Thursday, January 24, 2008

நச்சு'னு ஒரு இச்சு :)

மு.கு:- இந்த பதிவு 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டுமே
(அப்படி'னு நான் டீரிம்ஸ் அண்ணன் மாதிரி சொல்ல மாட்டேன்)

11 வருஷ டிரைவிங் அனுபவத்துல நான் பண்ணுன முதல் விபத்து இன்னைக்கு தான்…
எப்படி சொல்லுவேன்… நேரம் சரி இல்லாட்டி எதுவுமே வேலைக்கு ஆகாது.. என்ன நான் சொல்லுறது..

அடேய், நீ ஒழுங்க காரை ஓட்டாம கொண்டு போய் இடிச்சிட்டு, நேரத்துல மேல ஏன்'டா பழிய போடுற'னு அங்க சவுண்ட் கொடுக்கிறது எனக்கு கேட்குது…. அதுவும் சரி தான்..
(என்ன அதுவும் சரி தான்? அது தான் சரி :) )

என்னா ஆச்சி (மனோரமா இல்லை) இன்னைக்கு? இதுவரைக்கும் எனக்கு ஒன்னுமே புரியல…

பொதுவா நான் வேகமா காரை ஓட்டவே மாட்டேன்…. தேவை'னா மட்டுமே ஓட்டுவேன்…..

சோ, இன்னைக்கு காலை'ல ஒரு 11 மணிக்கு ஆபிஸ் வேலையா (சிரிக்காதீங்க யாரும்) போய்க்கிட்டு இருந்தேன்..
நான் போன ரோடு'ல கார்கள் எப்போதுமே இடியாப்த்தை நேரா புழிஞ்சா எப்படி இருக்குமோ அப்படி ஒரு டிராபிக்கா இருக்கும்… வேகமா போக chance'ey இல்லை…. 10கிமீ வேகம் போனாலே அதிகம் தான்.. அப்படி தான் போயிக்கிட்டு இருந்தேன்… என்னாச்சி'னு தெரியல முன்னாடி போயிக்கிட்டு இருந்த Bentley sports கார் திடிர்'னு பிரேக் போட்டுட்டான்… கொய்யால, நான் சுதாரித்து பிரேக் போட்டும் பலன் இல்லாம டமார்'னு போய் அந்த காருக்கு என் கார் நச்சு'னு ஒரு இச்சு கொடுத்துடுச்சி..

அவ்வளவு தான்.. அடிச்ச ஜோருக்கு என் கார் bonnet வானத்துக்கு ஒரு குட்மார்னிங் சொல்ல ஆரம்பிச்சிடுச்சி…எனக்கு ஒரே பயம் நான் இடிச்ச காரின் விலை'ல சென்னை'ல ஒரு அபார்ட்மெண்ட் வாங்குற அளவுக்கு விலை ஜாஸ்தியான கார்..
முடிஞ்சிடுச்சிடா கதை'னு இறங்கி போய் பார்த்தா,

அந்த காருக்கு டேமேஜ் இது மட்டும் தான் (கருப்பு கலர்'ல தெரியுது பாருங்க)
என் காருக்கு இங்க பாருங்க..

வெந்து போன பிரியாணில டால்டா வா ஊத்துர மாதிரி, அந்த ரோட்டுல டிராபிக் அப்படியே நின்னு போச்சி…அடுத்த 5 நிமிஷத்துல இந்த ஊரு மாமா கூலா வந்து, ID License எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு வெள்ளை பேப்பர்'ல எங்க ரெண்டு காரும் இருந்த நிலைய அப்படியே படம் வரைஞ்சி, எங்க ரெண்டு பேத்தையும் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு வழக்க பதிவு செஞ்சி வீட்டுக்கு அனுப்பு வச்சிட்டாரு…..

இந்த ஊரு வழக்கம் படி முன்னாடி போற வண்டில பின்னாடி போய் இடிச்சா இடிச்சவன் மேல தான் குத்தமாம்… (என்ன்ங்கடா இது??)

வழக்குனா டிராபிக்'ய ஜாம் பண்ணுன'னால fine போடுறது தானாம்… நல்லவேளை….

