Tuesday, June 26, 2007

Tag # 8 !!!!

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா அப்படினு நம்ம சூப்பர், சூப்பரா சொன்னாலும் சொன்னாரு, இப்போ இந்த பிலொக் உலகத்துல அந்த எட்டு பற்றிய பதிவு பட்டைய கிளப்புது....

நான் மட்டும் என்ன விதிவிலக்கா,
ஏற்கனவே பொன்னரசி சொன்ன ஜந்து பற்றிய பதிவு பரணி (டேய் பில்லு உன்னை இல்ல, நீ பல்லிய சே பில்லிய கரெட்க் பண்ணுற வழிய பாரு) மேல இருக்கு...அதை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கும் போதே இதோ எட்டை பற்றி எழுதவும் அப்படி'னு நம்ம முதலில் அழைத்த நண்பன் நாகை சிவா, சொ.G3 அக்காவும், நண்பன் ராகவனும் அன்பு கட்டளை போட்டுடாங்க..சோ, எல்லாத்தையும் சேர்த்து ஒரு பதிவை சாரி மொக்கைய போட்டுகிறேன்..

ஏற்கனவே எட்டு,எட்டு ah தான் வாழ்க்கைய வாழு'ரோம்'பாரிஸ்'ஜரோப்பியா
ஆகையினால் இது வரைக்கும் வாழ்ந்த 3 எட்டு'ல நான் போட்ட எட்டை ஏட்டில் ஏற்றியதை பற்றி சொல்லிடேறேன்

ஆமாங்க, டூ வீலர் லைசென்ஸ் எடுத்ததை தான் சொல்ல போறேன்....நான் calm'ah பி.காம் 2ன்ட் இயர் படிச்சிகிட்டு இருந்தேன். அது ஒரு பரிட்சை காலம்...
பல நாள் வீட்டுல அம்மா கிட்ட உண்ணா விரதம் இருக்காத குறையா மனு கொடுத்து, ரூபாய் 300 கொடுத்து போட்ட எல்.எல்.ஆர். முடிந்து டிரெயல் போட்டு காண்பிக்க வேண்டிய கடைசி நாள்..அன்னைக்கு'னு பார்த்து எனக்கு பைனான்சியல் அக்கவுண்டிங்யே பரிட்சை வேறு... மதில்மேல் பூனை மாதிரி என்ன செய்றது'னு ஒரே குழப்பம் வேறு... கஷ்டப்பட்டு போராடி போட்ட எல்.எல்.ஆர் முடிஞ்சி போச்சுனா திரும்பியும் ரூபாய் 300 அழுவனும்... பரிட்ச்சை எழுதலைனா, அதுக்கு அப்புறம் பைனல் இயர்க்கு போயிருவோம். அங்க,அரியர் வைக்காம போனா தான், இருக்கிற பாடங்களை ஒழுங்கா படிச்சி எழுதுனா மட்டுமே அந்த வருஷம் நாம பாஸ் ஆகுவோம்.. இல்லாட்டி வருஷம் மட்டும் தான் பாஸ் ஆகும் .அப்படி'னு கவலை வேறு.. என்னத்த பண்ண. ஒரே யோசனை....அரியர் பீஸ் ரூபாய் 60/- மட்டுமே.. லைசென்ஸ் பீஸ் ரூபாய் 300/- . அப்போ இருந்த நிலைமைக்கு ரூபாய் 300/- பெரிய தொகை..... நண்பர்களிடம் கைமாத்து வாங்க முடியாது.. ஆனா,மாதம் ரூபாய் 10 சேர்த்தாலும் ரூபாய் 60 சேர்த்துவிடலாம்'னு பல நேரம் யோசனைக்கு பிறகு கடைசியா பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு டூ வீலர் லைசென்ஸ் போட போறதுனு முடிவு எடுத்துட்டேன்... .

பைக் ஒரு நண்பன் கிட்ட ஒசி வாங்கிட்டு ( ரெம்ப நல்லவன் 2லிட் பெட்ரோலும் அடிச்சி கொடுத்தான்) என் உயிர் நண்பன் கிட்ட ஒரு ரூபாய் 100/- கைமாத்து வாங்கிட்டு லைசென்ஸ் போட்டுற கிரவுண்ட்'க்கு போய் அங்க இருந்த 8 டிஸைன்'ல ஒரு லிட்டர் பெட்ரோல் தீர்ந்து போற அளவுக்கு எட்டு போட்டு பழகினேன்.. பொதுவா, ஸிகிடிங், வீலிங், கைய விட்டு ஒடுறது எல்லாத்தையும் பழகுன நான் இந்த எட்டை மட்டும் எப்படி பழகல'னு ஒரு யோசனை வேறு..

பள்ளி பரிட்ச்சை, கல்லூரி பரிட்ச்சை'ல தான் கடைசி நேர படிப்பு'னா,இங்கையும் கடைசி நேர பிராக்டீஸ் தானா'னு உள் மனசு வேற அடிக்கடி சவுண்டு கொடுத்து கிட்டு இருந்தது..

ஒரு வழியா ஆர்.டி.யோ வந்து என்னை முதல் ஒரு லுக்கு விட்டாரு.. என் உருவத்துக்கும், பைக்கும், சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது அந்த லுக்கு...

