Saturday, December 22, 2007

என்ன கொடுமை சார் இது??

அதிகாலை 9 மணிக்கு நல்ல ஆழ்ந்த தூக்கத்துல இருந்தார் நம்ம தோசை நாயகன் துரைசாமி BE.அப்போது அவரது மொபைல் "கண்கள் என் கண்களோ, காணாத பெண் நீயடி நெஞ்சை நீ ஏன் நோகடித்தாய்"னு சத்தம் போட, நேத்து தன் கூட சண்டை போட்ட தன் ஆசை நாயகி அமலா தான் சமாதானத்துக்கு பேசுறாளோ'னு ஒரு ஆர்வத்துல மொபைலை எடுத்துப்பார்த்தா, அவன் ஆபிஸ் மேனேஜர் மனோகர் காலிங்… இவருக்கு போய் இந்த ட்யூனா, சே'னு நொந்தபடியே,

துரை:- காலை வணக்கம் சார்..
டேமேஜர்: - அதெல்லாம் இருக்கட்டும். தம்பி எங்க இருக்காப்ல…
துரை:- என் தம்பி தஞ்சாவூர்'ல காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்கான் சார்.. நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே?
டேமேஜர்:நான் அவனை கேட்கல, உன்னை கேட்டேன்..
துரை:- நான் தான் அண்ணன் சார்… தம்பி தஞ்சாவூர்'ல
டேமேஜர்: யப்பா ராசா, 6 மணி ஷிப்ட்'க்கு இன்னும் நீ வரலையே, அதுக்கு தான் நீ எங்க இருக்க'னு கொஞ்சம் மரியாதை கொடுத்து கேட்டேனாக்கும்….
துரை:- ஓ, அதுவா சார்.. நான் காலை'யே கிளம்பிட்டேன், ஆனா வரும் போது பைக் டயர் பஞ்சர்…நாம தான் சம்பந்தமே இல்லாம 6 மணிக்கு ஆபிஸ்'ய திறக்கிறோம், ஆனா பஞ்சர் கடை எல்லாம் 9 மணிக்கு மேல தான் திறப்பாங்க, சோ மீ த வெயிட்டிங்..
டேமேஜர்: எனக்கு தெரிஞ்சி நீ வேலைக்கு சேர்ந்த்து'ல இருந்து ஷேர் ஆட்டோல தானே வந்துக்கிட்டு இருக்க அப்புறம் எப்படி பைக்? லிப்ட் கேட்டு எதும் வந்தியா?
துரை:-ஆபிஸ்'ல டேடா பேஸ் பத்தி கேட்டா ஒன்னும் தெரியாது ஆனா, மத்தவங்க டேடா பேஸ்'ய மட்டும் நல்லா தெரிஞ்சி வச்சி இருக்கான்'யா….
டேமேஜர்: என்னப்பா சத்தமே இல்லை…
துரை:- சார் கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. இன்னும் அரை மணி நேரத்துல வந்துடறேன்…
டேமேஜர்:சரி சரி வரும் போது சரவணா பவன் பக்கத்துல இருக்கிற மங்கம்மா கடையில 4 ஆப்பம் வாங்கிட்டு வந்துடு.. சரியா? லேட் பண்ணிடாத…
துரை:-சரிங்க சார்..
டேமேஜர்:ஆங் அப்புறம்
துரை:-சொல்லுங்க சார்
டேமேஜர்:கெட்டி சட்னிய மறந்துடாத, கேட்டு வாங்கிட்டு வந்துரு… ஒகே..
துரை:-ரெம்ப முக்கியம்..
டேமேஜர்:ஆமாம்ப்பா, வெறும் ஆப்பத்தை எப்படி சாப்டறது..
துரை:-த்தூ..
டேமேஜர்:என்ன சொல்லிட்டேனு இப்ப இப்படி துப்புற?
துரை:-சார், கொட்டாய் விட்ட்துல ஈ ஒன்னு வாய்க்குள்ள போயிட்டு அதுக்கு தான் துப்புனேன்..
டேமேஜர்: இதுக்கு தான் காலை'ல எழுந்தவுடன் பல் தேய்கினும்'னு சொல்லுறது….
துரை:-எங்க சார், அதுக்கு முதல்'ல தான் கம்பெனி'ல கொடுக்கிற ஒ.சி. போன்'ல யாராச்சும் போன் போட்டு மொக்கைய போட்டுறாங்களே…
டேமேஜர்:ஒழுங்க டைம்'க்கு ஆபிஸ் போனா யாரு போன் பண்ண போறா உனக்கு…
துரை:-சரி சரி.. 4 ஆப்பம் போதுமா சார்?
டேமேஜர்: போதும் போதும்…. Btw, எனக்கு மதிய சாப்பட்டுக்கு ஆப்பம் சாப்பிட்டு பழக்கம் இல்லை…இப்பவே சொல்லிட்டேன்..
துரை:- தெளிவா தான்யா இருக்காங்கே எல்லாருமே….

