Thursday, June 21, 2007

கருப்பு கண்ணாடி.....

இங் பேனா, தோசை திருப்பி, ஜன்னல், குப்பை தொட்டி, டிபன் பாக்ஸ், அயர்ன் பாக்ஸ், பஸ் ஸ்டாப், சாவி, ரிஸ்டு வாட்ச் போன்ற வரிசையில் இதோ இன்று நாம் காண போவது, கருப்பு கண்ணாடி => sunglass => cooling glass...ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபபபபபபா,
கண்ணுக்கு கூகில் ரீடர் சாரி கூலிங்கிலாஸ் போடாட்டி கண்ணு ரெண்டும் புட்டு அவியிற மாதிரி அவிஞ்சி போயிடும் போல'
அப்படி'னு நம்ம வைகை சொன்ன மாதிரி நானும் இன்னக்கு சொல்ல போறது, என் வாழ்க்கை'ல வந்த அந்த கருப்பு கண்ணாடிகளை பத்தி தான்.

சின்ன வயசு'ல எல்லோருமே ஸ்டார்ட் பண்ணுறது அந்த 'பச்சை கலரு பிரேம்'ல வர சிகப்பு கலர் கண்ணாடி தான்... அட ஆமாங்க திருவிழா'ல விப்பாங்களே ரெண்டு ரூபாய்க்கு, அது தான் நான் எனக்கு நினைவுத்தெரிந்து போட்ட முதல் கண்ணாடி..... அப்போ நான் 6வது படிச்சிக்கிட்டு இருந்த சமயம்,சேர்த்து வச்ச காசுல, மூனாரூபா கொடுத்து, எதிர்த்தாப்புல இருக்கிற பாய் கடையில வாங்குனது.... அதை வைத்து, நான் என் அடுக்குமாடி குடியிருப்பில் காட்டுன படம் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்.)...
மொட்டை மாடில பட்டம் விடும் போது சூரிய ஒளி கண்ணை கூசி, கஷ்டமா இருக்குனு அந்த கண்ணாடிய மாட்டிக்கிட்டு தான் கோதால இறங்குவேன்... அது மட்டும் இல்லை,
ஸ்கூல் போகும் போது மட்டும் அது வீட்ல இருக்கும்...மத்த படி மளிகை கடைக்கு போகும் போது, ரேஷன் கடைக்கு போகும் போது'னு எப்பவுமே நான் அந்த கண்ணாடி இல்லாம இருந்தது இல்லை... ஆடி மாத காத்துல, ஒருநாள் மொட்டை மாடில இருந்து கீழ வேடிக்கை பார்த்து கிட்டு இருந்தப்ப, அடிச்ச காத்துல, பிலாஸ்டிக் கண்ணாடியான என் கண்ணாடி அப்படியே பறந்து போய்டுச்சி.....

அதுக்கு அப்புறம் நான் கண்ணாடினு போட்டது என் கல்லூரி காலத்துல தான்....

கல்லூரி நாட்களில், பைக் வச்சி இருக்கிற நண்பர்கள் தான் கூலிங் கிலாஸ் வச்சி இருப்பாங்க...எல்லாமே பர்மா பஜாரில வாங்குன அட்டு கண்ணாடிகளா தான் இருக்கும்.....ஆனா பினிஸிங் பார்த்தீங்கனா, ஒரிஜினலோட டாப் பா இருக்கும்.....

எப்போதுமே இந்த கூலிங்கிலாஸ் (பைக்) வச்சி இருக்கிற நண்பர்கள் கிட்ட ,கொஞ்சம் அந்த கண்ணடிய நாம கேட்டா, எங்க நமக்கு நாமத்த போட்டுறுவாங்கே'னு, எவ்வளவு பிட்டு போட்டாலும் கொடுக்க மாட்டாங்க.....

நல்லா பார்த்தீங்கனா,(இப்ப பார்த்தீங்கனா தெரியாது)
நண்பர்கள் எல்லாம் எங்கயாச்சும் டூர் போனா, அந்த கூட்டத்துல ஒருத்தன் இல்லாட்டி ரெண்டு பேரு கிட்ட தான் கூலிங்கிலாஸ் இருக்கும்... சோ, என்ன பண்ணுவோம்னா டூர்ல சோலோ போட்டோ எடுக்கும் போது மட்டும் அவங்க கிட்ட பிட்ட போட்டு அந்த கண்ணாடிய ஒசி வாங்கி, என்னமோ நம்ம சொந்த காசுல வாங்குன மாதிரி அதை போட்டுக்கிட்டு போஸ் கொடுப்போம்...... போட்டோ செஸன் முடிந்தோன ஒழுங்கா அதை திருப்பிக் கொடுத்தா தான், அடுத்த லொக்கேஷ்ன் போஸ்க்கு நமக்கு கிடைக்கும்.....