ஆர்.டி.ஓ. தம்பி உனக்கு 18 வயசு ஆச்சா?
நான் :- இப்போ 19 நடக்குது (ஒடவும் இல்ல, நாற்காலிப் போட்டு நிக்கவும் இல்லை)
ஆர்.டி.ஓ. எட்டு போட வருமா?
(பெண்சில்'ல, பேனா'ல, சாக் பீஸ்'யால பல தடவை போட்டு இருக்கேன். அப்படி'னு, அவர் கிட்ட சொன்னா ஆயிசு புல்லா லைசென்ஸ் கிடைக்காது.. சோ,மனசாட்சி வாய்'ய மூடிக்கிட்டு)நான்:- தெரியும் சார்...
ஆர்.டி.ஓ. சரி வண்டிய எடுத்துக்கிட்டு நேரா அந்த ரவுண்ட் அபோ'வ சுத்திட்டு வா..
நான்:- அட எட்டு இல்லையா அப்போ...அட்ரா சக்கை...


நானும் ஆர்வத்தோட கை'ல சிக்னல் காம்மிச்சி பொருமையா, பய பத்தியுடன், ரவுண்ட் அபோ'வ சுத்தி வந்தா...

ஆர்.டி.ஓ.. என்னா அதுக்குள்ள வந்துட்ட?
நான் :- சார் பொருமையா தான் சார் போயிட்டு வந்தேன்...
ஆர்.டி.ஓ.. சரி அடுத்து நீ தான் எட்டு போடனும்.. அந்த லைன்'ல போய் நில்லு
நான்:- அட எட்டு போடமா விட மாட்டாங்களா...


லைன்'ல் நிக்கும் போது பஜாஜ் எம்80 ஸ்கூட்டர்'ல ஒருத்தர் எட்டு போட வந்தார்...
ஆர்.டி.ஓ அவரை எட்டு போட சொன்னோன, அவரும் ஆர்வத்துல கை'ல கியர் போட்டு, ஆக்ஸ்லேட்டர் முறுக்குக்கிட்டே அவரு நண்பர்க்கிட்ட நியாபக மறதில ஜெயிச்சிட்டு வரேன் ரேஞ்சில தம்ஸ் அப் பண்ண போக, நொடில அந்த ஸ்கூட்டர் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகி பறந்து அவரு கீழ விழ, சுத்தி இருக்கிற எல்லோரும் சிரிக்க ஆரம்பித்திட்டோம்........பத்து நிமிட சிரிப்பலைகளுக்கு அப்புறம், கீழ விழுந்து புதையல் எடுத்தவரை பெயில் போட்டு அடுத்து என்னை கூப்பிட்ட ஆர்.டி.ஓ.

ஆர்.டி.ஓ:- எட்டு போடுவியா இல்ல அடுத்த வாரம் வரையா?

(இது நல்ல கதையா இருக்கே.... இந்த லைசென்ஸ்'காக தான் என் பைனான்சியல் அக்கவுண்டிங்யே ஆட்டைல வுட்டுட்டு வந்து இருக்கேன்..)

சார், இன்னைக்கே போட்டுறேன்.. எல். எல். ஆர் முடியுது இன்னையோட...
அப்படினு yamaha Rx100' ஸ்டார்ட் பண்ணி கியர போட்டு முழு கவனத்துல சும்மா நச்சு'னு 8 போட்டா, அந்த நல்ல ஆர்.டி.ஓ, ஒன்ஸ் மோர், டுவைஸ் தயிர் மாதிரி மூனு தபா என்னை மட்டும் 8 போட சொன்னார்....அது ஏன்'னு இது வரைக்கும் எனக்கு தெரியல....
நானும், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா ரேஞ்சுல சும்மா லட்டு மாதிரி மூனு எட்டு போட்டு காட்டி டூ வீலர் லைசென்ஸ் எடுத்தேன்.....8'ல பாஸ் ஆகி லைசென்ஸ் எடுத்தோன தான், என்னமோ பிறவி பயனை அடைந்த திருப்தி.....

பரிட்ச்சைய கட் அடிச்சிட்டு , எட்டு போட்டதை வாழ்நாள்'ல மறக்க முடியுமா?

அவ்வளவு தாங்க... சொல்ல வந்ததை சொல்லிட்டேன்....

ஏன்டா, உன் கிட்ட , உன்னை பற்றி எட்டு சொல்லுனா, நீ, நீ போட்ட எட்டை பற்றி சொல்லிட்ட'னு தானே கேட்குறீங்க.... எல்லாம் கொஞ்சம் வெட்யீஸ்......
பொன்னரசி சொல்ல சொன்ன ஜந்து'ல சொல்றேன்.... ok?

எட்டு பேரை , இந்த எட்டுல இழுத்து விடனுமாமே...

