Friday, August 31, 2007

வாழ்த்துக்கள்
1st செப்டம்பரில் டிஸ்டம்பர் அடித்த மாதிரி புதுசாக இன்னொரு வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் எங்கள் கட்சி தலைவியும், சுட்டப்பழம் புகழும், பிலாகர்ஸ் மீட் வைத்து ட்ரீட் வாங்குவதில் முடிசூடா (முடியை சடை போட்டு) அரசியா விளங்கும் நம்ம பிலாக் உலக G3'க்கு முன்னோடியா இருக்கும் எங்கள் சொ.அக்கா (எ) கட்சி தலைவலி சாரி தலைவி "காயத்திரி"க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிச்சிவிட்டுக்கிறேன்....


கட்சி தலைவி, சொ.அக்கா காயத்திரி அவர்களே எங்களுக்கு உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம், ஏன் என்று தெரியுமா? அப்பவாச்சும் எங்களுக்கு நீங்க பிறந்த நாள் ட்ரீட் தர மாட்டீங்களா'னு ஒரு நப்பாசை, பேராசை, எப்படினாலும் நீங்க நினைச்சிக்கலாம்..இதை நாங்களா கேட்கவில்லை.. எங்களை எதிரி கட்சி கேட்க வைக்கிறது....ஆகையால், நம் கட்சி நபர்களுக்கு ஒரு நல்ல நாளில் ட்ரீட் தருமாறு (ஒரு பிட்டை போட்டு) கேட்டு கொண்டு, நீங்கள் இன்னும் 50 ஆண்டு காலம் நன்றாக வாழ, வாழ்த்துக்களை சொல்லி என் (கோனார் தமிழ்) உரையை முடித்துக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்....

மத்தபடி, நம் கட்சி தொண்டர்கள் எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டுகளில் தெளிப்பார்கள் என்று கூறி விடைப்பெற்றுக்கொள்கிறேன்..

பிறந்தநாள் பரிசாக நம் கட்சி நபர்கள் காயத்திரிக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்

டிடி அக்கா :-

ஒரு டின்(10கி) வேக வைத்த சுண்டல்..
கூடவே ஒரு பொன்மொழி
"சுண்டலை வைத்து பண்ணிடாதீங்க என்னை கிண்டல்,
அப்புறம் நான் பண்ண வேண்டியது வரும் எல்லாத்தையும் பண்டல்"


சுமதி அக்கா :- வாழக்காய் பஜ்ஜி 1001.....


தல அம்பி:-

சூடான ரவா "கேசரி" ஒரு பெரிய தாம்பூலத்தில்...கூடவே ஒரு பொன்மொழி
"எல்லா நல்ல காரியத்துக்கும் முதலில் வைப்பாங்க கேசரி"
பூரி கட்டை என் நியாபகத்துக்கு வரும் தினசரி,


மை பிரெண்ட் :-
ஒரு கூடை நிறைய "விலாங்கு மீன்".. கூடவே ஒரு பொன்மொழி
"மீன் கருவாடு ஆகலாம்.. ஆனால், கருவாடு மீன் ஆகுமா???


பொற்கொடி:-

இவங்க கடைசியா போட்ட போஸ்ட்'ல இருக்கிற சாப்பாடு மெனு.(தாராளமா, 20 பேரு சாப்பிடற மாதிரி). அப்புறம் அவங்க இன்னைக்கு படிச்ச புத்தகத்தில இருந்து, G3க்கு புடிச்ச செய்தி ஒன்னு.. அதுதாங்க,
"அம்மன் கோயில்'ல கூல் ஊத்துறாங்க"....

போல்டு பிரதர் K4K இப்போ ரீமிக்ஸ்'ல பட்டைய கிளப்புறார்.. சோ, மேலே சொன்ன பரிசு எல்லதையும் வைத்து ஒரு ரீமிக்ஸ் கொடுப்பார்......

சிறப்பு பரிசு
நானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு "சோடா பாட்டில்" கொடுக்கிறோம்.....
(தங்க்சசிக்களுக்கு சோடா கொடுக்கிறதே எங்க வேலையா போச்சி.. ஹி ஹி. என்ன தல?)

இன்னொரு முறை சொல்லிக்கிறேன்...

"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் G3"

வாழ்த்திட்டு போங்க...
வணக்கம்....

Thursday, August 23, 2007

அப்படிதான்.... !!!!

1. இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 60வது சுதந்திர தினத்துக்கு போட்ட "ஜன கன மன" ஆல்பத்துல தேசிய கீதத்தை, அதை அதன் விதிப்படி பாடவில்லை'னு நிறைய பேரு அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுக்கனும்'னு இருக்காங்களாம்.. என்னத்த சொல்ல...

நல்லது செய், உதவிக்கு யாரும் வரமாட்டார்கள்..
நல்லது செய், ஆயிரம் பேரு குத்தம் கண்டுபுடிக்க வருவாங்க......
எவ்வளவு உண்மை'னு சொல்ல முடியாது..


2. கிடைக்கிறது கிடைக்காம இருக்காது.. ஆனா கொஞ்சம் லேட் ஆனா அந்த கிடைக்கிறது மேல உள்ள எதிர்ப்பார்ப்பு கொஞ்சம் குறையும்.....அந்த நேரத்துல, நமக்கு கிடைக்காம இருக்கிறது கிடைத்தா, நமக்கு கிடைக்கிற மேல உள்ள எதிர்ப்பார்ப்பு ஜாஸ்தி ஆகிடும்..

என்ன சொல்ல வரேன்'னு புரியாட்டி... இதோ சாம்பிள், அகோர பசியுடன் நீங்க நண்பர்கள் நாலு பேருடன் ஹோட்டலுக்கு போறீங்க, அங்க நீங்க ஆர்டர் பண்ணுன உணவு மட்டும் வர லேட் ஆகுது...ஆனா நண்பர்கள் ஆர்டர் பண்ணுனது மட்டும் சீக்கிரம் வந்துடுது.......

சோ, ரெண்டையும் மேட்ச் பண்ணி பாருங்க... நல்லாவே புரியும்......


3. பேச்சிலரா இருந்துக்கிட்டு, சில்லைறை செலவு பண்ணுறதை (Excel'ல, துண்டு பேப்பர்'ல) ட்ராக் வச்சிக்கிட்டா, நாம செய்யிற செலவு ஜாஸ்தி ஆகிடும்... உண்மையா இல்லையா?

4. என்னை மாதிரி "அறுசுவை(சுமை)சமையல்(கேவலமான) நிபுணர்களுக்கு அண்ணாச்சி மளிகை கடை இல்லாதது பெரிய டிராபேக்... உருவ ஒற்றுமை'ல நான் அதிகமா பன் திங்குறது "கடலை பருப்பு vs துவரம் பருப்பு"ல தான்... ஆங்கிலத்துல பேரு எழுதி இருந்தாலும், அத எல்லாம் யாரு படிக்கிறது, பாக்கெட்டை பார்த்தியா எடுத்து ட்ராலி'ல போட்டியா, பக்கத்துல இருக்கிற பிகருக்கு மனசுலையே ஹாய் சொன்னியா'னு மாத மாதம் இதே ராவடிதான்.... இட்ஸ் ஒகே... டீன் ஏஜ் பருவத்துல(செருப்பு) இதெல்லாம் சகஜம் தானே..

(கடலை பருப்பு'ல சாம்பார் வைக்க முடியாது, துவரம் பருப்புல கூட்டு செய்ய முடியாது... )


5. தமிழ் சினிமா பாடல்களில், நல்லா ஹிட் ஆன பாடல்கள் பல ஆயிரம் இருந்தாலும்,
யாரை கேட்டாலும் அவங்க டாப் பேவரிட்'ல "கண்ணே கலைமானே" பாட்டும்
"பூவே செம்பூவே"" பாட்டும் அவங்க லிஸ்ட்'ல இருக்கே எதுனால?..


அவ்வளவு தாங்க.... சும்மா என் பிலாக்'ல தூசி படிஞ்சிற கூடாது'னு தான் இப்படி ஒரு "மொக்கை".... நீங்க உங்க வேலை'ய பழைய படி போய் பாருங்க... நன்றி இந்த பதிவை படிச்சதுக்கு..

என்றும் மொக்கையுடன்,
பக்கா தமிழன்...

Sunday, August 12, 2007

கடிதம் எழுதினேன்...

நம்ம வாழ்க்கை'ல Both physically and practically முதல் முதலா அனுபவச்சி எழுதுற கடிதம் இதுவாக தான் இருக்கும்..

அதுதாங்க...

லீவு லெட்டர்...

From
நான் அவன் இல்லை,
படிக்கிற வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.