எப்படியோ, இந்த வருஷம் காருக்கு முதல் போனி "Bentley"னால கிடைச்சிடுச்சி…..
பாவம் என் கார்..:(

தலைக்கு வந்த'து Helmet'oda போன மாதிரி…இச்சு கொடுத்த காருக்கு Insurance Company செலவ பார்த்துக்குமாம்…

தப்பிச்சேன்… ஹி ஹி ஹி…

அவரசரத்துக்கு இனிமேல் யாருக்கிட்டையும் கார் ஒசி கேட்டா கிடைக்குமா? கிடைக்காதா?
என்ன கொடுமை சார் இது?? :(வரட்டா..

cheers!!!!!!!!
gops...

32 comments:

CVR said...

உங்களுக்கு எதுவும் அடி படலையே???
பாத்து அண்ணாச்சி!!

Take care!! :-)

Anonymous said...

நமக்கு சோதனை வந்த தெய்வத்துகிட்ட சொல்லலாம்.ஆனா தெய்வத்துக்கே சோதனை வந்த அந்த தெய்வம் என்ன செய்யும்(ஏதோ ஒரு பழைய பட வசனம்).ஹிஹி.
அந்த காரில் ஒரு அழகான பொண்ணு இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்.எனது கற்பனை குதிரையை தட்டி விடுகின்றேன்.ஹிஹி

d4deepa said...

sari mamiyar veetukku poneengale yeppi irundhadu.

k4karthik said...

//"நச்சு'னு ஒரு இச்சு :)" //

title vachcha ippadi than vaikonum....

k4karthik said...

//பொதுவா நான் வேகமா காரை ஓட்டவே மாட்டேன்…. தேவை'னா மட்டுமே ஓட்டுவேன்…..//

appo podhuva nee thevai illame dhan ootre... correcta?

k4karthik said...

//அடிச்ச ஜோருக்கு என் கார் bonnet வானத்துக்கு ஒரு குட்மார்னிங் சொல்ல ஆரம்பிச்சிடுச்சி…//

lol.. eppadida ippadi ellam??

k4karthik said...

//நமக்கு சோதனை வந்த தெய்வத்துகிட்ட சொல்லலாம்.ஆனா தெய்வத்துக்கே சோதனை வந்த அந்த தெய்வம் என்ன செய்யும்//

three much...

Dreamzz said...

//இந்த ஊரு வழக்கம் படி முன்னாடி போற வண்டில பின்னாடி போய் இடிச்சா இடிச்சவன் மேல தான் குத்தமாம்… //
இது வேறையா

Dreamzz said...

//நீ ஒழுங்க காரை ஓட்டாம கொண்டு போய் இடிச்சிட்டு, நேரத்துல மேல ஏன்'டா பழிய போடுற'னு அங்க சவுண்ட் கொடுக்கிறது எனக்கு கேட்குது…. அதுவும் சரி தான்..
//
ஹிஹி!
சரி விடுங்க.. இதெல்லாம் அப்பப்ப நடக்கிறது தான்...

ambi said...

அடடா! இது தான்யா தலைப்பு!தலைதெறிக்க வந்தேன். :))

நீ இடிச்ச கார்ல பொண்ணு இல்லையா?
அடடா வேஸ்ட்டா போச்சே! பரவாயில்ல, ஒரு வேளை வீட்ல இருக்கலாம், காரை பாக்க வந்தேன்!னு சொல்லி எதுக்கும் அவங்க வீட்டுக்கு ஒரு விஜிட் அடி. :))

Anonymous said...

//Blogger k4karthik said...

//நமக்கு சோதனை வந்த தெய்வத்துகிட்ட சொல்லலாம்.ஆனா தெய்வத்துக்கே சோதனை வந்த அந்த தெய்வம் என்ன செய்யும்//

three much...//

பாசத்துல 3 much ...2 much ன்னு இருக்கா அண்ணா?நம்ப கோப்ஸ் அண்ணா ஒரு தெய்வம்ன்னு சொல்ல வந்தேன்.ஒத்துக்க மாட்டீங்களே?

Anonymous said...

//
அவரசரத்துக்கு இனிமேல் யாருக்கிட்டையும் கார் ஒசி கேட்டா கிடைக்குமா? கிடைக்காதா?
என்ன கொடுமை சார் இது?? :(//

கிடைக்கும் அண்ணா.ஆனா கார் சிங்கப்பூரில் இருக்கு.பரவயில்லையா ;)

சிங்கம்லே ACE !! said...

