.... அப்புறம் நேரா ரோட்டு கடைக்கு போய், ஒரு கொத்து, ஒரு ஆனியன் முட்டை ஊத்தாப்பம்'ல லைட்டா என் டின்னர முடிச்சிட்டு, பஸ் ஸ்டாண்ட் க்கு போய் டீ கடைல 1 மணி வரை கதை அடிச்சிட்டு வீட்டுக்கு போயாச்சு........

என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்....
(பின்ன என்ன பக்கத்து ஊரானு k4k and யாரும் கேட்க கூடாது)


அவ்வளவு தாங்க.......என் கூடவே நீங்களும் சென்னை டூ திருச்சி வந்து இருப்பீங்க...
ஒழுங்கா, இதை படிச்சிட்டு,

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
கோப்ஸ் போஸ்ட்டுக்கு வழக்கம் போல துப்பனும் காரி'னு,உங்க பொன்னான கமெண்டுகளை போட்டுட்டு உங்க வீடு போய் சேருற வழிய பாருங்க..

வரட்டா...............


cheers..
gops....

Sunday, May 20, 2007

காபி வித் கோபி - My Friend !!!!

இதோ வந்தாச்சி அடுத்த பதிவுக்கு...
back to back coffee with gopi posts......

இந்த வாரம் நம்ம "My Friend" தான் Guest....

1."மை பிரண்ட் => இந்த பெயர் விளக்கத்தை எங்களுக்கு விளங்கப்படுத்த முடியுமா?

//இந்த பெயர் விளக்கத்தை// டிஷ் வாஷர் உபயோகிச்சு விளக்கனுமா? :-P
(இல்ல நீங்க, Scotch Brite கூட use செய்யலாம்..)
//விளங்கப்படுத்த முடியுமா?// என்னாது? வில்லங்க படுத்தனுமா? ஏதோ எனக்குன்னு இருக்கிற சில பெயர்ல இதுவும் ஒன்னு!இதுல ஏங்க உங்களுக்கு இந்த கொல வெறி?
சரி சரி.. இப்போ பாருங்க.. நம்ம எந்த துறைக்கு போனாலும் நண்பர்கள் பல பேர் இருப்பாங்க.. ஆனா இந்த பொறாமை பிடிச்சவங்க எதிரிங்கன்னும் சில பேர் சுத்திட்டு இருப்பானுங்க. இப்போ என் பெயர் "மை ஃபிரண்ட்"ன்னு வச்சிக்கிட்டா என்னத்தான் எதிரியா இருந்தாலும் "மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட்"ன்னுதானே பாசமா கூப்பிட்டாகனும்! அப்போ எனக்குன்னு எதிரிகள் இருக்க மாட்டாங்கன்னு ஒரு நல்லெண்ணம்தான்.
பெரியவங்க கூட சொல்லியிருக்காங்க:
"மை பிரண்ட்ன்னு கூப்பிட சொல்றது ஆசை..
மை பிரண்டுன்னு மட்டும் கூப்பிட சொல்றது பேராசை"ன்னு
அதனால நீங்க என்னை இஞ்சினியர்ன்னு கூட கூப்பிடலாம். :-P

(அட கொல வெறியும் இல்ல, வீட்டுல ஆட்டு கறியும் இல்ல, மை பிரண்ட்'க்கு பதிலா, "Our Friend"nu வச்சி இருந்தா, பக்கத்துல இருக்கிறவங்களும் உங்களுக்கு எதிரி'யா இல்லாம இருந்து இருப்பாங்க.... மிஸ் பண்ணிட்டீங்க)


2. உங்க பிலாக் ஆரம்பத்துல முழுவதுமா,படிப்பு'ஸ், கணித விளையாட்டு,அப்படி இப்படி'னு மொக்கை போட்டு கிட்டு இருந்த நீங்க,எப்படி தமிழ்'ல மொக்கை போடுற அளவுக்கு வந்தீங்க.....?

எல்லாரும் ப்ளாக் வச்சிருக்காங்களே.. ஃபுல் & ஃபுல்லா கம்யூட்டரிலேயே உட்கார்ந்திருக்கோமே! நமக்கில்லைன்னு சொன்னா அது தன்மான குறைச்சலா ஆகிடாதா? நாமளும் ஒன்னு ஸ்டார்ட் பண்ணுவோம்ன்னு ஆரம்பிச்சேன். வீடு கட்டிட்டு வீட்டுல என்ன வைக்கிறதுன்னு தெரியாம ஈ ஓட்டிட்டு இருந்தேன்.(எங்க ஊருல, வடை சுட்டு'டு தான், ஈ ஓட்டிக்கிட்டு இருப்பாங்க) அப்போதான் நண்பர் ஒருத்தரு சொன்னாரு.. நீ பார்க்கிறது, படிக்கிறது எழுதுன்னு.. வந்ததே ஐடியா! நாமளும் படிப்ஸ்ன்னு எல்லாரும் சொல்லணும்ன்னு அங்கேயும் இங்கேயும் G3 பண்ணி ஒட்டிட்டு காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்..
அப்புறம் இதெல்லாம் ஒரு பொழப்பான்னு என் மனசாட்சி கேட்டதும் ப்ளாக் எழுதுறதை நிறுத்திட்டேன்.(இப்போ கேட்குறது இல்லையா?) அதுக்கப்புறம் ஒரு நாள் நெட்ல சுத்திட்டு இருக்கும்போது கார்த்தியோட ப்ளாக் பார்த்தேன். எப்படி இப்படி தமிழ்ல எழுதுறீங்கன்னு கேட்டேன். அவரு உடனே ஒரு ஃபயில்(file) அனுப்பி இதுல டைப் பண்ணுங்க. தமிழில் வரும்ன்னு சொன்னார். கொஞ்சம் தட்டி பார்த்துட்டு பத்திரமா என் கம்யூட்டர் ஓரத்துல வச்சிருந்தேன். விட்டாரா நம்ம கார்த்தி?
ரெண்டு நாள் கழிச்சு ஈமெயில் அனுப்பி ஏன் தமிழில் இன்னும் எழுதலைன்னு கேட்டார்.. அப்படியே விட்டா ஆட்டோ ரிக்ஷாவெல்லாம் அனுப்பிடுவாரோன்னு பயந்துட்டு தமிழிலேயே மொக்க போட்டு உங்களையெல்லாம் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டேன். :-P
(ஏங்க கார்த்தி? உங்களுக்கு இந்த வேலை? அப்படி'னு நாங்க யாருமே கேட்க மாட்டோம்...)


3.நீ நீயாகிய நான் மாதிரி (பில்லு உன் தலைப்பு தான்), கணினி முன்னாலேயே (கதியே, விதியே'னு)உட்கார்ந்து இருக்கீங்களே, எப்படிங்க?

கம்ப்யூட்ட்ர் பின்னாடி உட்கார்ந்தா ஸ்க்ரீன்ல என்ன வருதுன்னு தெரியாதுல. அதான். :-P

வாங்கிக்க கோப்ஸ்...
(இங்க பாருடா, நாங்க எல்லாம் நாற்காலி'ல தான் உட்காருவோம்..)4.உங்கள பிலொக் உலக காமெடி பெயின், மன்னிக்கவும் காமெடி குயின்'னு எல்லாமே சொல்லுறாங்களே. உங்க அமைச்சரவை எப்படி போகுது?

அடடே! நீங்களே சொல்லிட்டீங்களே.. காமெடி painன்னு.. இதுதாங்க நிஜம். இந்த சிங்கங்களின் ஓவர் பாசத்துனால எனக்கும் ஒரு பட்டத்தை கொடுத்துட்டாங்க. ஆனால், இன்னைக்கு வரைக்கும் அதுக்கு நான் தகுதியானவளா இல்லையான்னு திங்கிங்.. திங்கிங்.. & திங்கிங்.. :-?(அட, எதுக்கு இவ்வளவு திங்கிங்? சிங்கம் சொன்னா எல்லாம் சரியா தான் இருக்கும்..... ஏன்னா, சிங்கம் தானே கிங், சோ நோ நீட் டூ திங்.. )

அமைச்சரவையா? நான் என்ன எலி செத்து போச்சு.. ஓப்ஸ் சாரி.. elizebeth ராணியா? சொந்தமா அமைச்சரவை நடத்துறதுக்கு? பி.மு.க-ல செய்தி துறை அமைச்சர்ன்னு ஒரு பதவி கொடுத்திருக்காங்க. அந்த ஆணியே ஒழுங்கா பிடுங்காம டகால்டி கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஒரு வேளை அந்த பதவிலேயிருந்து நம்மளை (ஐ மீன் என்னை) தூக்கிட்டாங்கன்னா, இருக்கவே இருக்கு தனி கட்சி.. தொடங்கிட வேண்டியதுதான்..
ஏன் கோப்ஸ்? நீங்க ஆதரவு தர மாட்டீங்களா என்ன? ;-)

(அட என்னங்க, உங்களுக்கு இல்லாத ஆதரவா....... K4K பிரதர்.... நம்ம பணி இன்னொரு கட்சிக்கும் தேவை படுதாம்.....)


