Tuesday, July 24, 2007

Take - 5 !!!!!

எச்சறிக்கை :-
அங்க G3 பண்ணி இங்க G3 பண்ணி கடைசில நம்ம கிட்டயே G3 யா..
முடியல முடியல.....இத நான் எங்க போய் சொல்லுவேன்?..
பின்ன என்னங்க, நானே கஷ்ட பட்டு மத்தவங்கள பேட்டி எடுத்து 'காபி வித் கோப்ஸ்"ய ஒட்டிக்கிட்டு இருந்தா, இந்க G3 அதையும் G3 பண்ணி நம்ம கடைக்கு போட்டியா வந்துடுச்சி....என்னத்த சொல்ல, ஒரு காலத்துல மத்தவங்க பிலோக்'ல வேற யாரும் நூறு போடுறத்துக்கு மொதல்'ல நானே சாண்ட்ரோ கேப்'ல போய் புளியோதரைய தட்டிட்டு வந்துடுவேன்.. அதுக்கும் இதுக்கும் முடிச்சி போட்றாதீங்க... ஏன்னா அது வேற இது வேற.. சோ மக்கள்ஸ் இனிமே என்னை தவிர நீங்க யாரு கிட்டையும் பேட்டி எடுக்க/ கொடுக்க கூடாது'னு இங்க இப்போ இந்த இடத்துல பூ வித்துக்கிறேன் சாரி, கூவிக்கிறேன்.. இதை மீறீயும் நீங்க பேட்டி கொடுத்தீங்கனா, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி,
"தனியா பண்ணுனா தகராறு,
தண்ணிய போட்டு பண்ணுனா அது வரலாறு'னு

நான் அமைதியா வந்து கமெண்ட் போட்டுட்டு போயிடுவேன்.... ஜாக்கிரதை சொல்லிப்புட்டேன்..

( இது மட்டும் போன வாரம் டிராப்ட் பண்ணுனது கொஞ்சம் லேட் ஹி ஹி )


Take - 5

வேலை:- இந்த கடந்த பத்து நாளா என்னையும் மீறீ நான் அளவுக்கு அதிகமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.. நம்புவீங்களா?
எப்படி'னு எனக்கே தெரியல.. ஹி ஹி உருப்படியா பிலாக்'ல ஒரு போஸ்ட் போட முடியுதா? இல்ல மத்தவங்க போஸ்ட்'ல பேட்டிங் தான் பண்ண முடியுதா? ஓவர் வேலை உடம்புக்கு ஆகாது, அதே மாதிரி ஓவர் மொக்கை'யும் வெர்கவுட் ஆகாது :P…

இப்படி பிஸியா போயிட்டோமே, மக்கள் நம்மல மறந்துடுவாங்கனு பார்த்தா, எல்லா மக்களும் சொல்லி வச்சது போல பிஸியா இருக்காங்க….. யாரு கண் பட்ட்தோ, டிடி அக்கா கிட்ட சொல்லி எல்லாத்துக்கும் சுத்தி போட சொல்லனும் ….

ஆர்வம் இல்லாட்டி அமுல் பேபியையும் ( 1 வயசு குழந்தை) ரசிக்க முடியாது..
( ஐஸ்வர்யாக்கு தான் கல்யாணம் ஆச்சே, அப்புறம் என்ன பழைய டயலாக் வேண்டி கிடக்கு? அது தான் ( ஆர்வம் இல்லாட்டி ஐஸ்வர்யா ராயையும் சைட் அடிக்க முடியாதுங்குறது)


எப்படியோ மக்கள்ஸ் எல்லோரும் பிலாகை மறக்காம இருந்தா சரி..
ஆடிக்கு அப்புறம் ஆவணி,
எல்லோரும் பிஸியா புடுங்குறாங்க ஆணி
அப்படினு எல்லாத்துக்கும் தெரியும். பட் ஸ்டில் ஆடிக்கு பட்டு சேலை தள்ளுபடி மாதிரி, ஆகஸ்ட்'ல பிலாக்கை தள்ளுபடி பண்ணிடாம, இது மாதிரி ஒரு மொக்கை பதிவு போட்டு உங்க பிலாக்கை ஆக்டிவேட் பண்ணிடுங்க பிளீஸ்…..


வெயில்:- இந்த வருஷம் வெயில் சும்மா பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கு இங்க.. போன வருடம் 44 டிகிரிய (யூனிவர்ஸிட்டி டிகிரி இல்லை) தாண்டாத வெயில் இந்த தபா 49 டிகிரி வரை வந்துட்டு… …காலை'ல 7 மணிக்கு சூடு ஸ்டார்ட் த மீஜிக் ஆனா இரவு 10 மணி வரை சூடான காற்று தான்… வெளில நடமாட முடியல.. இருந்தும் என்னக்கும் இல்லாம இந்த சம்மர் தான் எனக்கு வெளி வேலையும் ஜாஸ்தி…. கார்ல ஏசி'ய புல்லா வச்சாலும், வெயிலின் சூடுக்கு கார் உள்ளையும் அடிக்குது..என்னத்த சொல்ல ஒன்னும் பண்ணுறத்துக்கு இல்லை. உடம்பு சீக்கீரம் டயர்ட் ஆகிடுது… ரூம்க்கு வந்தா காலை நீட்டி படுக்க தான் தோனுது. அப்புறம் எங்கத்த சமைக்கிறது.. சாப்பாடும் வெளிய தான்.

ஹய்லைட் ஆப் தீ வெயில் :- போன வாரம் ஒரு நாள் மதியம் ஹோட்டலில் சாப்பிட்டு வெளியே வந்து கார்'ல உட்கார்ந்தால் சும்மா மைக்ரோ வேவ்'ல உட்கார்ந்த மாதிரி பயங்கர சூடு..(அப்போ இதுக்கு மொதல்ல அதுல உட்கார்ந்து பார்த்து இருக்கியா'னு யாரும் சவுண்டு வுட கூடாது ஒகே?)அப்புறம் அப்படியே ஸ்டெரிங்ய பிடிச்சி (பின்ன என்னத்த பிடிப்ப'னும் கேட்காதீங்க) காரை ஒட்டிட்டு ஆபிஸ் வந்து கொஞ்ச நேரத்துல உள்ளங்கை ரெண்டும் கொப்பிலிச்சி போச்சி :( .. ஆல் இன் த கேம்…..முதல் தபா இது மாதிரி எல்லாம் எக்ஸ்பிரியன்ஸிங்.. ஹி ஹி..

(வெயில் இங்க பட்டைய கிளப்புதுனு K4K அண்ணா கிட்ட சொன்னா, அவரு எந்த தியேட்டர்'ல னு லொல்லு பண்ணுறார்.....)


ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு. அது என்னானு தெரியல புது கார் வாங்குறவங்க எல்லோரும் செகண்ட் ஹாண்ட் வால்யூவ பார்த்தே வாங்குறாங்க… கண்டிப்பா எல்லோரும் இந்த ஊருலையே தங்கிட போறது இல்லை.. போகும் போது கண்டிப்பா வித்துட்டு தான் போகனும்.. அதுக்காக அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வர 500 ரூபாய் லாபத்துக்காக இப்போ ஏன் 1000 ரூபாய் செலவு செய்யனும்?
அதுக்கு இப்போ 300 ரூபாய் மட்டும் செலவு செஞ்சிட்டு அப்புறம் ஒன்னுமே கிடைக்காட்டியும், அட்லீஸ்ட் யூ கெட் த பிளஷர் ஆப் டிரைவிங் யுயர் பேவரிட் கார்….ஹி ஹி உங்களுக்கு ஒன்னுமே புரியல தானே…. சரி சரி மேட்டருக்கு வரேன்…

நண்பர் ஒருவர் புது கார் ஒன்னு வாங்கனும்;னு என்னையும் இழுத்துக்கிட்டு ஷோரூம் ஷோருமா போயிட்டு காரை பார்த்துக்கிட்டு இருந்தோம்.. எல்லோரும் சொன்னது டொயோட்டா கொரோலா வைதான்…. ஆனால் நண்பருக்கோ இங்க ரோட்டுல 100'ல 80 கார் டொயோட்டா கொரோலா தான் ஒடுது அதுல பாதி டாக்ஸி'யா வேற ஓடுது'னு பீலிங்க்ஸ் வேற..... சரி வாங்க'னு வேற கார் பார்ப்போம்'னு , சுசுகி சுவிப்ட், ஹோண்டா சிவிக், லான்சர், டொயோட்டா யாரீஸ் 'னு பல காரை ஒட்டி பார்த்துட்டு நான் செலக்ட் பண்ணுன கார் அது ஹோண்டா சிவிக்.. ஆனால் நண்பருக்கோ சுசிகி சுவிப்ட் பிடித்துவிட்ட்து.... அழகான குட்டி கார் பட் பேமிலி மேன்'க்கு சரி வராது'னு, அவரு மனசை மாற்றீ, திரும்பி சிவிக்'க்கு போனா பட்ஜெட்'ல இடிக்குதுனு ஜகா வாங்கிட்டாரு... அப்புறம் பல
செகண்ட் ஹாண்ட் கார்களை பார்த்துட்டு கடைசியா டொயோட்டா கொரோல்லாவே வாங்கிடுவோம்'னு முடிவு பண்ணி போன, போற வழில அட, நிசான் வண்டிகளை பார்க்கவே இல்லை'னு அங்க போனா, நிசான் சன்னி'ய பார்த்தவுடனே எனக்கு பிடிச்சி போச்சி…..
2007 மாடல் செம எலிகண்ட்'யா பல்லை காட்டிக்கிட்டு இருந்த்தது… எனக்கும், நண்பருக்கும் பார்த்த ஜோருக்கு பிடித்து போனது…அப்புறம் என்ன விலையும் கம்மி, இண்ட்ரஸ்டும் கம்மி…. நண்பர் அந்த காரையே புக் பண்ணிடாரு……
கலரை என்னை செலக்ட் செய்ய சொல்லிட்டாரு… நான் செலக்ட் பண்ணுனது கருப்பு தான்.. என்ன லுக்கா இருக்கு பாருங்க….லைப்'ல எத்தனை விதமான சாய்ஸ் யப்பா…. ஒரு காருக்கே இப்படி மங்காத்தா ஆட வேண்டி இருக்கே. அப்போ, ( மற்றது பேச்சிலர்ஸ்க்கு மட்டுமே. ஹீ ஹீ)


பொழுதுப்போக்கு :- குமுதம்'ல ஆஹா FM'ய தொடர்ந்து இப்போ தினகரன் டாட் காம்'ல சூரியன் FM யையும் ஆன்லைன்'ல கேட்கலாம்…..
ஆஹா FM ல கிலாரிட்டி சூப்பர்..
சூரியன் FM ல , இடையில வர விளம்பரம் சூப்பர்.. ஹி ஹி..

