Wednesday, October 17, 2007

signing off !!!!!!

ஏய் அப்படி போடு போடு போடு போடு போடு போடு
ஹலோ, அது தான் போட சொல்லிட்டோம்'ல பின்ன எதுக்கு இன்னும் இங்க பார்த்துக்கிட்டு இருக்கீங்க? கீழ தரைய பாருங்க, நீங்க போட்டது தெரிச்சிடுச்சா இல்லையா'னு...
(நல்லா படிக்கிறாங்கையா இந்த மொக்கையை'யும்)

ஒரு வழியா 2 மாதம் விடா உழைப்புக்கு பிறகு ( உண்மைய சொன்னா யாரு இப்ப எல்லாம் நம்புறாங்க? நீ இன்னும் உண்மையவே சொல்லலையே டா'னு அன்பு அண்ணன் K4K கேட்காதீங்க பீளிஸ்.. ) எங்க விட்டேன்... ஆங்.. இதோ அப்படி இப்படி'னு ஒரு மாத விடுமுறை காலத்துக்கு அனுமதி வாங்கி ( பிட்'ய போட்டு தான் வேற எப்படி) இன்னைக்கு இந்தியாவை நோக்கி (கை'ல நோக்கியா மொபைல் தான் ) கிளம்புறேன்..

அப்பாடா, இன்னும் ஒரு மாதத்துக்கு நோ கம்ப்யூட்டர், shoe போடத் தேவை இல்லை,Tie கட்ட தேவையில்லை, டெயிலி ஷேவ் பண்ண தேவையில்லை, பீட்டர் உட தேவையில்லை, பருப்பு சோறுக்கு ஒரு குட் பாய், பரோட்டா'க்கு ஒரு குட் பாய்.எல்லாத்துக்கும் விடுமுறை உட்டாச்சி...ஒரே ஜாலி தான்.. :P

இனி இந்தியா'ல,
நம்ம வெளிநாட்டு வாழ் பிலாக்ர்ஸ்'க்கு இந்திய வாழ் பிலாகர்ஸ் கொடுக்கவிருக்கும் ட்ரீட் விழாவுக்கு, என்னை போய் தலைமை தாங்க சொல்லி இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி....எல்லாத்தையும் சேர்த்து வாங்கிட்டு வந்திடேறேன்...

ஒரு மாதம் எல்லாம் என் மொக்கை இல்லாம சந்தோஷமா இருங்க..... கண்டிப்பா வந்து எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கும்மிடேறேன்.....

அது வரைக்கும்'னு இல்லை, எப்போதுமே

"நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்"

cheers!!!!!!!!!!!!!!!!!!

signing off
Sachin Gops...........

Tuesday, October 09, 2007

என்ன கொடுமை சார் இது

எல்லோரும் எப்படி இருக்கீங்க? சாப்ட்டாச்சா?

எத்தனை நாள் ஆச்சி, இப்படி கேட்டு .. :)


பொதுவா எல்லோருக்கும் அட பிடிச்சதெல்லாம் கிடைக்குமா.
வேணாம் பேராசை தான் நினைச்சதெல்லாம் நடக்குமா
அழகான ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்குமே…..


என்னத்த சொல்ல இந்த "வாழ்க்கை பயணம்" பக்கம் வந்து ரெம்ப நாள் ஆகி…
அவ்வளவு பிஸி (உண்மைக்குமே :( )…

எல்லாம் சரி ஆகிடும்..

என்ன கொடுமை சார் இது #1

ஊருக்கு போற டைம் வேற நெருங்கிக்கிட்டு இருக்கு…… இன்னும் சாப்பிங்,ஆரம்பிக்கவே இல்லை வேற.( ஆமா நீ வாங்குற நாலு சாக்லெட் க்கு பேரு ஷாப்பிங்னா, அப்போ ஷாப்பிங் போறவங்கள என்ன சொல்லுவனு எல்லாம் கேட்க கூடாது.. )
இதுல கூத்து என்னனா(இல்லையா?) எனக்கு ரிலிவரா இருக்கிறவரு அவசர கால விடுமுறை'னு ஊருக்கு போயிட்டு இன்னும் இங்க ஆபிஸ்க்கு திரும்பல…. போய் 20 நாள் ஆச்சி ஒரு போன் கால்/கை/மூக்கு ஒன்னும் பண்ணல, ஆனா இப்போ லீவு எக்ஸ்டென்ஷன்க்கு மட்டும் போன் பண்ணி என்னன டென்ஷன் பண்ணிட்டார்…அதுவும் இன்னனக்கு காலை'ல 4 நாள்'ல வரேனு சொன்னவரு, இப்போ கால் பண்ணி, flight fully booked , am trying on tht date nu கரெக்டா நான் போற டேட்'ல வரேனு சொல்லுறாரு... :..
என்ன கொடுமை சார் இது?