5.கடந்த 6 மாதமா, எந்த திசை திரும்புனாலும், ""மை பிரண்ட் மை பிரண்ட்""னு ரவுண்டு கட்டி எல்லா பிலொக்'லையும் கமெண்ட் மழை பொழிந்து, புழிந்து'கிட்டு இருக்கீங்களே ?

என்னங்க பண்றது? நண்பர்களோட ஓவர் பாசம்தான் இதுக்கு காரணம். யேசுநாதர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?. ஒரு கண்ணத்துல அரை வாங்கினா மறு கண்ணத்தை காட்டுன்னு. அதான், மக்கள்ஸ் எனக்கு ஒரு பின்னூட்டத்தை போட்டா, நான் அவங்களோட பதிவுல ரெண்டா போட்டுட்டு வந்துடுவேன். எப்படி என் பாலிஸி? ;-)
(சூப்பர் பாலிஸிங்க..... ஆனா இதை வெளியே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.... ஏன்னா, எல்லோரும் இனிமேல் உங்க கிட்ட 1 ரூவா கொடுத்துட்டு, 2 ரூவா கேட்டுற போறாங்க....)

அது மட்டுமில்லை.. என் பதிவுலக ஆரம்பக்காலத்துல ஏதோ கிறுக்கிட்டு இருந்தேன். அதுக்கே ஆஹா ஓஹோன்னு பாராட்டி சிலர் பின்னூட்டம் போட்டாங்க. அந்த ஒரு நம்பிக்கையாலத்தான் இன்னவரைக்கும் நீங்க என் கிறுக்கல்களை சகிச்சிக்க வேண்டியதா போச்சு. :-P இதே நம்பிக்கை புதுசா வர்றவங்களுக்கும் போய் சேரணும்ங்கிரதுனால, புதுசா யாராவது எழுதுறாங்கன்னு தெரிஞ்சா அங்கே போய் ஒரு நாலு வார்த்தை பாராட்டிட்டு வந்துடுவேன். :-)
(அடடா, உங்க தங்கமான ஆட்டத்துக்கு (comment), உங்கள வச்சி, "எங்க ஊரு ஆட்டம்" படம் எடுக்கலாம் போல....)

6.காக்கா சங்கம், மன்னிக்கவும் ((ஸ்பெல்லிங் எர்ரோர்) பாப்பா'ஸ் சங்கம்'னு ஒன்னு ஆரம்பித்து, போட்டோ எல்லாம் போட்டீங்களே, அதன் வரலாறு ஆப் இந்தியா, மலேசியா, என்ன?

நாங்க்கெல்லாம் புதுசா பிறந்த பாப்பாக்கள்.. வரலாறுன்னு பார்த்தா அஜித் படத்தைதான் போய் பார்க்கணும்..(ஆமா, வைகை ஆறு'னு பார்த்த அதை மதுரை'ல தான் போய் பார்க்கனும்..அதை'யா நான் கேட்டேன்?) ஓப்ஸ் சாரி.. கொஞ்சம் அவுட் ஆஃப் டாபிக் போயிட்டேன். :-P
பாப்பாங்க ஆரம்பிச்ச சங்கம்ங்கிறதுனால பாப்பா சங்கம்னு சொல்றாங்க.. அது பொய்...ன்னு நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா நாங்க பாப்பாங்கதான்.. இன்னும் மழலை மறக்காத பாப்பாங்க.. கொஞ்சம் பேசக் கத்துக்கிட்டதும் ஒரு மாநாடு போட்டு எங்களுடைய வரலாறுன்னு ஒரு புத்தகம் பப்ளிஷ் பண்றதா இருக்கோம். அதை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.. சரியா? ;-) அதுவரைக்கும் வேய்ட்டீஸ். :-D

(நீங்க ஆரம்பித்த பாப்பா சங்கத்தை பற்றி சொல்லுங்க'னு சொன்னா, நீங்க உங்க ஏரியாவுல உள்ள ஸ்கூல் போற பாப்பா'வ பற்றி சொல்லிடீங்க? சரி சரி வந்த வரைக்கும் லாபம்.. அந்த புத்தக வெளியீடுக்கு என்ன கூப்பிடுங்க........ சரியா?)

7.ஜில்லு'னு ஒரு மலேசியா => இந்த தலைப்பு வச்சி இருக்கீங்களே, எப்படிங்க, உங்க ஊரு'ல எப்போதும் ஏசி ஓடிக்கிட்டே இருக்குமா?

எந்த ஊர்லேயும் ஏசி ஓடாதுங்க. அதுக்குதான் கால் இல்லையே! :-P
(அப்போ லைட் மட்டும் எரியுது'னு சொல்லுறீங்க ? அப்போ நெருப்பு இருக்கா அதுல?)
ஜில்லுன்னு ஒரு மலேசியா பதிவுகளை படிச்சு நீங்க ஜில்லுன்னு நாலு நாலு கமேண்ட்ஸ் போட்டிங்கன்னா, ஏசி ஆன் பண்ணாமலேயே எங்க மனசும் ஜில்லுன்னு குளிரும்ன்னு ஒரு நப்பாசையிலதான் இந்த பெயர் வச்சிருக்கோம். :-) என்ன நாலு கமேண்ட்ஸ் போடுவீங்கல்ல?

(நாங்க எங்கையும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டோம், ஆனா போனால், பட்டைய கிளப்பாமா, வந்தது இல்லை.......சொல்லிட்டீங்க இல்ல, பிரதர், நோட் த பாயிண்ட்)

8.கொஞ்ச நாளா, உங்க பேட்டிங் சராசரி குறைந்து காண படுகிறதே......ஏன்?

அது ஒன்னும் இல்லைங்க. விளையாடுறதுக்கு எந்த மைதானமும் (மைதா மாவு இல்ல கோப்ஸ்) free-யா இல்ல. நேத்துதான் ஒன்னு கிடைச்சது.. புகுந்து விளையாடி 200 அடிச்சோமே! பார்க்கலையா நீங்க? அப்படின்னா இதோ இங்கே போய் பாருங்க பாசக்கார குடும்பம் எப்படி எங்க பேட்டிங் பவரை காட்டியிருக்கோம்ன்னு இங்க
(அதுவும் சரிதான், மக்கள்'ஸ் எல்லாம் இப்போ கொஞ்ச நாளா பயங்கர பிஸி'ல இருக்காங்க போல, எங்கையுமே பதிவை காண முடியல....)


9.கணினி முன்னாடியே நீங்க எப்போதும் இருக்கிறனால, பிலொக், ஆர்கூட், பிலொக் யூனியன், yahoo msgr, Gtalk எல்லாம் உங்கள் பேவரிட்'னு தெரியும். இருந்தாலும் கேட்க வேண்டியது இந்த மக்கள்'ஸ் விருப்பம். உங்கள் பொழுது போக்கு என்ன?

உங்க கேள்வியில ஒரே ஒரு தப்பு இருக்குங்க.. ஒர்குட் இன்னைக்குவரைக்கும் எனக்கு பிடிச்ச லிஸ்ட்டுல சேரவே சேராது! எதுக்குதான் இது ஒன்னு நான் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியலை.. ம்ம்..
(அப்போ ஏங்க, அடிகடி அந்த பக்கம் வந்துட்டு போறீங்க......டகால்டி தானே?)

