Friday, August 31, 2007

வாழ்த்துக்கள்
1st செப்டம்பரில் டிஸ்டம்பர் அடித்த மாதிரி புதுசாக இன்னொரு வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் எங்கள் கட்சி தலைவியும், சுட்டப்பழம் புகழும், பிலாகர்ஸ் மீட் வைத்து ட்ரீட் வாங்குவதில் முடிசூடா (முடியை சடை போட்டு) அரசியா விளங்கும் நம்ம பிலாக் உலக G3'க்கு முன்னோடியா இருக்கும் எங்கள் சொ.அக்கா (எ) கட்சி தலைவலி சாரி தலைவி "காயத்திரி"க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிச்சிவிட்டுக்கிறேன்....


கட்சி தலைவி, சொ.அக்கா காயத்திரி அவர்களே எங்களுக்கு உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம், ஏன் என்று தெரியுமா? அப்பவாச்சும் எங்களுக்கு நீங்க பிறந்த நாள் ட்ரீட் தர மாட்டீங்களா'னு ஒரு நப்பாசை, பேராசை, எப்படினாலும் நீங்க நினைச்சிக்கலாம்..இதை நாங்களா கேட்கவில்லை.. எங்களை எதிரி கட்சி கேட்க வைக்கிறது....ஆகையால், நம் கட்சி நபர்களுக்கு ஒரு நல்ல நாளில் ட்ரீட் தருமாறு (ஒரு பிட்டை போட்டு) கேட்டு கொண்டு, நீங்கள் இன்னும் 50 ஆண்டு காலம் நன்றாக வாழ, வாழ்த்துக்களை சொல்லி என் (கோனார் தமிழ்) உரையை முடித்துக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்....

மத்தபடி, நம் கட்சி தொண்டர்கள் எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டுகளில் தெளிப்பார்கள் என்று கூறி விடைப்பெற்றுக்கொள்கிறேன்..

பிறந்தநாள் பரிசாக நம் கட்சி நபர்கள் காயத்திரிக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்

டிடி அக்கா :-

ஒரு டின்(10கி) வேக வைத்த சுண்டல்..
கூடவே ஒரு பொன்மொழி
"சுண்டலை வைத்து பண்ணிடாதீங்க என்னை கிண்டல்,
அப்புறம் நான் பண்ண வேண்டியது வரும் எல்லாத்தையும் பண்டல்"


சுமதி அக்கா :- வாழக்காய் பஜ்ஜி 1001.....


தல அம்பி:-

சூடான ரவா "கேசரி" ஒரு பெரிய தாம்பூலத்தில்...கூடவே ஒரு பொன்மொழி
"எல்லா நல்ல காரியத்துக்கும் முதலில் வைப்பாங்க கேசரி"
பூரி கட்டை என் நியாபகத்துக்கு வரும் தினசரி,


மை பிரெண்ட் :-
ஒரு கூடை நிறைய "விலாங்கு மீன்".. கூடவே ஒரு பொன்மொழி
"மீன் கருவாடு ஆகலாம்.. ஆனால், கருவாடு மீன் ஆகுமா???


பொற்கொடி:-

இவங்க கடைசியா போட்ட போஸ்ட்'ல இருக்கிற சாப்பாடு மெனு.(தாராளமா, 20 பேரு சாப்பிடற மாதிரி). அப்புறம் அவங்க இன்னைக்கு படிச்ச புத்தகத்தில இருந்து, G3க்கு புடிச்ச செய்தி ஒன்னு.. அதுதாங்க,
"அம்மன் கோயில்'ல கூல் ஊத்துறாங்க"....

போல்டு பிரதர் K4K இப்போ ரீமிக்ஸ்'ல பட்டைய கிளப்புறார்.. சோ, மேலே சொன்ன பரிசு எல்லதையும் வைத்து ஒரு ரீமிக்ஸ் கொடுப்பார்......

சிறப்பு பரிசு
நானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு "சோடா பாட்டில்" கொடுக்கிறோம்.....
(தங்க்சசிக்களுக்கு சோடா கொடுக்கிறதே எங்க வேலையா போச்சி.. ஹி ஹி. என்ன தல?)

இன்னொரு முறை சொல்லிக்கிறேன்...

"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் G3"

வாழ்த்திட்டு போங்க...
வணக்கம்....

30 comments:

k4karthik said...

akkavukku indha annanin mudhal vazthukal...indhe post le...

Dreamzz said...

ஏப்பா, அந்த கத என்னாச்சு?

Dreamzz said...

பாவம் G3!

Dreamzz said...

இதோட நாலு!

