Wednesday, January 30, 2008

கேளுங்க கேளுங்க எப்படி கேட்டீங்க?

ஒரு வழியா இடிபட்ட என் காரை ஹாஸ்பிடலில் சேர்த்தேன்… கார் டாக்டர் என் காருக்கு
பிலாஸ்டிக் சர்ஜரி செய்யனும் அதனால காரை அட்மிட் பண்ணிட்டு ஒரு 10 நாள் கழித்து வா'னு அனுப்பிட்டாரு..

இனி 10 நாளும் ஜாலியா Staff Bus'ல ஆபிஸ்க்கு போயிட்டு வந்துரலாம்'னு இருந்தா, ரெண்டாவது நாளே,என் இன்னொரு டேமேஜர், நான் வேலை விசயமா வெளியூர் போறேன் (நீங்க இங்கையே வேலை செய்ய மாட்டீங்களே அப்புறம் எப்படி அங்க போய்?) அதனால நீ என் காரை யூஸ் பண்ணிக்கோ'னு அவரு காரை என் தலையில கட்டிட்டு போயிட்டாரு.. நல்ல மனுசர்......

அமைதியா நான் எந்த வேலை செய்யும் போது, எனக்கு எப்போதும் பாட்டு கேட்கிற பழக்கம் இருக்கு...

அடுத்த நாள் என் டேமேஜர் காருல ஏறி உட்கார்ந்து பாட்டு போடலாம்'னு பார்த்தா, அவரு ஒரு ஞானபழம்ங்கறத மறந்துட்டேன்…..ஆமாங்க என் காருல MP3 player இருக்கு, இந்த காருல வெரும் காஸெட் player மட்டும் தான். சரி'னு ரேடியோ'வ போட்டா அதுல நீயூஸ் ஓடிக்கிட்டு இருந்தது… அடேய்'னு, FM போட்டா ஒரு பீட்டர் பாட்டு….
(ஒரு full pizza'வ வாய்'ல தினிச்சிக்கிட்டு பாடுனா எப்படி இருக்கும்? (பாடுறானா இல்லை வாந்தி எடுக்குறானா'னே தெரியல) . இது சரி வராது'னு உடனே என் ரூம்'க்கு வந்து "old blind woman open the door "(பழைய குருடி கதவை திறடி) back to my old collections அதுதாங்க காஸெட் காஸெட்'னு ஒன்னு இருக்குமே அத தேடி எடுத்து, தூசி தட்டி கார்'ல போட்டு கேட்டா, ஆஹா என்னத்த சொல்ல, பல நியாபகங்கள்.....

டேய் டேய், என்னடா சொல்ல வர? உனக்கு "short and sweet"யா எதையுமே சொல்ல தெரியாதா?'னு நீங்க கேட்டா, சாரி நான் இப்ப டயட்'ல இருக்கேனு தான் சொல்லுவேன்..

ஒகே ஒகே லெஸ் டென்ஷன் மோர் ஓர்குட் சாரி ஓர்க்..

அவசரமான உலகத்துல பல பொருட்கள் காணாம போய்கிட்டே இருக்குது…
சட்டுனு சொல்லு சட்டுனு சொல்லு'னு இப்ப உங்க எல்லாத்தையும் எப்படி பாட்டு கேட்பீங்கனு நான் கேட்டா, நீங்க எல்லோருமே பொட்டு'னு காதால தானு சொல்லுவீங்கஅது எங்களுக்கும் தெரியும்.

நான் சொல்ல வரது இப்ப பாட்டு எல்லாத்தையும், FM,CD/MP3/DVD player,PC,Ipod,Mobile real player மூலமா தான் (காட்டுவாசி சாரிங்க) முக்கால்வாசி பேரு (ஓசி'ல இல்லை) கேட்டுக்கிட்டு இருக்கோம்…...இது எல்லாம் ஹிட் ஆனது year 2000 க்கு அப்புறம் தான்..