ரெண்டு வாரத்தில் நான் பார்த்த படங்கள்
குஷி, பிரெண்ட்ஸ், காதுலுக்கு மரியாதை, பூவே உனக்காக,பிரியமானவளே, திருமலை, சிவகாசி, திருப்பாச்சி,
கீரிடம் ( எனக்கு படம் பிடிச்சி இருக்கு.. திரிஷா ஹேர் ஸ்டைல்/தாவணி படம் புல்லா சூப்பர்…)
கோல்மால் ( ஹிந்தி), லோக்கன்வாலா சூட் அவுட் ( ஹிந்தி)
அப்புறம் சிரஞ்சீவீ, பூமீகா நடித்த ஒரு தெலுங்கு படம்….. கன்வீனியண்ட்'னு எல்லாம் இங்கீலிஸ் பேச தெரிந்த மெகா ஸ்டாருக்கு கோ டூ ஹெல் அப்படினா மட்டும் தெரியாதாம்…
என்ன கொடுமை சிங்கம்'ல ஏஸ் இது? (இப்படி கேட்டு கேட்டே அவர துரத்தியாச்சி. அடுத்து யாரு கிட்ட கேட்குறதாம்?) இது எப்படி? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை…
ஒன்னே ஒன்னை தவற, அது புமீகா தான்… இன்னசண்ட் லுக் எப்பவுமே அவங்க முகத்துல…..

அவ்வளவு தாங்க… சும்மா பிலாக் தூசி படிந்து இருந்த்து…. ஸோ, தூசு தட்டிட்டு போலாம்'னு வந்தேன்…. வரட்டா…

அடுத்து, கண்ணா "முழிக்கிற நேரம் தெரிஞ்சிடுச்சினா, தூங்குற நேரம் நரகம் ஆகிடும்' அப்படினு புதுமொழி சொன்ன நம்ம "************" அவர் கூட "காபி வித் கோப்ஸ்'ல உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.. அது வரைக்கும்


நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்..

என்றும் தலைவலியுடன்
கோப்ஸ் !!!!!

Wednesday, July 18, 2007

தோசை திறுப்பி !!!!

போன வருடம் நான் போட்ட போஸ்டு. இன்னைக்கு ரீப்பீட்டு கொடுத்து இருக்கேன்.....


சின்ன வயசுல, எத்தனை பேரு "தோசை திறுப்பி"யால அம்மா கிட்ட அடி வாங்கிருக்கீங்க? எல்லோரும் கை'ய மேல தூக்குங்க பார்ப்போம்...


தோசை திறுப்பி'ல அடிச்சா'தான் வலிக்காது..
இருந்தாலும், எனக்கு "தோசை திறுப்பி"ய கண்டாலே ஒரு வித பயம் தான்..

ஏன்'னா பள்ளி'யில் படிக்கிற நாட்களில் வீட்டுல நான் ஒரு ரவுடி...அதனால், என்னை கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வர எங்க அம்மா பயன்படுத்திய ஆயுதம்'தான் இந்த "தோசை திறுப்பி"

முக்கால்வாசி, நான் அடி வாங்கும் காரணங்கள்
(அப்போ கால் வாசி, அரை வாசி'னு யாராச்சும் கேட்டு பாருங்க... இருக்கு)

1. மளிகை சாமான் வாங்க கடைக்கு போனால், அங்கு என் நண்பர்களிடம் அரட்டை அடித்து விட்டு தாமதமாக வீட்டுக்கு போனால்,

2. மளிகை சாமான் வாங்கிட்டு, மிச்சம் இருக்கும் பைசா'வில் ஒரு புளிப்பு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு'கிட்டே வீட்டுக்கு போவேன்...அதை, அப்படியே என் அண்ணன் மோப்பம் பிடித்து எங்க அம்மா கிட்ட பத்த வச்சிருவான்.. அப்புறம் என்ன? இந்த வயசுலே'யே என்ன "சுயநலம்"னு...

3. படிக்கும் நேரம்=> வீட்டு பாடம் செய்யாமல், வேற ஏதாவது கிறுக்கி'கிட்டு இருப்பேன்....

4. தேர்வு நேரத்தில், தொலைக்காட்சி பார்க்க என் வீட்டில் தடை.. இருந்தாலும், நான் டிமிக்கி கொடுத்து'டு "இ மேன்" பார்க்க போய்டுவேன்...

5. தேர்வு ரிசல்டு வந்தா, அதை ஒரு இருபது நாட்கள் "கிராப்"நோட்டுல ஒழிச்சி வைப்பேன்..அதை கண்டுப்புடிச்சா.....

6. என் தங்கை'ய அடித்தால்..

7.குளிக்காமல் சும்மா பாத்ரூம்'ல நடிச்சி'டு ,வெளிய வந்தால்.

8. என் அண்ணன் கூட சண்டை போட்டால்.

9.வீட்டுக்கு தெரியாமல், காவேரி ஆற்றில் குளிக்க போனால்.

10.நண்பர்கள்'கிட்ட ஒரு சைக்கிள் ரவுண்டுக்காக ரொம்ப நேரம் ரோட்டு'ல நின்னு, வீட்டுக்கு லேட்'டா போன,

இன்னும் பல காரணங்கள் உண்டு

எங்க அம்மா அடிக்கிறது, எனக்கு சத்தியமா வலிக்காது.., இருந்தாலும், நான் பக்காவா நடித்து, பையன் பாவம்'னு ஒரு பட்டத்தை வாங்கிடுவேன்...
நானும் என் அண்ணனும், ஒரு சில என்ன? பல நாட்கள், இந்த "தோசை திறுப்பிய" பதுக்கி வைத்துடுவோம்......ஆனாலும், என் தங்கை, அது எங்க இருக்கு'னு சொல்லி கொடுத்திடுவாள்..

அடிக்கிற கை'தான் அனைக்கும்...
எத்தனை தப்பு செய்தாலும், தூங்க போறத்துக்கு முன்னாடி சமாதானம் கண்டிப்பா உண்டு....

எனக்கு எங்க அம்மா நியபகம் வந்துடிச்சி................

என்ன'ங்க உங்களுக்கும் இது மாதிரி அனுபவம் எதுவும் உண்டா?

வழக்கம் போல மொக்கிட்டு போங்க..

பின் குறிப்பு :- போன வருடம் வந்த 13 கமெண்டுகளை நான் அழிக்கவில்லை


ஸோ நீங்க 14'ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க..

cheers!!!!
gops..

Thursday, July 12, 2007

இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை

இதுவரைக்கும் நடந்தது இங்க

போன வாரம்


எனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,
சரியாக இருந்தது......


***************************************************************************

இந்த வாரம்


காட்சி 4

சந்தியா:- என்ன கார்த்திக், நீங்க கிரைனய்ட் பிஸினஸ் எதுவும் செய்ய போறீங்களா?

கார்த்திக் :- இல்லையே . ஏன் கேட்குறீங்க?

சந்தியா:- இல்ல வந்து ஒரு 10 நிமிடம் ஆச்சி, இன்னும் தரையையே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி?

கார்த்திக் :- (மனதுக்குள்) (குடும்பமே நக்கல்'ஸ்'ல டிஸ்கோ டான்ஸ் போடுறீங்க)நீங்க தான் என் கூட பேசனும்'னு சொல்லிட்டு விட்டத்துல ஒட்டடை அடிக்கிறத பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க'னு சும்மா இருந்துட்டேன்.....

சந்தியா:- (உங்க குடும்பம் குத்தாட்டமே'ல போடுது). ஒகே ஒகே லெட் மீ கம் டூ த மேட்டர்..

கார்த்திக் :- அதுக்கு முதல்'ல நான் ஒன்னு கேட்கவா?

சந்தியா:- யா, பீளிஸ்

கார்த்திக் :- இல்ல நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.. நீங்களும், பிரியாவும் பீட்டர்'ல பொலந்து கட்டுறீங்களே, எப்படிங்க?

சந்தியா;- ஓ அதுவா, அவ அமெரிக்கா போறா, நானும் கல்யாணத்துக்கு அப்புறம் பல நாடுகளுக்கு போக வேண்டியது வரும் ஸோ, நாங்க ரெண்டு பேரும், மூர் மார்க்கெட் பழைய புத்தக கடையில 'ரெப்டெக்ஸ்" இங்கிலிஸ் கோர்ஸ் வாங்கி படிச்சிக்கிட்டு இருக்கோம்..

கார்த்திக்:- பரவாயில்லையே, இவ்வளவு அட்வாண்ஸ்ட் யா இருக்கீங்களே.... ஆமா,உங்களுக்கு சுடு தண்ணீர் தவிர, வேற ஏதாவது சமைக்க தெரியுமா? நீங்க வெளிநாட்டுக்கு போனா அதுவும் தெரிஞ்சி இருக்கனுமே?

சந்தியா:- இட்ஸ் நாட் யுயர்....