//இந்த ஊரு வழக்கம் படி முன்னாடி போற வண்டில பின்னாடி போய் இடிச்சா இடிச்சவன் மேல தான் குத்தமாம்… (என்ன்ங்கடா இது??)
//

Ella oorlayum ithaan rule.. Athenna anga mattum rule maathiri solreenga..

11 varushathula ore oru accident-a.. cha cha, kevalama irukku.. namakku ithula neraya experience..:)

anyways, carefull-a irunga thala..

ரசிகன் said...

அவரசரத்துக்கு இனிமேல் யாருக்கிட்டையும் கார் ஒசி கேட்டா கிடைக்குமா? கிடைக்காதா?
என்ன கொடுமை சார் இது?? :(

நியாயமான கவலை...:))))))))))))))))))))))))

நிவிஷா..... said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க humour sense is nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

ஷாலினி said...
This comment has been removed by the author.
ஷாலினி said...

//பிரேக் போட்டும் பலன் இல்லாம டமார்'னு போய் அந்த காருக்கு என் கார் நச்சு'னு ஒரு இச்சு கொடுத்துடுச்சி//

என்ன தவம் செய்தனை!!! Bentley sports கார்கு இச்சு தந்தத நெனச்சி உங்க கார் bonnett ''இது என்ன மாயம்னு'' கனவுலகதுல அப்படியே duet பாடிட்டே பறந்திருக்கும்..அத போய் good morning எல்லாம் சொல்லுதுன்னு தப்பா எடுதுகிடீங்க :P

பீலிங்கஸ் மா பீலிங்ஸ் ;)

My days(Gops) said...

@CVR:- //உங்களுக்கு எதுவும் அடி படலையே???
பாத்து அண்ணாச்சி//

இல்லை தம்பி.... கண்டிப்பா...

My days(Gops) said...

@துர்கா:- //நமக்கு சோதனை வந்த தெய்வத்துகிட்ட சொல்லலாம்.ஆனா தெய்வத்துக்கே சோதனை வந்த அந்த தெய்வம் என்ன செய்யும்(ஏதோ ஒரு பழைய பட வசனம்).ஹிஹி.//

ஆஹா தங்கச்சி.. நான் அண்ணன் தான்.. தெய்வம் இல்லை

//அந்த காரில் ஒரு அழகான பொண்ணு இருந்தால் இந்நேரம் என்ன ஆகி இருக்கும்.எனது கற்பனை குதிரையை தட்டி விடுகின்றேன்.ஹிஹி//

பார்த்து ரெம்ப ஒடிட போகுது :)

My days(Gops) said...

@அண்ணி:- //sari mamiyar veetukku poneengale yeppi irundhadu.//

வாசலோட வந்துட்டேன் :)

My days(Gops) said...

@K4K:- //title vachcha ippadi than vaikonum.//
நன்றி அண்ணா... :)

//appo podhuva nee thevai illame dhan ootre... correcta?//
ஏன் இப்படி? அப்படி எல்லாம் இல்லை அண்ணா.. :P

//eppadida ippadi ellam??//
ஹி ஹி ஹி தானா வருது அண்ணா..


//three much...//
தங்கச்சீ... இங்க கொஞ்சம் வாம்மா

My days(Gops) said...

@டிரீம்ஸ்:_ //இது வேறையா//

ஆமாங்க, எல்லா ஊருலையும் இப்படிதானேமே?

//சரி விடுங்க.. இதெல்லாம் அப்பப்ப நடக்கிறது தான்...//
நீங்க சொல்லுறனால நான் விடுறேன்..

My days(Gops) said...

@அம்பி:- //அடடா! இது தான்யா தலைப்பு!தலைதெறிக்க வந்தேன். :))//

அதுக்கு தானே வச்சேன் அப்படி :)

//நீ இடிச்ச கார்ல பொண்ணு இல்லையா?//

இருந்து இருந்தா அவங்க போட்டோ'வ போட்டு இருக்க மாட்டேனா?

//ஒரு வேளை வீட்ல இருக்கலாம், காரை பாக்க வந்தேன்!னு சொல்லி எதுக்கும் அவங்க வீட்டுக்கு ஒரு விஜிட் அடி. :))//

அப்புறம் எனக்கு தர்ம அடி விழுந்துட போகுது :)

My days(Gops) said...