Sumathi. said...

haay goopS,

//டிடி அக்கா :-
ஒரு டின்(10கி) வேக வைத்த சுண்டல்..//

என்னலே கதவே மாத்திபுட்டே..
அக்கா பூ இல்ல குடுக்கறதா பேச்சு?
நீ தானேவே பீச்சுல சுண்டல் விக்கறதா சொன்ன?

G3 said...

Aaha.. raasa.. idhu vaazhtha?? paatha appadi theriyaliyae ;))

Irundhaalum Nandri hai un postukku :))

Porumaiya retype panniyo ellathaiyum??? nalla iru raasa nee :D

Sumathi. said...

ஹாய் கோப்ஸ்,

//சுமதி அக்கா :- வாழக்காய் பஜ்ஜி 1001.....//

ஏன் ராசா இவ்ளோ கம்மியா இருக்கே?
போதுமா ராசா...

G3 said...

@K4K, Dreamzz, sumathi,

Enga postu pottalum correcta aajar aayidareengalae.. innikku round katti enna vaazhtharadhunnu (gummaradhunnu) mudivae panniyaacha :))))

Thanks for all ur wishes, posts and comments :)))

Sumathi. said...

ஹாய்,

//சூடான ரவா "கேசரி" ஒரு பெரிய தாம்பூலத்தில்...//

ஆமா இது என்னவோ கரெக்டா சொல்லிட்ட ....

G3 said...

Gops, ellaroda giftum collect pannikitten.. nandri hai.. ellathaiyum saaptuttu vandhu meedhi comment podaren ;)

Sumathi. said...

ஹாய்,

//மை பிரெண்ட் :-
ஒரு கூடை நிறைய "விலாங்கு மீன்"..//

ஹா ஹா ஹா..இருக்குடி உனக்கு...
டீச்சர் னு ஒரு பயம் கொஞ்சம் கூட இல்ல...

Sumathi. said...

ஹாய்,

//சிறப்பு பரிசு
நானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு "சோடா பாட்டில்" கொடுக்கிறோம்.....//

ஆமா இது எதுக்கு?
கூட அம்பிய சேத்துகிட்டா... நாங்க விட்டுருவமா?

Sumathi. said...

ஹாய் G3,

//Enga postu pottalum correcta aajar aayidareengalae..//

ஏன் உங்க பங்கு புளியோதரை குறைஞ்சிடுமோன்னு பயமா?
அதெல்லாம் நாங்க கரெக்க்டா வந்துட மாட்டோம்.

k4karthik said...

//செப்டம்பரில் டிஸ்டம்பர் //

கொக்காமக்கா... ஆரம்பமேவா...

k4karthik said...

//மத்தபடி, நம் கட்சி தொண்டர்கள் எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டுகளில் தெளிப்பார்கள் என்று கூறி விடைப்பெற்றுக்கொள்கிறேன்..//

ரிப்பீட்டு....

அக்காவுக்கு வாழ்த்துக்கள்....

k4karthik said...

//சோ, மேலே சொன்ன பரிசு எல்லதையும் வைத்து ஒரு ரீமிக்ஸ் கொடுப்பார்......//

மிக்சர் தான சொல்றே?? குடுத்துருவோம்....

CVR said...

வாழ்த்துக்கள் அக்கா!! :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

கோப்ஸ், கதை எழுதுறேன்னு சொல்லிட்டு இப்படி முடிச்சிட்டீங்களே??

.:: மை ஃபிரண்ட் ::. said...

சொர்ணாக்கா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. (இந்த வாழ்த்து இங்கே நாம் சொல்லிட்டு இருக்கும்போது அவங்க மூனு சிக்கன் 65 முழுங்கிட்டு இருப்பாங்க. :-P)

.:: மை ஃபிரண்ட் ::. said...

முழுசா ஒரு 20. :-D

Sudhakar said...

Happy Birthday wishes.
KCS

வேதா said...

இங்கேயும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன் காயத்ரி அக்கா ;)

Raji said...

Happy birthday to you...

Raji said...

Happy birthday to you...

Raji said...

Happy birthday to G3 .....

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தி. ரா. ச.(T.R.C.) said...

சந்தோஷத்தின் உச்சியிலா இல்லை சென்னையில் இருக்கும் ஓட்டல்கள் உள்ளேயாகிறதை கரெக்டா சொல்லிடுங்க

ambi said...

ROTFL :) typical gops touchu(ayoo! naan yaaraiyum touch pannala!nu kathraan paaru) post. :)

//நானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு "சோடா பாட்டில்" கொடுக்கிறோம்//

LOL :) soda bottle vechu last year naama enna paadu paduthinoom! me thinking. LOL :)

sorry for the delay.

ambi said...

btw, one plate full kesariyum G3 akkavukkee kudukanumaa? :p

rounda 30!