கார்த்திக்:- வுடுங்க வுடுங்க, அக்காளும் , தங்கையும் ஒரே டயலாகை பேசுறீங்க....

சந்தியா:- அவளும் அதே தான் சொன்னாலா? நேத்து அந்த கோர்ஸ் அவ படிக்கவே இல்லையே..

கார்த்திக் :- இப்படி மொக்கைய போடுறீங்க, லெட்ஸ் கம் டூ த பாயிண்ட்..

சந்தியா:- பைன், அதுக்கு முதல் நானும் ஒன்னு கேட்டுகிறேன்..

கார்த்திக்:- என்னா?

சந்தியா:- வாட் இஸ் யுயர் நேம் 'னு கேட்டாலே நீ தலை தெரிக்க ஒடுவியே, இப்ப எல்லாம் அசால்டா குவாட்டர் சாரி பீட்டர் வுடுறீயே ?

கார்த்திக் :- ஓ அதுவா, எல்லாம் பிற்காலத்துல
"மேன்சஸ்ட்டர் போக வேண்டியது வந்தாலும் வரும்.. ஸோ நாங்களும். வரும் முன் காப்போம் பாலிஸி தான்...

சந்தியா:- அட்ரா அட்ரா, அப்போ நீங்களும் 'ரெப்டெக்ஸ்" இங்கிலிஸ் கோர்ஸ் தானா?

கார்த்திக் :- இல்ல இல்ல, நாங்க எல்லாம் "விவேகானந்தா இன்ஸ்டியுட்" தான்...

சந்தியா:- குட் குட்.. மொக்கை போட்டது போதும்... இப்பவாச்சும் ஷால் வீ சுவிட்ச் டூ அவர் டாபிக்?

கார்த்திக் :- (எலக்ட்ரீசனா இருப்பா போல, சுவிட்ச் கிட்சு'னு பேசுறா) வயர் வயர் சாரி சுயர் சுயர்...

சந்தியா:- உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..

கார்த்திக்:- அந்த ஒரு விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்க, நானும் ஒன்னு சொல்லனும்..

சந்தியா:-நீங்க என்ன சொல்லனும்?

கார்த்திக்:- லேடிஸ் பர்ஸ்ட்...

சந்தியா:- ஒ கே பைன்.. சொல்லனும்'னு தான் நினைகிறேன். பட் எப்படி ஆரம்பிக்கிறது'னு தான் தெரியல.

கார்த்திக்:- வேணும்'னா குத்து பட நடிகை ரம்யாவா கூட்டிடு வந்து குத்து விளக்கு ஏத்த சொல்லட்டுமா? அதுக்கப்புறம் நீங்க ஆரம்பிக்கலாம்..

சந்தியா:- கார்த்திக், இட்ஸ் நாட் ய காமெடி டைம்.. ஆம் டாம் சீரியஸ்..

கார்த்திக்:- (எவ டா இவ, என்ன விட ஜாஸ்தியா மொக்கை போட்டுகிட்டு இருக்கா) விஷயத்துக்கு வாங்க சந்தியா..

சந்தியா:- உங்க கூட "ஆல்ரவுண்டர் அம்பி'"னு ஒருத்தர் இருப்பாரே..

கார்த்திக்:- ஆமா ஆமா, கிரிக்கெட் பிளேயர்.. அவனுக்கு என்ன? உங்கள எதுவும் வம்பு பண்ணுனா? சொல்லுங்க தட்டிடுவோம்.... அவனுக்கு எவ்வளவு பெரிய பேக்/பிரண்ட் கிரவுண்டு இருந்தாலும் பிரச்சினை இல்லை.. சொல்லுங்க...

சந்தியா:- கூல் டவுன் கார்த்திக்... ஏன் இவ்வளவு பதஸ்டம் அடைகிறீங்க? அதை கொஞ்சம் குறைங்க.. குடிக்க தண்ணி வேணுமா?

கார்த்திக்:- (வாடா வாடா வாங்கிக்கடா "பன்"னை) அப்போ ஆல்ரவுண்டர் அம்பிக்கு என்னா?

சந்தியா:- நான் வந்து, அது வந்து..

கார்த்திக்:- எது வரைக்கும் இப்போ வந்து இருக்கீங்க?

சந்தியா:- உங்க லொல்லுக்கு ஒரு அளவே இல்லையா..

கார்த்திக்:- பின்ன என்னங்க, ஒன்னாருபா மேட்டர் சொல்ல, முக்கா மணி நேரம் எடுத்துகிட்டு இருக்கீங்க..

சந்தியா:- சாரி, நான் உங்க பிரண்டு "ஆல்ரவுண்டர் அம்பி"ய உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்.

(நொருக் நொருக்'னு கார்த்திக் இதயம் ட்ரான்ஸ்பார்மர் மாதிரி உடைந்து போனது)
(அப்பளம் டமால்'னு வெடிக்கும் போது, ட்ரான்ஸ்பார்மர் வை கான்ட் நொருங்கிங்ஸ்)


கார்த்திக்:- என்ன சொல்லுறீங்க சந்தியா.. அவன் இது வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்லையே.. (ஆல்ரவுண்டர் அம்பி'யே, உன்னை ஆல் இல்லாத கிரவுண்டுல , சிக்ஸர் அடினா, நீ என் லவ்'ல யார்க்கர் போட்டு கிளீன் போல்டு ஆக்கிட்டேயே)

சந்தியா:- அவருக்கே அது தெரியாதே..

கார்த்திக்:- அப்போ நீங்களும் தருதலை சாரி ஒருதலையா காதலிக்கிறீங்களா?

சந்தியா:- நீங்களும்'னா, அப்போ நீங்களுமா?

கார்த்திக்:- ஆமாங்க..

சந்தியா:- என்னது ஆமாவா? என்ன சொல்லுறீங்க கார்த்திக்..ஆல்ரவுண்டர் அம்பி'ய காதலிக்கிறீங்களா? என்ன கருமம் இது.....

கார்த்திக்:- இல்ல இல்ல நான் சொன்னது ஆல்ரவுண்டர் அம்பி'ய இல்லை..

சந்தியா:- அப்போ யாரை?

கார்த்திக்:- அது வந்து அது வந்து

சந்தியா:- நீங்க எங்க வந்து இருக்கீங்க? (நாங்களும் கொடுப்போம் ல ரிப்பீட்டு)

கார்த்திக்:-"----"

சந்தியா:- கார்த்திக் உங்கள தான் நம்பி இருக்கேன்... ஆல்ரவுண்டர் அம்பி கிட்ட என் காதலை நீங்க தான் எடுத்து சொல்லனும்.....பிளீஸ்... அவரு இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை..

கார்த்திக்:- (எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க?) நானா? நான் எப்படிங்க அவன் கிட்ட சொல்லுறது..

சந்தியா:- வாய்'ல தாங்க சொல்லனும்...இல்லாட்டி நான் கை'ல எழுதி கொடுக்கிறேன். நீங்க அவருக்கிட்ட கொடுத்துடுங்க..அவரு அமெரிக்காலையே பிறந்து வளர்ந்தவரு, ஸோ நான் இங்கிளீஸ்'ல எழுதிறேன் ஒகே...

கார்த்திக்:- (அவனுக்கு வாய்'ல சொன்னாலே புரியாது, இதுல நீங்க எழுதி வேற கொடுக்க போறீங்களாக்கும்...)

சந்தியா:- கார்த்திக் ஐ அம் டாக்கிங் டூ யு ஒன்லி.. நாட் டு தி வால்..

கார்த்திக்:- காதலுக்கு என்னைக்கும் போஸ்ட் மேன் வைக்க கூடாதுங்க...
(நீங்க தமிழ் படமே பார்ப்பது இல்லையா?)

சந்தியா:- ஏங்க? இதுவும் சம் சார்ட் ஆப் உதவி தாங்க..

கார்த்திக்:- இல்லைங்க நீங்க இன்னும் வட்டத்துக்குள்ளையே வாழ்ந்து கிட்டு இருக்கீங்க, அதை விட்டு வெளியே வாங்க முதல்'ல ...

சந்தியா:- ஐ டோன்ட் கெட் யு....

கார்த்திக்:- (பீட்டர்க்கு ஒன்னும் குரைச்சல் இல்லை) இல்லங்க இப்ப இருக்கிற டகால்டி உலகத்துல, காதலுக்கு தூது விட்டா, ஒன்னு தூது போறவன் கரெக்ட் பண்ணிடறான், இல்லை, தூதுவே போய் சேர்வதில்லை.

சந்தியா:- முடிவா என்ன சொல்றீங்க?

கார்த்திக்:- நீங்களே உங்க காதலை ஆல்ரவுண்டர் அம்பி'யிடம் போய் சொல்லிடுங்க....லேட் பண்ணிடாதீங்க.. ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல..

சந்தியா:- புரியல எனக்கு

கார்த்திக்:- அட லிமிட் இருந்தும், எக்ஸ்பெயரி யான கிரெடிட் கார்டு மாதிரி..

சந்தியா:- இது சுத்தமா புரியல....

கார்த்திக் :- அதுக்கு தானே சொன்னதே.....

அப்போ ப்ரியா கை'ல டீ யுடன் ரூம்குள்ள ஆஜர்.....இந்தாங்க டீ எடுத்துக்கோங்க....

ப்ரியா:- கார்த்திக் சந்தியா கிட்ட நீங்க சொல்லனும் இருந்தத சொல்லிட்டிங்களா?

கார்த்திக்:- இன்னும் இல்லைங்க....

ப்ரியா:- சீக்கிரம் சொல்லிடுங்க..ஏன்னா, சொல்லாத காதல் செல்லாத காசு போல.

கார்த்திக்:- எனக்கேவா.... முடியல ஒரே அழுகையா வருது.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தியா:- கார்த்திக் நீங்க என்ன என் கிட்ட சொல்லனும்'னு இருந்தீங்க..

கார்த்திக்:- ஐ லவ் யூ சந்தியா...