இதோ

1.ஆணீயை கெடா வெட்டி குலதெய்வமா கும்பிடும் எங்கள் அண்ணன் K4K.
2. புது புனை பெயருடன் உலா வரும் அமெரிக்கா அருண்.
3. எனக்கு இந்த பிலொக் உலகை அறிமுகம் செய்த பு.பட்டியன்..
4.பிலொக் உலக பாடும் இசை குயில் மருதம்
5.மருமுறை ஒருமுறை பாருக்கு போவோமா சாரி பார்ப்போமா என்று சொலிவிட்டு சென்ற
என்ன கொடுமை'ல புகழ்
6.படங்களை போட்டு தாக்கும் டாக்டர் டிடி அக்கா
7.எப்போதும் கனவு கானும் முதல்கனவு ரம்யா
8.கடைசியாக எப்போதும் கதை எழுதும் சுமதி அக்கா....

அதுக்கு முதல்,

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்


காஞ்சி'ல கிடைக்கும் பட்டு
திருப்பதில கொடுப்பாங்க லட்டு
கேரளாவுல கிடைக்கும் புட்டு
குவாட்டர்'க்கு ஆக கூடாது மல்டு

என்னையும் போட சொன்னாங்க எட்டு
இதோ ஒரு மொக்கைய போட்டு
ஆகுறேன் நான் அப்பீட்டு....

வரட்டா !!!!!!!!!!!!!!

cheers.
gops the great :!!!!!!!!

Thursday, June 21, 2007

கருப்பு கண்ணாடி.....

இங் பேனா, தோசை திருப்பி, ஜன்னல், குப்பை தொட்டி, டிபன் பாக்ஸ், அயர்ன் பாக்ஸ், பஸ் ஸ்டாப், சாவி, ரிஸ்டு வாட்ச் போன்ற வரிசையில் இதோ இன்று நாம் காண போவது, கருப்பு கண்ணாடி => sunglass => cooling glass...ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபபபபபபா,
கண்ணுக்கு கூகில் ரீடர் சாரி கூலிங்கிலாஸ் போடாட்டி கண்ணு ரெண்டும் புட்டு அவியிற மாதிரி அவிஞ்சி போயிடும் போல'
அப்படி'னு நம்ம வைகை சொன்ன மாதிரி நானும் இன்னக்கு சொல்ல போறது, என் வாழ்க்கை'ல வந்த அந்த கருப்பு கண்ணாடிகளை பத்தி தான்.

சின்ன வயசு'ல எல்லோருமே ஸ்டார்ட் பண்ணுறது அந்த 'பச்சை கலரு பிரேம்'ல வர சிகப்பு கலர் கண்ணாடி தான்... அட ஆமாங்க திருவிழா'ல விப்பாங்களே ரெண்டு ரூபாய்க்கு, அது தான் நான் எனக்கு நினைவுத்தெரிந்து போட்ட முதல் கண்ணாடி..... அப்போ நான் 6வது படிச்சிக்கிட்டு இருந்த சமயம்,சேர்த்து வச்ச காசுல, மூனாரூபா கொடுத்து, எதிர்த்தாப்புல இருக்கிற பாய் கடையில வாங்குனது.... அதை வைத்து, நான் என் அடுக்குமாடி குடியிருப்பில் காட்டுன படம் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்.)...
மொட்டை மாடில பட்டம் விடும் போது சூரிய ஒளி கண்ணை கூசி, கஷ்டமா இருக்குனு அந்த கண்ணாடிய மாட்டிக்கிட்டு தான் கோதால இறங்குவேன்... அது மட்டும் இல்லை,
ஸ்கூல் போகும் போது மட்டும் அது வீட்ல இருக்கும்...மத்த படி மளிகை கடைக்கு போகும் போது, ரேஷன் கடைக்கு போகும் போது'னு எப்பவுமே நான் அந்த கண்ணாடி இல்லாம இருந்தது இல்லை... ஆடி மாத காத்துல, ஒருநாள் மொட்டை மாடில இருந்து கீழ வேடிக்கை பார்த்து கிட்டு இருந்தப்ப, அடிச்ச காத்துல, பிலாஸ்டிக் கண்ணாடியான என் கண்ணாடி அப்படியே பறந்து போய்டுச்சி.....

அதுக்கு அப்புறம் நான் கண்ணாடினு போட்டது என் கல்லூரி காலத்துல தான்....

கல்லூரி நாட்களில், பைக் வச்சி இருக்கிற நண்பர்கள் தான் கூலிங் கிலாஸ் வச்சி இருப்பாங்க...எல்லாமே பர்மா பஜாரில வாங்குன அட்டு கண்ணாடிகளா தான் இருக்கும்.....ஆனா பினிஸிங் பார்த்தீங்கனா, ஒரிஜினலோட டாப் பா இருக்கும்.....

எப்போதுமே இந்த கூலிங்கிலாஸ் (பைக்) வச்சி இருக்கிற நண்பர்கள் கிட்ட ,கொஞ்சம் அந்த கண்ணடிய நாம கேட்டா, எங்க நமக்கு நாமத்த போட்டுறுவாங்கே'னு, எவ்வளவு பிட்டு போட்டாலும் கொடுக்க மாட்டாங்க.....