அப்படி சொல்லிக்கிட்டே போனை கட் பண்ணிட்டு, கால் வெயிட்டிங்'ல எதும் மிஸ்ட் கால் இருக்கானு பார்த்தா, ஒரு கிழடு கால் கூட இல்லை…. ரெம்ப நல்லது..
நேத்து சண்டை போட்டுட்டு போன நம்ம சுவீட் ஹார்ட் கிட்ட இருந்து இன்னும் ஒரு சவுண்டும் இல்லையே…சரி ஆபிஸ்'ல சும்மா தானே இருப்போம்.. ஆபிஸ் லாண்ட் லைன்'ல இருந்து அடிச்சி பேசி பஞ்சாயித்த வச்சிக்கலாம்'னு குளிச்சி ரெடியாகி நம்ம துரை வேலைக்கு ஒருவழியா கிளம்பிட்டாரு…

கரெக்ட்டா, வீட்டைவிட்டு வெளியே வந்து பஸ்'ய புடிச்சி மாமி கடை'ல ஆப்பம் வாங்கும் போது டைம் அப்போ பகல் 12.30.மனதுக்குள் சிரித்துக்கொண்டே, கெட்டி சட்னிய மறந்துடாதீங்க'னு சொல்லி வாயை மூடல, அதுக்குள்ள துரை சாருக்கு மொபைலில் அழைப்பு "நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்டோனா"..
அட நம்மாளு அமலா அதிசியமா மொபைல்'ல இருந்து கால் பண்ணுறா'னு

துரை:- குட் ஆப்டர்னூன் டார்லிங்.
அமலா:- டார்லிங், கூல்டிரிங்'னு சொன்னா பல்லை உடைப்பேன் ஜாக்கிரதை…
துரை:- (இவ என்ன இன்னைக்கு புதுசா ஓபன் பண்ணுன பெப்சி பாட்டில் மாதிரி பொங்குறா..) ஏய் என்னாச்சி ரொம்ப டென்ஷனா இருக்க, அதுவும் பகல்'ல..