சந்தியா:- கார்த்திக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்..

கார்த்திக்:- யெஸ் சந்தியா, உங்கள நான் மூனு வருஷமா காதிலிச்சிக்கிட்டு இருக்கேன்... இதுக்கு மேலையும் நான் சொல்லாம இருந்த, என் காதல் உண்மையானத இருக்காதுங்க....

சந்தியா :- சாரி கார்த்திக்..என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது..

கார்த்திக்:- நல்லாவே தெரியும்ங்க.. நீங்க இன்னொருத்தரை விரும்புறீங்க'னு தெரிஞ்சும் நீங்க என்னை லவ் பண்ணி தான் ஆகனும்'னு சொன்னா, அதுக்கு பேரு காதல் இல்லைங்க.....சுயநலம்,, ஸோ லெட்ஸ் பர்கெட் திஸ் டே.....

சந்தியா:- சாரி

கார்த்திக்:- எதுக்குங்க நீங்க என் கிட்ட சாரி சொல்லுறீங்க.. நாம நினைக்கிறது எல்லாம் நடப்பதும் இல்லை, ஆசை படுறது எல்லாம் கிடைப்பதும் இல்லை...

சந்தியா:- "---"

கார்த்திக்:- என்ன, இந்த மூனு வருஷம் என் காதலை சொல்லாம தவிச்ச தவிப்பை விட, இப்போ என் காதலை சொன்னதுக்கு அப்புறம் கிடைச்ச இந்த வேதனை (எ) பன், என் வாழ்க்கை'ல ஒரு சுகமான சுமையா இருந்துடும்... அப்போ அப்போ இந்த நினைவுகள் என் நாட்களை கொண்டு செல்லும்.... அது போதும் எனக்கு....... லெட்ஸ் மேக்ஸ் திங்ஸ் பெட்டர்... சி யா......

இருவரும் வெளியே வருகிறார்கள்...

**************************************************************

சூட்டு சூர்யா ஆவலுடன் சந்தியாவை கல்யாணம் கட்டிக்க சம்மதம் தெரிவிக்க,

சந்தியா "ஆல்ரவுண்டர் அம்பி" மேட்டரை அவிழ்த்து விட, அவளின் அப்பா நீயுமா???? என்று அவங்க அம்மாவை சோகத்துடன் பார்த்தார்..

கார்த்திக், உடனே சூர்யாவிடம், டேய், கூல் மேன்...
இங்க இந்தியாவுக்கே ஒன்னும் இல்லை, அப்புறம் எங்கத்த அமெரிக்காவுக்கு......
வா போலாம்'னு சொல்லிட்டு எல்லோரும் புறப்படுகிறார்கள்...


வெளியே சூர்யா கார்த்திக் யிடம்,
டேய், என்ன டா நடந்துச்சி?

நான் சந்தியாவை காதலித்தேன்,
அவள் "ஆல்ரவுண்டர் அம்பி"யை காதிக்கிறேன்'னு சொல்லிட்டா..
நீ ப்ரியா வை காதலித்தாய்,
அவள் "மைக்ரோ சாப்ட் மைக்கேல்'ய கல்யாணமே பண்ணிக்கிட்டா...

ஸோ, அவங்க கொடுத்த பன்'ல உனக்கு தான் ரொம்ப டேமேஜ்'னு சொல்ல, இருவரு சிரிக்கிறார்கள்...
அப்போ வாட் நெக்ஸ்டு?

வாழ்க்கைய யோசிங்கடா
தலையெழுத்தை நல்லா வாசிங்கடா ....
யோசிச்சு பாருங்கடா
வாழ்க்கைய நல்லா வாழுங்கடா...


அண்ணா வேம்பாலத்தில் (இறக்கத்தில்) உருட்டி விட்ட கோலிகுண்டு போல கார்த்திக்கின் வருடம் ஓடி போயின...

*********************************************************************************


3 வருடத்திற்க்கு அப்புறம்..

இடம்:- நயகரா பால்ஸ் - கனடா
நாள்:- சனிக்கிழமை
நேரம்:- பிற்பகல் 1.மணி..


ஒரு ஸ்டாலில் ஐஸ்கீரிம் வாங்கி கொண்டிருந்தான் கார்த்திக்.
(பின்ன எல்லா சாப்ட்வேரும் அமெரிக்கால இருந்தா எப்படி, கனடா பாவம் இல்லை? ஸோ லொக்கேஷன் மாத்தியாச்சி) வாங்கி கொண்டு திரும்ப, எதிர்த்தாப்புல சந்தியா புன்னையோடு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.... தான் காண்பது கனவா இல்லை நனவா என்று யோசிக்கும் முன்,

சந்தியா:- ஏய் கார்த்திக். எப்படி இருக்க..

கார்த்திக்:- வாட் வாட் எ சர்ப்பரைஸ்... எங்க இங்க?

சந்தியா:- ப்ரியா இங்க வந்து ஸெட்டில் ஆகிட்டா.... எனக்கு இங்கையே வேலை கிடைச்சிருச்சி... சொல்ல போனால், நானே இந்த ஊரை கேட்டு வாங்கி வந்தேன்..

கார்த்திக்:- குட் குட்... எப்படி இருக்கீங்க? சாப்டாச்சா? எங்க ஆல்ரவுண்டர்?

சந்தியா:- அவருக்கு 3 வருஷத்துக்கு முதலே கல்யாணம் ஆகிடுச்சி...

கார்த்திக்:- வாட் டூ யு மீன்..

சந்தியா:- ஆமா, நீங்க எங்க வீட்டுல இருந்து போனத்துக்கு அப்புறம் ஒரு மாதம் கழித்து "ஆல்ரவுண்டர் அம்பி" எங்க வீட்டுற்க்கு வந்தார் அவரின் கல்யாண பத்திரிக்கையோடு....

கார்த்திக்:-அப்போ நீங்க உங்க லவ்வை சொல்லவே இல்லையா?

சந்தியா:- இல்லை.. அதுக்கு சந்தர்ப்பமே அமையலை...... அதுக்கு முதல் அவங்க வீட்ல ஒரு பொண்னை நிச்சியம் பண்ணிட்டாங்க.

கார்த்திக்:- பின்ன என்ன பையனை'யா நிச்சயம் பண்ணுவாங்க?

சந்தியா:- நீங்க இன்னும் மாறாவே இல்லை..

கார்த்திக்:- இல்லையே நல்ல பாருங்க 13 கிலோ ஏறி இருக்கேன்...

சந்தியா:- முடியல.. பை த வே நீங்க எப்படி கனடா'ல? மான்செஸ்டர் என்னாச்கி....

கார்த்திக்:- அங்க எனக்கு பதிலா என்னை விட ஒரு நல்ல பையனை அனுப்பிட்டாங்க..

சந்தியா:- நீங்க இங்க தான் இருக்கீங்க'னு கண்டுபிடிக்கிறத்துகுள்ள, எனக்கு 3 வருஷம் முடிந்து போச்சி..


கார்த்திக்:- (குழப்பத்துடன்) என்ன? என்னை எதுக்கு தேடனும்?

சந்தியா:- ஆமா கார்த்திக், எல்லாருக்கும் உள்ளுக்குள்ள ஒரு கனவு, ஆசை இருக்கும்.ஆனா, அதுக்கு சம்பந்தமில்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருப்போம். இருந்தாலும் உள்ளுக்குள்ள இருக்கிற கனவை மறக்காம நினைத்திக்கொண்டே தான் நகர்ந்துக்கிட்டு இருப்போம். அந்த கனவு நனவாச்சுனா, வாழ்க்கை'ல கிடைக்கிற சுவாரஸ்யம்.. சான்சே இல்லை..

கார்த்திக்:- சத்தியமா எனக்கு ஒன்னுமே புரியல.....

சந்தியா:- நடிகாதீங்க கார்த்திக், உங்க கூட நான் கொஞ்சம் தனியா பேசனும்.. நாளைக்கு சன்டே... நீங்க எங்க வீட்டிற்க்கு லஞ்ச் க்கு வாங்கலேன்... பேசுவோம்...

கார்த்திக்:- (என்னை விட்டா பிரேக்பாஸ்ட் கே வந்துடுவேன்) (புரிந்தும் புரியாமலும்) கண்டிப்பா வர்றேன்....


அட்ரெஸ் வாங்கிக்கொண்டு சந்தியா அப்பீட்டு ஆக, கார்த்திக் குழப்பத்துடன். வந்தா, ஏதோ சொன்னா, லஞ்ச்'க்கு வர சொல்லிட்டு போறா...ம்ம்ம்ம்ம்ம்ம்

கார்த்திக்:- (முன்னாடி செல்லும் சந்தியாவிடம்) அலோ, சாப்பாடு சாப்ட்றா மாதிரி இருக்கும் இல்ல?

சந்தியா:- கவலை வேண்டாம், எங்க பக்கத்து வீட்டுல ஒரு அக்கா அசால்டா 15 - 20 பேருக்கு சமைப்பாங்க, அவங்க கிட்ட ஏற்கனவே எனக்கு சமைத்து தர சொல்லிட்டேன்... டோன் யு வரி மேன்... காட்ச் யு டூமாரோ... சி யா....

அடுத்த நாள் காலை 1 மணி சாப்பாட்டுக்கு பத்து மணிக்கே கார்த்திக் ரெடி ஆகி, காரில் சந்தியா வீடு நோக்கி செல்கிறான்.. வழியில் ஒரு ஸ்மார்ட் தமிழன் காரை வழி மறைத்தான்.

கார்த்திக்- நீங்க யாரு?

தமிழன்: என்னை பார்த்து இந்த கனடா'ல நீங்க யாரு'னு கேட்ட முதல் ஆள் நீங்க தான்..

கார்த்திக் :- ஏன் நீங்க அவ்வளவு பெரிய ஆளா?

தமிழன்: இல்லைங்க, இங்க எல்லாம் "வூ ஆர் யு"னு தான் கேட்ப்பாங்க.. அதை சொல்ல வந்தேன்..