வருவாரா வரமாட்டாரா? புலம்ப வுட்டுட்டாங்களே…….

என்ன கொடுமை சார் இது # 2

ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் CUCUMBER :p

இரெண்டு வாரத்துக்கு முதல், ஒரு நாள் , நான் உண்டு என் குறுக்கு வழி உண்டு'னு ஒரு ஷாப்பிங் மால்'ல இருக்கிற பேங்க்'க்கு போயிட்டு ஆபிஸ் வேலை'ய முடிச்சிட்டு திரும்பி வரும் போது, அங்க வந்த என் colleague அவசர அவசரமா என் கிட்ட ஒரு mobile bill'ய கொடுத்து கட்ட சொல்லிட்டு அவரு வேற பாங்க்'க்கு போயிட்டாரு... நாமும் சரி'னு கீழ போய் என் turn'க்கு உண்டான நம்பர பார்த்தா கொக்ஸ் (கொக்க மக்கா'வின் short version) எனக்கு முன்னாடி 32 பேரு இருக்காங்க… டேய் பாங்க்'ல கூட இப்படி கூட்டம் இல்லடா'னு நினனச்சிக்கிட்டு உட்கார்ந்து பாஷை தெரியாத புக்'ல அழகான அக்கா'களை பார்த்துக்கிட்டு இருந்தேன்…

எவ்வளவு நேரம் தான் இப்படியே பார்த்த புக்கையே பார்க்குறது, 45mins க்கு அப்புறம் பார்த்தா வெறும் 11 நம்பர் மட்டும் தான் போய் இருந்தது…. சும்மா உட்கார்ந்து இருக்கிறதை விட ஒரு கடினமான விஷயம் வேறு எதுவுமில்லை…. என்னத்த பண்ண, சீட்ட வுட்டு எழுந்தா சீட்டு போயிடும் அந்த பயம் வேற. அப்படியே உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பெரியவர் வந்து அங்க சீட்டு கிடைக்காம நின்னுக்கிட்டு இருந்தாரு.
உடனே அங்க இருந்த ஒரு பக்கா தமிழன் (நானே தான் வேற யாரு வருவா) எழுந்து அவருக்கு இடத்தை கொடுத்துட்டு அப்படியே ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கும் போது, அங்க ஒரு ஓரத்துல "Automatic Deposit Machine" அப்படி'னு ஒரு மெஷின்ய பார்த்துட்டு என்னது'னு
பக்கத்துல போனா, அங்க அசால்ட்டா ஒருத்தர் பணத்தை எடுத்து அந்த மெஷின்'ல போட்டு "mobile bill" pay பண்ணிட்டு போனாரு… அட்ரா அட்ரா இப்படி கூட இருக்குதா இங்க.. சே தெரியாம ஒரு மணி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டோமே'னு, கிட்ட போய் காசை எடுத்து போட போன போது, உள்ளுக்குள்ள ஒரு பயம். காசு மாட்டிக்கிச்சுனா? அய்யோ வேணாம், ஒழுங்கு மரியாதையா இன்னும் 14 நம்பர் தானே இருக்கு, பேசாம லைன்'ல நில்லு'னு உள் மனசு சொல்ல, சரி'னு நானும் இருந்துட்டேன்...