பொழுதுபோக்குதானே? எக்கச்சக்கமா இருக்கு.. அதெல்லாம் லிஸ்ட்டு போட்டா அப்புறம் இந்த லிஸ்ட்டு படிச்சு முடிக்கிறதுக்குள்ளேயே உங்க நிகழ்ச்சி முடிஞ்சிடுமே? :-P
(உங்களுக்காக 10 நொடி அதிகம் தரேன் சொல்லுங்க.. ..... )

சரி, மக்கள்ஸ் பிரியப்பட்டு கேட்கிறதுனால ஒரு சுறுக்கி (எந்த பாட்டியோட சுறுக்கு பைன்னு கேட்க்கப்படாது கோப்ஸ்) இங்கே செப்புறேன். ;-)
(அடடா, என்ன கொஞ்சம் பேச விடுங்களேன்...... )

"காலை எழுந்தவுடன் mp3 சாங்ஸு
பின்பு கனிவு கொடுக்கும் ஒரு ப்ராஜெக்ட்டு
மாலை முழுதும் கம்யூட்டர் கேம்ஸு
என்று தினம் வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா"ன்னு பாரதி சொல்லியிருக்காரே!
(யாரு அந்த பாரதி> உங்க பக்க்த்து வீட்டு தமிழ் வாத்தியாரா?)
நான் மட்டும் இவைகளுக்கு விதி விளக்கா என்ன? ;-)
மத்த ஹாப்பிஸ் கொஞ்சம் டெக்னிக்கலா இருக்கும். சொன்னா இந்த கோப்ஸுக்கு புரியாதுங்கிறதுனால ஸ்கிப் பண்ணிடுவோம். :-)))

(நீங்க நல்லா இருப்பீங்க, பப்ளிக்'ல என்னை டாமெஜ் பண்ணாம போனீங்களே....)


10.தூக்கம் என்றால் உங்க அகராதில என்ன? கொஞ்சமா சொல்லுங்களே'ன்

தூக்கம்ன்னா கரண்ட் கட்.. இல்லைன்னா கம்ப்யூட்டர் ரெஸ்ட்டுன்னு அல்லது லெக்ச்சர் (lecture) க்ளாஸுன்னு வச்சிக்கலாமா?. ;-)
(இருங்க, இடம் இருக்கானு பார்க்குறேன்.....ஆ ஓகே)

ஏதாவது மும்முரமா வேலை செய்துட்டே இருக்கும்போதுதான் கரண்ட் கட்டாகும். அப்போ தலையணையை கீபோர்ட் மேலேயே வச்சி தூங்கிடுவேன். ;-)
(ஏன்? இல்லாட்டி கீபோர்ட்'a எலி(mouse) திண்ணுடுமா?)

சில நேரம் ஓவர் வேலை செய்து கம்ப்யூட்டர் டயர்ட் ( tired) ஆகிடும். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே ரெஸ்ட் எடுத்துக்குவோம்.அப்புறம் இந்த ஏர்கோன் க்ளாஸுல தூங்குற தூக்கமே படு ஜோர்தான். க்ளாஸுக்கெல்லாம் நான் ஃபர்ஸ்ட்டா போயிடுவேன். முதல் வரிசையிலேயே ஒரு வசதியான இடமா பார்த்து உட்கார்ந்துக்குவேன். அங்கே வாத்தியார் வணக்கம்ன்னு சொல்லி ஆரம்பிக்கும்போது நானும் என் வேலையை (தூங்க) ஆரம்பிச்சுடுவேன். ;-)
(ஓ, அப்போ, முதல் ஸீட்'ல உட்கார்ந்தா நல்ல எதிர்காலம் (தூங்கலாம்'னு), வருங்காலத்துக்கு சொல்லுறீங்க..)


11.உங்களுக்கு பிடிக்காத விஷயம் ஆயிரத்தி நாலே முக்கால் இருந்தாலும், நீங்க ஏன் சாப்பாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குறீங்க?

சாப்பாடு என்பது எனக்கு பிடிக்காத விஷயமில்ல.. ஆனா என்ன சாப்பிடுறோம் என்பதில் நிறைய பிடிக்காத விஷயங்கள் இருக்கு. (நான் தெளிவா தான் இருக்கேன்..)இப்போ பாருங்க (ஒன்னையுமே காணோம்).. நீங்க கூப்பிட்டீங்கன்னு உங்க நிகழ்ச்சிக்கு வந்துட்டேன்((ஆட்டோ'க்கு காசு என் கிட்ட இல்ல)) ஆனா, காப்பி எனக்கு பிடிக்காது கோபி(அப்பாடா). அப்புறம் டீ, மைலோ, மோர், தயிர் (அய்யோ)இப்படி பால்ல செய்யுற ஒரு ஐட்டமும் நான் சாப்பிட மாட்டேன். (தப்பித்தேன்)

வீட்டுல வாரத்துல மூனு நாள் அம்மா சைவமா இருப்பாங்க. அதுல அட்லீஸ்ட் ரெண்டு நாள் சாம்பார் வைப்பாங்க.. அன்னைக்கு எங்க அம்மா சைவம்ன்னா நான் விரதம். :-P பல வெஜி சாப்பாடுங்க சோயான்னு சொல்வாங்களே, அதுலதான் செஞ்சிருப்பாங்க. சோயாவே எனக்கு பிடிக்காததுனால அதுல செய்யுற எந்த உணவும் நான் சாப்பிட மாட்டேன்.
நான்வெஜில sea food எனக்கு பிடிக்காது (A, B,C, D, E food பிடிக்குமான்னு கேட்கப்படாது கோப்ஸ்). நடக்கிறது பறக்கிறதுல நான் விரும்பி சாப்பிடுற ஒன்னே ஒன்னு கோழிதான். கோழியை வித விதமா சமைக்கலாம். ஆனால், அதிலேயும் சில விதத்தில் சமைத்ததை மட்டுமே சாப்பிடுவேன்.
(முடிவா, என்ன சொல்ல வர்றீங்க? கோழி நீங்க சாப்பிடுவீங்களா, இல்லையா?)
இது ஜஸ்டூ சின்னதா ஒரு சாம்பிள் மட்டுமே. இதுனாலேயே வீட்டுல என் சின்னம்மா எப்போதுமே என்னை பாராட்டிட்டே (!!) இருப்பாங்க..நண்பர்கள் என்னுடன் வெளியே சாப்பிட போனால் அவங்களுக்கு கண்டிப்பா அன்னைக்கு கிறுக்கு பிடிச்சிடும். :-P நீங்க மலேசியா வந்தீங்கன்னா எங்கூட யாரும் சாப்பிட வந்தாலும் உங்க நிலைமையும் இதுதான்னு இப்போதே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். :-D

(நாங்க எல்லாம் டகால்டி'ல phd பண்ணிக்கிட்டு இருக்கோம்.... சோ, டீரிட்'னு போனா பர்ஸ்'ய மறந்துட்டு போறது, அப்புறம் வெளிய வித்தியாசமான சாப்பாடு சாப்ட போனா, வீட்டுல கண்டிப்பா சாப்ட வருவேன்'னு சொல்லிட்டு போறது எல்லாம் உண்டு.....என்ன மை பிரண்ட் புரியுதா?


12. மாசத்துக்கு நீங்க எத்தனை வாட்டி சாப்பிடுவீங்க....

ஓ! அதுவா? அது கணக்கே இல்லைங்க. நண்பர்கள் சொல்வாங்க நான் நிறைய (?) சாப்பிடுறேன்னு. நான் நினைக்கிறேன் G3க்கு போட்டியா நான் ஒருத்திதான் இருக்கேன்னு.. ஹீஹீஹீ..

(நல்லா சொன்னீங்க போங்க, அதுதான் அவங்களும் உங்க பாப்பா சங்கத்துல இருக்காங்களா?)13.இது மை இடம்.

பிட் ஸ்டாப் (pit stop) வந்தாச்சு.. ;-)
கோப்ஸ்க்கு ஒரு காப்பி..
எனக்கு ஒரு பெப்ஸி..
டாங்க்ஸ். ;-)

(இந்த பொண்னு நம்ம'ல கொஞ்சம் கூட பேசவே விட மாட்டேங்குது....டகால்டி காட்டலாம்'னு பார்த்தா, முடியலையே...ம்ம்ம்ம்ம்ம்ம்)


14.தங்கச்சிக்கா, அக்காதங்கச்சி => இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க.?
தங்கச்சிக்கா = தங்கச்சி + அக்கா...
அக்காதங்கச்சி = அக்கா + தங்கச்சி

இதுல ரெண்டே ரெண்டு பேர்தானே இருக்காங்க? இது கூட தெரியல இந்த கோப்ஸ்க்கு.. அனு ஹாஸ்ஸன் மாதிரி ஆகணும்ன்னு காப்பியை தூக்கிட்டு வந்துட்டாரு.. ஹாஹாஹா.. (கோப்ஸ், நோ டென்ஷன் ப்ளீஸ்!) :-)))

(டோட்டலோ டோட்டல் டாமெஜ் டா கோப்ஸ் .....கொஞ்சமா சிரிச்சிக்க டா..... )


போனஸ் கேள்வி.

நீங்க சுருசுருப்பு சிகாமனி'னு சொல்லிக்கிறாங்களே, அது எந்த அளவுக்கு உண்மை?