நல்லா பார்த்தீங்கனா,(இப்ப பார்த்தீங்கனா தெரியாது)
நண்பர்கள் எல்லாம் எங்கயாச்சும் டூர் போனா, அந்த கூட்டத்துல ஒருத்தன் இல்லாட்டி ரெண்டு பேரு கிட்ட தான் கூலிங்கிலாஸ் இருக்கும்... சோ, என்ன பண்ணுவோம்னா டூர்ல சோலோ போட்டோ எடுக்கும் போது மட்டும் அவங்க கிட்ட பிட்ட போட்டு அந்த கண்ணாடிய ஒசி வாங்கி, என்னமோ நம்ம சொந்த காசுல வாங்குன மாதிரி அதை போட்டுக்கிட்டு போஸ் கொடுப்போம்...... போட்டோ செஸன் முடிந்தோன ஒழுங்கா அதை திருப்பிக் கொடுத்தா தான், அடுத்த லொக்கேஷ்ன் போஸ்க்கு நமக்கு கிடைக்கும்.....

யாராச்சும் டூர் முடிந்து, அந்த ஆல்பத்தை பார்த்தா அவ்வளவு தான்.... யாரு கண்ணாடிய யாரு போட்டு இருக்கீங்கனு கொஞ்சம் பூரூட் சலட் சாப்பிட்டுருவாங்க.......
என்ன நான் சொல்லுறது?

இப்படி தான், 2nd இயர்ல நாங்க நண்பர்கள் ஒரு 10 பேரு கொடைக்கான்ல் போயிட்டு, அங்க சில்வர் falls'ல 20 ரூபாய்க்கு வித்த கருப்பு கூலிங்கிலாஸ் வாங்கிட்டு, திருச்சி வந்து அந்த கண்ணாடிய மாட்டுக்கிட்டு "நாங்க 10 பேரு , எங்களுக்கு கண்ணு நல்லா தெரியும் . இருந்தும் ஏன் இதை மாட்டிக்கிட்டு இருக்கோம்'னா, எந்த பிகரை பார்க்குறோம்'னு யாருக்கும் தெரியகூடாது இல்ல? அதுக்குதான்.அப்படினு "டாம் கூருஸ்" மாதிரி அதை மாட்டிகிட்டு தெரு தெருவா போய்கிட்டு இருப்போம்..

எனக்கு இது மாதிரி அட்டு கண்ணாடி போட்டா, உடனே கண்ணு வலி வந்துடும்...சோ, எப்போதும் பஸ் ஸ்டாண்டு'ல பிகரு பார்க்குற நேரம் தவிற, மத்த நேரம் எல்லாம் அந்த கண்ணாடி என் தலை'ல தான் இருக்கும்.....

அதுக்கு அப்புறம்,இங்க குவைத்துல,

இங்க வந்து ஒரு இரண்டு வருடம் ரிசப்ஷன்'ல வேலை...அதுவும் ஈவினிங் ஷிப்டு.. சோ, வெளியே போற வேலையே இல்லை..... 3 வது வருடத்தில், கணக்கு பண்ணுற வேலை'ல அடி எடுத்து வைத்து கொஞ்ச நாட்களில் ஒரு நாள் பகல் , முட்டைய எடுத்து வெளியே காட்டுனா அது ஆம்லெட் ஆகுற அளவுக்கு கொதிக்கிற வெயில்'ல கார்ல போய்கிட்டு இருக்கும் போது , ஒரு ரவுண்ட் அபோ'ல காரை திருப்பினேன்.. அப்போ சைட்'ல இருந்து வேகமாக வந்த ஒரு சில்வர் மெட்டாலிக் கலர் கார்'ல அந்த வெயிலின் கிளார் பட்டு என் கண்ணுக்கு ரிப்லக்ட் ஆக, அந்த ஒரு செக்கண்ட் ஒன்னுமே தெரியாம, சடன் பிரேக் அடிச்சி, பின்னாடி வந்தவன் கிட்ட இந்த ஊரு பாஷை'ல அர்ச்சனை வாங்குன காதோட எடுத்த முடிவு தான், இனி இந்த ஊருல வெயில்'ல வெளியே கால் எடுத்து வச்சா, அது கூலிங்கிலாஸோட தான்'னு,

அன்னைக்கே, 50% சேல்'னு போட்டு இருந்த ஒரு கண்ணாடி கடைக்கு போயிட்டு, இருக்கிற விலையோட ஒரு பத்து ரூபாய் கூட (பக்கெட் இல்லையாம்) கொடுத்து (ஏமாறாம), காஸோலின் என்னும் கருப்பு கண்ணாடிய வாங்கிட்டு தான் அடுத்த நாள் சூரியன் முகத்துல முழிச்சேன்.....

அன்னைல இருந்து இன்னைக்கும் வரை அதே கண்ணாடிய போட்டுக்கிட்டு சூரியனை பார்த்துகிட்டு இருக்கேன்.......

Fashion
இந்த ஊருல வந்து தான், நான் வித விதமான டிசைன்'ல கருப்பு கண்ணாடிகளை பார்த்தேன்...

அந்த காலத்து நடிகர், நடிகை'கள் எல்லாம் பார்த்தீங்கனா கண்ணாடிகளை போடுறேன் பேர்வழி'னு side'ல பார்க் பண்ணி இருக்கிற KPN பஸ் கண்ணாடிய குத்தைக்கு எடுத்து வந்த மாதிரி நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க....