கொஞ்சம் கொசுவர்திய சுத்திவிட்டு, அதுக்கு முன்னாடி போய் பார்த்தா, கண்டிப்பா புகை வராது கொசுவும் செத்து இருக்காது.. ஏன்னா,கொசுவர்திய சுத்திவிட்டு அப்படினா ஆங்கிலத்துல "Flash Back"னு அர்த்தம்.. அடேய், (காமரா'ல Flash Front'la தானே வரும்'னு என் கிட்ட திரும்பியும் சந்தேகம் கேட்டா, நான் sign out ஆகி போயிடுவேன் சொல்லிட்டேன்..) (அப்பாடா அதை செய் முதல்'ல'னு சவுண்ட் வுடாதீங்க நான் அவ்வளவு சீக்கிரம் சொல்ல வந்த்தை சொல்லாம போக மாட்டேன்.. ஹி ஹி ஹி ஹி , மொக்கை ஓவரா போடாம ஓவர் டூ த போஸ்ட் (டூத் பேஸ்ட்'னு படிக்காதீங்க).

நான் இப்போ சொல்ல போறது "ஆடியோ காஸெட்" பத்தி தான்.

நாம் எல்லாம் (எல்லோரும் இல்லை) அந்த காலத்துல (1988 க்கு முன்னாடி எனக்கு தெரியாது) எங்கேயும் எப்போதும் பாட்டு'னு கேட்டா அது காஸெட் மூலமா தான் இருக்கும்… நமக்கு பிடிச்ச பாட்டு எல்லாத்தையும் ஒரு பேப்பர்'ல எழுதி ஒரு T-Series/Tdk (60'ல(12 பாட்டு) ( 90'ல (18 பாட்டு) empty cassette வாங்கிட்டு நேரா ஆடியோ ரெக்கார்டிங் கடைக்கு போய் ஆடியோ கடை அண்ணாச்சி கிட்ட கொடுத்தா அவரு நல்லா ரெக்கார்டிங் பண்ணி தருவாரு..
( A side'la 6/9 பாட்டு முடிஞ்சோன கடைசியில கொஞ்சம் இடம் இருந்தா அதுல அண்ணாச்சி கண்டிப்பா ஒரு ஆங்கில பாட்டு ரெக்கார்டிங்க போட்டு அவரு திறமைய காட்டிடுவாரு….)

இப்படி பார்த்து பார்த்து ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொரு காஸெட்யா "Tape recorder, walkman"ல போட்டு கேட்டா, அதுல இருக்கும் பாருங்க ஒரு சுகம்.. அட அட என்ன'னு சொல்லுறது…..(அப்போ வெட்டியா இருந்தோம், சோ எல்லாத்துக்கும் டைம் இருந்தது) . குறிப்பா இசைஞானி பாட்டுகள் (ஸ்டீரியோ) எல்லாம் ரொம்ப அசத்தலா இருக்கும்.
(அந்த effect இப்போ CD la கிடைக்க மாட்டேங்குது…)..

வெளியூர் எங்கையாச்சும் பஸ்'ல போட்கும் போது , உணவு நிறுத்தத்துல கண்டிப்பா அங்க ஒரு காஸெட் கடை இருக்கும்..அந்த கடையில 100% டூப்பிளிக்கேட் காஸெட் தான் விப்பாங்க… நம்மாளுங்க அந்த கடையில இருந்து 1960,1970'ல வந்த பாட்டுகள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து, டீ கடையில போட்டுவிட்டுறுவாங்க…. நல்ல கேட்டீங்கனா, அந்த காஸெட் பாடுதா, இல்லை கதறுதானு தெரியாது.. ஹி ஹி ஹி.......அந்த அளவுக்கு ரெக்காட்டிங் மட்டமா இருக்கும்.. (ஒரிஜினல் கம்பெனி காஸெட் எல்லாம் யாரு வாங்குவா)