நான் சுறுசுறுப்பா இருக்கேன்னு எப்படியோ கண்டுபிடிச்சிட்டீங்க. அதனால் உங்க கிட்ட மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன். கேளுங்க:

உங்களுக்கு இந்த முயலும் ஆமையும் F1 ரேஸ் ஓடுன கதை தெரியும்ல?
(எது, கார்'ல தானே... நல்லாவே தெரியுமே...)

அதுல முயல் எப்படி ஸ்பீடா ஓடனும்ன்னும் ஆமை எப்படி விடாமுயற்சியுடன் இருக்கணும்ன்னும் இந்த .:: மை ஃபிரண்ட்::. கிட்ட தான் கோச்சிங் எடுத்துக்கிட்டாங்க. இப்போ இவங்க ரெண்டு பேரும் உலகம் முழுக்க ஃபேமஸ். மோரல் புத்தகத்துல இருந்து ப்ளாக் வரை இவங்க கதைதான் ஃபர்ஸ்ட்டூ. ஆனால் எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்றதுனால இதை வெளியே சொல்லக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டுட்டேன்னா பாருங்களேன். கோப்ஸ், நீங்களும் இதை ரகசியமா வச்சிக்கோங்க. :-D

(சோக்கா சொன்னீங்க போங்க. ஆமா, இந்த கதை, அந்த போட்டி நடத்துனவங்களுக்கு தெரியாதே?)

due to esnips server problem, i cudnt upload any song today.....
Tomorow never dies, naalaiku kandipaa indha idathula oru song varum....

thts the end of the show.

Thanks "My Friend" for everything..

நடக்க போகும் பைனல் பரிட்ச்சை'ல வெற்றி பெற்று,
நாட்டுக்கு சேவை செய்ய எங்களின் வாழ்த்துக்கள்....


மிக்க நன்றி,

வணக்கம்....

பார்ப்போம்'ல

Wednesday, May 16, 2007

காபி வித் கோபி - G3

ரொம்ப நாள் ஆச்சி மக்கள்'ஸ் எல்லாத்தையும் பார்த்து........ஆடிட்டிங் கடைசி கட்டத்துல இருக்கு.. சோ, கொஞ்சம் லேட் ஆகிடுச்சி........... இதோ போவோம் பதிவுக்கு....


1.ஜி3???? எப்படி இந்த நேம் செலக்ட் பண்ணீங்க?

எனக்கு நானே நேம் செலக்ட் பண்ற அளவுக்கு இன்னும் முன்னேறல.. என் ஃப்ரெண்ட்ஸ் தான் அப்படி கூப்பிட ஆரம்பிச்சாங்க ஃபர்ஸ்ட்டு.. சரி.. நல்லா இருக்கேனு நானும் விட்டுட்டேன்.. ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் கேங்க் மட்டும் அப்படி கூப்டுக்கிட்டிருந்துது.. அந்த கேங்க்-ல முக்கால்வாசி மக்கள்ஸ் எங்க ஆபீஸுங்கறதால மெதுவா ஆபீஸ் முழுக்க பரவி கடைசில க்ளயண்டு கூட என்ன ஜி3-ன்னு கூப்பிடற அளவுக்கு பாப்புலர் ஆயிடுச்சு.. சரின்னு அதுக்கப்புறம் நானும் அதையே யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் :-)

(ஜேம்ஸ் பாண்ட்'க்கு 007 மாதிரி, (விளக்கு'ல போடுற திரி மாதிரி மன்னிக்கவும் எங்களுக்கெல்லாம் விளங்கர மாதிரி) காயத்திரிக்கு = > G3'னு விளங்க படுத்திடீங்க......நன்றி.)


2. பிரவாகம் உங்க ப்ளாக் பேரு..எங்க இருந்து இந்த நேம ஜி3 பண்ணீங்க?

ப்ளாக் ஆரம்பிக்கறதுக்கு ஒரு கொஞ்சம்் முன்னாடி ஒரு நாவல் படிச்சேன்.. அதுல வந்த ஹீரோ பேரு பிரவாகன்... அதுல அவன் பேருக்கு ஒரு விளக்கம் குடுப்பான்.. அதாவது அவன் பிறந்த நேரம் அவங்க வீட்ல சந்தொஷம் அன்பு எல்லாம் பிரவாகமா பொங்கனும்னு அந்த பேரு வெச்சதா.. அங்க இருந்து தான் இந்த பேர ஜி3 பண்ணேன் :P

(நல்ல வேளை நீங்க "தினத்தந்தி, தினமலர்'னு பேப்பர் படிக்கல, இல்லாட்டி
ரயில் தடம் புரண்டது, வெயில் மண்டைய பிளக்குது, ஊட்டியில் நிலச்சரிவு'னு உங்க பிலாக் பேரை வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க.....)3. G3 => சுடுறது'னு இந்த ப்ளாக் உலகமே சொல்லுதே.. எப்படி இந்த பேரு கெடச்சுச்சு?? How do u feel abt this?

அடப்பாவி.. இந்த பேர ஆரம்பிச்சு வெச்சது நீ தான்னு எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு.. எப்படியும் நம்ம ஜி3 தப்பா எடுத்துக்கமாட்டாங்கங்கற நம்பிக்கைலயும் உரிமைலயும் தான எல்லாம் என்னை ஓட்டரீங்க (அப்படின்னு நான் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்.. இல்லனா சொல்லிடுங்க ராசா.. ) அதனால நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் :-))


(சரி சரி G3'னு உண்மை'ய சொன்னேன்., மக்கள்'ஸ் எல்லாம் அதை 100% சரி'னு ஒத்துக்கிட்டாங்க)

நான் அந்த ஓட்டல்-ஸ சந்தோஷமாவே ஏத்துக்கறேன் => உனக்கு எங்க போனாலும், இந்த ஓட்டல், சாப்பாடு நியாபகம் தானா?


4. கட்சின்னு ஒன்னு ஆரம்பிச்சீங்க, கஷ்டப்பட்டு (கல்லடி் படாம) மெம்பர்ஸ் எல்லாம் சேத்தீங்க.. எப்படி இருக்கு உங்க கட்சி இப்போ??

எங்க எதிர் கட்சிய ஓட்ரதுக்கு தான் நாங்க கட்சியே ஆரம்பிச்சோம்.. நம்ம கட்சியின் வளர்ச்சிய பாத்து பயந்து எதிர் கட்சி மக்கள்ஸ்ல பாதி பேருக்கு மேல கடைய மூடிட்டு போயிட்டாங்க..ஒருத்தர் நான் உயிரோட தான் இருக்கேன்னு சொல்றதுக்கு மாசத்துக்கு ஒரு போஸ்ட் போட்டுட்டிருக்காரு.. இன்னோருத்தர் பார்த்த ஞாபகம் இல்லையோன்னு புலம்பிக்கிட்டு சுத்திட்டிருக்காரு.. அதனால இப்போதைக்கு என் கட்சி ரெஸ்ட்-ல இருக்கு.. திரும்ப இவங்க எல்லாம் ஆக்டிவ் ஆனதும் எங்க கட்சி கோதால இறங்கும்..

(நல்லா சொன்னீங்க போங்க.... உங்க மொக்கை தாங்கமா தான் எதிர் கட்சி சீலீப்பீங்'ல இருக்குது'னு புரளி .... k4k பிரதர் இவங்க கட்சி தூங்குதாம்.. நம்ம தனி கட்சி தொடங்க வேண்டியது'தான்)


5. உங்க ப்ளாக்ல என் கட்சி, எதிர் கட்சி, சோத்து கட்சி, பீட்ஸா கட்சி னு எல்லாம் போட்டு இருக்கீங்க.. ஆனா, நீங்க உங்க கட்சிக்கு உழைச்சத விட எதிர் கட்சில ஒரு மினிஸ்டர் போஸ்ட்ல இருக்கீங்களே அதை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா?? (எத்தன பொட்டி வாங்குனீங்கன்னு)

மொதல்ல ஒரு உண்மைய தெரிஞ்சிக்கொங்க.. மு.கா.வுடய கட்சி எதிர் கட்சி இல்ல.. அது நம் கூட்டணி கட்சி.. அவர் நம் கட்சிகளின் உறவை வளர்க்க அந்த பதவியை குடுத்தார்.. மற்றபடி நீங்கள் கூறும் பெட்டி விஷயங்கள் எல்லாம் எதிர் கட்சி தூற்றி விட்ட அவதூறாகும்..

(நல்லா கேட்டுக்கோங்க, இவங்க பட்டானி, சாரி, கூட்டணி கட்சில அமைச்சர்'யா இருக்குறாங்க, ஆன அந்த கட்சி முதலமைச்சர் எதிர் கட்சி தலைவர்....கேட்டா எதிர் கட்சி தூங்குது, கொரட்டை விடுது'னு டகால்டி காட்டுவாங்க...)