யாராச்சும் டூர் முடிந்து, அந்த ஆல்பத்தை பார்த்தா அவ்வளவு தான்.... யாரு கண்ணாடிய யாரு போட்டு இருக்கீங்கனு கொஞ்சம் பூரூட் சலட் சாப்பிட்டுருவாங்க.......
என்ன நான் சொல்லுறது?

இப்படி தான், 2nd இயர்ல நாங்க நண்பர்கள் ஒரு 10 பேரு கொடைக்கான்ல் போயிட்டு, அங்க சில்வர் falls'ல 20 ரூபாய்க்கு வித்த கருப்பு கூலிங்கிலாஸ் வாங்கிட்டு, திருச்சி வந்து அந்த கண்ணாடிய மாட்டுக்கிட்டு "நாங்க 10 பேரு , எங்களுக்கு கண்ணு நல்லா தெரியும் . இருந்தும் ஏன் இதை மாட்டிக்கிட்டு இருக்கோம்'னா, எந்த பிகரை பார்க்குறோம்'னு யாருக்கும் தெரியகூடாது இல்ல? அதுக்குதான்.அப்படினு "டாம் கூருஸ்" மாதிரி அதை மாட்டிகிட்டு தெரு தெருவா போய்கிட்டு இருப்போம்..

எனக்கு இது மாதிரி அட்டு கண்ணாடி போட்டா, உடனே கண்ணு வலி வந்துடும்...சோ, எப்போதும் பஸ் ஸ்டாண்டு'ல பிகரு பார்க்குற நேரம் தவிற, மத்த நேரம் எல்லாம் அந்த கண்ணாடி என் தலை'ல தான் இருக்கும்.....

அதுக்கு அப்புறம்,இங்க குவைத்துல,

இங்க வந்து ஒரு இரண்டு வருடம் ரிசப்ஷன்'ல வேலை...அதுவும் ஈவினிங் ஷிப்டு.. சோ, வெளியே போற வேலையே இல்லை..... 3 வது வருடத்தில், கணக்கு பண்ணுற வேலை'ல அடி எடுத்து வைத்து கொஞ்ச நாட்களில் ஒரு நாள் பகல் , முட்டைய எடுத்து வெளியே காட்டுனா அது ஆம்லெட் ஆகுற அளவுக்கு கொதிக்கிற வெயில்'ல கார்ல போய்கிட்டு இருக்கும் போது , ஒரு ரவுண்ட் அபோ'ல காரை திருப்பினேன்.. அப்போ சைட்'ல இருந்து வேகமாக வந்த ஒரு சில்வர் மெட்டாலிக் கலர் கார்'ல அந்த வெயிலின் கிளார் பட்டு என் கண்ணுக்கு ரிப்லக்ட் ஆக, அந்த ஒரு செக்கண்ட் ஒன்னுமே தெரியாம, சடன் பிரேக் அடிச்சி, பின்னாடி வந்தவன் கிட்ட இந்த ஊரு பாஷை'ல அர்ச்சனை வாங்குன காதோட எடுத்த முடிவு தான், இனி இந்த ஊருல வெயில்'ல வெளியே கால் எடுத்து வச்சா, அது கூலிங்கிலாஸோட தான்'னு,

அன்னைக்கே, 50% சேல்'னு போட்டு இருந்த ஒரு கண்ணாடி கடைக்கு போயிட்டு, இருக்கிற விலையோட ஒரு பத்து ரூபாய் கூட (பக்கெட் இல்லையாம்) கொடுத்து (ஏமாறாம), காஸோலின் என்னும் கருப்பு கண்ணாடிய வாங்கிட்டு தான் அடுத்த நாள் சூரியன் முகத்துல முழிச்சேன்.....

அன்னைல இருந்து இன்னைக்கும் வரை அதே கண்ணாடிய போட்டுக்கிட்டு சூரியனை பார்த்துகிட்டு இருக்கேன்.......

Fashion
இந்த ஊருல வந்து தான், நான் வித விதமான டிசைன்'ல கருப்பு கண்ணாடிகளை பார்த்தேன்...