அதே தான் இப்போ இங்க fashion ah ஒடிக்கிட்டு இருக்கு......

Style
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணியும், ரஜினி ஸ்டைல்'ல கண்ணாடிய, வித்தை காட்டிற டகால்டி வரவே மாட்டேங்குது...
அப்போ உங்களுக்கு?

அவ்வளவு தாங்க...... இதுக்கு மேல் ஒன்னத்தையும் யோசிக்க முடியல.. இப்ப நேரம் அதிகாலை 4.... தூக்கம் வருது.... சூரியன் வேற லைட்'யா எட்டி பார்க்குறாரு.. சோ, நான் கருப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தூங்க போறேன்...

அதுக்கு முதல்'ல..

பிகருங்க வருவாங்க முன்னாடி,
அவங்களை நல்லா சைட் அடிக்க தேவை கருப்பு கண்ணாடி,
மக்கள் கிட்ட மாட்டிகிட்டா கிடைக்கும் தர்ம அடி......


அப்போ என்னா பண்ணனும்?

க்கும் எல்லாத்தையும் நானே தான் சொல்லனுமா?

ஜீஜீஜீஜீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........

cheers!!!!!!
gops...

Sunday, June 17, 2007

முந்தா நேத்து ராத்திரி யம்மா!!!

டைட்டல் எப்படி, சும்மா அதிருதுல?
(ம்ம்ம்ம் தருதல, மாதிரி கூவாமா, மேட்டர்க்கு வாடா'னு சொல்லுறது எனக்கு கேட்குது).

புதுசா என்னத்த சொல்ல போறேன்? (அப்படியே நான் சொல்லிட்டாலும்).. எல்லாம் இப்ப நம்ம நாடு மற்றும் இந்த ப்லொக் உலகமே கொண்டாடும் நம்ம தங்க தலைவர், சூப்ப்ரோ சூப்பர் ஸ்டாரின் 'சிவாஜி' பத்தி தான் இன்னைக்கு பொக்கே..படத்தை பற்றி => எனக்கு படம் ரொம்பவே புடிச்சிருக்கு....
(அலோ எனக்கு சத்தியமா கிறுக்கு புடிக்கலைங்க, மெய்யாலுமே தான் சொல்லுறேன்.. என்னை நம்புங்க பீலிஸ்)


படம் பார்க்க => டிக்கெட் எடுத்தது ஒரு பெரிய கதை=>
எப்போதும் போல தியேட்டர்'ல போயிட்டு தான் டிக்கெட் எடுக்கனும் நினைச்சா, இங்க அப்படி ஒரு ஆப்ஷனே இல்ல'னு ஆப்பு தான் வச்சாங்க..... என்ன பண்ணுறதுனே தெரியல, யாரை புடிக்கலாம்'னு யோசிச்சா, சட்டுனு 60 கிமீ தள்ளி ஒரு ஒட்டல் வைத்து இருக்கும் நம்ம ஊருகார நண்பன் நியாபகம் தான் வந்தது.. அவர்கிட்ட மொக்கை போட்டே ஒரு மாதம் இருக்கும், திடீர்'னு போன் போட்டு பேசுனா நல்லாவா இருக்கும்'னு Mr.Dignity ஒரு கேள்வி கேட்டார்.. .... இருந்தாலும், ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா தான் தலைவர் படம் வருது. அதுக்காக இந்த ஒரு தபா Mr.Dignity'kku ஒரு குவாட்டர் கொடுத்து ஒரமா படுக்க வச்சிட்டு, நண்பனுக்கு போன் போட்டு.


நான்:- நான் உயிரோட தான் இருக்கேன்..
அவரு:- நானும் தான்..என்ன திடீர்'னு போன்....
நான்:- எப்ப்டி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா?
அவரு :- எங்கடா காணோம்'னு பார்த்தேன்.... ஒட்டல் வச்சி இருக்கிறவன் கிட்ட சாபிட்டீங்களா'னு கேட்குற முதல் ஆள் நீ தான்டா தம்பி...
நான்:- அண்ணா நல்லா இருக்கீங்களா'னு நாலாயிரம் பேரு...........................
அவரு:- டேய் உன் இந்த புளிப்ப நான் திருச்சில இருந்தே கேட்டு கேட்டு முடியல டா.. வுட்டுரு என்னை .. ஆமாம் என்ன திடீர்'னு போன் ???
நான்:- உண்மை'ய சொல்லட்டுமா?
அவரு:- இப்போ கிட்சன்'ல மாவு கிரைன்டர்'ல ஒடிக்கிட்டு இருக்கு, அதுக்குல்ல முடிச்சிடுவியா?
நான்:- நல்லா சொன்னீங்க போங்க, எனக்கு ஒரு 2 சிவாஜி டிக்கெட் வேணும்... கிடைக்குமா?
அவரு:- ஏன்டா, தோசை விக்குறவன் கிட்ட சிவாஜி டிக்கெட் கேட்குற, யாரு சொன்னா என் கிட்ட டிக்கெட் இருக்குனு?
நான்:- சும்மா கேட்டேன், உங்களுக்கு தெரிஞ்வங்க கிட்ட எதும் ......
அவரு:- இதோட உன்னோட சேர்த்து 12 பேரு கேட்டுடாங்க... உனக்கும், அவனுக்கும் (என் கஸின்) சேர்த்து இன்னைக்கு நைட் ஷோக்கு எடுத்து வச்சி இருக்கேன்... வந்து சேரு சீக்கிரம்...
நான்:- அண்ணா, உங்க நல்ல உள்ளத்துக்கு ஒரு சிலை வச்சா என்ன'னு தோனுது....
அவரு:- இப்படி மொக்கை போட்டனா டிக்கெட் இல்லை உனக்கு...... அப்புறம் பேசவா ...
நான்:- ஓ கே....