கொசுறு :- நான் தான் அந்த கட்சி'ல மேயர் பதவி'ல இருக்கேன்....
அரசியல்'ய இதெல்லாம் சகஜம் அப்ப்ப்ப்ப்பா.......


6. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்வீங்க? சாரி.. தப்பா கேட்டுட்டேன்.. ஒரு மாசத்துக்கு எவ்வளவு நேரம் வேலை செய்வீங்க?

தினமும் சாப்பிடற வேலை, தூங்கற வேலைன்னு நிறைய வேலை பண்றதால நீங்க எந்த வேலைய பத்தி கேக்கறீங்கன்னு தெளிவா கேட்டீங்கனா பதில் சொல்ல வசதியா இருக்கும்..

கம்பன் வீட்டு தறியும் கவி பாடும்'னு சொல்லுற மாதிரி,
G3 கிட்ட, வேலை'னு கேட்டாலே, Shift போட்டு சாப்டறத'தான் நினைக்கிறாங்க,
அலோ G3, நான் கேட்டது நீங்க "சாப்ட வேர்" Software'la செய்ற வேலை'ய பத்தி. சாப்பிடறத பத்தி இல்ல..... ரொம்ப கன்பூஸ் ஆகுறாங்க......
எகூஸ்மீ, ஒருவேளை உங்களுக்கு காய்ச்சல் வந்து, டாக்டர், உங்களை மூன்று வேளை மருந்து சாப்ட சொன்னா, நீங்க முருகன் கை'ல இருக்கிற வேல்'லை எடுத்து சாப்டுவீங்களா?7. ப்ளாக் யூனியன், ஆன்கட்டு, ப்ளாக், யாஹூ மெசேஞ்சர், ஜி-டாக், மொபைல்ல கால், எஸ்.எம்.எஸ், தமிழ் சினிமான்னு எப்போதுமே (ஆபீஸ்'ல) ஃபைல்ஸ் பாத்துக்கிட்டு இருக்கீங்களே, எப்படி?

எல்லாரும் பாக்கற மாதிரி நானும் கண்ணால தான் பாக்குறேன்.. இதெல்லாம் ஒரு கேள்வியா?? நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்..

(எதுக்கு இவ்வளவு டென்ஷ்ன்? நீங்க டென்ஷ்ன்'ய இருக்கும் போது இந்த கேள்விய படிச்சீங்களா, இல்ல, இந்த கேள்விய படிச்சிட்டு டென்ஷ்ன் ஆனீங்களா?
யாரு அங்க? அக்காவுக்கு சில்ல்னு ஐஸ் போடாத ஒரு ஆப்பிள் ஜீஸ் கொடுங்கப்பா.....)8. உங்களுக்கு சமைக்க தெரியுமான்னு நான் கேக்க மாட்டேன்.. ஆனா என்னைக்காச்சும் சமைக்க ட்ரை பண்ணி இருக்கீங்களா??

தற்கொலை முயற்சி (நான் சமைச்சு நானே சாப்பிடறது)், கொலை முயற்சி (நான் சமைச்சு அடுத்தவங்கள சாப்பிட வைக்கறது)் இரண்டுமே சட்ட விரோதமானது.. அதனால அது ரெண்டையுமே பண்றதா எனக்கு ஐடியா இல்ல..

(உங்க நல்ல எண்ணத்தை பாராட்டி, நம்ம கட்சி உங்களுக்கு "நல்ல மனசு காரி" (துப்பாம) பட்டம் கொடுக்க பரிந்துரை செய்கிறேன்.... சமைக்க தெரியாமா எத்தனை நாள் டகால்டி காட்டுவீங்க?)

9. அழகா இந்டெர்நெட்'ல இருந்து போட்டோ, மேட்டர் எல்லாம் ஜி3 பண்ணுற நீங்க, வூட்ல என்னைக்காச்சும் பூரி, தோசை, வடைன்னு சுட ட்ரை பண்ணி இருக்கீங்களா

பூரியும் தோசையும் சுட்டிருக்கேன்.. வடை சுட்டதில்ல.. வெஉட்டீஸ்... நான் சொன்ன சுட்டிருக்கேன் = சமைச்சிருக்கேன் இல்ல... அடுத்தவங்க ப்ளேட்ல இருந்து சுட்டுருக்கேன்னு சொன்னேன்.. :P

(நல்ல வேளை உண்மை'ய சொன்னீங்க.. அங்க பாருங்க, உங்க பதிலை முழுசா படிக்காமா நம்ம பிரதர்'ஸ் ரெண்டு பேரு மயங்கிட்டாங்க........)

10. உங்க பொழுது போக்கு என்ன?? (அபார்ட் ஃப்ரம் கொஸ்டின் # 7)

சாப்பிடறது, தூங்கறது, கதை புக்ஸ் படிக்கறதுன்னு நிறைய இருக்கு..

(மொக்கை போடுறத விட்டுடீங்களே............சாப்பிட்டு தூங்குறது'லையே 18 மணி நேரம் ஓடிடும்,.. பின்ன எப்படி நிறைய'னு கதை வுடுறீங்க?)


11. நீங்க கவிதை எல்லாம் எழுதறீங்க.. (அதுல சிலது ஏற்கனவே யாரோ எழுதினது.. அதை சொல்லல.. ) எல்லாமே என்னவன், என்னவன், என்னவன பத்தியே எழுதறீங்க.. ஆனா, கேட்டா ஒன்னும் இல்லைன்னு எங்க எல்லார் கிட்டயும் டகால்ட்டி காட்டுறீங்க.. அதை பத்தி கொஞ்சம்??

அந்த என்னவன் உண்மை இல்ல.. கற்பனைன்னு சொன்னா நீங்க எல்லாரும் நம்ப மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறீங்க.. நான் என்னத்த சொல்ல.. விளையாட்டா காலேஜ் படிக்கறப்போ ஆரம்பிச்சது.. நான் படிக்கற நாவல்ல இருக்கற ஹீரோஸ் கிட்ட இருக்கற எனக்கு பிடிச்ச குணாதிசயங்கள் எல்லாம் அப்ளை பண்ணி கற்பனை-ல ஒரு என்னவன க்ரியேட் பண்ணி வெச்சிருக்கேன்.. நான் எழுதற கவிதைஸும் மோஸ்ட்லி கதைகள்ல படிச்ச சிட்டுவேஷன்ஸ் தான்.. என் கற்பனை கதாபாத்திரம் மாதிரியே நேர்ல யாரையாவது மீட் பண்ணா கண்டிப்பா உங்க எல்லாருக்கும் சொல்வேன்..கவலையே படாதீங்க..

(முத்து படத்துல வடிவேல் சாரை ஒருத்தவங்க நீங்க சொன்ன மாதிரி தான் ரோல் மாடல்'லா நினனச்சி கிட்டு காமெடி பண்ணிக்கிட்டு இருப்பாங்க........ அந்த படத்தை நேற்று சன் டிவி'ல பார்த்து G3 பண்ணி, கொஞ்சம் மேக் யப் பண்ணி, இங்க எங்க கிட்ட கதை வுடுறீங்க....... நாங்க நம்பிட்டோம்......... நீங்க இன்னும் கொஞ்சம் முருகதாஸ் படத்துல வர கதாநாயகி மாதிரி பில்டப் கொடுக்கலாமே)


12. நீங்க ஒரு நாளைக்கு எத்தன வாட்டி சாப்பிடுவீங்க?? ஏன் கேக்குறேன்னா ட்ரீட்டு, பர்த்டே பார்ட்டி, ப்ளாக்கர் மீட்டுன்னு ரவுண்டு கட்டி போய்க்கிட்டு இருக்கீங்களே அதுக்கு தான்..

ஹி..ஹி... சாரி.. இதெல்லாம் நான் கணக்கு வெச்சிக்கறது இல்ல.. :P

(ஓ , அப்ப யாரு எத்தனை டீரிட் தரனும்'னு மட்டும் கணக்குல வச்சி இருப்பீங்களா?)


13. கோப்ஸ் வாழ்க.. கோப்ஸ் வாழ்க......
(தன்னடக்கம் தன்னடக்கம்)14. உங்க ஹாப்பீஸ் என்ன??

ஒரே கேள்விய எத்தன மொழில கேப்பீங்க?? பத்தாவது கேள்விலியே பதில் சொல்லிட்டேன்.. வேணும்னா அதை பாத்துக்கோங்க...:P

(நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா? இல்ல உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேள்வி கேட்டுடேனா?)