கார்த்திக்:- மொக்கை டா சாமி..

தமிழன்:- கூல் நீங்க சூப்பர் ஸ்டாரு படம் "பாட்ஷா" பார்த்து இருக்கீங்களா?

கார்த்திக்:- ஆமா 13 தபா பார்த்து இருக்கேன்.. ஏன்?

தமிழன்:- இல்ல அதுல அவரு ஆட்டோல " உன் வாழ்க்கை உன் கையில்"னு சொல்லி இருப்பாரு..

கார்த்திக்- ஆமா, நான் இல்லை'னு சொல்ல'ல.. அதுக்கென்ன இப்போ?

தமிழன்:- அதே மாதிரி, நம்ம பக்காவும் என்னை உங்க கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு...

கார்த்திக்:- அவனா? என்ன சொல்ல சொன்னான்..?

தமிழன்:- "உன் வாழ்க்கை என் கையில்"னு..

கார்த்திக்:- ஓ இதோட அவரு மொக்கைய நிறுத்திட்டு, உங்கள , ஐ மீன் , கனடாவுல இருக்கிற தினேஷ் ஆகிய உங்ககளை என் அடுத்த எபிஸோடை எழத சொல்லிட்டாரா?

தமிழன்:- கரெக்ட் ரெம்ப கரெக்ட்.. நீங்க என்ன பண்ணுங்க, காரை எடுத்துக்கிட்டு சந்தியா வீட்டிற்க்கு போங்க, நான் ஒட்டவால இன்னும் ரெண்டு இடத்துல "கலர்புல் கனடியென் கனவு" பாக்கி இருக்கு.. அதை முடிச்சிட்டு வந்து, உங்க கதையை கண்டினியு பண்ண்றேன்.. ஒகே > பை பை..

*************************************************


வித்யாசமான முடிவை நோக்கி

அவ்வளவு தாங்க என் கதை முடிந்து போச்சி.. மை பிரெண்டு ரெம்ப நன்றி என்னை எழுத சொன்னதுக்கு.. என் பங்குக்கு நான் ரெம்பவே எழுதிட்டேன்.. ஸோ நான் இப்போ அழைப்பது அன்பு நண்பன் அவதார் டீரிம்ஸ் என்னும் கனடா தினேஷ் அவர்களை...

அண்ணாத்தே, ரெம்ப டைம் எடுக்காம சீக்கிரம் சந்தியா, கார்த்திக்கிடம் என்ன சொன்னாள்'னு சொல்லிடுங்க... ஒ கே...

*************************************************

நம்ம "சமையல் ராணி" பொற்கொடி கொடுத்த ஐடியா :-

யாரு எப்படி வேணும்னாலும் எழுதுங்க இந்த கதைய. எத்தனை டூத் பேஸ்ட் சாரி டுவிஸ்டு கொடுத்தாலும் நோ பிராபிளம்...ஆனா, அந்த கதைய முடிக்க போவது, இந்த கதை பயணத்தை தொடங்கி வைத்த பரணித்தான்.. ஸோ மக்க்ள்ஸ்'யே அதுக்கு ஏத்தா மாதிரி கதைய கொண்டு போங்க. ஒகே வா...

நானும் இதையே வழிமொழிந்து......

(தொடங்குன இடத்துல முடிச்சா தானே நல்ல இருக்கும்... ஸோ லெட்ஸ் ஸ்டார்ட் தே மேஜிக்)மறக்காம இந்த மொக்கைய மொக்கிட்டு போங்க....

ஒகே?

என்றும் தலைவலியுடன்
கோப்ஸ்.......

Monday, July 09, 2007

இதுவும் ஒரு காதல் (சுத்தமா இல்லா) கதை

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு கொடி அருணுக்கு நெருக்கடி கொடுத்தாங்க. அருண் பௌயமா அதை அம்பி கையில கொடுத்ததும், டாப் கியர் போட்டு தூக்கி சைலண்டா மலேசியா கும்மிகுயின் தலையில இறக்கி வச்சிட்டு ஓடிப் போயிட்டாரு..

அப்புறம் என்ன, இந்த மலேசிய கும்மிகுயின், கூட்டத்தில பக்கா தமிழன் எங்கே இருந்தாலும், மேடைக்கு வர வேண்டும்'னு, மைக்'ல கூவிட்டு போயிட்டாங்க......

போனது தான் போனாங்க, ஒழுங்க போனாங்களா? ப்ரியா'னு ஒரு புது காரெக்டர்யை கோதாவுல்ல இறக்கிட்டு போயிட்டாங்க....... இப்படி புதுசு புதுசா ஆளுங்களை அறிமுகம் படுத்துனா, ஏற்கனவே பயங்கர பிஸில இருக்கிற நம்ம மக்கள்ஸ், கண்டிப்பா கார்த்திக் அன்ட் சந்தியாவை மறந்தே போயிடுவாங்க.... சோ, இந்த எபிஸோட்'ல பிரியாவை பத்தி சொல்லிட்டு, அடுத்த எபிஸோட்'ல நம்ம கதை நாயர்களை பத்தி சொல்லிட்டு, அப்புறம் யாரையாச்சும் மாட்டி விடுறேன்....

இப்போ வாங்க என் கூட இதோ,


மலேசிய கும்மிகுயின் முடித்ததிலுருந்து

"என்ன ப்ரியா? என்ன தப்பு? என்ன நடந்துச்சு?" சந்தியா பதற்றத்துடன் கேட்க..

"நான்.. நான்.. ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."

"ப்ரீய்ய்ய்யாஆஆஆ....." (இது அவங்க அப்பாவோட சவுண்டு...)


*********************************************************************************


இனி பக்காவின் மொக்கை

காட்சி 1

சந்தியா :- என்னடி இப்படி சொல்லுற? பாரு அப்பாவுக்கு விக்கிக்கிடுச்சி.... -

ப்ரியா:- பின்ன எப்படி சொல்லுறது? மாறிட்டேன் மதத்துக்கு வேறொரு ஏற்கனவே நான்.. நான்.. இப்படி சொன்ன ஒகே வா?

சந்தியா:- இது நக்கல் அடிக்கிற டைம் இல்லை, பீ சீரியஸ் ப்ரியா..

ப்ரியா :- அது தான் நான் சொன்னேன் 'ல , நான் ஏற்கனவே வேறொரு மதத்துக்கு மாறிட்டேன்..."னு..

ப்ரியா அப்பா:- நீ என்ன யானை'யா மதம் பிடிச்சி மாறுறத்துக்கு? (வாய்'ல பக்கோடவுடன்)

சந்தியா:- ( பொங்கி வந்த சிரிப்பையும் அடக்கி கொண்டு) அப்பா குட் யு பீளிஸ் ஷட் யுயர் ப்லடி **** பார் ய வைல்?

ச.அப்பா :- (மனதுக்குள்) என் வேதனை எனக்கு..உங்களுக்கு எப்படி புரியும்?

கார்த்திக் அப்பா:- (ஒரு துண்டு முந்திரி பக்கோடவை வாய்ல போட்டுகிட்டே ) உமக்கு எப்ப எப்படி பேசனும்'னு தெரியாதா வோய் ?

ச.அப்பா :- (சத்தமாக) இங்க இருக்கிற கூட்டத்தில, வந்த வேலை'ய சரியா பார்த்துக்கிட்டு இருப்பது நீவீர் ஒருவர் தாம் வோய்.........

கா.அப்பா:- எது?

ச.அப்பா :- அது....

கா.அப்பா:- எது?

ச.அப்பா :- அதுதான், சைக்கிள் காப்'ல ஒரு தட்டு பக்கோடா, கேசரி எல்லதையும் வீடு கட்டுறத சொன்னேன்....

க.அப்பா:- அது..

ச.அப்பா:- எது

கா.அப்பா:- பக்கோடல கொஞ்சம் உப்பு கம்மி. வாய்ல வைக்கவே முடியல..

ச.அப்பா :- அது..

கா.அப்பா:- எது?

ச.அப்பா:- நான் செஞ்சது வேற எப்படி இருக்கும்..

கா.அப்பா:- அது..

ச.அப்பா:- எது?

கா.அப்பா:- உங்க வீட்டுலையும் நீங்க தான் டெமியா?

ச.அப்பா:- அது....

கா.அப்பா:- எது?

சூர்யா பொறுமை இழந்து, வாட் த யெல் இஸ் கோயிங் ஆன் மேன்...
(அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல)


உடனே கார்த்திக், இவங்களை வுட்டா அது, எது'னு மங்காத்தா ஆடிக்கிட்டே இருப்பாங்கே..அதுவும் இல்லாமல், இப்ப இருக்கிற சூழ்நிலையில், சூர்யாவும் டகால்டி காட்டி சந்தியாவை கரெட்க் பண்ணிட்டானா, நம்ம இந்த மூன்று வருடம் சந்தியாவுக்கு அழைந்தது, ஸ்டையில் பண்ணுனது, பன் திண்ணது, எல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடிக்காத புஸ் வானம் மாதிரி ஆகிடும்...
ஸோ, இட்ஸ் த ரைட் டைம்'னு, எல்லோருடைய அமைதியையும் உடைத்து,

கார்த்திக் :- நீங்க எல்லாம் தப்பா எடுத்துக்காட்டி நான் கொஞ்சம் ப்ரியா கூட பீரியா பேசலாமா?

ப்ரியா:- என் கூடவா?

கார்த்திக்:- ப்ரியா நீங்க தானே? அப்ப உங்களோட தான்.....

ப்ரியா:- (குழப்பத்துடன்) சரி. வாங்க....

கார்த்திக் அம்மா :- டேய் இங்க என்னடா நடக்குது?

