Thursday, September 13, 2007

தூசி தட்டிங் !!!!!!

உலகம் எல்லாம் வரும் தமிழ் பாட்டு
ஜீன்ஸ் பேண்ட் தான் என்ன ரேட்டு
வெஸ்டேர்ன் எங்களுக்கு விளையாட்டு
நோ பிராப்ளம் நோ பிராப்ளம்…..


என்ன நடக்குது இங்க? ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

ஒரே தூசியா இருக்கு இங்க..10 நாள் இந்த பக்கம் வராட்டி, இப்படி தான் இருக்குமோ? இருக்கட்டும் இருக்கட்டும்….


உன்னை ஒன்று கேட்ப்பேன் (கேட்டுக்கோ)
உண்மை சொல்ல வேண்டும் (ட்ரை பண்ணுறேன்)
என்னை பாட சொன்னால் (கேவலமா இருக்கும்)
என்ன பாட்டு பாட (டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்)

ஆரம்பமே மொக்கையா? போடட்டும் போடட்டும்


வேலையோ வேலை :-

வேலை ஜாஸ்தி, ஊருக்கு போகும் போது எந்த பிக்கலும் (mixed pickle) இருக்க கூடாது'னு ஒரு நாளைக்கு ஓவரா வேலை செஞ்சே ஆகனும் அப்படிங்கற formula' ல ஒடுது… விமானத்துல நான் ஏறும் வரை லீவுக்கு நான் கியாரண்டி கொடுக்க முடியாது..
ஓ கியாரண்டினோன தான் நியாபகத்துக்கு வருது, அட பீரீத்திக்கி நான் கியாரண்டி கதை இல்லலங்க... இது வேற

விடுமுறைக்கு ஊருக்கு போக பிலான் எல்லாம் போட்டு ரெடியா (வெட்டியா கனவுகண்டு) இருக்கும் போது,

ஆத்தாக்கு உடம்பு சரியில்லை அதனால அவசரமா ஊருக்கு போகனும் ஒருத்தர் பிட்ட போட,
நீ அவரசரமா போனா, உன் வேலைய யாரு பார்க்க'னு டேமேஜர் பதிலுக்கு அவரு கிட்ட ஒரு பிட்ட போட, நேரா அவரும் என்கிட்ட வந்து "அம்மா செண்டிமெண்ட்'ய சொல்லி 15 நாள் மட்டும் என் வேலைய செய்ங்க'னு கெஞ்ச, சரி'னு நானும் சொல்ல, அப்போ நீ ஊருக்கு போயிட்டு திரும்பி வருவ'னு யாரயாச்சும் கியாரண்டி கொடுக்க சொல்லு'னு டேமேஜர் கூவ, திரும்பியும் அவன் என்னை பார்க்க, யப்பா ராசா நான் ஏற்கனவே ஒருத்தனுக்கு கியாரண்டி கொடுத்து கரண்டி வாங்குன கதை உனக்கு தெரியாது, சோ, நல்ல புள்ளையா வேற ஆளை புடி'னு, பாசமா எடுத்து சொல்லிட்டேன்.

அப்புறம் அங்க இங்க'னு அலையாம அவரும் என் பக்கத்து சீட்டு நபர் கிட்ட டிக்கெட்'க்கு மட்டும் கியாரண்டி கொடுங்க'னு லெட்டர் வாங்கி (அப்போவே, கசாப்பு கடையில இருக்கிற ஆடு பே பே கத்துற மாதிரி ஒரு சவுண்டு கேட்டுச்சி) டேமேஜர் கிட்ட புல் கியாரண்டி'னு சொல்லிட்டு ஆள் எஸ்கேப் ஆகுறத்து முதல், "நீங்க செஞ்ச உதவிய வாழ்நாள்'ல மறக்க மாட்டேனு ஒரு வார்த்தைய சொன்னாரு
பாருங்க…. (பளிச்'னு எனக்கு மட்டும் என் பக்கத்து சீட்டு மாப்பு தலைக்கு மேல ஒரு லைட் ஆன் ஆப் ஆகிட்டு இருந்த்து)