அமலா:-பின்ன, நீ பண்ணுன காரியத்துக்கு பல்லை காட்டி சிரிக்கவா சொல்லுற?
துரை:- அப்புறம் எப்படி சிரிக்கிறது?
அமலா:- ம்ம்ம்ம் மூக்கால சிரி… ரெம்ப நல்லா இருக்கும்..
துரை:-அய்யோ எனக்கு ஜலதோஷம் பிடிச்சி இருக்கு… சிரிச்சா நல்லா இருக்காதே…
அமலா:-ஸ்ஸ்ஸப்ப்பா….. முடியல உன்கிட்ட ஒன்னு சொல்ல வந்தா, அத சொல்ல விடாம, மொக்கை போடுற நீ..
துரை:- சரி சரி கூல் டவுன்.. அப்படி என்ன நீ முக்கியமா சொல்ல வந்த?
அமலா:-அப்படி கேளு.
துரை:-அப்படி தானே கேட்டேன்…
அமலா:-டேய் அடங்க மாட்டியா நீ…
துரை:-ஒகே ஒகே ஒகே..யூ ஸ்டார்ட்..
அமலா:-நேத்து ஈவினிங் 5 மணிக்கு நாம சண்டை போட்டுக்கிட்டு போனோம், அதுக்கப்புறம் போன் பண்ணி என்னை சமாதானம் படுத்த நினைச்சியா நீ?
துரை:எத்தனை தடவை தான் உன்னை சமாதானம் படுத்துறது? பீச்சுல விக்கிற சுண்டல்'ல உப்பு இல்லாட்டி கூட என்னை தான் கோவிச்சிக்கிற
அமலா:- போதும் நிறுத்து.. நீ மட்டும் ஒழுங்கா? சுண்டல் பாப்கார்ன்'ய வாங்கி தந்ததை தவிர வேற என்ன செஞ்சி இருக்க?
துரை:- (ஆரம்பிச்சிட்டாய்யா ஆரம்பிச்சிட்டா) ஏண்டி கேட்க மாட்ட, நீ கூப்பிட்ட நேரத்துல எல்லாம் உன்னை டிராப் பண்ண எங்க டேமேஜர் கிட்ட எப்படி எல்லாம் கதை விட்டுட்டு வந்து இருக்கிறேன், அதுக்கு எத்தனை மெமோ வாங்கி இருக்கேனு எனக்கும், எங்க மேனேஜர்க்கும் மட்டும் தான் தெரியும்….
அமலா:-இட்ஸ் நாட் மை பிராப்ளம்..
துரை:-இட்ஸ் மை பிராப்ளம்… அது எப்படி'னு தெரியலடி, அவனவன் அவன் பிரச்சினை'ய சீரியஸ்'ய சொல்லிக்கிட்டு இருக்கும் போது எதுக்கெடுத்தாலும் இட்ஸ் நாட் மை பிராப்ளம்'னு அசால்ட்டா பெரிய டால்டா மாதிரி சொல்லுறீங்க???
அமலா:-டேய் இந்த டி போட்டு பேசுனா, உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ..
துரை:-அப்படி போட்டு தாக்கு… இப்ப எல்லாம் லவ்விங் டேஸ்'லையே டைவர்ஸ்'யா?
அமலா:-என்ன சம்பந்தமே இல்லாம டிவி சீரியல் தலைப்பு எல்லாம் சொல்லுற?
துரை:-உங்கள பத்தி பேச்சை எடுத்தாலே அது சம்பந்தம் இல்லாம தானே இருக்கும்.
அமலா:-என்ன?
துரை:-ஒன்னும் இல்லை
அமலா:- நான் நம்பிட்டேன்..
துரை:-அப்படி என்ன நான் உனக்கு பண்ண'ல னு இப்படி மூச்ச போட்டுக்கிட்டு இருக்க?
அமலா:-அப்படி கேளு.
துரை:-அப்படி தானே கேட்டேன்…
அமலா:-ஸ்ஸ்ஸப்ப்பா…..
துரை:-ஒகே ஒகே… சொல்லு…
அமலா:-இதுவரைக்கும் என்னை நினைச்சி ஒரு கவிதை எழுதி இருப்பியா?
துரை:-ஹி ஹி ஹி கவிதைனா எப்படி? மானே தேனே எழும்புகூடே'னு எழுதுவாங்களே அப்படியா?
அமலா:-ஆமா அது உன்னை மாதிரி டகால்டிங்க எழுதுறது..
துரை:- அப்போ Ph.d முடிச்சவங்க எப்படி எழுதுவாங்க?
அமலா:- கை'ல தான்...
துரை:- அய்யே..
அமலா:- கூல், நான் சொல்லுறது இந்த தேவதைகளை நினைத்து சூரியனே,மரமே அழகே'னு கவிதை எழுதறவங்கள..
துரை:-அது தானே பார்த்தேன்.. அதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும்.. அது எல்லாத்துக்கும் வராது….
அமலா:- எத கேட்டாலும் இப்படியே சொல்லிடு……
துரை:- இப்போ கவிதை எழுத சொல்லுவ அப்புறம் கதை எழுத சொல்லுவ, அப்புறம் உன்னை வச்சி படம் கூட எடுக்க சொல்லுவ.. தேவையா எனக்கு... ஆரம்பத்துலையே தெரியாது'னு சொல்லிட்டா, பின்னாடி நிம்மதியா இருக்கலாம் யூ சி.. :P
அமலா:- சோம்பேறி, ஒரு கவிதைக்கே இப்படி புலம்புபுபு...
துரை:-சரி சரி கவிதை எழுத தெரியுமா'ங்கறது தான் இன்னைக்கு பஞ்சாயித்தா?
அமலா:- இல்ல இல்ல…. அது இல்லை..
துரை:- அப்போ?

அமலா:- இன்னைக்கு 3 மணிக்கு நான் மதுரைக்கு கிளம்புறேன்.. வர எப்படியும் 1 மாதம் ஆகும். அதுக்கு முதல்'ல உன்னை எனக்கு பார்க்கனும் போல இருந்துச்சி.. அது தான் உனக்கு கால் பண்ணிட்டேன்..உன் கிட்ட போட்ட சீக்கிரம் சொல்லிட்டு வைக்கலாம் னு பார்த்தா, நீ போட்ட மொக்கை'ல ஒரு மணி நேரம் ஒடிடுச்சி…. இன்னும் 45நிமிடம் தான் இருக்கு… நான் அவசரமா கிளம்பி போகனும்.. சோ, நீ என்ன பண்ணு சீக்கிரம் பஸ் ஸ்டாண்ட்'க்கு வந்து என்ன்ன பார்த்துட்டு போயிடு'னு நம்ம நாயகி சொல்லிட்டு போனை கட் பண்ண..