அந்த காலத்து நடிகர், நடிகை'கள் எல்லாம் பார்த்தீங்கனா கண்ணாடிகளை போடுறேன் பேர்வழி'னு side'ல பார்க் பண்ணி இருக்கிற KPN பஸ் கண்ணாடிய குத்தைக்கு எடுத்து வந்த மாதிரி நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க....

அதே தான் இப்போ இங்க fashion ah ஒடிக்கிட்டு இருக்கு......

Style
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணியும், ரஜினி ஸ்டைல்'ல கண்ணாடிய, வித்தை காட்டிற டகால்டி வரவே மாட்டேங்குது...
அப்போ உங்களுக்கு?

அவ்வளவு தாங்க...... இதுக்கு மேல் ஒன்னத்தையும் யோசிக்க முடியல.. இப்ப நேரம் அதிகாலை 4.... தூக்கம் வருது.... சூரியன் வேற லைட்'யா எட்டி பார்க்குறாரு.. சோ, நான் கருப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தூங்க போறேன்...

அதுக்கு முதல்'ல..

பிகருங்க வருவாங்க முன்னாடி,
அவங்களை நல்லா சைட் அடிக்க தேவை கருப்பு கண்ணாடி,
மக்கள் கிட்ட மாட்டிகிட்டா கிடைக்கும் தர்ம அடி......


அப்போ என்னா பண்ணனும்?

க்கும் எல்லாத்தையும் நானே தான் சொல்லனுமா?

ஜீஜீஜீஜீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.........

cheers!!!!!!
gops...

82 comments:

சிங்கம்லே ACE !! said...

first

சிங்கம்லே ACE !! said...

pazaya ninaivugala kelaritteenga.. :D :D

namma fav kannadi ray-ban thaan.. inga oru kabothi, en car thirudittu, athula iruntha en ray-ban-ayum adichittu poyittaan :(((

inime thaan innonnu vaanganum... :((

சிங்கம்லே ACE !! said...

//சோ, என்ன பண்ணுவோம்னா டூர்ல சோலோ போட்டோ எடுக்கும் போது மட்டும் அவங்க கிட்ட பிட்ட போட்டு அந்த கண்ணாடிய ஒசி வாங்கி, என்னமோ நம்ம சொந்த காசுல வாங்குன மாதிரி அதை போட்டுக்கிட்டு போஸ் கொடுப்போம்...... //

ஹி ஹி..நாங்களும் அதே கேஸ் தான் :D :D

சிங்கம்லே ACE !! said...

//காஸோலின் என்னும் கருப்பு கண்ணாடிய வாங்கிட்டு தான் அடுத்த நாள் சூரியன் முகத்துல முழிச்சேன்.....
//

"கண்ணாடி வாங்கினேன்"னு சொல்றதுக்கு இவ்ளோ பெரிய பதிவா.. எப்பவும் போல கலக்கல் தான் :D :D

CVR said...

//கண்ணுக்கு கூகில் ரீடர் சாரி கூலிங்கிலாஸ் போடாட்டி கண்ணு ரெண்டும் புட்டு அவியிற மாதிரி அவிஞ்சி போயிடும் போல'
அப்படி'னு நம்ம வைகை சொன்ன மாதிரி நானும் இன்னக்கு சொல்ல போறது//

உங்களுக்கு ஏத்த ரோல் மாடல்தான்!! :P


//ஆடி மாத காத்துல, ஒருநாள் மொட்டை மாடில இருந்து கீழ வேடிக்கை பார்த்து கிட்டு இருந்தப்ப, அடிச்ச காத்துல, பிலாஸ்டிக் கண்ணாடியான என் கண்ணாடி அப்படியே பறந்து போய்டுச்சி.....//
ஓ!!!
அது உங்களதுதானா??

//நல்லா பார்த்தீங்கனா,(இப்ப பார்த்தீங்கனா தெரியாது) //
நெக்கலு???
நல்லா சொல்லுறாங்கைய்யா டீடெய்லு!!! :P


//எனக்கு இது மாதிரி அட்டு கண்ணாடி போட்டா, உடனே கண்ணு வலி வந்துடும்...சோ,//
நானும் மைசூருல இது மாதிரி ஒரு கண்ணாடி வாங்கிட்டு அன்னைக்கு சாயந்திரமே தூக்கி போட்டுட்டேன்!! தல வலி தாங்கல (இது எனக்கு பக்கத்துல இருந்த நண்பன் என்ன பத்தி சொன்ன கமென்ட்!! :-P)

//KPN பஸ் கண்ணாடிய குத்தைக்கு எடுத்து வந்த மாதிரி நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க.... //
ஆஆஆ ஆஆஆஆஆ
அண்ணாத்த!!! நீங்க எங்கியோஓஓஓஓஓஓஓ போய்ட்டீங்க!!!
இன்னா உவமை இன்னா உவமை!!! :-D

எப்பவும் போல நகைச்சுவை மழை பொழியும் பதிவு!!