To
கிலாஸ் வாத்தி,
படிக்கிற வகுப்பு,
பள்ளியின் பெயர்,
ஊர்.


Respected sir,
As i am suffering from heavy feaver and head ache i am unable to attend the class.. so, kindly grant me leave for 2 days..

yours obediently/faithfully
நான் அவன் இல்லை...

இதுக்கு அப்புறம், தாத்தா அவுட், பாட்டி அவுட், ஊருல திருவிழா, அக்கா திருமணம், கச்சேரி, காதுக்குத்து,உடம்பு சரி இல்லை, ஊருக்கு போறேன்'னு இந்த வட்டத்துக்குள்ளையே நாம கடிதம் எழுதி வாத்தியார் கிட்ட கொடுத்து லீவு எடுத்துக்குவோம்... வாத்தியும், பையன் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கானே'னு லீவையும் சாங்ஷன் பண்ணிடுவாரு.. ஒரு சில வாத்தி எல்லாம், கடமை உணர்ச்சி அதிகம் ஆகி, நாம கொடுக்கிற லீவு லெட்டரை அப்பவே திருத்தி yours'ய ஏன்டா your's னு எழுதுன'னு அங்கையே முட்டிய பேக்கவும் மறக்க மாட்டார்...
(அனுபவம் பல விதம்.. ஓவ்வொன்றும் ஒரு விதம் ஹி ஹி )

இதுக்கு அப்புறம், ஹாஸ்டல்'ல இருக்கிற பசங்க வீட்டுல இருக்கும் அப்பா அம்மா'க்கு எழுதுற கடிதம் தான்... வேற எந்த வித கடிதமும் ஸ்கூல் வாழ்க்கைல வராது...

(இப்ப எல்லாம் இனையதலம்/மொபைல்/sms காலம்.. இது மாதிரி எல்லாம் இன்னமும் லெட்டர் எழுதுறாங்களா'னு தெரியல... )

ஒன்ஸ் காலேஜ்'ல சேர்ந்ததுக்கு அப்புறம் லீவு லெட்டர்'க்கு ஸ்பெல்லிங் என்னனு கேட்பாங்க நம்ம பசங்க.. அது மாதிரி பார்மாலிடீஸ் எல்லாம் பண்ணுனா, பசங்க மட்டும் இல்லை, கூடவே டிபார்ட்மெண்ட் ஹெட்/பியூன் எல்லாம் சேர்ந்து சிரிப்பாங்க...... எதுக்கு வம்பு'னு சும்மாவே இருந்துட்டு, செம்ஸ்டர் கடைசில "Lack of Attendance" ல மாட்டிக்கிட்டு, மெடிக்கல் செர்டிப்பிக்கேட்'க்கு நாயா அழைந்தாலும் பரவாயில்லை, காத்தா அழைவாங்க நம்ம பசங்க.. எனிவேஸ் இட்ஸ் பார்ட் ஆப் காலேஜ் லைப்..

எதுல விட்டேன்.. ஆங்,
காலேஜ் டேஸ்'ல லீவு லெட்டர் எழுதுற வேலை இல்லாட்டியும், நம்ம ஆளுங்களுக்கு வேற லெட்டர் எழுதுற வேலை இருக்கும்... அது என்ன'னா,

அன்பே டயானா
உனக்கு வாசிக்க தெரியுமா பயானோ
காலுல போடுவ செருப்பு
எதுக்கு என் மேல காட்டுற வெறுப்பு
என் காதலுக்கு சொல்லிடாத மறுப்பு
நீ இல்லாட்டி வேஸ்ட் ஆகிடும் என் பிறப்பு


இப்படி கவிதை (K4K,அப்படினு நான் சொல்லல) கலந்த காதல் கடிதம் எழுதுறது மட்டும் காலேஜ் டேஸ்'ல உண்டு..
எழுதுறது போய் சேரவேண்டியவங்களுக்கு போகுதோ இல்லையோ.. பல முக்கா சைஸ் நோட் பேப்பர் குப்பை தொட்டிக்கு போகும்...


அதுக்கு அப்புறம், வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்புறம் தான் இருக்கு ரீவீட்டு... எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி, எதுக்கெடுத்தாலும் லெட்டர் லெட்டர் லெட்டர் தான்..

