Sunday, January 13, 2008

வாக்குறுதி !!!!!!!!

பாடி வா ராகம் வரும்,
ஒடி வா மேகம் வரும்
நீந்தி வா கரையும் வரும் எல்லாம் நம்மோடு….


வணக்கம் வந்தனம் என் நெற்றியில் இல்லை சந்தனம்..

எல்லாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…
அடப்பாவி பொங்கல் வாழ்த்து சொல்லுற நேரத்துல வந்து புத்தாண்டு வாழ்த்து சொல்லுற
அது தானே கேட்குறீங்க? என்னத்த சொல்ல??
(ம்ம்ம்ம்ம் ஒரு திருக்குறள் சொல்லு அப்படினு யாருப்பா அங்க???)

ஹி ஹி ஹி சரி சரி ஆரம்பத்திலையே மீ த நோ மொக்கை….க்க்க்க்க்கூல்..

புது வருஷத்துல முதல் பதிவு….. பொன்னம்மா கொடுத்த Tag'ல இருந்து ஆரம்பிப்போம்'னு

இதோ…

எத பத்தி Tag'nu கேட்குறீங்களா?,

அட அது தாங்க வருஷா வருஷம்,வருஷத்தின் முதல் நாளே, நமக்கு நாமே
வாக்குறுதிகளை
(கோயில்'ல கண்ணாடி,உண்டியல்'ல உபயம்'னு எழுதி இருக்கிற மாதிரி) அள்ளி விட்டுட்டு, அதுக்கு அப்புறம் இரெண்டு வாரத்தில நாம அள்ளி விட்ட வாக்குறுதிகளை "பஸ் ஸ்டாப்'ல பார்த்த பிகருங்க மாதிரி மறந்துடுவோமே (எல்லோரும் இல்லை) அதை பத்தி தாங்க....

இன்னும் என்ன tag'nu தெரியாதவங்களுக்கு => New year Resolution Tag'யாம்

இதோ போவோம் இந்த வருட வாக்குறுதிகளுக்கு (Resolution'யாம்)

1. சோம்பேறியா இருக்காம, வீக்கெண்ட்'ல தான் டிரஸ் எல்லாத்தையும் துவைக்கனும்..
(கண்டிப்பா, அவசர அவசரமா வீக்டேஸ்'ல துவைக்கவே கூடாது.)


2. கால்'ல சுடுத்தண்ணி ஊத்துன மாதிரி, எந்த வேலையுமே கடைசி நேரத்துல பண்ணக்கூடாது.
(எதையுமே பிளான் பண்ணி செய்யனும்)

3. சும்மா இருக்கிற நேரத்துல நிறைய படிக்கனும்..

4. கடைசியா மிக முக்கியமானது

நண்பர்கள் எல்லோரும் (என்னை மாதிரி வெட்டியா இல்லாம) தினமும் பிஸியா வேலை பார்த்துக்கிட்டு இருப்பாங்க, அப்போ அவங்க ஆன்லைன் வந்தா, நாம தேவை இல்லாம யாருகிட்டையும் "சாப்ட்டாச்சா" அப்படி'னு ஆரம்பிச்சி மொக்கை போடவே கூடாது… பாவம் நம்ம ஏன் அவங்கள டிஸ்டேர்ப் பண்ணிக்கிட்டு

இவ்வளவு தாங்க எனக்கு நானே கொடுத்துக்கிட்ட வாக்குறுதி….

(ஹி ஹி ஹி ஆனா பாருங்க, ஆவனா'னா கேளுங்க, அப்போ இ'யனா'னா? ம்ம்ம்ம்ம் போய் பக்கத்து சீட்டு பாப்பா கிட்ட கேட்டுக்கோங்க :P. அட சொல்ல வுடுங்க நான் சொல்ல வந்த்ததை.. டேய் நாங்க எங்க'டா உன்னை சொல்லவிடல'னு கேட்காதீங்க, இந்த மாதிரி மொக்கைய தான் ஸ்டாப் பண்ணனும்'னு இருக்கேன் ஹி ஹி ஹி.)

எதுல விட்டேன்? ஆங் இவ்வளவு தாங்க எனக்கு நானே கொடுத்துக்கிட்ட வாக்குறுதி…. ஹி ஹி ஹி ஆனா பாருங்க, வருஷா வருஷம் வழக்கம்போல இதே ராவடி தான்… முழுசா ஒரு மாதம் கூட கொடுத்த வாக்குறுதிகளை கடைப்பிடிக்க முடியாது…
( அட காய்கறி வியாபாரம் செய்ய இல்லைங்க)…

அதனால, இனிமேல் (Female எங்க'னு கேட்காதீங்க) வாக்குறுதிகளே கொடுத்துக்க கூடாதுங்கறது தாங்க இந்த வருடம் நான் எடுத்துக்கிட்ட Resolution.... எப்படி?....