வாழ்த்துக்கள்!! :-))

Eshwar said...

supera iruku da unoda blog...ne yaarune theriyadu...aana padicha edo enoda friends la orthan blog ezhudina maadiri iruku...super appu...continue...

ramya said...

innum post padikala..atleast modhal 10 comments kulla vandhutenu oru thrupthi dhaan...padichitu varen ippo..

ramya said...

//அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்// adapaavi ipppdi ovvoru post-layum puzhugariyeee....nee sonnalum nanga ketpom, appovey andha edhir veeetla irundha manjula r unakketha figure-a correct panna aarambichitiyaaa??

ramya said...

//எங்க நமக்கு நாமத்த போட்டுறுவாங்கே'னு, எவ்வளவு பிட்டு போட்டாலும் கொடுக்க மாட்டாங்க// correct dhaana avanga ninaikaradhu, avaney yaro oru attu figure-achum maatumanu alanji thirinji vaangi vandhu scene pottutu irukara samayathula, nee vandhu ketta eppadi kodupan...adhillama unga area matumillama trichy-ye solludhey, un munnadi evanum fig. kootitu vara koodadhunu, avlo nallavana nee...ellam nam makkal appadinu chumma pechuku sonnadhellam eduthukittu ippadi senja nyayama solu..

ramya said...

//கண்ணாடிய குத்தைக்கு எடுத்து வந்த மாதிரி நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க.... // paaru idhuku dhaan kannadi poda koodadhunu solradhu, nee helmet-a parthirukanu theliva theriyudhu :)

ramya said...

//கார்ல போய்கிட்டு இருக்கும் போது , ஒரு ரவுண்ட் அபோ'ல காரை திருப்பினேன்// vandi ottaracha road mattum parthutu otanumungoo...nee pakathu car la pona fig. parthutey adhoda car pona side la vegama thiruppi dhaan thittu vaangiruppa..idhu ellam gopal vaazhkaila sagajam dhaana..so no peelings..

ramya said...

//கருப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தூங்க போறேன்... // y unakku kuwait eye vandhirucho, ippadi 4 maniku ellam kannadiyoda suthara...ennamo un nilamai kelvikuriya dhaan irukku...

Marutham said...

//'பச்சை கலரு பிரேம்'ல வர சிகப்பு கலர் கண்ணாடி தான்... //
Adra sakka...nalla THING :)
Enaku nenavu therinju appa deliberate'a adha vaangi thara mataanga- eno therila...But once oorula paati dhan vaangi kuduthanga ;) Adhuvum veedu vandhu seradhuku ulla- oru vazhiya odanju pochu :P

Marutham said...

//ட்டுன படம் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்.)...//
ROTFL...
Chencey ila ponga! :D
Semma cute!

Marutham said...

//அதுக்கு அப்புறம் நான் கண்ணாடினு போட்டது என் கல்லூரி காலத்துல தான்....
//

Enaku adhoda sari....Adhukapram patiya paka ponapo- kanadi vaanga thiruvizhavum illa... podra vayasum ila :)

Ippo Brand kanadi irundhalum- podradhu over scene'a irukumonu thonudhu..SO podradhey illa. :)

Arunkumar said...

kannadi podradhula ipidi oru analysis a? kalakkure gops :)

Arunkumar said...

namakku 10th-la irundhu kannadi podradhu naala cooling glass pakkam kannu vechu kooda padukka mudiyaadhu :(

Arunkumar said...

aana eppo photo-ku pose kuduthaalum friends kitta OC-la vaangi pisthu vittukuradhu :)

tk said...

thalaivaa!!! chumma apdae unga page paathaen,....instant fan aaiten ponga...summa pinreenga :)

PPattian said...

டிராவிட் சச்சின் ரேஞ்சுக்கு கண்ணாடி போட்டு கிரிக்கெட் எல்லாம் ஆடுனது கிடையாதா?