மீட்டிங்னாலும் லெட்டர்,
மீட்டிங் கான்செல்னாலும் லெட்டர்
சிக் லீவு எடுத்தாலும் லெட்டர்,
சம்பளம் கட்'னாலும் லெட்டர்,
அட சஸ்பெண்ட் வந்தாலும் லெட்டர்,
வார்னிங் கொடுத்தாலும் லெட்டர்,
ஊருக்கு போனாலும் லெட்டர்..
இப்படி பல வித லெட்டரை பார்க்க வேண்டியது வரும்.....
(முக்கியமா, இதுல பல லெட்டர் நம்ம'ல மட்டும் ,துரத்தி துரத்தி வரும். அது வேற விஷயம்.. ஹி ஹி)

சரி இப்ப என்ன சொல்ல வர அதுதானே நீங்க கேட்குற கேள்வி.... சரி சரி.....

இப்ப எல்லாம் எத்தனை பேரு சொந்த பந்தங்களுக்கு எல்லாம் லெட்டர் எழுதுறா? அந்த பழக்கம் எல்லாம் எவ்வளவு குறைந்து இருக்கும்? அதுவும் சரி தான்.. நானே இங்க வந்து 5 வருஷத்தில் கடைசியா எழுதுன லெட்டர் 2003 மார்ச் வரைக்கும் தான்...
இப்ப இருக்கிற அவசரமான (உள்ளங்கை) உலகத்துல, யாரு,
எப்படி இருக்கனு கேட்டு ஒரு கடிதம் எழுதி,
அத போஸ்ட் பண்ணி,
அது அவங்களுக்கு கிடைச்சி படிச்சி,
அப்புறம் நல்லா இருக்கேனு அவங்க பதில் போட்டு ,
அந்த கடிதம் நம்ம கைக்கு கிடைக்க ஒரு மாதம் ஆகும்...
அதுக்குள்ள அவங்களுக்கும் சரி, நமக்கும் சரி 4 தபா காய்ச்சல் வந்துட்டு போயிடும்... ஹி ஹி..

அறிவியல் வளர்ச்சில இப்ப நிறைய விஷயங்கள் மறைந்துக்கிட்டே வருது....
அதுல இதுவும் ஒன்னு...


மனசாட்சியின் குரல்:-

ஏன்டா டேய், உன்னன லீவு கேட்டு லெட்டர் எழுத சொன்னா, நீ என்னடா லெட்டரை பத்தி ஒரு போஸ்ட் போடுற??? ஒழுங்க ஒரு காரணத்தை கண்டுப்பிடித்து லீவு லெட்டரை ரெடி பண்ணுற வழிய பாருடா மாங்கா....

என் குரல் :-

க்கும், லீவு லெட்டர் எழுத தெரிந்தா நான் ஏன் இப்படி ஒரு மொக்கக போஸ்ட போட போறேன்... எப்படி உட்கார்ந்து, படுத்து யோசிச்சாலும் எழுதவே வர மாட்டேங்குது... என்ன பண்ண... யோசிக்கனும்... யோசிப்பேன்... யோசிச்சிக்கிட்டே இருப்பேன்.....

"என்ன தான் பிலாக் ல போஸ்ட் போஸ்ட் னு குரல் கொடுத்தாலும் அதை தபால் பெட்டில போஸ்ட் பண்ண முடியாது.. அதுதான் நியதி... ஹி ஹி ஹி

என்றும் மொக்கையுடன்
பக்காதமிழன்...

Tuesday, August 07, 2007

ஐடியா தாங்க....

காபி ரெடி ஆகிக்கிட்டே இருக்கு.. அதுக்கு முதல் இது...


1.ஊரூக்கு :- அட ரொம்ப போர் அடிச்சிடுச்சிங்க வாழ்க்கை...அதே வீடு வேலை வீடு.. ஒவரா வேலை வேற பார்த்தாச்சி (அப்படி தான் சொல்லுவேன், நீங்க கண்டுக்காதீங்க)..
வேற என்ன தான் பண்ணுறது..போறத்துக்கு இடம் இல்லை...
பார்க்கிறத்துக்கு பொண்ணுங்களும் இல்லை...(அட நம்ம ஊருகாரவங்களை சொன்னேன்)..
பேசுறத்துக்கு நண்பர்களும் இல்லை. (பாவம் கூட இருக்கிறவங்க எவ்வளவு நாள் தான் என் மொக்கை'ய தாங்குவாங்க? ).
டைம் பாஸுக்கு படமும் இல்லை. என்ன தான் செய்யறது?