கார்த்திக் :- சரியா போச்சி, வீட்டுல மூக்கு கண்ணாடிய மறந்துட்டு வந்துட்டியா? இங்க யாரும் நடக்கல... எல்லோரும் நின்னுகிட்டு தான் இருக்கோம்'னு சொல்ல

ஊஊஊஊஊஊஊஊஉ'னு ஒரு சிரிப்பலை....எல்லோரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க அங்க, ப்ரியாவின் கடை குட்டி தங்கை பிரீத்தி, ஆனந்த விகடன்'ல வந்த ஜோக் ஒன்றை படித்து சிரித்து கொண்டிருந்தாள்.....

எல்லோரும் அதை ரசிக்க,

லெப்ட் சைடு சூட்டோட நின்று கொண்டிருந்த சூர்யாவோ, தம்பி கார்த்திக் ப்ரியா கிட்ட என்னத்த பேச போறனோ'னு கவலையோட இருந்தான்...

*********************************************************************************

காட்சி 2

ப்ரியா:- என்ன பேசனும்'னு சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?

கா:- நீங்க அந்த மைக்ரோ சாப்ட் மைக்கெல்'ய தானே அலைபாயுதே ஸ்டைல்'ல கல்யாணம் பண்ணி இருக்கீங்க?

ப்ரியா:- அதிர்ச்சியுடன்... எப்படி எப்படி எப்படி உங்களுக்கு தெரியும்?

கா:- ஒருநாள், யாருடா அது சந்தியா டச்'ல ஒரு பிகரு நம்ம ஏரியா பக்கம் போகுது'னு உங்களை பாலோ பண்ணுனேன்.... அப்போ அந்த ஐஸ்கீரீம் பார்லர்'ல உங்க கிட்ட மைக்கல்,அவரு அமெரிக்கா போவதாகவும், அங்க போயிட்டு உங்களை கூப்பிட்டுக்க நீங்க ரெண்டு பேரும் பண்ணிக்கிட்ட அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் செர்டிபிக்கேட்டை கேட்டதை நான் கேட்டுட்டேன்...

ப்ரியா:- ஒ.... அப்படியா....ஆமா நான் சந்தியா மாதிரி இருக்கிறத்துக்கும், நீங்க என்னை பாலோ பண்ணுத்துக்கும் உள்ள முடிச்சை அவிழ்க்கிறீங்களா?

கார்த்திக்:- அது வந்து, நான் சந்தியாவை மூன்று வருஷமா காதிலிக்கிறேன்..

ப்ரியா:- அட்ரா சக்கை.... இந்த விஷயம் சந்தியாவுக்கு தெரியுமா?

கார்த்திக்:- இல்லை அதுதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்...

ப்ரியா:- அலோ, வாட்ஸ் த மேட்டர்...
கார்த்திக்:- ஐ வான்ட் சம் வாட்டர்...

ப்ரியா:- முடியல, என்னால முடியல..

கார்த்திக்:- சரி சரி நீங்க தான், நான் சந்தியா கூட பேச கொஞ்சம் ஏற்பாடு பண்ணனும்...பீளிஸ்..

ப்ரியா:- என்ன பேசுறீங்க கார்த்திக்.. அவளை பொண்ணு பார்க்க உங்க அண்ணன் வந்து இருக்காரு.. இந்த நேரத்துல.. எப்படி?

கார்த்திக் :- அட அவனே உங்க மேல உள்ள லவ்'ல அப்செட் ஆகி இருக்கான்... நீங்க உங்க மைக்கல் மேட்டரை சொன்னா, பய புள்ள அப்படியே ஆப் ஆகிடுவான்...... பிளிஸ், என்னை உங்க சந்தியா புருஷனா நினைத்து உதவி செய்ங்க பீளிஸ்......

ப்ரியா:- திஸ் இஸ் டபுள்ஸ் மச்.....இருந்தாலும், லவ்வுக்கு நான் எதிரி இல்லை.. ஸோ லெட் மீ சி....

கார்த்திக்:- ஆமா, உங்க மேட்டரை ஏன் உங்க அப்பா கேட்டப்ப சொல்லல?

ப்ரியா:- இது நல்ல கதையா இருக்கே... உங்க எல்லோரும் முன்னாடி நான் என் மேட்டரை சொல்லி இருந்தா, எங்க அப்பா என் கன்னத்துல ரெண்டு ச்சாப்பாவ கொடுத்து, என்னை டைவோர்ஸ் பண்ணி இருப்பாரு...... அதுனால தான் நான் சொல்லவே இல்லை...

கார்த்திக் :- என்னங்க ப்ரியா காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...

ப்ரியா:- ஏன், என்னாச்சு?

கார்த்திக் :- இல்ல, நாங்க போனதுக்கு அப்புறம் நீங்க உங்க அப்பா கிட்ட சொல்லி இருந்தா மட்டும், என்ன அவரு உங்கள கூப்பிட்டு பந்தி போட்டு பாயசமா ஊத்த போறாரு? வேணும்னா, அவரு பக்கார்டி நாலு ரவுண்டு உள்ள வுட்டுட்டு வந்து உங்க அம்மா'க்கு நாலு ச்சாப்பாவ கொடுப்பாரு....

ப்ரியா:- எதுக்கு எங்க அம்மாவை அடிக்கனும்?

கார்த்திக்:- அட, நீங்க தமிழ் சினிமாவே பார்த்தது இல்லையா? அதுல இது மாதிரி, அம்மாவுக்கு அடங்குன அப்பாக்கள் எல்லாத்துக்கும் கிளைமாக்ஸ்'ல தான் வீரம் வரும்... ஸோ, உங்க அம்மாவுக்கு உண்டு..

ப்ரியா:- (கோவமாக) ஸட் அப் கார்த்திக்..

கார்த்திக்:- "---"

ப்ரியா:- இட்ஸ் நாட் யுயர் கப் ஆப் டீ...

கார்த்திக்:- டீ யா? எங்க? இன்னும் நான் கேட்ட தண்ணீயே கொடுக்கலைங்க நீங்க..

ப்ரியா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா

கார்த்திக்:- நீங்க இப்பவே எங்க எல்லோரும் முன்னாடி சொன்னீங்கனா, உங்களுக்கு டேமெஜ் குறையும்..உங்களுக்கு சாதகமா நாங்களும் பேசுவோம்.... என்ன் ஓகே வா?

ப்ரியா:-ஏன், ஏன் என் மேல இப்படி அக்கறை காட்டுறீங்க?

கார்த்திக்:- சுயநலமான இந்த வாழ்க்கை'ல, உங்களுக்கு நான் உதவி செஞ்சா தான், நீங்க எனக்கு உதவி செய்வீங்க ஒரு நப்பாசைங்க....

ப்ரியா:- இப்ப தெரியுது எதுக்கு சிங்கம் சிங்களா வந்தது'னு... பட் நான் அப்படி இல்லை... எனியவ்., நீங்க சொன்ன மாதிரி இப்பவே எங்க வீட்டுல என் மேட்டரை உடைச்சிடறேன்...

கார்த்திக்:- வெரி குட் அந்த சந்தியா மேட்டர்?

ப்ரியா:- டன்...

இருவரும் வெளியே வருகிறார்கள்...

*********************************************************************************

அதுவரை பொழது போகாமல் டிவியில் " யாரு மனசுல யாரு" நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த எல்லோரும், என்ன பேசினீங்க என்று கேட்க,

ப்ரியா:- அப்பா, எனக்கு'னு நீங்க பார்த்து வச்சி இருந்த "அமெரிக்கா அருண்", சென்னை பரணி, சரவணா, கனடா தினேஷ், குவைத்து கோப்

ப்ரியா அப்பா:- ஐயோ அவனை நான் லிஸ்ட்'ல இருந்து எப்பவோ தூக்கிட்டேனே....

ப்ரியா:- அது.

கார்த்திக் அப்பா:- எது?

ப்ரியா அப்பா:- பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல...

கார்த்திக் அப்பா:- அது.

சூர்யா:- யோவ், கொஞ்சம் நிப்பாட்டுறீங்களா உங்க மங்காத்தவை? (டிஸ்கஸ்டிங்)
(அமெரிக்கா'ல இருந்து கூட்டியாந்து இருக்கோம்'ல)


கார்த்திக்:- ப்ரியா நீங்க சொல்ல வந்தத சொல்லிடுங்க..

ப்ரியா:- கனம் கோட்டார் அவர்களே..

ப்ரி.அப்பா:- அடியே, உங்க அப்பன் வக்கீல் படிப்பு படிச்சிட்டு கோர்ட் வாசலே மிதிக்காம இருக்கானு சொல்லாம சொல்லி காட்டுற பார்த்தியா.....

ப்ரியா:- சாரி டாட்..அப்போ சொன்ன அந்த லிஸ்ட்'ல இருக்கிற எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிடுங்க.

ப்ரி.அப்பா:- ஏம்மா? உனக்கு யாரையுமே பிடிக்கலையா?

ப்ரியா:- அப்படி'னு இல்லை, பட் எனக்கு 1 வருஷத்துக்கு முதலே "மைக்ரோ சாப்ட் மைக்கெல்" கூட கல்யாணம் முடிஞ்சி போச்சி, இன்னும் நான் ரெண்டு மாசத்துல அமெரிக்கா போக போறேன்....

ப்ரியா அப்பா:- குட் விசா கிடைச்சுடுமா?

ப்ரியா:- அப்பா, என்ன இவ்வளவு கூலா கேட்குறீங்க...

ப்ரியா அப்பா:- ஆமாமா, உன் பியூச்சர் பத்தி உனக்கு தான் நல்லா தெரியும், எனக்கு ஒன்னும் தெரியாது. என்னைக்கு எங்களுக்கு தெரியாம நீ இவ்வளவு பெரிய காரியத்தை அசால்ட்டா, கேசரில போட்ட டால்ட்டா மாதிரி சொன்னியோ அப்பவே எங்களின் முக்கியதுவம் தெரிஞ்சிடுச்சி... நீ நல்ல இருப்ப..