ஆஹா பஸ் ஸ்டாண்ட்'க்கு ஆட்டோ'ல போனாலே அரை நாள் ஆகுமே, அப்புறம் எப்படி.. சரி சரி காதலி ஆசை பட்டுட்டா, போய் பாய் சொல்லிட்டு வந்துடுவோம்'னு, மாமி கடையில இருந்து ஒரே ஓட்டமா ஒட ஆரம்பிச்சி ஒடினான் ஒடினான் "சக்ரா கோல்டு" டீ க்கு ஒருதரு ஒடுவாரே, அதுமாதிரி பட்ட பகல்'ல ட்ராபிக்'ல அங்கிட்டும் இங்கிட்டும் கண் மூடிதனமா ஒடி ஒரு வழியா பஸ் ஸ்டாண்ட் வந்து டைம்'ய பார்த்தா, அப்பாடா அவ சொன்ன டைம்'க்கு 5 நிமிட'த்துக்கு முன்ன தாவே வந்தாச்சி அப்படி'னு பெருமையுடன் நாயர் கடையில ஒரு டீ'ய ஆர்ட்ர் பண்ணி, குடிக்க போகும் போது, துரை சாருக்கு மொபைலில் அழைப்பு "நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்டோனா" அட நம்ம ஆளு…

துரை:-ஏய்,நான் பஸ் ஸ்டாண்ட் க்கு வந்துட்டேன்….நீ எங்க இருக்க? வந்தாச்சா?

அமலா:- மண்ணாங்கட்டி கொஞ்சம் திரும்பி பாரு.. நான் பஸ்'ல ஏறி, பஸ்'யும் புறப்பட்டுறிச்சி…நீ டீ க்கு கொடுத்த முக்கியத்துவத்தை எனக்கு கொடுக்கல போ.. கடைசி வரைக்கும் உன்னை பார்த்து பேசவே முடியலையே….

துரை:-என்ன இப்படி சொல்லிட்ட.. என்னை பார்க்காம நீ போயிட முடியுமா? இதோ பார் அப்படி'னு அமலாவை பார்த்துக் கொண்டே கண்மூடிதனமா ரோட்டை கிராஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது நச்'னு லெப்ட் சைட் திருப்பத்து'ல இருந்து வந்த ஒரு வேன், நம்ம நாயகனை ஒரே தூக்கா தூக்க, அப்புறம் என்ன?

முடிவு உங்க கையில்.
மாரல் ஆப் தி பதிவு :- எவ்வளவு தான் உயிருக்கு உயிரா காதலிச்சாலும், என்ன பெரிய படிப்பு படிச்சி இருந்தாலும், ரோட்டை கடக்கும் போது லெப்ட், ரைட் கண்டிப்பா பார்த்துட்டு தான் கிராஸ் பண்ணனும்…


நண்பர்களின் வற்புருத்துதல் இல்லாத பேரில் இந்த கதையை சர்வேசனின் நச்சுன்னு ஒரு கதை போட்டிக்கு அனுப்புறேன். :-)

என்ன கொடுமை சார் இது???????

வரட்டா !!!!!!!!!

40 comments:

k4karthik said...

firstuuuu....

k4karthik said...

kadhaiya padichitu vandhu kummuren raasa...

Dreamzz said...

//இப்போ கவிதை எழுத சொல்லுவ அப்புறம் கதை எழுத சொல்லுவ, அப்புறம் உன்னை வச்சி படம் கூட எடுக்க சொல்லுவ.. தேவையா எனக்கு... ஆரம்பத்துலையே தெரியாது'னு சொல்லிட்டா, பின்னாடி நிம்மதியா இருக்கலாம் யூ சி.. :P//
ROFL! haha! super comedy ithu!

Dreamzz said...

kadhai naklla irukku... :)
nachunu kutha sonna ippadi ore adiya pottu thaakiteenga!

Dreamzz said...

5

Dreamzz said...

6

Dreamzz said...

enakku pidicha number :)

k4karthik said...

okkamakka... kadhai na idhu dhan da kadhai...

aama, yaaru andha amala?

G3 said...