ஏ.சி தியேட்டர் உள்ளயும் கருப்பு கண்ணாடி போட்டு அலம்பல் விட்டதாக கேள்வி...

G3 said...

Idhu pasanga spl post :-(((

Padmapriya said...

//Idhu pasanga spl post :-((( //
apdiya??

Padmapriya said...

ana seriyana comedy post.. fun reading it

Padmapriya said...

sari vandhadhu vanten... apdiye..

Padmapriya said...

25!!!

Padmapriya said...

25!!!

Dreamzz said...

//நாங்க 10 பேரு , எங்களுக்கு கண்ணு நல்லா தெரியும் . இருந்தும் ஏன் இதை மாட்டிக்கிட்டு இருக்கோம்'னா, எந்த பிகரை பார்க்குறோம்'னு யாருக்கும் தெரியகூடாது இல்ல? அதுக்குதான்.அப்படினு "டாம் கூருஸ்" மாதிரி அதை மாட்டிகிட்டு தெரு தெருவா போய்கிட்டு இருப்போம்..

//

ROFL! எல்லாரும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கோம்!

Dreamzz said...

//அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்.)...//

ஆண்டவா!

Dreamzz said...

அப்புறம்..

Dreamzz said...

30 அடிச்சாச்சுல!

Arunkumar said...

//
"நாங்க 10 பேரு , எங்களுக்கு கண்ணு நல்லா தெரியும் . இருந்தும் ஏன் இதை மாட்டிக்கிட்டு இருக்கோம்'னா, எந்த பிகரை பார்க்குறோம்'னு யாருக்கும் தெரியகூடாது இல்ல? அதுக்குதான்.அப்படினு "டாம் கூருஸ்" மாதிரி அதை மாட்டிகிட்டு தெரு தெருவா போய்கிட்டு இருப்போம்..

//
ROTFL-o-ROTFL

Arunkumar said...

//
போட்டோ செஸன் முடிந்தோன ஒழுங்கா அதை திருப்பிக் கொடுத்தா தான், அடுத்த லொக்கேஷ்ன் போஸ்க்கு நமக்கு கிடைக்கும்.....
//

saem blud !!

Arunkumar said...

//
KPN பஸ் கண்ணாடிய குத்தைக்கு எடுத்து வந்த மாதிரி நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க....
//
LOL :)

Arunkumar said...

4 manicku sooriyan ettipaakuma unga oorla? enna koduma saravanan?

//
பிகருங்க வருவாங்க முன்னாடி,
அவங்களை நல்லா சைட் அடிக்க தேவை கருப்பு கண்ணாடி,
மக்கள் கிட்ட மாட்டிகிட்டா கிடைக்கும் தர்ம அடி......
//
Trademark GOPS !!!

Arunkumar said...

35 adichittu joooooootttu

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்படியே அந்த கருப்பு கண்ணாடியோட போஸ்ட் கொடுத்து ஒரு போட்டோ போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருதிருக்கும்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

கருப்பு கண்ணாடி போட்டுட்டே இருக்காதீங்க.. பாவம் குருடன்னு நெனஷ்ஷிக்க போறாங்க மக்கள்ஸ். :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

திடீர்ன்னு ஃப்லாஷ்பேக்குக்கு போயிட்டீங்க? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

1+3 = 4
4+ 0 = 4

40 ஆக்கிட்டு போகட்டா கோபி?

.:: மை ஃபிரண்ட் ::. said...

40 போட்டாச்சு. cheers! ;-)

My days(Gops) said...

@ace :- /pazaya ninaivugala kelaritteenga.. //
aaamanga, remba naaal aachi flash back eludhi.. so pottuten ... he he

//inga oru kabothi, en car thirudittu, athula iruntha en ray-ban-ayum adichittu poyittaan :(((
//
ennanga car thirudunadha ivlo asalta solllureeeenga? enna kodumai singam la ace? :(

//ஹி ஹி..நாங்களும் அதே கேஸ் தான் :D :D //
repeatu...

My days(Gops) said...

@ace :-
//"கண்ணாடி வாங்கினேன்"னு சொல்றதுக்கு இவ்ளோ பெரிய பதிவா.. //
adada, nalla paarunga ace.. kannadi potta abubavangalai solli iruken.. :)

//எப்பவும் போல கலக்கல் தான் :D :D//
nanri ai

My days(Gops) said...

@cvr :- //உங்களுக்கு ஏத்த ரோல் மாடல்தான்!! :P//

he he he, namakkunu sollama vuttuteeenga....:)

//ஓ!!!
அது உங்களதுதானா??//
appo adhai neeenga thaan vachi irukeeengala?