  போனஸ் கொஸ்டின்..

நீங்க எப்ப பாத்தாலும் ஒரு ஊஞ்சல்ல உக்காந்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்களே.. வாட்ஸ் த மேட்டர் யா??

ஊஞ்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா எங்க வீட்ல ஊஞ்சல் லேது.. அதான் போட்டோலியாவது இருக்கட்டுமேன்னு ஊஞ்சல் போட்டோவா தேடி தேடி போடறேன்்.. :-))

(உங்களுக்கு ஸீபிட் பிரேக்கர்'யும் ரொம்ப பிடிக்கும்'னு கேள்வி பட்டேன்....அந்த படத்தையும் போட்டீங்கனா நல்ல இருக்கும்......)


G3 சிபெஸ்சல் பாட்டை கேட்டுட்டு போங்க...

Get this widget | Share | Track details
இத்தனை கேள்விக்கும் பொருமையா பதில் அளித்ததுக்கு ரொம்ப நன்றி....அது மட்டும் இல்ல,
நான் பயங்கர பிஸி'னால, கேள்விகள் எல்லாத்தையும் தங்கிலிஸ்'ல அனுப்பிட்டேன்... இவங்க தான் என் கேள்வியை'யும் தமிழ்'ல டைப் பண்ணி அனுப்புனாங்க........ சோ, அதுக்கும் ஒரு நன்றி.....

அவ்ளோ தாங்க, G3'யோடு உங்க திறமை'ய நிருத்திடாம, மேலும் பல G3'களை பண்ணி இந்த பிலாக் உலகத்துல பெரிய ரவுண்டு (பிரதர்'ஸ், இது அந்த ரவுண்டு இல்ல )
வருவீங்கனு, உங்கள வாராம, வாழ்த்தி, போயிட்டு வாங்க'னு சொல்லி விடைப்பெறுகிறேன்.....வரட்டா...

Thursday, May 10, 2007

வேலை !!!

அடுத்த பதிவு சிறப்பு காபி வித் கோப்ஸ் தனக்கே உண்டான தனி G3 திறமையினால், சுட்ட பழத்தை நம் எல்லோருக்கும் படம் போட்டு காட்டும் அன்பு சகோதிரி, நம் ப்லொக் உலக சுட்ட பழம் ஜிதிரி (g3) அவர்கள்" விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!

என்ன இது வேலை,
எனக்கு பிடித்தமாறு
உடையணிய உரிமைதர மறுக்கும் வேலை!!!

என் தாய்மொழி
என் நாவில்
எட்டி பார்க்க கூட தடை போடும் வேலை !!!

போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!!!!

சரித்தரம் படிக்க வேண்டும்,
புரட்சியாய் புறப்பட வேண்டும்.
தேசத்தை நிமிர்த்த வேண்டும்,
எனும் கனவை எல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டி போட்ட வேலை !!!!

காந்தி விரட்டிய
வெள்ளையன் இரவில் நித்திரை காண,
என் நித்திரை கலைக்கும் வேலை !!!

இங்கே கற்றதையும், பெற்றதையும்,
வெளிநாட்டு பணத்துக்கு
அடகுவைத்துவிட்ட வேலை !!!!

குவியலாய் இருகிப்போன
இந்த வெறுப்பை எல்லாம்.
சுக்குநூறாய் சிதறடித்தது
'இரு துளி கண்ணீர்' !!!

ரொம்ப சந்தோஷ்மா இருக்குடா,
முதல் மாத சம்பளத்தை நீட்ட
பெற்றவர்கள் கண்ணில் தோன்றிய ஒரு துளி.

ரொம்ப கஷ்டமா இருக்குடா,
வெகு நாளாய் வேலை தேடும் நண்பனின்
கண்ணில் தோன்றிய
இன்னொரு துளி!!!!!!


கவிதை உபயம் :- என் பள்ளி தோழன் அனுப்பிய ஒரு மெயிலில் இருந்து.


ஆச்சிங்க (நோ மனோரமா, நோ காரைக்குடி)
நான் இந்த நாட்டுக்கு வந்து 5 வருடம்....
(May 10th 2002 to May 10th 2007..)

இன்றைக்கு 6வது வருடத்தின் முதல் நாள்......

வாழ்க்கை'ல எவ்வளவோ மாற்றங்கள்......
நடந்ததும் நன்மைக்கே,
நடப்பதும் நன்மைக்கே........

"என்னுடைய திறமையிலும், உழைப்பிலும் நான் உயர்ந்தாலும், அவர்களின் கருனை இல்லை எனில் நான் இல்லை…"

நாம நல்லா இருக்கனும்'னு நாலு பேரு நினைச்சா போதும்.. நாம் எங்கையோ போய்டுவோம்....
ஆமாங்க, எனக்கு உதவி செய்த அன்பு உள்ளங்கள் ஏராளம்..இதுல, பெற்றவங்கள், கூடபிறந்தவர்கள், நண்பர்கள், சொந்தங்கள், பந்தங்கள் எல்லோரும் உண்டு...

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருதவங்க அவங்களால, முடிந்த உதவி'ய செய்த'தால்,
இதோ இன்று கழுத்தில டை,
கை'ல லாப்டாப் பையோட உலா வந்துக்கிட்டு இருக்கேன்....
((பக்கத்து சீட்டு பாப்பா இன்னக்கு வைக்கல கண்ணுக்கு மை)

என் நன்றி'யை சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி தெரிச்சிக்கிறேன்.......
எல்லோருக்கும் நான் கடமை பட்டு இருக்கிறேன்.............


ரெஸ்ட் எடுக்க தான் போனேன் நான்... ஆனா பாருங்க, (ஆ'வனா, பாவனா, எல்லோத்தையும் தான் பார்க்க சொல்லுறேன்) இந்த நாள் நியபகம் வந்து, இதோ அதுக்கு ஒரு போஸ்ட்'யும் போட்டாச்சி....

மறக்காம என் "ரெஸ்ட் விண்ணப்பத்தை" ரத்து செய்துடுங்கோ

வரட்டா......


எப்படி இந்த பாட்டை நான் கேட்காமா விட்டேன்'னு ஒரே சிந்தனை என்க்கு.......
இது மாதிரி நல்ல பாட்டுக்கள் இருந்தா சொல்லுங்க பா.........


Unthan Desathil.mp...

Wednesday, May 09, 2007

Restu!!!!!!!!!!!!

2 days rest eduthukiren.......
adhu varaikkum, pona post'a padichitu, anga comment pottu'tu appuram inga vandhu indha song 'a paarunga..... ok ok...

click here for video


myfriend's Siru Si...
my friend, mp3 version innaiku evening send pannidren......

Saturday, May 05, 2007

காப்பி வித் கோபி - சியாம் பிரதர்....
மக்களே இந்த வாரம் நம் விருந்தினர் அது தான் போன போஸ்ட்'ல ரன்னிங் அட் ஒன்னு போட்டோம்'ல பின்ன என்ன இங்கையும் எதிர்ப்பார்த்திங்?
30 cm long ஸ்கேல்'ல வச்சி straight'யா Show'கு போவோம்.

without brackets => syam brother telling
within brackets => me telling.....1.உங்க பெயர் தெரியும். நாட்டாமை => இந்த பெயர் எப்படி blog உலக மக்கள்'ஸ் கிட்ட ரீச் ஆனது?

இந்த கொஸ்டின்'க்கும் அடுத்த கொஸ்டின்'க்கும் முன்னாடியே என்னோட ப்லொக் ல அவுட் ஆகிட்டதுனால அந்த பதிலையே இங்க கொடுக்கிறேன்...
நல்ல கேள்வி...எல்லா ப்லொக்'லையும் புளியோதரை'ய க்யூ வரிசை'ல முதல்'ல நின்னதால சோடா சுபா நாட்டாமையா ஆக்குனாங்க..லைன்'யா கரெக்ட்' பண்றதுக்கு...
2.தினமும் என்னை கவனி எப்படி இந்த பெயரை தேர்ந்தெடுத்தீங்க?


என்ன பேரு வெக்கறதுனே தெரியலீங்க...நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....
அது போக நீங்க எல்லாம் தினமும் என்ன வந்து கவனிச்சுட்டு(அதுதான் கமெண்ட் போட்டு) போகனும்னு ஒரு நப்பாசை


(நல்ல வேளை, உங்களுக்கு நம்ம் ஊரு மளிகை கடை நியாபகம் வரல... இல்லாட்டி
கடன் அன்பை முறிக்கும்.பிரதி செவ்வாய் விடுமுறை,என்னை பாரு யோகம் வரும்.'னு பேரு வச்சி இருந்தாலும் வச்சி இருப்பீங்க....)