நான் எல்லாம் இந்தியா'ல இருந்த வரைக்கும் காசு கொடுத்து காஸெட் ரெக்கார்ட் பண்ணினதே இல்லை….எல்லாம் நண்பர்கள் கிட்ட இருந்து அட்டகாசமா ஆட்டைய போட்டது தான்.. (ofcourse,அவங்களுக்கு தெரிந்து தான் :) ).இங்க வந்தும் 2 வருஷம் காஸெட்'ல தான் கேட்டுகிட்டு இருந்தேன்… அப்புறம் கொஞ்ச நாளு'ல போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி…
(நமக்கு பிடிச்ச பாட்டு, காஸெட்'ல ஒரு 4 பாடல் தள்ளி இருக்கும்.. .அதை ரீவைண்ட் பண்ணி அப்புறம் forward பண்ணி நமக்கு பிடிச்ச பாட்டை கேட்குறதுக்கு முன்னாடி பச்சை தண்ணிர்'ல ஜிலேபி சுட்றலாம்.. ஹி ஹி ஹி.. (அதுக்கெல்லாம் எங்க இருக்கு டைம் + பொறுமை.) ரிமோட் வாழ்க்கைக்கு மாரின பிறகு ரிமோட் இல்லாம எதுவுமே நாட் சுவிட்ச்சிங் யூ சி.... )


அந்த காலத்து காதலர்கள் எல்லாம் தங்களுக்கு பிடிச்ச பாடல்கள் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி காதலிக்கு கொடுப்பாங்க பரிசா....
(இப்ப எல்லாம் யாரு கொடுக்குறா, இந்தா அன்பே உனக்கு பிடிச்ச பாடலகள் அடங்கிய சிடி'னு கொடுத்தா, இந்த சிடி'ய நேத்தே நான் பஜார்'ல 10 ரூவா கொடுத்து வாங்கிட்டேன்'னு பதிலுக்கு பதில் தான் வரும்…..)

இப்படி அழைந்து திரிந்து பாட்டு எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்னி, ஒவ்வொரு தடவையும் போட்டு கேட்கும் போது ஒரு சில memories நம்ம மண்டைல வந்துட்டு போகும்..

அந்த காலம் எல்லாம் இப்போ எங்கையோ போச்சி…… 15ரூபாய்க்கு MP3 வாங்குனோமா, அதை pc'ல போட்டு நமக்கு வேண்டிய பாட்டை செலக்ட் செஞ்சோமா, (டவுன்லோடும் அடங்கும்) அதை அப்படியே Ipod, Mobile 'la ஏத்துனோமா, ear phone'a மாட்டுனோமா, பாட்டை கேட்டோமா'னு எல்லோரும் நிக்காம, கூட்டம் போடாம போய்கிட்டே இருக்கோம்..

என்ன நான் சொல்லுறது ????..


ஆஹா கோப்ஸ், ரெம்ப நாள் கழிச்சி காஸெட்'ல ஒரு பாட்டு கேட்டு, அதை வச்சி ஒரு மொக்கை போட்டுட்டியே.. அட்ரா அட்ரா

அவ்வளவு தாங்க….(இன்னும் வேற சொல்லுவியா'னு கேட்காதீங்க)

வரட்டா….

Cheers!!!!!!!!!
gops..

30 comments:

Dreamzz said...

naan first?

Dreamzz said...

ada apdi thaaan!

Dreamzz said...

//டேய் டேய், என்னடா சொல்ல வர? உனக்கு "short and sweet"யா எதையுமே சொல்ல தெரியாதா?'னு நீங்க கேட்டா, சாரி நான் இப்ப டயட்'ல இருக்கேனு தான் சொல்லுவேன்..//
hehe ithu veraya!

Dreamzz said...

//இப்படி பார்த்து பார்த்து ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொரு காஸெட்யா "Tape recorder, walkman"ல போட்டு கேட்டா, அதுல இருக்கும் பாருங்க ஒரு சுகம்.. //
athu athu!!!!!

Dreamzz said...

//ஆஹா கோப்ஸ், ரெம்ப நாள் கழிச்சி காஸெட்'ல ஒரு பாட்டு கேட்டு, அதை வச்சி ஒரு மொக்கை போட்டுட்டியே.. அட்ரா அட்ரா//
irunga aalu anuparen...