அப்பவே சொல்ல தான் இருந்தேன், மாப்பு இவன் உனக்கு வைக்க போறாண்டா ஆப்பு'னு

15 நாள் கழிச்சி ஒரு மெயில் அந்த நண்பரிடம் இருந்து…. இன்னும் 10 நாள் லீவு எக்ஸ்டெண்ட் பண்னுறேனு…(ஆஹா, புலி புல்லை திங்க ஸ்டார்ட் பண்ணிடுச்சிடா) அதுக்கு அப்புறம் 10 நாள் கழிச்சி தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன் அப்படி'னு ஒரு மெயில் வந்தது, அதுவும் அந்த கடைசி வரி'ல "ரொம்ப நல்லவர்"னு என் பக்கத்து சீட்டு நண்பரை ஆட்டையில விட்ட அந்த நண்பர் சொல்லி இருந்தாரு பாருங்க... என்னத்த சொல்ல,

டிக்கெட்'க்கு மட்டும் கியாரண்டி கொடுத்த என் நண்பர், இப்போ அவரு வந்து போன செலவுக்கும் செலவலிச்சிக்கிட்டு இருக்காரு பாவம்…. இதுல கொடுமை என்ன'னா அந்த ஊருக்கு போன நபரோட சொந்தகாரரு இதே கம்பெனி'ல இருந்தும், ஏன் அவரு கியாரண்டி போடலங்கறது தான் எல்லோரும் கேட்கும் கேள்வி...

மாரல் ஆப் தி பதிவு :-

"நம்பினோர் கைவிடப்படார்"
"எதை நம்பினோம்" => அது தான் மேட்டர்…..


வெளுத்தது எல்லாம் பால்'னு எப்போதுமே இருக்க கூடாது,
ஏன்னா, sometimes Banana milk மஞ்ச கலரிலும்,
chocolate milk Brown கலரிலும் தான் இருக்கும்….


என்ன நான் சொல்லுறது..


பிஸியோ பிஸி..

அட நான் மட்டும் தான் பிஸி'னு பார்த்தா, நம்ம மக்கள்ஸ் பிலாக்'ல மட்டும் இல்லை,
ஆர்குட், ஜி(அஜித் நடிச்சது இல்லை) டாக் , யாஹூ'னு எல்லா இடத்துலையுமே பிஸியா தான் இருக்காங்க….. ஒரு ஹாய் சொன்னா கூட ரிப்பளை பண்ண முடியாத அளவுக்கு…….. எப்போ முடியும் இந்த ஆணிகள் தொல்லை எல்லாம்?


சொல்லிப்புட்டேன் ஆமா

தட்டி கேட்க ஆள் இல்லை'னு இந்த சொ.அக்கா பண்ணுற ரவுடிஸம் தாங்கல….
ஆங்கில புத்தகத்தை படிச்சிட்டு இவங்க Review எல்லாம் எழுதறாங்கப்பா….. நாலு பேரு பிலாக் பக்கம் வந்து போற இடம்'னு கொஞ்சமாவது தோனுதா இவங்களுக்கு?
இது கூட பரவாயில்லை… ஆனா ٍ side'la ஒரு column'ல மகளிர் சக்தி'னு ஒரு லிங்க்'ல,
உருளைகிழங்கு வேக வைப்பது எப்படி,
புதினாவில் துவையல் செய்யுமுறை
தோசைக்கு மாவு ஆட்டுபவரா நீங்கள் ?
அப்படி'னு சமையல் குறிப்பு எல்லாம் கொடுக்குறாங்க….
பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? இந்த G3 க்கு பல வகை சமையல் தெரியும்னு தானே? ஆனா உண்மை என்ன? சுடு தண்ணி மட்டும் தான் சமைக்க தெரியும் அப்படி'னு யாருக்கு தெரியும்? இது எல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிப்புட்டேன்…

பேச்சிலர்ஸ்க்கு மட்டும்
தமிழ்நாட்டு'ல இனிமேல், கார் கண்ணாடிக்கு கறுப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்ட கூடாது'னு சொல்லி இருக்காங்க.. அப்பாடா, இனிமேல் கார்'ல போற பிகர நல்லா சைட் அடிக்கலாம்...
(அப்படியே அடிச்சிட்டாலும் !!!!!!!!!!)


மாரல் ஆப் திஸ் வீக்

என்ன தான் சிங்கமா இருந்தாலும், குரங்கு'னு காண்ட்ராக்ட்/விசா'ல இருந்தா கண்டிப்பா "கடலை" தின்னே ஆகனும்....

ஹி ஹி ஹி எப்படி !!!!!!!!!!!!!!!

துப்பிட்டு போங்க மறக்காம

நன்றி வணக்கம் ......