20 mins கழிச்சி பார்த்தா இன்னும் 8 நம்பர் இருந்தது.. கொக்ஸ், இப்படியே இருந்தா இன்னும் 1hr ஆகும் போல, விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் உன்னை மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் ஒன்னும் வேலைக்கு ஆகாது'னு left side உள் மனசு சொல்ல, பொருத்தது போதும், பொங்கி எழு'னு திரும்பியும் அதே left side உள் மனசு சொல்ல, என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'னு ஒரு வீர நடை போட்டு மெஷின் கிட்ட போய், எடுடா பணத்தை, போடுடா உள்ள, அமுக்குடா mobile number 'ய னு, receipt வருதானு பார்த்தா
வெறும் காத்து தாங்க வருதுங்குற மாதிரி, ஒன்னத்தையுமே காணோம்… அடேய் என்னடா ஆச்சி'னு உட்டு என்னத்ததையோ அமுக்கி பார்த்தா ஒரு Receipt வந்துச்சி.. Success நாங்க எல்லாம் யாரு'னு அந்த receipt ய பார்த்தா, ஹி ஹி ஹி, நீங்க போட்ட காசு உள்ளே மாட்டிக்கிச்சு, தயவு செய்து branch manager ah பாருங்கனு சொல்ல, ஹா ஹா ஹா நான் அப்பவே சொன்னேன் கேட்டியா'னு உள் மனசு பயங்கர சிரிப்பலைய காட்டிக்கிட்டு இருந்துச்சி… ஆஹா, என்னை வச்சி இப்படி காமெடி பண்ணிடுச்சே இந்த மெஷின் அப்படினு சோகத்தோட மேனேஜர் ரூம்'க்கு போனா, உள்ளே ஒரே கூட்டம்....
நில்லு அதுக்கு ஒரு 1 மணி நேரம்'னு இருந்துட்டு, ஒரு வழியா அவரை இழுத்துக்கிட்டு அந்த மெஷின் கிட்ட வந்து, அவரும் ஒரு பெரிய சாவிய வச்சி அந்த மெஷினை திறந்து உள்ளே கைய விட்டு, என்னத்தையோ பண்ணி முதல்'ல ஒரு நோட்டை எடுத்தாரு.. அட்ரா அட்ரா'னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்.சார், இன்னும் இது மாதிரி 2 நோட்டு இருக்கும் சார்'னு சொல்ல, சரி சரி ஒரு 10 நிமிஷத்துக்கு முயற்சி செஞ்சி இன்னொரு நோட்டையும் எடுத்துட்டாரு… அட்ரா அட்ரா, சார் நீங்க ஒரு பெரிய ரவுண்டு வருவீங்க'னு ஒரு 13லிட்டர் ஐஸ் வச்சி, அந்த கடைசி நோட்டுக்கும் பிட்டை போட்டேன்...
அவரும் நான் நல்லவனு நம்பி ஒரு 10 நிமிஷம் போராடி பார்த்துட்டு, தம்பி நீ உண்மைக்குமே 3 நோட்டு தானே போட்ட? அப்படினு ஒரு சந்தேகத்துல கேட்க, அய்யோ என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க'னு அவர நம்ப வச்சி மேலும் ஒரு பத்து நிமிஷம் தேடி பார்த்துட்டு, தம்பி, இதுக்கு மேலையும் நான் தேடனும்'னா இந்த மெஷின் உள்ள போய் தான் தேடனும்'னு டைமிங் காமெடி அடிக்க, டேய், எனக்கும் காமேடி சரவெடி மாதிரி வரும் (எல்லாம் தற்பெருமை தான்) ஆனா அதுக்கான மூட்'ல நான் இல்லை அப்படினு உள்ள சொல்லிக்கிட்டு (வெளியே சொல்லவா முடியும்),
ஒரு வழியா அவரும் ஒரு complaint எழுதி கொடுத்துட்டு போங்க, நாளைக்கு finance dept'யோட check பண்ணிட்டு, நீங்க சொல்லுறது உண்மைனா உங்களுக்கு தெரிய படுத்துறேனு சொல்லிட்டு அப்பீட் ஆகிட்டாரு ...
நான் என்னத்த செய்ய முடியும் என்னைய நினைச்சி ஒரு சிரிப்பை சிரிச்சிக்கிட்டு போயிட்டேன்.... ஹி ஹி..

ஒரு 30mins பொருக்க முடியாம கடைசில 3hrs நிக்க வேண்டியதா போச்சி……

என்ன கொடுமை சார் இது?????? ?

உள்ளே போன பணம் கிடைக்குமா கிடைக்காதா? again same பொலம்பல்ஸ்.. :P

so sad… :(

கொடுமை வாரம் போல ஹி ஹி ஹி.. எல்லாம் சரி ஆகிடும்…...

மாரல் ஆப் தி பதிவு :-

நடப்பது நன்றாகவே நடக்கும்,
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..


அப்பாடா ஒரு வழியா ஒரு போஸ்ட் போட்டாச்சி... போன போஸ்ட்க்கு கமெண்ட் நாளைக்கு ரிப்பளை பண்ணுறேன் கண்டிப்பாக....

வரட்டா

cheers!!!!!!!!!!!!!!!!!!!!!