//நல்லா சொல்லுறாங்கைய்யா டீடெய்லு!!! :P//
he he he, unmai ah sonnen nga..

//தல வலி தாங்கல (இது எனக்கு பக்கத்துல இருந்த நண்பன் என்ன பத்தி சொன்ன கமென்ட்!! :-P)//
ha ha ha.. neenga kannadi ah soneeenga, unga friend ungala sollitaaru... so idhu oru mukona thalaivazhi kadhai pola.. :)

//எங்கியோஓஓஓஓஓஓஓ போய்ட்டீங்க!!!
இன்னா உவமை இன்னா உவமை!!! :-D///
sare sare, idhekey ippadina, idhuku modhal'la eludhunadha neeenga paarthu irukanumey. he he

//எப்பவும் போல நகைச்சுவை மழை பொழியும் பதிவு!!//
nanri thambi....

My days(Gops) said...

@eashwar :- //supera iruku da unoda blog...ne yaarune theriyadu...aana padicha edo enoda friends la orthan blog ezhudina maadiri iruku...//

nanri nanba...am glad to hear this...thodarndhu vaaanga...

//super appu...continue... //
thanks da...

My days(Gops) said...

@ramya :- vaanga vaaanga kalyanam pannuna kutti ponnu avargaley.. :P

//adapaavi ipppdi ovvoru post-layum puzhugariyeee....//
unmaiah sonnen..

//nee sonnalum nanga ketpom, //
adhu ....

//appovey andha edhir veeetla irundha manjula r unakketha figure-a correct panna aarambichitiyaaa?? //
adipaavi.. naan sonnnenaaa.. coool glasss pottu pattam vutadha sonnen nga.....

My days(Gops) said...

@ramya:- //correct dhaana avanga ninaikaradhu, avaney yaro oru attu figure-achum maatumanu alanji thirinji vaangi vandhu scene pottutu irukara samayathula, nee vandhu ketta eppadi kodupan...//

neee solluradhum correct thaaan...aanalum naan oru figure ah correct panna kodutha thaan ennavam.. mmm


//adhillama unga area matumillama trichy-ye solludhey, un munnadi evanum fig. kootitu vara koodadhunu, avlo nallavana nee...ellam nam makkal appadinu chumma pechuku sonnadhellam eduthukittu ippadi senja nyayama solu.. //

sare sare, unakku extra oru potti serdhu kodukiren he he enna pathi pugalndhadhuku... :P

My days(Gops) said...

@ramya :- //paaru idhuku dhaan kannadi poda koodadhunu solradhu, nee helmet-a parthirukanu theliva theriyudhu :)
//

alo, naaan kanaadi podama, avanga potta kannadi ah pathi sonnenga....nalla paarunga plz.. he he

//nee pakathu car la pona fig. parthutey adhoda car pona side la vegama thiruppi dhaan thittu vaangiruppa.//
ada nee vera, adicha glare la 2minute edhumey therialanu solluren.. nee ipppadi sollura... figure ah paarthu irundha naan yen sogama solla poren inga... mm

//idhu ellam gopal vaazhkaila sagajam dhaana..so no peelings//
gopal vaazhkai la sagajam thaaan illanu sollala.. but en vaazhkai ah pathi thaan inga solllikittu iruken.. he he

/ippadi 4 maniku ellam kannadiyoda suthara...ennamo un nilamai kelvikuriya dhaan irukku... //
he he enga ponaalum, adhu gopi eye thaan ponnu.. :P

My days(Gops) said...

@marutham :-
//Adra sakka...nalla THING :)//
nimmalum adra sakka solla aarambichitaaaan :D :D

//But once oorula paati dhan vaangi kuduthanga ;) Adhuvum veedu vandhu seradhuku ulla- oru vazhiya odanju pochu :P //
he he he, ellor vaazhkailum indha kannadi etti paarthu iruku pola..
irukaadha pinna, childhood days la naaama enga branded ku poradhu...

//Chencey ila ponga! :D
Semma cute!//
ummai ah sonnenga... atleast neeengalachum nambuneeengaley..
dankies dankies..

My days(Gops) said...

@marutham :- //.Adhukapram patiya paka ponapo- kanadi vaanga thiruvizhavum illa... podra vayasum ila :) //

adada, enna marudhu summa dialogue ellam anal parakudhu...wow.. he he he...super ah soneenga ponga...