//எவ்வளவு தான் உயிருக்கு உயிரா காதலிச்சாலும், என்ன பெரிய படிப்பு படிச்சி இருந்தாலும், ரோட்டை கடக்கும் போது லெப்ட், ரைட் கண்டிப்பா பார்த்துட்டு தான் கிராஸ் பண்ணனும்…
//

Avvvvvvvvvvvvvvvvvvvv... mudiyala raasa mudiyala..

Andha dhora nee dhaanae.. dialoguelayae theliva theriyudhu.. ippo ellam online varaadhadhukku amala dhaan kaaranama??? nadathu raasa nadathu :))

G3 said...

//கூல், நான் சொல்லுறது இந்த தேவதைகளை நினைத்து சூரியனே,மரமே அழகே'னு கவிதை எழுதறவங்கள..//

Nee dreamza thitanumnu aasa patta neravae thitikka vendiyadhu dhaane raasa. en indha maraimuga thaakudhal??

G3 said...

appuram long time no see.. ???

Over bijee??

G3 said...

ivlo dhooram vandhutten

G3 said...

un fav commenta unakku dedicate pannitae poren :))

ambi said...

ஹஹா! இந்த நாளை இனிய நாளாக்கிய என் அருமைதம்பி கோப்ஸ்க்கே முதல் பரிசு குடுக்கனும்!னு நான் முன்மொழியறேன். :)

*ahem, அமலா சவுக்கியமா? :)

வேதா said...

என்ன கொடுமை இது?!! :D
ஹிஹி காமெடியா ஒரு நச்!! :D

R. said...

குவைத்திலே இப்போ வெய்யில் அவ்வளவா இல்லயே.

இருந்தாலும் இது ஒவர் கொடுமை சார்

Arunkumar said...

//எவ்வளவு தான் உயிருக்கு உயிரா காதலிச்சாலும், என்ன பெரிய படிப்பு படிச்சி இருந்தாலும், ரோட்டை கடக்கும் போது லெப்ட், ரைட் கண்டிப்பா பார்த்துட்டு தான் கிராஸ் பண்ணனும்…
//

ennalayum mudiyala !!!

Arunkumar said...

paya pulla andha getti chutneya damager-ku kudukkamaleye poitaaneya !!!

Divya said...

காமடியான 'நச்'சென்ற கதை,

Conversation ரொம்ப ஜாலியா, கலாட்டாவாக இருந்தது, ரொம்ப ரசிச்சு படிச்சேன்,

முடிவு இப்படி சோகமா போய்டுச்சேன்னு கொஞ்சம் வருத்தம்,

நல்லாயிருக்கு கோப்ஸ் கதை!

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா.. சூப்பர் காமெடி. ;-)))

அந்த படத்தையும் இந்த டயலோக்கையும் எங்கேயோபார்த்த மாதிரி இருக்கே:

//நண்பர்களின் வற்புருத்துதல் இல்லாத பேரில் இந்த கதையை சர்வேசனின் நச்சுன்னு ஒரு கதை போட்டிக்கு அனுப்புறேன். :-) //


:-P

வெற்றி பெற வாழ்த்துக்கள்.. ;-)

CVR said...

சோகமா ஒரு கதையை முடிச்சாலும் ROFL எஃபெக்டு வரது உங்க பதிவுல மட்டும்தான் முடியும் அண்ணாச்சி!!

:-D

rt said...

The climax came very sudden as if the ink and paper were done ..while writing
Sorry as if power cut came... while typing.

Initial conversation was nice.

-Aarthy.

My days(Gops) said...

@k4k:- first ku oru gulaab jaaamun parcel :D

padichitu vaaaanga paarthukalam :P

My days(Gops) said...

@dreamzz :- //ROFL! haha! super comedy ithu!//

he he he unmai ah sonnen :D

//nachunu kutha sonna ippadi ore adiya pottu thaakiteenga!//
he he he ennanga seiah.... perusaah post pottah makkals ellam escape aaagidraangaley :)

7 ku oru "O"

My days(Gops) said...

@k4k:- he he he nanringannov..
amala va yaaaruku therium.. adhu indha kadhai heroine name :)

My days(Gops) said...

@G3:- //Avvvvvvvvvvvvvvvvvvvv... mudiyala raasa mudiyala.. //

sare sare.... idhukellam no cryings :)

//Andha dhora nee dhaanae.. dialoguelayae theliva theriyudhu..//
adipaavi, enna pathi naaaney eludhuvenaah? :D

//ippo ellam online varaadhadhukku amala dhaan kaaranama??? nadathu raasa nadathu :))//
he he he yaaaru online vara maaatengurah?