3. உங்க ப்லொக் ரோல்'ல 119 பெயர் இருக்குதே? எப்படி பிரதர்.?
அவ்ளோ நல்ல உள்ளங்களை ( என்னை'யும் சேர்த்து தான்) எப்படி புடிச்சீங்க?


இப்போ blogroll சரியா வேலை செய்யல..அதுனால google reader க்கு மாறிட்டேன்...அதுல இப்பொ 200 names கிட்ட இருக்கு...நாலு எடத்துல போய் கமெண்ட் போட்டாதான நம்ம பொட்டியும் நிறம்பும்....

(அடெங்கப்பா, நாலுக்கே இந்த போடு போடுறீங்க...........நாற்பது'க்கு?
ஆமா, இப்ப எல்லாம் ஏன் பொட்டி'ய மூடிட்டீங்க?)


4. எப்படி பிரதர், நீங்க எல்லாத்துலையும் ஒரு காமெடி கலந்த வித்தியாசைத்தை காட்டுறீங்க?
example தவறுகள் => அது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது தான எப்பவும் பன்னீட்டு திரியறது...
and gtalk la status msg'la 'Am not online'nu சொல்லிட்டு online la இருக்கிறது..இது மாதிரி?

சீரியஸா பண்ணாமட்டும் என்ன பண்ணபோறோம்....நாலு பேரு சிரிக்கறாங்கன்னா எதுவும் தப்பு இல்ல...இருந்தாலும் காமுடில உங்களவிடவா....

(தன்னடக்கத்தை அடக்கம் பண்ணிட்டு வந்துடீங்க போல.,
ஏன் பிரதர், உங்கள விடவா நன் காமெடி பண்னுறேன்?)

5.ஆபிஸ்'ல ஆயிரம் ஆணீ (blog,blog union,orkut) புடுங்குனாலும், ஆயிரத்து எட்டு டென்சன், இலவன்சன், மாருதிசென் இருந்தாலும், வீடுக்கு போய்ட்டு சன் டிவி'ல சீரியல் எல்லாம் பார்க்குறீங்க? (அதுவும் கோலங்கள் பார்க்காட்டி உங்களுக்கு தூக்கமே வராதமே?)

கோலங்கல் மட்டும் இல்ல பிரதர்...மலர்களும் பார்ப்பேன்...அது என்னமோ என்ன மாயமோ தெரியல...இந்த இங்கிபிக்கிஸ் சானெல்'ஸ் பார்த்து பார்த்து போரெ அடிச்சதுனால இது பார்த்தா கொஞம் நம்ம ஊருக்கு போய்ட்டு வந்த எபக்ட் இருக்கும்...
(நான் நம்பிட்டேன்., சத்யமா விளம்பர இடைவேளை'ல நயன்தாரா வரமாட்டாங்க'னு.)

blog,blog union, orkut - என்ன பிரதர் இன்னும் நிறைய விட்டுடீங்க. ஈமெயில், போன், கடலை இப்படி ஆபிஸ் ஆணி'ஸ் லிஸ்ட் நிறைய இருக்கு
(நல்லா சொல்லுறாங்கப்பா டீ பிஸ்கட்.. சாரி, டீடெய்லு........)

6.போன்டா, தோசை, வடை, அப்பளம் எல்லாம் நல்லா G3 பண்ணுவீங்கனு நீங்களே ஒபன் ஸ்டேட்மெண்ட் வுட்டு இருக்கீங்களே..அதை பற்றி?

என்ன பிரதர், நான் என்ன ராக்கெட்'ஆ விடுறேன்? ஸ்கைலேப் 'ல ஓட்டுறேனா சொன்னேன்?
இது எல்லாம் சர்வ சாதாரணமா எல்ல ரங்கு'ஸ் யும் பண்ணுறது தானே...ஆம இதுல G3 எங்க வந்தாங்க?


(பிரதர், வானத்துல ராக்கெட் வுடுறது ரொம்ப சுலபம் ..ஆனால், தோசை, போன்டா எல்லாம் உங்கள மாதிரி பக்குவ பட்டவங்களுக்கு (பூரீ கட்டை) மட்டும் தான் பக்குவமா பக்காவா வரும் பிரதர்... உங்க திறமை உங்களுக்கு தெரியாது......

(G3 => சுடுறது'னு அர்த்தம்.) யாரும் சொல்லலை யா?????

உன்னாலே உன்னாலே படத்துல ஒரு காட்சி.
வீட்டுல ஒருத்தர் குக்கும்பர் கட் பண்ணிக்கிட்டு இருப்பார்....
அப்போ அவருக்கு போன் வரும்.. போன் பேசும் போது,
சொல்லுங்க வீட்ல தான் இருக்கேன்.. கொஞ்சம் பிஸி..நாளைக்கு ஆபிஸ்'க்கு போன் பண்ணுங்க, நான் சும்மா தான் இருப்பேன் அப்போ பேசிக்கலாம்'னு அவரு சொல்லுவாரு....
(எனக்கு சத்தியமா பிரதர், உங்க நியாபகம் வரவே இல்ல.....)

7.பிலொக் உலகத்துல உங்களுக்கு'னு ஒரு பெயரை/ பட்டத்தை (நாட்டாமை ய தான் சொல்லுறேன் )வாங்கி இருக்கீங்களே .. எப்படி பீல் பண்ணுறீங்க?

இதுல உள் குத்து எதுவும் இல்லையே?
(யாரோ இது வெளி குத்து'னு சொல்லுறது கேட்குது)

(நோ வே நீங்க சொல்லுங்க பிரதர்.)
இதுல பீல் பண்ணுறத்துகு ஒன்னும் இல்லை பிரதர்.
இவ்வளவு நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோசம்.....

(இருக்காதா பின்ன?)

8. முன்னெல்லாம் புளியோதரை முதல் இடத்துல இருந்தது.அப்புறம் கேசரி அந்த இடத்துக்கு போனது..இப்போ பக்கார்டி அந்த இடத்துல இருக்குது...அதை பற்றி?

டெக்குனாலஜி (டிவி, டெக் இல்ல) வளர வளர (காம்ப்லேன் குடிச்சி) ஒரு மாற்றம் தேவை தானே?...
முன்ன எல்லாம் மாட்டு வன்டில போய்ட்டு இருந்தாங்க
(புரட்சி தலைவர்),
அப்புறம் சைக்கிள்
(சூப்பர் ஸ்டார்),
அப்புறம் அம்பாஸ்டர் கார் (நடிகர் திலகம்)
அப்புறம் மாருதி கார் (நதியா மேடம்)
இப்போ பாருங்க புது புது மாடல்'ஸ் வருது. அது மாதிரி இதுவும் முன்னேறிடுச்சி..இன்னும் பக்கார்டி அப்படி'னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாம, இன்னும் நிறைய டைப் டிரிங்க்'ஸ் க்கு மக்கள்'ஸ் மாறனும்....
(எல்லாம் கேட்டுக்கோங்க, நாட்டமை தீர்ப்பு சொல்லிட்டாரு ஆமா)9.நீங்க ரோட்'ல போகும் போதும் சரி, வீட்ல இருக்கும் போதும் சரி, தலை'ல யெல்மெட்டோ தான் இருப்பீங்க'னு , தலைப்பு செய்தி ஓடுதே, இஸ் ட் டீரு?

ரோட்'ல யெல்மெட் போடுறேனோ இல்லையோ.. ஆனால் கண்டிப்பா வீட்ல யெல்மெட் கூடவே Padded Jacket'a வீட்ல எப்பவும் போட்டு இருப்பேன்.. இன்னும் சொல்ல போனால். ( போதும் பிரதர் ஏற்கனவே ரங்கு'ஸ் எல்லாம் செய்கூலி இல்லாத சேதாரத்து'ல கீறாங்க) இந்த மாதிரி சுத்தமான வீரனை (பிரதர் மா'வ விட்டுடீங்களே) பத்தி CNN BBC ல அடிகடி காட்றதுல ஒன்னும் அதிசியம் இல்லை'யே?

(கவலை படாதீங்க பிரதர் ..நாங்க ஆட்சி'க்கு வந்தோன, உங்க வீரத்தை பாராற்றி, உங்க ஊருல "நாட்டாமை போக்குவரத்து கழகம்'னு ஒன்னை ஆரம்பித்து விடுவோம்...சிரிங்க பீளிஸ்)


10.இன்றைக்கு இருக்கிற தமிழ் (பேச தெரியாத) நடிகை'ல நீங்க நயன்தாரவை தேர்ந்தெடுத்தற்க்கு காரணம் (குட்டிகரணம் போட்டு சொல்லுவீங்களே) என்ன? ஒரு இரண்டு வார்த்தை சொல்ல முடியுங்களா?
(எங்க ஊரு'ல இதை தான் கரும்பு தின்ன கூலியா'னு கேட்பாங்க.)