"சே இந்நேரம் நம்ம ஊரா இருந்து இருந்தா அது பண்ணி இருக்கலாம், இங்க போயிருக்கலாம் அப்படி கூட இருக்கிறவங்க கூட பேசி பேசியே வெத்து கைல வெத்தலை பாக்கு போட்ட கதையா காலத்தை ஓட்டீக்கிட்டு இருக்கேன்.....

ஊருல நண்பர்கள் எல்லாம் எங்காயாச்சும் டூர் போன, கண்டிப்பா ஊர சுத்தி பார்க்கிறாங்களோ இல்லையோ.. ஆனா கண்டிப்பா எனக்கு போன் போட்டு வெறுப்பேத்துறத வழக்கமா வச்சி இருக்காங்க.... எரியிர விளக்குல எண்னைய ஊத்துனாலே பட்டைய கிளப்பும், இதுல பெட்ரோல ஊத்துனா? சும்மா இருக்கிற எருமைமாட்டை சீண்டி பார்க்கிறதே எல்லாத்துக்கும் வேலையா போச்சி... ( எல்லோரும் காட்டு சிங்கம், புலி'னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இவங்களும் பாவம்'ல)...

தீபாவளி வேற வருது.. So, அவரை இந்தியா'ல வச்சி பார்த்தா தான் நல்லா இருக்கும்.. இல்லாட்டி அவரு வேற கோவிச்சிக்குவார்... ஒரே பல யோசனைக்கு அப்புறம் ஊருக்கு 1 மாதம் போயிட்டு வரலாம்'னு முடிவு பண்ணியாச்சு... ஆனாலும் அதுல ஒரு சிக்க்ல.... குவாட்டர் இடம் கொடுத்தாலும் வாட்டர் இடம் கொடுக்காத கதையா, நான் மட்டும் முடிவு பண்ணுனா பத்தாது, பதினொன்னாவது சாரி.... மேலதிகாரவங்க அனுமதி கொடுக்கனும்... ரெண்டு வருஷதக்கு ஒரு தபா தான் லீவு உண்டு... ஆனா நான் தான் அந்த ரெண்டு வருஷத்துல ரெண்டு தபா போயிட்டு வந்தாச்சே....... புதுசா சொல்ல ரீசனே இல்லை... மேலதிகாரவங்க கிட்ட சொன்னா அதை நம்பி லீவ் கொடுக்கிற மாதிரி ஒரு டகால்டி ரீசன் கொடுக்கனும்... உங்களுக்கு எதும் தோனுச்சினா எனக்கு ஒரு ஐடியா தாங்க, அதையும் போட்டு பார்ப்போம்..... என்ன நான் சொல்லுறது.... சீக்கிரம் சட்டுனு சொல்லுங்க....


முக்கியமான ஒரு மேட்டர்..

(நம்புனா நம்புங்க)

நம்மளுக்கு நல்லா தெரிந்த அருமையான ஒரு பிலாக் நண்பர், எப்போதும் கவிதை, பாட்டு, நையாண்டி, கமெண்ட்'னு பட்டைய கிளப்பிக்கிட்டு இருக்கும் ஒரு பாவனமான பேச்சிலரான அவரு, கொஞ்ச நாளா பயங்கர பிசியா இருக்காரு... ஆர்குட்லையும் சரி, ஜிடாக்'லையும் சரி, கொஞ்ச நாளாவே ஆன்லைன்'ல இருந்தும் பயங்கரமான பிஸினு ஒரு பேனரை போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருந்தாரு... சரி நானும் அவருக்கு ஆணி ஜாஸ்தி'னு லூஸ்ல வுட்டா, இப்ப தான் ஒரு நீயூஸ் காதுக்கு எட்டுனுச்சி... அதாவது அவங்க வீட்ல அவருக்கு பொண்னு பார்த்துட்டாங்களாம்... அவங்க கூட தான் தல இப்போ பயங்கர பிஸியா பிலாக் பக்கம் கூட வராம "மொக்கை போட்டுக்கிட்டு இருக்காராம்..... நல்லா இருந்தா சரி... :)

இதுக்கு மேல டீடெயில்'ஸ் அண்ணாத்த டீரீம்ஸ் சொல்லுவராக.....

வந்த வேலை முடிந்தது....
*நாராயண நாராயண*


என்றும் விக்ஸ் வேப்பரப்புடன்,
பக்காதமிழன்...