ரூம்'ல போயிட்டு சிவாஜிக்கு போறேன் சொன்னா, நம்ம ரூம் மேட்'ஸ் 2 பேரு ,
கோப்ஸ் எங்களுக்கு?
எப்படிங்க, வெளிய எங்கையாச்சும் கூப்பிட்டா வரமாட்டீங்க, இதுக்கு மட்டும் எங்களுக்கு'னு கேட்குறீங்க?னு கோவமா ரெண்டு வார்த்தை'ய் போட்டு தாக்கிட்டு (make hay while sun shines), திரும்பியும் நம்ம நண்பனுக்கு போன் போட்டு தாஜா பண்ணி, எப்படியோ எடுத்துட்டேன்...
( பாசக்கார பயலுங்க, டிக்கெட் எதுத்து கொடுத்ததுக்கு டின்னர் அவங்க செலவு தான்)

இரவு 10.30pm க்கு ஷோ. 60கிமீ போகனும்..... சோ, 7.30 மணிக்கே கிளம்பி, 8.45pm போயிட்டு, நண்பர் ஓட்டல்'ல லைட்டா ஒரு மங்காத்தா ஆடிட்டு ( 16 small இட்லி ஒரு தட்டு, அடை அவியல், ஒரே ஒரு சோழா பூரி) கிளம்புனா, திடிர்'னு ஒரு பயம்.. அது என்ன? கார் பார்க்கிங் தான். ஏற்கனவே "காதலர் தினம்" அனுபவம் , இருக்கு.. சோ, எதுக்கு விஷ பரிட்சை'னு காரை ஓட்டாலான்ட பார்க் பண்ணிட்டு, அங்க இருந்து ஒரு டாக்ஸி புடிச்சிட்டு தியேட்டர்'க்கு போனா, பார்க்கிங் காலியா பல்லை காட்டிக்கிட்டு இருந்தது... இதெல்லாம் வாழ்க்க'ல சகஜம்'னு தியேட்டர் இருக்கிற ஷாப்பிங் மாலுக்கு போன 10pm, 10.30 க்கு தான் ஷோ, அது வரைக்கும் வெளிய இருக்க சொல்லிட்டாங்க..
(பின்ன சூப்ப்ர ஸ்டார் படம்'னா சும்மாவா , அவ்வளவு கூட்டத்தை இது வரைக்கும் பார்த்ததே இல்லைனு எல்லாம் மூக்கு மேல விரலை வச்சிட்டாங்க...)

ஒரு வழியா, 11 மணிக்கு படத்தை போட்டாங்க, நம்ம ஊரு மாதிரியே தலைவர் வர ஒவ்வொரு காட்சிக்கும் செம சவுண்டு..

சிவாஜி பிட்ஸ்.

நயன்தாரா வா இது'னு கேட்குற அளவுக்கு செமையா ஒல்லியாகி, அசிங்கமா ஆகிட்டாங்க...
ஒவர் எந்துவா முதல் பாடல்'க்கு ஆடிட்டாங்க....

ஷ்ரேயா, இவங்கள அவ்வளவா எனக்கு புடிக்காது, ஆனால், இவங்க ஆட்டம் பிரமாதம்..... கச்சிதமா ஒவ்வொரு ஸ்டெபும் சான்சே இல்லை. அதுவும் "ஒரு கூடை சன் லைட்"பாடல்'ல ஆட்டம், இசைக்கு ஏத்த மாதிரி டாப்பு டக்கர்......

சங்கர் படத்துல, செட்டிங்ஸ் சொல்லவே வேண்டாம்.... அதுவும், படக்கதைக்கு கொடுக்கிற முக்கியத்துவம் மாதிரியே, இவர் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதம், என்னானு சொல்லுவேன்....
சகாரா பாட்டு, அப்புறம் கடைசி பாட்டு அதுக்கு உதாரணம்....

படத்துல ஒரு சீன்'ல நாட்டாமை எங்கடானு கேட்பாங்க, அப்போ அவரு மேல பறந்த் கிட்டே "தீர்ப்பு ஒகே" அப்படினு சொல்லுவார்... எனக்கு சத்தியமா சியாம் பிரதர் நியாபகம் தான்...

ரெம்பவும் ரசிச்ச காட்சி விவேக் கிட்ட ரஜினி சொல்லுவார், அட மங்களாவ மிஸ் பண்ணிட்டோமே'னு.. அதுக்கு விவேக் சொல்லுவார், மங்களா போனா என்ன, இதோ பங்களாவே வருது'னு..
அதுல அந்த டைமிங் சூப்பர்..