@துர்கா :- /நம்ப கோப்ஸ் அண்ணா ஒரு தெய்வம்ன்னு சொல்ல வந்தேன்.ஒத்துக்க மாட்டீங்களே?//

இப்ப ஒத்துக்கிட்டு இருப்பாரே?


//கிடைக்கும் அண்ணா.ஆனா கார் சிங்கப்பூரில் இருக்கு.பரவயில்லையா ;)
//
இல்லை வேணாம் தங்கச்சி....உன் பாசத்துக்கு நன்றி...

My days(Gops) said...

@சிங்கம்:- அட்ரா அட்ரா வாங்க வாங்க.. எப்படி இருக்கீங்க

//Ella oorlayum ithaan rule.. Athenna anga mattum rule maathiri solreenga//

நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்... நன்றி..

//cha cha, kevalama irukku.. namakku ithula neraya experience..:)//
அப்படியா.. கொஞ்சம் எடுத்து விடுறது...

//anyways, carefull-a irunga thala..//
கண்டிப்பா...நன்றி..

My days(Gops) said...

@ரசிகன்:- //நியாயமான கவலை...:))))))))))))))))))))))))//

ஆமாங்க.. ஆனா இப்ப இல்லை.. :)

முதல் வருகைக்கு நன்றி....

My days(Gops) said...

@நிவிஷா:- //உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க humour sense is nice//

உங்க வருகைக்கும், கமெண்ட்க்கும் நன்றிங்க.....

கண்டிப்பா அங்க வரேன்...

My days(Gops) said...

@ஷாலினி:- முதல் வருகைக்கு நன்றி..

//என்ன தவம் செய்தனை!!! Bentley sports கார்கு இச்சு தந்தத நெனச்சி உங்க கார் bonnett ''இது என்ன மாயம்னு'' கனவுலகதுல அப்படியே duet பாடிட்டே பறந்திருக்கும்..அத போய் good morning எல்லாம் சொல்லுதுன்னு தப்பா எடுதுகிடீங்க :P //

அட அட என்னமா யோசிக்கிறீங்க.... நீங்க சினிமா ஜாஸ்தி பார்ப்பீங்களா? ஹி ஹி


//பீலிங்கஸ் மா பீலிங்ஸ் ;)//
ஓவர் பீலிங்கஸா இருக்கு மக்கா :P

ஷாலினி said...

//அட அட என்னமா யோசிக்கிறீங்க....//

நீங்க சினிமா ஜாஸ்தி பார்ப்பீங்களா? ஹி ஹி//

எல்லாம் தானா வருவது தான்.. ;)

எந்த சினிமால இது மாறி பாத்தீங்க :P

My days(Gops) said...

@ஷாலினி:- //எந்த சினிமால இது மாறி பாத்தீங்க :P//

அட நான் பார்க்கலைங்க..நீங்க பார்த்தீங்கனா, அதுக்கு அப்புறம் நானும் பார்க்கலாம் னு தான் கேட்டேன்... :)

Anonymous said...

Athepdinga oru event or incident nadakumbothu neenga seriuos ah erupeengala illai appovum cool ah erupeengala'
coz u had written all ur sothappals in a way u have enjoyed it a lot.
if bayangara sothappal nadakrappo do u think like ethai epdi blog la narrate panrathu apdinu think pannuveengala ?

-Aarthy.

My days(Gops) said...

@aarthy :_ //Athepdinga oru event or incident nadakumbothu neenga seriuos ah erupeengala illai appovum cool ah erupeengala'//

actual ah naaan eppovumay konjam cool ah thaaan irupen.konjam nervous ah thaan irukum for sumtime.(ie mostly for 15mins) adhuku appuram adha marandhuduven.. happend is happend illai ah?....

//coz u had written all ur sothappals in a way u have enjoyed it a lot///
sothappals ellathaium naaama venumnu thedi poradhu illai... but sothappals nammala thedi varum bodhu adha thaduka mudiadhu thaaney... so enjoy panni thaaney aaaganum.. wht ya saying..
(ennada nyani maari pesurenu dun think...fact ah solluren )

//if bayangara sothappal nadakrappo do u think like ethai epdi blog la narrate panrathu apdinu think pannuveengala //
ya ya.... bayangara sothappals ellaamey nammaku oru lesson thaaaney.. so adha correct ah narrate panni eludhita, next time sodhapals illaama paarthukalam u see....

remba explantion koduthutenoh? :)