Dreamzz said...

innum onnu!

Dreamzz said...

7 வர்ட்டா!

நிவிஷா..... said...

//naan first?//
illa dreamz... naan thaan first.. ippo lastla irunthu paartha

Gops.. nalla post:) nalla mokkai podareenga. en pathivukku vandhu unga rangeku irukaanu certificate tharanum pls..

natpodu
nivisha

Anonymous said...

வயசு ஆச்சு இல்ல.அதான் மலரும் நினைவுகள் எல்லாம் வருது ;)

ambi said...

ஆஹா! மறுபடி ஆரம்பிச்சுட்டான்யா!

இந்த கேஸட் லிஸ்ட்டுல திருவிளையாடல், ஆடி வெள்ளிக்கு அம்மன் பாட்டுனு ஒரு பெரிய லிஸ்ட்டே உண்டுல்ல. :))

My days(Gops) said...

@dreams:- நீங்க தான் முதல்..இந்தாங்க தயிர்சாதம்..

//hehe ithu veraya!//
சூழ்நிலைங்க....

//irunga aalu anuparen...//
நல்லா பிகரா பார்த்து அனுப்புங்க :P

//7 வர்ட்டா//
13 மறந்துட்டீங்க.. :)

My days(Gops) said...

@நிவிஷா:- //Gops.. nalla post:)//
நன்றிங்க..

//nalla mokkai podareenga.//
இப்ப தான் தெரியுமா? ஹி ஹிஹி கூடவே பிறந்ததது :)

// en pathivukku vandhu unga rangeku irukaanu certificate tharanum pls..//
கொடுத்துட்டா போச்சி :)

My days(Gops) said...

@தர்கா:_ //வயசு ஆச்சு இல்ல.அதான் மலரும் நினைவுகள் எல்லாம் வருது ;)//

ஆமா தங்கச்சி சீக்கிரம் உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியது தான்..

My days(Gops) said...

@தல :"_ //ஆஹா! மறுபடி ஆரம்பிச்சுட்டான்யா! //

ஹி ஹி ஹி ஹி ஆல் இன் த கேம் பிரதர்...

//இந்த கேஸட் லிஸ்ட்டுல திருவிளையாடல், ஆடி வெள்ளிக்கு அம்மன் பாட்டுனு ஒரு பெரிய லிஸ்ட்டே உண்டுல்ல. :))//
கேஸட்'னாலே இது இல்லாமையா தல?

ஷாலினி said...

//இந்தா அன்பே உனக்கு பிடிச்ச பாடலகள் அடங்கிய சிடி'னு கொடுத்தா, இந்த சிடி'ய நேத்தே நான் பஜார்'ல 10 ரூவா கொடுத்து வாங்கிட்டேன்'னு பதிலுக்கு பதில் தான் வரும்…//

அனுபவமோ!!! hehe :P

My days(Gops) said...

@ஷாலினி :_ //அனுபவமோ!!! hehe //

ஹி ஹி ஹி .. இல்லங்க வேடிக்கை பார்த்தது :P

k4karthik said...

//நீங்க இங்கையே வேலை செய்ய மாட்டீங்களே அப்புறம் எப்படி அங்க போய்?) //

aavarukku tamil theriyadadhu thappa pochu....

k4karthik said...

//உனக்கு "short and sweet"யா எதையுமே சொல்ல தெரியாதா?'னு நீங்க கேட்டா, சாரி நான் இப்ப டயட்'ல இருக்கேனு தான் சொல்லுவேன்..//

idhu gops punchu...

k4karthik said...

//லெஸ் டென்ஷன் மோர் ஓர்குட் //
//சாரி ஓர்க்..//

first half dhan correctu...

k4karthik said...

//காமரா'ல Flash Front'la தானே வரும்'னு என் கிட்ட திரும்பியும் சந்தேகம் கேட்டா, நான் sign out ஆகி போயிடுவேன் சொல்லிட்டேன்..) //

che.. miss pannitene..

k4karthik said...