அடப்பாவி ஒன்னாரூபா மேட்டரு, அதுக்கு ஒன்னரை கிலோ மீட்டர் சுத்திட்டீயே அப்படி'னு யோசிக்காதீங்க….. ஹி ஹி ஹி ஹி ஆல் இன் தி கேம்…..

அவ்வளவு தாங்க....

இந்த வருடம் நான் பார்த்த முதல் படம் "Taare Zameen Par"

Chance கிடைச்சா கண்டிப்பா மிஸ் பண்ணாம, இந்த படத்தை பாருங்க
(போட்டோ'வ இல்லைங்க)....அன்பே எந்தன் அன்பே அன்பே நீ தானே கடவுளின் பிள்ளையே..
வேரில் வெந்நீர் விழுந்த போதும் கிளையோடு பூக்குமே முல்லையே..
வரும் காலமே உனதாகுமே.....

எதை சொல்ல? கதை, டைரக்ஷன்,அமீர்கான், ஹீரோ குட்டி பையன் (இஸ்ஸாந்த்),அவனின் அம்மா, அர்த்தம் புரியாட்டியும் கேட்க தோனும் பாட்டு ..

படத்துல என்னமோ இருக்குங்க..

Chance'ey இல்ல.. எல்லாமே சூப்பர்.....

நன்றி வணக்கம்..

cheers!!!!!!!!!
gops..

27 comments:

பாசமலர் தங்கச்சி said...

என்ன இது கெட்ட பழக்கம்.இந்த மாதிரி எல்லாம் வாக்குறுதி எல்லாம் நம்பளை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இருக்கவே கூடாது.

//ஹி ஹி ஹி ஆனா பாருங்க, ஆவனா'னா கேளுங்க, அப்போ இ'யனா'னா? ம்ம்ம்ம்ம் போய் பக்கத்து சீட்டு பாப்பா கிட்ட கேட்டுக்கோங்க :P. அட சொல்ல வுடுங்க நான் சொல்ல வந்த்ததை.. டேய் நாங்க எங்க'டா உன்னை சொல்லவிடல'னு கேட்காதீங்க, இந்த மாதிரி மொக்கைய தான் //

அண்ணாச்சி உங்க அது எல்லாம் கஷ்டம்.மொக்கை என்றால் அதுக்கு பேரு போனது கோப்ஸ்தான் :D
மொக்கையை நீங்க நிப்பட்டின்ன அருவாதான் பேசும்.சொல்லிப்புட்டேன்.

Dreamzz said...

//என்ன இது கெட்ட பழக்கம்.இந்த மாதிரி எல்லாம் வாக்குறுதி எல்லாம் நம்பளை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இருக்கவே கூடாது.//
ரிப்பீட்டு!

Dreamzz said...

நல்ல வாக்குறுதி தான்.. ஆனா நீங்க அரசியல்வாதினு தோணுதே :)

Dreamzz said...

அட நாந்தேன் 2nd ஆ?

G3 said...

ada paavi.. oru nimisham nee mokkaya poda poradha nippatitiyonnu bayandhutten.

eppavum pola thirundhaamalae iru :D

Divya said...

வழக்கம்போல் சிரித்து ரசித்து படித்தேன் உங்க பதிவை,

மொக்கைபோடாத ஒரு கோப்ஸ்....கற்பனை பண்ணிகூட பார்க்கமுடில....நிச்சயம் உங்களால மொக்கை போடாமா இருக்க முடியாது கோப்ஸ்!

R. said...

நடிக்க தெரியாத கமல் = மொக்கை போடாத கோப்ஸ்

கமல் நடிப்பும் பிடிக்கும் உங்க மொக்கையும் பிடிக்கும்

மொக்கையை நீங்க நிப்பட்டின்ன அருவாதான் பேசும்.

ரிப்பீட்டு

Karthik B.S. said...

//சும்மா இருக்கிற நேரத்துல நிறைய படிக்கனும்.. //

edhuva irundhaalum soltu seinga gops.. :d

Ponnarasi Kothandaraman said...

Adada :) Epdi Gops ivlo nalla and serious'ana resolution ellam edukreenga :P
Paapom 2009 varatumm unmay theriyum ;)

Thanks for taking up the tag! :) and Sorry for visiting so late :(

Ponnarasi Kothandaraman said...

:) 2nd resolution description is 2 good! :)

k4karthik said...

//ஒடி வா மேகம் வரும் //

அது என்னடா லாஜிக்?

k4karthik said...

//ம்ம்ம்ம்ம் ஒரு திருக்குறள் சொல்லு அப்படினு யாருப்பா அங்க???)
//

வேண்டாம், சிலப்பதிகாரம் சொல்லு..

k4karthik said...