ப்ரியா:- ஐ அம் ரியலி சாரி ப்பா....

ப்ரியா அப்பா :- போன "பஸ்" க்கு கை காம்மிச்சா நிக்கவா போகுது....

ப்ரியா:- "---"

ப்ரியா அப்பா:- சரி, எதையோ சாப்ட பையன்'னு சொன்னியே, அவனை எனக்கு பேச சொல்லு..

ப்ரியா:- (இவ்வளவு பெரிய மேட்டர்,பொசுக்குனு முடிஞ்சி போச்சி. தேங்கஸ் கார்த்தி) ஓ கே கண்டிப்பா.....

பப்ளிக்'ல இவ்வளவு நடந்ததும், சூர்யாவுக்கு, "அமெரிக்கா மாப்பிளைன்னா பன்னு திங்கிறதுக்கு மட்டும்தான் லாயக்குன்னு சொல்ற அளவுக்கு "விஞ்ஞானம்" வளர்ந்திருக்கு! என்கிற மூட நம்பிக்கையை ஒழித்தே தீரனும் என்கிற அமெரிக்க அக்கறையோடு" சபை'ல,

எனக்கு சந்தியாவை ரெம்ப பிடிச்சி இருக்கு என்று சொல்லவும்,

டேய் சூர்யா இப்படி சிலிப் ஆகிடேயே, எனக்கு அப்போ ஆப்பு உறுதியா?னு கார்த்திக் நினைக்கவும்,

எனக்கு கார்த்திக் கூட கொஞ்சம் பேசனும் அப்படினு சந்தியா சொல்லாவும்,
சரியாக இருந்தது......


தொடரும்.............

Sunday, July 01, 2007

காபி வித் கோபி - ராம் பிரதர் !!!

hi hi hi

கடைசியா "My Freind" கூட போட்ட ஷோவோட காபி வித் கோப்ஸ் க்கு ஒரு பிரேக் கொடுத்துட்டு, (அவங்க ரொம்பவே தாக்கிட்டாங்க.... டேமேஜ்'ய குறைக்கனும்'ல)

இதோ மீண்டும் ஜீலை மாதம், புது ஷோ'ல நண்பர் ராம் அவர்களுடன் இந்த காபி வித் கோப்ஸ் லைவ் ஆகுது.......

Questions and highlighted commets => நான் போட்டது
மற்றவை எல்லாம் ராம் பிரதர் சொன்னது.....


1."ராயல்" ராம். இதுல ராயல் பட்டம் எப்படி கிடைத்தது?

அதுக்காகதான் நீங்க வரலாறு படிச்சிருக்கனுமின்னு சொல்லுறது, என்னப்பண்ணுறது சில பேர் M.Com படிச்சி டாக்டர் வேலை பார்க்கிறமாதிரி சயின்ஸ் படிச்சுட்டு நீங்க கணக்குபிள்ளை வேலை பார்க்கிறீங்க போலே? நீங்க படிக்கிறோப்போ காலேஜிலே History Subject இல்லையா? அதிலே என்னோட பெயர் இருந்திருக்கும் படிச்சிருக்கீங்களா??
( ஆமா ஆமா நான் வரலாறு படிச்சி இருக்கேன்.. மதுரை'ய மீட்ட சுந்தர பாண்டியன் நீங்க தானா அப்போ?)

அது Royal இல்லே.... Raw yell, சிலசமயம் காட்டுத்தனமா சத்தம் போட்டு கத்துவேன், அதுதான் அப்பிடியே பட்டப்பேர் வைச்சிட்டாங்கன்னு நான் சொன்னா நீங்க சத்தியமா நம்பித்தான் ஆகனும். ஏன்னா எனக்கு பொய் சொல்லவே தெரியாது, அதை விட நான் Basically நல்லவன், அதுனாலே யாரையும் ஏமாத்தமாட்டேன். இன்னொரு விஷயம் எங்க வீட்டு பக்கத்திலே இருக்கிற டாஸ்மாக் கடை பேருதான் ராயல், நான் அடிக்கிற சரக்கு பேரும் ராயல் சேலஞ்ச்'ன்னு யாராவது சொன்னா நம்பிறாதீங்க...நான் நல்லவனா இருக்கிறதுனாலே எனக்கு எதிரிகள் அதிகம். :(

(அடேங்கப்பா, Raw yell => ராயல்'யா, நல்லா சொல்றாங்கப்பா டிடெய்லு....)
நல்லவேளை நீங்க நம்ம, நாட்டு சரக்கு, பட்டை, சுண்ட கஞ்சி எல்லாம் அடிக்கல. இல்லாட்டி உங்களுக்கு "பட்டை ராம்", சுண்ட கஞ்சி" ராம்'னு பட்டம் வந்து இருக்கும். தப்பிச்சீங்க.(ராயல்'ல (நல்லவன்) ஆண்டவன் கை விட மாட்டான் :)


2. நீங்க பிளாக் உலகத்துக்கு வந்தது பற்றி?

பாஸ்... இதுவும் வரலாற்று ஏடுகளில் வரவேண்டிய விஷயம்தான். இப்போதைக்கு ஒரு பிட் தாரேன், ஆபிஸிலே வேலை??? பார்க்கிறோப்போ F5 பண்ணலாமின்னு ஆபிஸ் இண்டர்னல் சைட்'லே இருந்த Blog Name'யே கூகுளிலே போட்டு பார்த்தேன், என்னத்தோயோ இங்கிலிபிசிலே சொல்லி தொலைச்சுச்சு, அதைத்தான் நமக்கு புரியவே புரியாதில்லை... அப்புறம் Tamil Blog'னு Search பண்ணேன், அப்போதான் ஒரு பதிவும், ஜிரா பதிவும் வந்துச்சு, அதிலே ஆரம்பிச்சது தான் இந்த வரலாற்று பயணம்...

(எல்லாம், G3 பண்ணி பிளாக் உலகத்துக்கு வந்தா, நீங்க அசால்டா F5 பண்ணி அழகா வந்து இருக்கீங்க.... எல்லாரும் ஆணீ புடுங்குற இடத்துல இப்படி தான் பிளாக் எழுத ஆரம்பிக்கனும்..கேட்டுக்கோங்க ஒகே ....)

3. ஆரம்பத்துல கவிதை + மொக்கையா போட்டு தாக்கிக்கிட்டு இருந்த நீங்க இப்போ எல்லாம் கதை + கவிதை'ல இறங்கிட்டீங்க'ல?

ஹிஹி இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான். எனக்குள்ளே இருக்கிற எழுத்தாளன் எத்தனை நாள்தான் போர்வையை போத்திகிட்டு தூங்குவான். அவனை தட்டியெழுப்பி கூட்டிட்டு வந்துட்டேன், So இனிமே குருட்டுபுலி, செவிட்டு எலி, ஊமை பல்லி'ன்னு கொலைவெறி கவுஜை'யா வந்துட்டுதான் இருக்கும்.

(எப்படி குவாட்டர அடிச்சிட்டு போர்வைய போத்திகிட்டு குப்புர படுத்து இருந்தவனை தட்டி எழுப்பிட்டேனு சொல்றீங்க. ஆமா, எனக்கு புலி, சிங்கம் தெரியும்...அது யாரு பல்லி,எலி, எல்லாம்? பேரை கேட்டாலே சும்மா அதிருது....)

4. வ.வா.சங்கத்தின் வரலாறு?

சங்கம் ஆரம்பித்தற்கு முக்கிய காரணமே இப்போ சாப்ட்வேர் துறையிலே இருக்கிற மக்கள் தொலைத்த நகைச்சுவை ரசிப்புதன்மையை திரும்ப கொண்டுவரனும்கிறது'க்காதான். அதுமில்லாமே இப்போ ஆன்சைட்'ன்னு எங்கயோ கண்காணாத இடத்திலே போய் நம்மாளு வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க எவ்வளோதான் கொட்டி கொடுத்தாலும் நம்ம ஊர் முக்கு'லே இட்லி சுட்டு விக்கிற பாட்டி ருசி சாப்பாடு கிடைக்காது, போதும் போதுன்'ன்னு சொன்னாலும் அம்மா தட்டிலே போடுற கொஞ்சகாணு சோறு கிடைக்கவே கிடைக்காது, ஆனா பொழுதுப்போக்குக்காக எதாவது அதுவும் ஆன்லைனில் படிக்கிறப்போ மண் மணக்கிற எழுத்தை கிடைக்கனுமின்னு தான் எங்களுக்குள்ளே முடிவு பண்ணி எழுதிட்டு இருக்கோம்,
சங்கத்தோட தாரக மந்திரம் "இளம் நகையை உங்க உதட்டோரத்திலே துளிர்க்க வைக்கிறது தான் எங்கள் தவம்"

(அருமையாக சொன்னீங்க. அற்புதமான தாரக மந்திரம்......
ஆனா, சாப்ட்வேர் துறை மட்டும் இல்லைங்க, மத்த துறை'லையும் மக்கள்ஸ் இருக்காங்க)5. வ.வ.சங்கத்தின் வெற்றியை பற்றி?

ஒரு முறை பெங்களூரூலே இருந்து சேலம் போற பஸ்ஸிலே பயணம் பண்ணேன், அப்போ எலக்டரானிக் சிட்டியிலே கொஞ்சம் IT மக்கள் எல்லாரும் ஏறுனாங்க. அவங்க பேச்சிலே பொழுது போக்கு பத்தி பேச்சு வந்தோப்போ எவ்வளவோ Sites name எல்லாரும் சொன்னாங்க, அதிலே வ.வா.சங்கமின்னு சொன்னாப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.
சங்கம் ஒரே இராத்திரியிலே கட்டி முடிச்ச கோட்டை இல்லை.சில தனிப்பட்ட வேலைகள், அலுவலக வேலைகள் எல்லாரும் இருந்தும் சங்கத்திலே இருக்கிற ஒவ்வொருவரும் கொஞ்சம் டைம் ஒதுக்கி வேலை பார்த்து இருக்கோம், அதிலே எங்களுக்கு கிடைச்ச இந்த வரவேறப்பை எல்லாரும் தலைவணங்கி ஏத்துக்கிறோம். இன்னமும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகனுறக்கான உழைப்பும் காத்திட்டுதான் இருக்கு.