I//ppo Brand kanadi irundhalum- podradhu over scene'a irukumonu thonudhu..SO podradhey illa//

adhey adhey, nammalavanga nerai ah peru seira thappu idhu thaaan..aduthavangalukku y paarkanum.. namma kannu , namma kannadi , potta enna thappaa?
use pannunga maruthu.. :))

appadinu dialouge vuttaalum.. naaan same pinch thaaanga maruthu...

namma oorla vandhuta, no extra fittings..... summavey scene podurenu solluvaaanga, inga paaruda foreign scene poduraanu nammalai ey kalachi eduthuduvaaanga namma guys..

he he..
experience jpeaking :P

My days(Gops) said...

@arun :- //kannadi podradhula ipidi oru analysis a? kalakkure gops :) //

nanri arun.. kannaadi potta anubavangals... :P

//namakku 10th-la irundhu kannadi podradhu naala cooling glass pakkam kannu vechu kooda padukka mudiyaadhu :( //
ada enna ippadi solliputeeenga... ippo thaan auto cooling glass ellam vandhutey? eppovo?

//aana eppo photo-ku pose kuduthaalum friends kitta OC-la vaangi pisthu vittukuradhu :) //
repeatu....

My days(Gops) said...

@tk :- //thalaivaa!!! chumma apdae unga page paathaen,....instant fan aaiten ponga...summa pinreenga :) //

vaanga tk.. unga name theriaadhu..bt still thanks for cuming here.... inimel thodarndhu varuveeenganu sollureeenga... thanks thanks....

My days(Gops) said...

@ppatian :- //டிராவிட் சச்சின் ரேஞ்சுக்கு கண்ணாடி போட்டு கிரிக்கெட் எல்லாம் ஆடுனது கிடையாதா? //

undu annathe, aaaana maximum 1 or 2 times thaaan. u can count on it...so sollala... he he he

//ஏ.சி தியேட்டர் உள்ளயும் கருப்பு கண்ணாடி போட்டு அலம்பல் விட்டதாக கேள்வி... //
he he he idhu pudhusaa keeeedhey.. yaaru sonna ungalukku? he he he

My days(Gops) said...

@g3 :- //Idhu pasanga spl post :-((( //

:).. point noted....

My days(Gops) said...

@padmapriya :- //ana seriyana comedy post.. fun reading it//

thanks thansk.....

/25!!!//
quarter ku oru quarter anupidren..

My days(Gops) said...

//ROFL! எல்லாரும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கோம்! //

ada angaiumaaa? adra adra...
youth period la ellamey sagajam appo..

//ஆண்டவா!//
all in the game....

My days(Gops) said...

@arun :- //saem blud !! //
he he he ....

thanks thanks for ur words :P

My days(Gops) said...

@my friend :-
//ஒரு போட்டோ போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருதிருக்கும்.. //
ada neenga vera, enna paar yogam varum range la irundhu irupenga... he he

//பாவம் குருடன்னு நெனஷ்ஷிக்க போறாங்க மக்கள்ஸ். :-P //
ada, veyil ku thaaanga karuppu kannaaadi... matha neram no way..

//

1+3 = 4
4+ 0 = 4

//40 ஆக்கிட்டு போகட்டா கோபி? //
adra adra.. appo neenga kanmani teacher kitta yerkanavey coaching poiaacha...:P

Bharani said...

//இதோ இன்று நாம் காண போவது, கருப்பு கண்ணாடி //...vitta ella kayalan kadai porul pathiyum oru post potuduva pola ;)

Bharani said...

//என் வாழ்க்கை'ல வந்த அந்த கருப்பு கண்ணாடிகளை பத்தி தான்.
//....karunadhi-yoda vaazhkaya pathi solla poriyonu nenachen...

Bharani said...

//அப்போ நான் 6வது படிச்சிக்கிட்டு இருந்த சமயம்//...adhellam nee padichi irukiya enna ;)

Bharani said...

//பாய் கடையில வாங்குனது//....paai kadayila poi paai vaangaama yen kannadi vaangina...

Bharani said...

//பிலாஸ்டிக் கண்ணாடியான என் கண்ணாடி அப்படியே பறந்து போய்டுச்சி//....so sad :(

Bharani said...

//எங்க நமக்கு நாமத்த போட்டுறுவாங்கே'னு, எவ்வளவு பிட்டு போட்டாலும் கொடுக்க மாட்டாங்க//...theliva irukaanga...

Bharani said...