//அப்போ அவங்க ஆன்லைன் வந்தா, நாம தேவை இல்லாம யாருகிட்டையும் "சாப்ட்டாச்சா" அப்படி'னு ஆரம்பிச்சி மொக்கை போடவே கூடாது…//

ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ ஹி ஹீ

k4karthik said...

//ஆனா பாருங்க, ஆவனா'னா கேளுங்க, அப்போ இ'யனா'னா? ம்ம்ம்ம்ம் போய் பக்கத்து சீட்டு பாப்பா கிட்ட கேட்டுக்கோங்க //

சோனியாவ கேக்க சொல்றியா?

k4karthik said...

//இந்த மாதிரி மொக்கைய தான் ஸ்டாப் பண்ணனும்'னு இருக்கேன் ஹி ஹி ஹி//

இதுவே ஒரு மொக்கை..

k4karthik said...

//படத்துல என்னமோ இருக்குங்க..//

என்னனே தெரியாம தான் எங்களை பார்க்க சொல்றியா!?

k4karthik said...

//பாசமலர் தங்கச்சி said... //

எவ அவ?

cdk said...

படிக்கிறதுக்கு ரொம்ப நகைச்சுவையா இருக்கு! வாழ்த்துக்கள்!!

My days(Gops) said...

//எல்லாம் நம்பளை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இருக்கவே கூடாது.//

தங்கச்சி சொன்னா கேட்டுக்கனும் :)

//மொக்கையை நீங்க நிப்பட்டின்ன அருவாதான் பேசும்.சொல்லிப்புட்டேன்//
அட்ரா அட்ரா... தங்கச்சி சொன்னா நோ அப்பீல்

My days(Gops) said...

@dreamzz :- //நல்ல வாக்குறுதி தான்.. ஆனா நீங்க அரசியல்வாதினு தோணுதே :)//

அப்படி எல்லாம் இல்லை தல

My days(Gops) said...

@G3:_-//oru nimisham nee mokkaya poda poradha nippatitiyonnu bayandhutten.//

சே சே நான் என்ன உன்னை மாதிரி'னு நினைச்சிட்டியா :)

My days(Gops) said...

@திவ்யா:_ /வழக்கம்போல் சிரித்து ரசித்து படித்தேன் உங்க பதிவை,//
நன்றி நன்றி

//மொக்கைபோடாத ஒரு கோப்ஸ்....கற்பனை பண்ணிகூட பார்க்கமுடில....நிச்சயம் உங்களால மொக்கை போடாமா இருக்க முடியாது கோப்ஸ்!//

ரெம்ப சரியா சொன்னீங்க :)ஹி ஹி ஹி

My days(Gops) said...

@r:- /நடிக்க தெரியாத கமல் = மொக்கை போடாத கோப்ஸ்

கமல் நடிப்பும் பிடிக்கும் உங்க மொக்கையும் பிடிக்கும//

அட்ரா அட்ரா.... இவ்வளவு நல்லவரா நீங்க?
நன்றிங்க

My days(Gops) said...

@bsk:- //edhuva irundhaalum soltu seinga gops.. :d //

கண்டிப்பா கார்த்திக்.. எப்படி இருக்கீங்க?

My days(Gops) said...

@பொன்ஸ்:- // Epdi Gops ivlo nalla and serious'ana resolution ellam edukreenga :P //
ஹி ஹி எத்தனை வருஷம் எடுத்துக்கிட்டு இருக்கோம் நாங்க :)

//Paapom 2009 varatumm unmay theriyum ;) //
மிரட்டாதீங்க.. ஹிஹி

//2nd resolution description is 2 good! :)//
நன்றிங்கோ

My days(Gops) said...

@K4K:_ //அது என்னடா லாஜிக்?/
அட ஒரு பாட்டுல வரும் அவ்வளவு தான் எனக்கு தெரியும் :)

//சிலப்பதிகாரம் சொல்லு//

சிலப்பதிகாரம் ஹிஹிஹிஹிஹிஹி ஹி ஹிஹீஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

96 ஹீ சொல்லி இருக்கீங்க இன்னும் 4 சொல்லி இருக்க கூடாதா?

//என்னனே தெரியாம தான் எங்களை பார்க்க சொல்றியா!?//
அவ்வளவு நல்லா இருக்குனு சொல்லுறேன்..


//எவ அவ?//
தர்கா தான் :P

My days(Gops) said...

@cdk:- //படிக்கிறதுக்கு ரொம்ப நகைச்சுவையா இருக்கு! வாழ்த்துக்கள்//

ரெம்ப நன்றிங்க... மீண்டும் வாங்க..:)