(இது ஒரு சாதனை தான்... ஆர்வம் மட்டும் இல்லாமல், கடின உழைப்பால், தமிழ் பிளாக் மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுப்போக்கு, அதுவும் நகைசுவையுடன் கலந்து பட்டைய கிளப்பிகிட்டு இருக்கீங்க.... உங்கள் சங்கத்துக்கு எங்கள் நன்றியுடன் கலந்த பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.)

6. எப்படி உலகத்துல பல்வேறு ஊருல இருக்கிற உங்க வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று கூடி சங்கத்தை டெவெலப் பண்றீங்க?

அங்கதான் எங்களோட ஒற்றுமையை நிலைநாட்டுறோம். சங்கத்திலே இருக்கிற பத்து பேரிலே 3 - 4 பேர் மட்டுந்தான் இந்தியாவிலே இருக்கோம், இன்னும் எல்லாரும் ஒன்னா கூடி சந்திஞ்சுகிட்டது இல்லை. எங்களுக்குள்ளே நடக்கிற எல்லா முடிவுகள் எல்லாமே மெயில் அனுப்பி மத்தவங்களோட கருத்தை கேட்டு அதுப்படி எடுக்கிறதுதான், அதுவுமில்லாமே வைச்சிக்கிட்டே பேருக்கு ஏத்தமாதிரி வருத்தப்படாமே இருக்கிறதுனாலேதான் என்னோவோ எல்லாரும் ஒத்தகருத்தோட'வே இருக்கோம்.

( சபாஷ்)

7.சமீபத்துல வ.வ.சங்கத்தை பற்றி தினமணி நாளிதழ்'ல வந்ததே, அதை பற்றி?

இதைப்பற்றி சொல்லுறதிலே கொஞ்சம் பெருமையா இருக்கத்தான் செய்யுது. வெகுசன ஊடகத்துக்கு (Mass Media) இணையான வளர்ச்சியடைச்சிட்டு வர்ற வலைப்பூக்கள்(Blogs) பற்றி நாளிதழ்களிலே வந்த பெரிய செய்திகட்டுரையிலே இதுவும் ஒன்றுதான். தினமணி நாளிதழ் சப்-எடிட்டர் சங்கத்து போர்வாளை (தேவ்) தொடர்பு கொண்டப்போ அவர் நாங்க இன்னும் எல்லாரும் ஒருத்தர்கொருத்தர் ஒண்ணா சந்தித்தது இல்லைன்னு சொன்னதும் ரொம்பவே ஆச்சரியப்பட்டாராம்.

(அவங்க மட்டுமா? நாங்களும் தான்.... )

8. உங்கள் பொழுதுபோக்கு என்ன என்ன?
(பிளாக், இணையதளத்தை தவிர)


வீட்டிலே பொழுதுபோக்குன்னா படிப்பேன், தூங்குவேன், சாப்பிடுவேன் அப்புறம் திரும்ப வந்து தூங்கிருவேன். நான் ஒரு புத்தகவெறியன், புத்தகபுழு'ன்னு கூட சொல்லலாம். என்னத்தையாவது படிச்சிட்டு இருப்பேன். சாண்டில்யன்,கல்கி,பாலகுமாரன்,வ ைரமுத்து,பா.விஜய்'ன்னு எல்லார் புத்தகங்களும் படிப்பேன். இப்போ கொஞ்சநாளா இங்கிலிபிசு டிக்சனரியை துணை வைச்சிக்கிட்டு ஷிட்னி ஷெல்டன் நாவலெல்லாம் படிச்சிட்டு இருக்கேன்.. :)
ஆபிஸிலே பொழுது போக்குன்னா வேலை பார்ப்பேன்.. ஹி ஹி

(அட்ரா அட்ரா, ஷிட்னி ஷெல்டன்'யா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தன்னடக்கத்தை அடக்கம் பண்ணிட்டு வந்துடீங்களே)

9.வீக் என்ட்ஸ் (வார இறுதி) எப்படி பொழுதுபோகும்?

வார இறுதியிலே நெப்போலியன் கூட பேச்சுவார்த்தை நடக்கும், சில சமயம் Directores கூட Special'ஆ பேச்சுவார்த்தையும் நடக்கும். பேச்சு வார்த்தைக்கப்புறம் ஓய்வு எடுத்துட்டு MG Road , Brigade Road, Forum, Garuda Mall'ன்னு வெட்டியா ஊரெல்லாம் சுத்தாமே தான் சும்மா இருப்போமின்னு என்னோட மனசாட்சியை அடகு வைச்சிட்டு எல்லாம் என்னாலே பொய் சொல்லமுடியாதுங்க....ஏன்னா நான் ரொம்ப நல்லவன்.... :)

(நெப்போலியன்,Directors கூட எல்லாம் Special கூட்டணி வச்சி இருக்கீங்க. அப்போ நீங்க நல்லவரு இல்லை, ரொம்ப நல்லவர்... உங்களுக்கு சிலை உண்டு)

10.மதுரை மாநகரம் => பெங்களுர் => உங்கள் கண்னோடத்தில்.

பெங்களூரூ வந்து மூணுவருசமாச்சுங்க, ஓரே வார்த்தையிலே சொல்லனுமின்னா
பெங்களூரூ பைவ் ஸ்டார் 100 வெரைட்டி ஃபபே.
மதுரை'க்கிறது அம்மா சமைச்சி கொடுக்கிற புளிகுழம்பும், கீரை பொறியல்.

(அடிச்சீங்க பாருங்க நாலாவது பால்'ல சிக்ஸ்ர்..... அருமையான கண்னோட்டம்
எதிர் பார்க்கவே இல்லை. ரசித்தேன்.)


இதிலே நீங்க எதை அதிகமா விரும்புவீங்க??

கண்டிப்பா நமக்கு புளிகுழம்பும், கீரை பொறியலும் தான்.....

11.அனானிமஸ் கமெண்டுரான "ரஞ்சனி", இவங்க டகால்டியா,இல்ல ரியல்'யா?

அடபாவி... இம்புட்டு நேரமா நல்லாதானய்யா கேள்வியை கேட்டுக்கிட்டு இருந்தே?
(நீங்க நல்லவருனு ஊரு உலகத்துக்கு சொல்லனும்'ல )
தீடிரென்னு தீட்டின ஆப்பை சீட்டுக்கு அடியிலே சொருக்கிறீயே மக்கா!
(பின்ன என்ன தலை'லையா வைப்பாங்க? ஆப்பு'னா சீட்டுக்கு அடில தான் வைக்கனும் சீப்புனா அதுல தலை'ல இருக்கிற முடியை சீவனும்)

ரஞ்சனி'ங்கிறது நம்ம மக்கள் பத்த வைச்ச தீ, இப்போ அது நல்லா ஜகஜோதியா எரிஞ்சிட்டு இருக்கு, இன்னும் கொஞ்சநாளிலே வர்றப்போற தங்கமணி யாரு அதுன்னு என்னை வெளுத்து வாங்கப்போற அளவுக்கு பூதாகரமா வளர்ந்து வேற போயிருக்கு! ஹிம் இப்போவே நம்ம பாசமலர்கள் அவங்களுக்கு பூரிகட்டையை கிப்ட்'ஆ கொடுக்கப்போறேன்னு சொல்லிட்டு திரியுதுக.... :((

(எல்லாம் நல்லவங்க மேல உள்ள பாசம் தேங்... இது மாதிரி வேற யாருக்காச்சும் செய்றாங்களா? பாசத்தை புரிஞ்சிக்கோங்க நல்லவரே.....பாசமலர்களே, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..)


கோப்ஸின் போனஸ் கேள்வி...

உங்க பிளாக்'ல இருக்கிற டிஸ்பிளே படம், எங்க இருந்து புடிச்சீங்க?வித்தியாசமா இருக்கே.அவரு யாரு?அவரு நம்மளோட மல்டிப்பிள் பெர்சானலிட்டி'லே ஒருத்தர். அவர் ஏன் என்னோட புரோப்பைல்'லிலே வந்தார்'கிறதுக்கு ஒரு பதிவே போட்டு இருக்கேன், படிச்சி பாருங்க... இங்க வைச்சி எனக்கு கொசுவர்த்தி சுருளை சுத்த டைம் இல்லை, ஏன்னா இப்போ மீன்கொத்தி பறவை கூட பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதா இருக்கு... :)

(அட அந்த மீன் கொத்தி நல்லா இருக்காரா? பார்த்து ரெம்ப நாள் ஆகிட்டு... கோபி கேட்டாரு'னு கொஞ்சம் சொல்லுங்க... ஒ கே)


ராம் கேட்டது..

இப்போதைக்கு ஒரே ஒரு டவுட்...
இப்போ கொடுத்தா ஒன்னா ரூவா காப்பி'க்கு பதிலா ரெண்டு, மூணு லார்ஜ் பாகார்டி கொடுத்து இருந்தா என்ன கொறைச்சா போயிருவீங்க????

நான் சொன்னது
இந்த ஊருல காபி மட்டும் தான் கிடைக்கும்.....ஹி ஹி
so, better luck next time..


அவ்வளவு தாங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த காபி வித் கோப்ஸ்'ல உங்கள சந்தித்தது மிக்க சந்தோஷம்.. எல்லோரும் உங்க ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.....

ராம் பிரதர்.... சிரமம் பார்க்காமல் என் கேள்விக்கு பொருமையாக பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி....

எல்லோரும் மறக்காம கும்மிட்டு போங்க....

வரட்டா.....

cheers!!!!!!!!!!!!!
gops....