எல்லாதையும் சொல்லிட்டு, தலைவர் பற்றி ஒன்னு கூட சொல்லனா எப்படி?
அஸ்கு புஸ்கு
, நான் சொல்லா மாட்டேன்.. நீங்களே படத்தை பார்த்துட்டு சொல்லுங்க..
ஒகே வா?

அப்புறம் ஒரு வழியா, படம் முடிஞ்சி, வீட்டுக்கு போக மணி 4 ஆச்சி........
தலைவர் படத்தை, முதல் நாள் அதுவும் தியேட்டர்'ல பார்த்தது ஒரு பெரிய விஷயம் எனக்கு.....

சும்மாவா, இங்க வந்து 5 வருஷத்தில், தியேட்டர்'ல பார்க்கும் முதல் படம் சிவாஜி தான்.. சோ, ஸ்பெஷ்லோட ஸ்பெஷல்...........

அவ்வளவு தாங்க.....

இப்போ கிளம்புறேன்..........

வரட்டா.......

cheers!!!!!!
gops....

Monday, June 11, 2007

வந்துட்டேன் வித் மொக்கை!!!!!!

அட இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சே??????? ஆமாங்க,
நான் பிஸியா இல்லாட்டியும் என்னை பிஸியாக்க இங்க நிறைய பேரு இருக்காங்க.... அதுதான் எங்கையும் தலைக்காட்ட முடியல....
(உன் தொல்லை இல்லாம இருந்தோம், இப்ப இங்க வந்துட்ட அப்படினு யாருப்பா அங்க !!! )

அப்போ எப்படி ஆர்குட், (ஆறாத கூட், ஏழாவது கூட், கத்திரிக்கா கூட்டு, நான் போடல சூட்) அங்க மட்டும் எப்படி'னு கேட்காதீங்க, ஏன்னா, அது வேற, இது வேற...
நடந்தது நன்றாகவே நடந்தது...


1.போன 2 வாரத்துக்கு முன்னாடி நம்ம வண்டி'ல முன்னாடி பிரேக் பிராபளம். கஷ்டப்பட்டு 3 நாள் யாருகிட்டையும் மொக்கை'ய போடாம, நேர நேரத்துல காலா காலத்துக்கு ஆபிஸ்'ல வேலை முடியாம இருந்தாலும், அது எல்லாம் எப்பவோ அப்படி'னு வழக்கம் போல டகால்ட்டி'ய, குவாலிட்டி'யா, காட்டிட்டு மெக்கானிக் கடைக்கு போயிட்டு அவனுக்கு நல்லா புரிய வைக்கனும்'னு எவ்வளவோ முட்டி மோதி, கடைசில அவன் சொன்னத நான் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டி, ஒரு 3 நாள் அங்கைக்கும், இங்கைக்கும் அழைந்து திரிந்து ஒரு வழியா, வண்டிக்கு எல்லாத்தையும் மாத்தி நைட் பார்க் பண்ணிட்டு, அடுத்த நாள் காலை'ல போய் பார்த்தா=> முன்னாடி ரைட் டயர் பஞ்சர்... அது மட்டும் இல்லாம, அந்த பஞ்சரோட அங்க உள்ள ட்ரைவர் ஒருத்தர், நிழல்'ல பார்க் பண்றேன் பேர்வழி'னு கொஞ்ச தூரம் ஒட்டி ஒரு டயர்'ய கிழிச்சி, டிஸ்க்'ய இன்னும் பெண்ட் எடுத்துட்டான்... -:(
அப்புறம் என்ன, வழக்கம் போல ஏற்கனவே 3 நாள் அதோட போராடுன என்க்கு இன்னும் ஒரு 10 நாளைக்கு போராட கஷ்டமா என்னா? இருந்தும், இந்த தபா ரொம்பவே "அடி ஆத்தா மனம் பாடா காத்தாடியா பறக்குதே""னு மாதிரி, பேசாம, எல்லாத்தையும் விட்டுப்புடலாம்னு யோசிச்சா, அட
தானா போகும் போது போகட்டும்'னு இதோ இப்போ இங்க் கூவிக்கிட்டு இருக்கேன்."2.Aha Fm
பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்...
கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமா, காலங்காத்தால போன் போட்டு சுடுத்தண்ணி எப்படி வைக்கனும்'னு சொல்லுறாங்கப்பா......

இது ஒரு குமுதம் இதழின் சிறப்பு சேவை.....

பொதுவாகவே, அதிகம் பேச தெரியாத எனக்கு, மத்தவங்க பேசுனா நான் விரும்பி கேட்குற பழக்கம் உண்டு...