நீங்க சொல்லுறத பார்த்தா, நயன் அழகா இல்லையா? (எந்த தேங்காய் சொன்னது? அவனுக்கு அழகு'னா என்னனு தெரியுமா?) இதை பற்றி இரண்டு வார்த்தை என்ன, இருபது பதிவே போடலாம்
(அடிச்சாரு'யா சிக்ஸர். அதை நான் பார்த்துகிறேன் நீங்க மாட்டர்'க்கு வாங்க).

ஆனா மக்கள் எல்லாம் காரி துப்பி அத எவ்வளவு செலவு ஆனாலும் பார்சல் செஞ்சி DHL'ல அனுப்பிடுவாங்க. (எனக்கு என்னமோ பூரி கட்டை தான் நியபகத்துக்கு வருது)...மத்த பிகர்ஸ்'யும் பிடிக்கும்...ஆனா நீங்க அன்ட் நம்ம மக்கள் பில்லு (பாவனா), மு.க (பாவனா) ,டீரிம்ஸ் (பூஜா) எல்லோரும் ரிசர்வ் பண்ணி I.S.I முத்திரை குத்தி சீல் பண்ணிட்டீங்களே...எனக்கு வேற CHOICE இல்ல பிரதர் நான் இன்னா பண்ண்னுவேன்?.....
(நோ பீல்லிங்க்ஸ் பிரதர்...உங்களுக்கு ஒன்னு'னா வுட்டுருவோமா? யாருப்பா அங்க பிரதர்'க்கு ஒரு கட்டிங் சொல்லுங்கப்பா)


Bonus Question

உங்க profile போட்டோ'ல ஒரு அணில் குட்டி கவுந்தடிச்சி போஸ் கொடுக்குதே, அந்த போஸ் கொடுக்க நாலு கால்'யும் கட்டி போட்டீங்களா?

நீங்க வேற பிரதர்..அது டாஸ்மார்க்'ல ஒரிஜனல் சரக்கு கிடைக்கும். அதுனால,ன் தில்'லா அடிக்கலாம்'னு இரண்டு குவாட்டர் அடிச்சிட்டு மட்டை ஆகிடுச்கி.....
(அப்போ நம்ம நாட்டு குடிமகன் லிஸ்டு'ல சேர்ந்தாச்சி'னு சொல்லுங்க வாருங்கள் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நோக்கியா மொபைலோட போவோம்)


அவ்வளவு தான் பிரதர்......இங்க வந்ததுக்கு ஒரு மிகப்பெரிய நன்றிய தெரிச்சிக்கிறேன்....

கோப்ஸ் பிரதர், நான் கிளம்புறேன் அப்பால மீட்டுவோம்.....

சியாம் பிரதர் கொஞ்சம் இருங்க, ஒரு குத்தாட்டம் போட்டு போவோம்...
என்னது குத்தாட்டமா? ஒ கே ஒ கே.......

யாருப்பா அங்க, ஸ்டார்ட் மீஜிக்.........


<
Yammaadi.mp3
ஏய் இந்தா ஏய் இந்தா ஏய் அப்படி போடு ...

பிரதர் பாட்டு அப்பீட்டு ஆகி ஒன் நிமிட் ஆகிடுச்சி...

இதெல்லாம் சொல்லுறது இல்லையா? நான் கிளம்புறேன்......

சியாம் பிரதர் கொஞ்சம் இருங்க

பிரதர், திரும்பியும் என்ன? போறத்துக்கு முன்னால ஒன்னே ஒன்னு....

என்னா?

Selamat Petang

உனக்கும் ஒரு selamat petang,
இதை படிக்கிறவங்களுக்கும் ஒரு Selamat Petang.


இப்பவாச்சும் நான் கிளம்பலாமா?

இன்னும் ஒன்னே ஒன்னு......

அட கொக்கமக்கா, நீ அடங்கவே மாட்டியா?
எட்றா அந்த வீட்ச்சை


சரி சரி போயிட்டு வாங்க.............

ok makkals ...... thanks for being with us all these neram... hope u all enjoyed this post...comment podaama pona , naan auto anupuven.....

song link courtesy => My friend.....

have a nice weekend.....

varatta...

cheers!!!!!!!!!!!!!!!!!

Wednesday, May 02, 2007

நெற்றி/பொட்டு

அடுத்த பதிவு சிறப்பு காபி வித் கோப்ஸ் "தன் அசைக்க முடியாத தீர்ப்புகளால் நம் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அன்பு அண்ணன், நயன்தாரவின் ஆசை நாயகன், நம் blog உலக நாட்டாமை சியாம் அவர்கள்" விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!


நம்ம ஊருல மட்டும் தாங்க, நம்ம மக்கள்'ஸ் நெற்றி எல்லாம் housefull காட்சிகளாக வெற்றி நடை போட்டும்..

என்ன சொல்ல வரேன்'னு தெரியுதா?

தெரியாதவங்களுக்கு, பொட்டு, சந்தனம், குங்குமம், செந்தூரம், விபூதீ, இதை பற்றி தான் சொல்ல வரேன்....நாட்டாமை'னு சொன்னாலே, முதலில் நியாபகம் வருவது, அவர் நெற்றில் இருக்கும் சந்தனம் தான். then, அதன் நடுவில் ட்ராபிக் சிக்னல் மாதிரி சிகப்பு நிறத்துல ஒரு குங்குமப் பொட்டு'ம் தான்.
(பிரதர், என்ன நான் சொல்லுறது?)

நாட்டாமை, நெற்றில சந்தனம் இல்லாம வந்தா, அவரு ஒரு பட்டு போன மரம் மாதிரி
காட்சி அளிப்பாரு..(ரப்பர் வச்சி இல்ல)

நான் எல்லாம், தாய்நாடு'ல இருக்கிற வரை, நெற்றில விபூதீ இல்லாம வீட்டு வாசப்படிய தாண்ட மாட்டேன்.... (குதிக்கவும் மாட்டேன் படுத்து உருலவும் மாட்டேன்.)

அப்பப்ப, பிகருகளை பார்க்க போனா மட்டும், என் நெற்றி கிரிக்கெட் மைதானம் மாதிரி காலி ஆக இருக்கும்.....

ஆனால் அதெல்லாம் அப்போ, இப்பொழுது எல்லாம் ஊருக்கு போனா மட்டும் தான் என் நெற்றி கொஞ்சம் ஆக்குபைட்'யா இருக்கும்.நம்ம ஊரு பெண்களை எடுத்துகிட்டீங்கனா, அவங்க நெற்றி'ல பொட்டு இருந்தா தான் அழகு...

பொட்டுல பல வகை இருக்கு, அதை பத்தி சொல்ல'லாம் ஆனால் பெரிய பதிவா போய்டும்.. சோ, படத்தை பார்த்துகோங்க....

ஆனா, இப்போ எல்லாம் முக்கால்வாசி பெண்கள் (டப்பிங் படம் ஒடுற தியேட்டர் வாசல் மாதிரி) வெறும் நெற்றி'ல நடமாடிக்கிட்டு இருக்காங்க.....

அவங்களை சொல்லி குத்தம் இல்லை,
எல்லாம் (வாஷ்) பேஷ்ன் காலம் பண்ணுற கோலம்...

ஜீன்ஸ் போட்டுக் கிட்டு பொட்டு வட்சிக்கிட்டு போனா, நல்லாவா இருக்கும்?
நான் அவங்களை சொல்லவே வரல....
யாரை பற்றியும் சொல்லவே வரல......

ஜெனிபர் லோப்பஸ் பொட்டு வச்சா நல்லா இருக்காது
பறவை முனியம்மா பொட்டு வைக்காம இருந்தா நல்லா இருக்காது.


சும்மா தோன்றியது, பதிவா போட்டுடேன்........

(அடுத்த பல வருடங்களில் இந்த பொட்டு எல்லாம் இருக்குமா?)

முதல்'ல நான் இருப்பேனா? அதுவே சந்தேகம் தான்...........

மொக்கை'யே தான்.... என்ன செய்ய? உங்கள பார்த்தா பாவமா தான் இருக்கு.....

இதை படிச்சிட்டு வாழ்த்துக்களை தூவிட்டு போங்க......


picture courtesy:- G3 from Dreamzz blog......


வரட்டா?

cheers!!!!!!!!!!!!!