//en indha maraimuga thaakudhal??//
cha cha, naaan avarah sollavey illai... nambita thaaney? :D

My days(Gops) said...

@ambi :- thala vaazhga :).. amala en kadhai heroine thala :P

My days(Gops) said...

@veda :_ //என்ன கொடுமை இது?!! :D//

adha thaaan naanum ketten :D

//ஹிஹி காமெடியா ஒரு நச்//
thanks thanks.. :D

My days(Gops) said...

@r:- //குவைத்திலே இப்போ வெய்யில் அவ்வளவா இல்லயே.//]

kulir pottu thaaakudhu la :D

//இருந்தாலும் இது ஒவர் கொடுமை சார்//
he he he he.. adjust pannikonga sir :)

My days(Gops) said...

@arun:- adjust pannikonga brother :)


//paya pulla andha getti chutneya damager-ku kudukkamaleye poitaaneya !!!//
he he he adutha episode la koduthuduvom :D

My days(Gops) said...

@divya :- //காமடியான 'நச்'சென்ற கதை,//
nanri nga.. :)


//Conversation ரொம்ப ஜாலியா, கலாட்டாவாக இருந்தது, ரொம்ப ரசிச்சு படிச்சேன்,//
he he he remba thanks nga :P

//முடிவு இப்படி சோகமா போய்டுச்சேன்னு கொஞ்சம் வருத்தம்,//
natchu nu oru mudivukaaaaga thaaaanga... bt still, mudivu unga kail nu thaaney solli iruken :D..

//நல்லாயிருக்கு கோப்ஸ் கதை!
//
thanks thanks.

My days(Gops) said...

@my friend :- //ஹாஹாஹா.. சூப்பர் காமெடி. ;-)))
//
nanri my friend

//அந்த படத்தையும் இந்த டயலோக்கையும் எங்கேயோபார்த்த மாதிரி இருக்கே://
myfriend nu oruthavanga blog la irundhu G3 pannunadhu :D

My days(Gops) said...

@cvr :-= //சோகமா ஒரு கதையை முடிச்சாலும் ROFL எஃபெக்டு வரது உங்க பதிவுல மட்டும்தான் முடியும் அண்ணாச்சி//

:) remba thanks brother

My days(Gops) said...

@aarthi:- //The climax came very sudden as if the ink and paper were done ..while writing
Sorry as if power cut came... while typing.//

he he he he .. natchunu oru thirupathukaaaaga , thirupathula oru accident ah pottuvitten... :D
all in the game.....

//Initial conversation was nice.//
thanks a lot :)

Ponnarasi Kothandaraman said...

aaha epdi miss pannen intha posta :O

Amala mokkais ungalodathu mariye irukeeeeeeey :P Yaru antha amalaa??? :D

Intha post potathey therila :-/ Hm...

My days(Gops) said...

@pons:- //aaha epdi miss pannen intha posta :O//
indha post pottu first offline vutadhey ungaluku thaaan :)..

//Amala mokkais ungalodathu mariye irukeeeeeeey :P Yaru antha amalaa??? :D //
:D neeeengalumaah? he he he he.. ada idhu en karpanai naayagi'nga... vera endha ulkuthum illai :D..

//Intha post potathey therila :-/ Hm//
illa illa.. naaan publish pannunonah first offline vutten ungaluku ... beleive me . :)

cdk said...

உங்களுக்குள்ள ஒரு அபாரமான திறமை ஒளிஞ்சுட்டு இருக்கு பிரதர் :)

நீங்க இங்கிட்டு இருக்க வேண்டிய ஆள் இல்லை! எங்கேயோ போயிருக்க வேண்டியவரு :)

Jeejay said...

Wow,what a hilarious writing!!

Words cant just express how much I enjoyed reading your post.

Will peek into your other posts too.
c ya!

My days(Gops) said...

@CDK:- //உங்களுக்குள்ள ஒரு அபாரமான திறமை ஒளிஞ்சுட்டு இருக்கு பிரதர் :)//

நன்றி பிரதர்....

//நீங்க இங்கிட்டு இருக்க வேண்டிய ஆள் இல்லை! எங்கேயோ போயிருக்க வேண்டியவரு :)//
நீங்க காமெடி கீமடி பண்ணலையே?

My days(Gops) said...

@Jeejay:- //Wow,what a hilarious writing!!
Words cant just express how much I enjoyed reading your post.

Will peek into your other posts too
/

முதல் வருகை + கமெண்ட்க்கு நன்றிங்க...