ஆமாங்க, இப்போ எல்லாம் நான் காலை'ல ஆபிஸ் போனவுடன், blog எல்லாம் செக் பண்னிட்டு, சரியாக நம்ம ஊரு நேரம் 12pm " நம்ம ஊரு ஏஞ்சல்'ஸ் நிகழ்ச்சில ஆரம்ப்பித்தா, அது பாட்டுக்கு மாலை வரை ஒடும்...
சின்மயி, சர்மிளா, வைஷ், கபாலி, சடகோப்பன் ரமேஷ்,பவதாரிணி,கோவாலு'னு ஒரு பெரிய டீமே வட்டத்த போட்டுகிட்டு நேயர்களை டைனிங் டேபிள் சாரி என்டர்டேயினிங் பன்னிக்கிட்டு இருக்காங்க.....
அதுல இந்திய நேர படி மதியம் 1pm'ku வர சின்மயின் "உல்டா பாட்டு போட்டி" சூப்பரா இருக்கும்..அப்புறம் எல்லா நிகழ்ச்சியும் நல்லா இருக்கும்.....
வித விதமா பேசும் மக்கள்ஸ், அவங்க ரசனைகள்,நக்கல்'ஸ், அப்புறம் இடையில வர விளம்பரங்கள் எல்லாமே டாப்....

நீங்களும் கேட்டு பாருங்க....அப்புறம் சொல்லுங்க...


3. ஊரு'ல என் உயிர் நண்பனுடன் போன்'ல மொக்கை போடும் போது.

அவன் :- டேய் எப்படி டா இருக்க.
நான் :- நல்ல இருக்கேன் டா
அவன்:- என்னடா எப்ப கேட்டாலும் நல்லா இருக்கேன்'னே சொல்லுறியே எப்படிடா?
நான்:- ஏன்டா போன் போடுறது என் கஷ்டத்த சொல்லவா?
அவன்:- இல்லடா மனுசன்'னா நாலு பிரச்சனை இருக்கனும், அதை என்னை மாதிரி நண்பனுக்கு சொல்லனும் டா...
நான்:- இப்ப நான் என்ன மாதிரி பிரச்சினை'ய சொல்லனும்னு எதிர்பார்த்திங்க்ஸ்.
அவன்:- அப்படி கேளுடா, நீ என்னா பண்ணு, நாளைக்கே ஒரு பெண்னை பார்த்து லவ் பண்ணு..அப்புறம் எப்படியும் ஒரு பிரச்சினை வரும் அவங்க வீட்டுல இருந்து அடி ஆள் வரனும், அந்த பிரச்சினைய நீ என் கிட்ட சொல்லனும்...
நான்:- ஆங் உன் கிட்ட சொன்னா?
அவன்:- உன் சோகத்தை மறைக்க நான் நேரா அண்ணாமலை ஒயின்ஸ்'க்கு போயிட்டு ரெண்டு குவாட்ர்'ய உள்ள உட்டுக்கிட்டு வீட்டுக்கு போயிடுவேன்....
நான்:- டேய், எப்படி எப்படி நீ ரெண்டு குவாட்டர் விட, நான் காதலிச்சி பிரச்சினை'ல மாட்டிகனுமா? உனக்கு கண்டிப்பா பை பாஸ் ரோட்டுல ஒரு சிலை வச்சிடுவோம் டா...அதை வுடு, ஆமா இந்த விஷயம் உன் வீட்டுகாரம்மாக்கு தெரியுமா?
அவன்:- ஏன்டா, உன் பிரச்சினை ய சொல்லுனா, என் பிரச்சினை எதுக்கு இழுத்துவிடுற?
நான்:- தெரியுது'ல , அமுக்கி வாசி...
அவன்:- உன்கிட்ட பேச முடியுமா?
நான்:- அது...

4. நினைத்தாலே'னு ஒரு படம்.. போட்ட ஒரு 15 நிமிடம் மொக்கை'ய போட்ட அவங்க, படம் அதுக்கு அப்புறம் பட்டை கிளப்பாட்டியும், போர் அடிக்காமா போனது. சரியா படம் முடியும் போது DVD முடிஞ்சி போச்சி... அடடா, அந்த படம் முடிவு யாருக்காச்சும் தெரிஞ்சா என் கிட்ட சொல்லுங்க பிளிஸ்.. பொற்கொடி நீங்களும் டைம் இருந்தா பார்த்துட்டு சொல்லுங்க...


5. பெங்களுர் போன பரணி சாரி, பில்லு பரணி இந்த தபாவும், யாரையாச்சும் பிக் அப் பண்ணிட்டு வாடா'னு சொல்லி வாழ்த்தி அனுப்பினா, பக்கத்து வீட்டு ஜன்னல் நியாபகத்துல, வழக்கம் போல, அங்க இருந்து கடை'ல அவனுக்கு மட்டும் பான்ட் அன்ட் சர்ட் பிக் அப் பண்ணிட்டு வந்து இருக்கான். என்னத சொல்ல k4k?

சரி சரி வந்ததுக்கு அற்புதமா ஒரு பதிவு போட்டு பிலாக்'ய பழைய படி தூக்கி நிருத்த அடிக்கல் நாட்டிடான்... இதோ நானும் என் பங்குக்கு (என்ன விலை'னு யாரும் கேட்க கூடாது) ஒரு மொக்கைய போட்டுடேன்...

இன்னை'ல இருந்து மீ டூ ஸ்டார்ட் தீ மீஜிக்...

listen here

cheers!!!!!!!!!!
gops!!!!!!!!!!