//நமக்கு பிடிச்ச பாட்டு எல்லாத்தையும் ஒரு பேப்பர்'ல எழுதி ஒரு T-Series/Tdk (60'ல(12 பாட்டு) ( 90'ல (18 பாட்டு) empty cassette வாங்கிட்டு //

andha naal nyabagam..

k4karthik said...

//அதை ரீவைண்ட் பண்ணி அப்புறம் forward பண்ணி நமக்கு பிடிச்ச பாட்டை கேட்குறதுக்கு முன்னாடி பச்சை தண்ணிர்'ல ஜிலேபி சுட்றலாம்.. ஹி ஹி ஹி..//

he hee... eppadi da ippadi ellam??

che.. jilebi saaptu embuttu naal achu...

k4karthik said...

// இந்த சிடி'ய நேத்தே நான் பஜார்'ல 10 ரூவா கொடுத்து வாங்கிட்டேன்'னு பதிலுக்கு பதில் தான் வரும்…..)//

appadi oru mokkai figureku yaaru cassette kuduthathu...!!

k4karthik said...

mothathule super post...
kosuvarthi surulai nallave suththi vittute...

k4karthik said...

//ஆமா தங்கச்சி சீக்கிரம் உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியது தான்..//

eppadi vandhalum samalikradhuku only u possible....!!

he hee...

asanmary said...

super post...............!!!!

My days(Gops) said...

@k4k:- //aavarukku tamil theriyadadhu thappa pochu//

தெரிஞ்சி இருந்தா நான் ஹிந்தி'ல பேசி இருப்பேன்.. ஹி ஹி ஹி

//idhu gops punchu//
நன்றியை...

//first half dhan correctu//
நினைச்சேன்...சேம் குட்டை???

//che.. miss pannitene..//
எந்த class miss அவங்க? :P

//andha naal nyabagam..//
சேம் பிலட்????? சூப்ப்ர்..


//eppadi da ippadi ellam??//
ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஸன் பிரதர்..

//che.. jilebi saaptu embuttu naal achu...//
எப்போதும் அல்வா'வே சாப்ட்டா அப்படி தான் :)


//appadi oru mokkai figureku yaaru cassette kuduthathu...!!//
rotfl... மொக்கை பிகரு'னு கன்பார்மே பண்ணியாச்சா??


//mothathule super post...
kosuvarthi surulai nallave suththi vittute...//
நன்றி அண்ணா...

//eppadi vandhalum samalikradhuku only u possible....!!//
ஹிஹிஹி உங்கள விடவா பிரதர்? ஆல் இன் தி கேம்.. தங்கச்சி இன்னும் உங்க கமெண்ட்'யை பார்க்கல.....

My days(Gops) said...

@asan mary :- //super post...............!!!!//

வருகைக்கு நன்றி....

Anonymous said...

//ஆமா தங்கச்சி சீக்கிரம் உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியது தான்..//
எனக்கு இப்போதான் 15 வயசு.முதலில் உங்களுக்கு கல்யாணம்.அப்புறம் ஒரு 10 வருசம் கழிச்சு என் கல்யாணம்.ஒகே?இப்போவே உங்களுக்கு மலரும் நினைவுகள் எல்லாம் நியாபகம் வர ஆரம்பிச்சிருச்சி.இது எல்லாம் உங்களுக்கு ரொம்ப வயசு ஆகுதுன்னு காட்டுது.சீக்கிரமாக அண்ணியை கண்ணுல காட்டுங்க அண்ணா ;)

My days(Gops) said...

@தர்கா :- //எனக்கு இப்போதான் 15 வயசு.முதலில் உங்களுக்கு கல்யாணம்.அப்புறம் ஒரு 10 வருசம் கழிச்சு என் கல்யாணம்.ஒகே?//

தங்கச்சி இருக்கும் போது அண்ணன் கல்யாணம் பண்ணுறது நல்லா இல்லைங்க...