//அதை போட்டுக்கிட்டு போஸ் கொடுப்போம்//...idhellam naanga ozhunga pannuvom...

Bharani said...

//கண்ணாடி என் தலை'ல தான் இருக்கும்..//...appa adhu helmet :)

Bharani said...

//வெளியே கால் எடுத்து வச்சா, அது கூலிங்கிலாஸோட தான்'னு//...enna kodumai ace idhellam...

Bharani said...

//நெற்றில இருந்து, வாய் வரைக்கும் கண்ணாடிய போட்டு இருப்பாங்க//....LOL :)

Bharani said...

//நான் கருப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தூங்க போறேன்.//....mudiyala...

Bharani said...

//மக்கள் கிட்ட மாட்டிகிட்டா கிடைக்கும் தர்ம அடி//....kandipa unnaku undu :)

Bharani said...

oru 70 :)

Ponnarasi Kothandaraman said...

Kalakreenga! :) Epdi thonuchu itha pathi post podanumnu??? :)

Interesting! :)

//(அப்போவே ஆரம்பிச்சிட்டியா'னு கேட்க கூடாது...ஏன்னா இப்போ இருக்கிற மாதிரியே அப்பவும் நான் ஒரு அப்பாவி தான்.)...//

Nambitoooooooooooom :P

Ponnarasi Kothandaraman said...

//Style
நானும் எவ்வளவோ முயற்சி பண்ணியும், ரஜினி ஸ்டைல்'ல கண்ணாடிய, வித்தை காட்டிற டகால்டி வரவே மாட்டேங்குது...
அப்போ உங்களுக்கு?//

Ithu than nakkalnu soluvangala?!:P

Raji said...

Romba appaviya irukkeenga Gops..
Karupu kannady pottutu paartha figurlaam karuppa karuppa theriyadhu..Hayyooo;hayoo...

Raji said...

Naanga ipa samibathula Coorg ponoam...Oru 40rooba kannady vaangikittu naanga pannina velai yellam pakkathula irundhu paartha maadhiri post irundhuchu nga Gops...
All blood same blud...

Raji said...

//நான் கருப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு தூங்க போறேன்.//....mudiyala...
Repaetu...
Ennalayum mudiyala pa ...

kanavulayum karuppa karuppa figure vara pogudhu ...

Raji said...

okay 75 adichutaen..Varatta...

My days(Gops) said...

@billu :- //...vitta ella kayalan kadai porul pathiyum oru post potuduva pola ;) //

he he he aduvum listla keeedhu raasa..

/karunadhi-yoda vaazhkaya pathi solla poriyonu nenachen//
yen sollamaaata, venum na un jannal ah pathi sollava?

//adhellam nee padichi irukiya enna ;) //
dai, adhu padikaaama eppadi da?

My days(Gops) said...

@billu :- //kadayila poi paai vaangaama yen kannadi vaangina...
//

dai adhu bai da not mat....

//....kandipa unnaku undu :) //
modhal la unaku thaanda....

My days(Gops) said...

@pons:- /Epdi thonuchu itha pathi post podanumnu??? :) //

thideernu innaiku kaalaila traffic signal la irukum bodhu, makkals ah paarthu/ ennaium paarthu yosichadhunga..

//Interesting//
//Nambitoooooooooooom :P //

remba nanrigov....

/Ithu than nakkalnu soluvangala?!:P //
illainga, idhai vikkalanu solluvaaanga [:d]

My days(Gops) said...

@raji :- //Romba appaviya irukkeenga Gops..//
atleast neengalachum nambureeengaley. remba thanks nga...

//Karupu kannady pottutu paartha figurlaam karuppa karuppa theriyadhu..Hayyooo;hayoo... //
he he he eppadinga raji ungalukku mattum ippadi ellam? treat onnu yerikichi avlo thaan solluven.. :P

My days(Gops) said...

@raji :- //Naanga ipa samibathula Coorg ponoam...Oru 40rooba kannady vaangikittu naanga pannina velai yellam pakkathula irundhu paartha maadhiri post irundhuchu nga Gops...//

adra adra... paartheeengala evlo correct ah solli iruken.. appo naaan apaaavi thaaney? :D

//All blood same blud.../
vaazhkai;la sagajam apppu...:D

My days(Gops) said...

raji :- /kanavulayum karuppa karuppa figure vara pogudhu ... //
he he yerkanavey dark ah thaaanga irukum...so all in the game...

mukkaaluku oru danks..