Sunday, February 24, 2008

Smirnoff Experience !!!!!

எப்படி இருக்கீங்க எல்லோரும்… சாப்பிட்டாச்சா?? அப்படி'னு உங்களை எல்லாம் கேட்டு எத்தனை நாள் ஆச்சி? ( மனோரமா இல்லை)

என்னங்க பண்ணுறது (குப்பிற படுத்து தூங்கு) எதிர்பார்க்காத வேலை, எதிர்பார்த்த நேரம் வந்துட்டு….அதனால ஏகப்பட்ட வேலை பெண்டிங் ஆகி போச்சி..

முக்கியமா தேவதை நாயகனோட போட இருந்த "காபி வித் கோப்ஸ்" போட முடியாமா போச்சி… அது ஏன்னா, விடிய விடிய சிவாஜி படம் பார்த்துட்டு, விடிஞ்சத்துக்கு அப்புறம் சிவாஜிக்கு ரகுவரன் மாமாங்கற கதை மாதிரி மாங்கு மாங்கு'னு மங்காத்தா ஆடுற மாதிரி (மலேஷியா மாரியாத்தா இல்லைங்கோ), 4 நாள் செலவிட்டு கேள்வி எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு memory stick'ல save பண்ணிட்டு அடுத்த நாள் வந்து கொஞ்சம் எடிட் பண்ணி கேள்வி எல்லாத்தையும் அனுப்பலாம்'னு இருந்தப்போ, சொல்லி வைக்காத மாதிரி அடுத்த நாள் என் memory stick காணாம போச்சி.. கொக்கமக்கா எப்படி/ எங்க தொலைச்சேனே தெரியல... So sad, அதுல என் 2 வருஷம் எடுத்து வைத்து இருந்த போட்டோ எல்லாம் போயிந்தே.... :(

என்னத்த செய்ய, போறது போகாம இருக்காது ஹி ஹி ஹி.. இது புதுசு :P

இருக்கிற வேலைய பார்க்கவே நேரம் பத்தலை….. இப்ப கொடுத்து இருக்குற வேலைக்கு, நேரத்துக்கு நான் எங்க போவேன்…. சீரியஸா 24 மணி நேரம் பத்தலை… ஹி ஹி ஹி ஹி.. (இப்படி எல்லாம் நான் dialogue விடுறத பார்த்து நீங்க என்னை ஞானப்பழம் ரேஞ்சுக்கு நினைச்சிடாதீங்க….)

ஏன்னா, நான் டைம் இல்லை'னு சொல்லுறது only for orkut, Yahoo msgr, Gmail, blog etc etc க்கு தான்… ஹி ஹிஹி… (நோ காரி துப்பிங்க்ஸ்).

இப்ப சொல்லுங்க ஐ டோண்ட் கேர்' ங்கற மாதிரி….மொக்கை போட முடியாம, பிளாக்ல ஒரு போஸ்ட் போட முடியாம, நண்பர்கள் எழுதின போஸ்ட்க்கு கமெண்ட் போட முடியாம நான் தவிக்கிறா தவி, சத்தியமா அந்த இதயம் நல்லென்ணை காரன் கூட தவிச்சி இருக்க மாட்டான்….. ஹி ஹி ஹி…

அப்போ அப்போ gmail'la மட்டும் ஆன்லைன்'ல இருப்பேன்… அப்படி இருக்கும் போது ஒரு நாள் நம்ம போல்ட் பிரதர் (அலோ நான் போல்டு'னு சொல்லுறனால அவர மெக்கானிக் லிஸ்ட்'ல சேர்த்துறாதீங்க)

டேய் தம்பி என்னடா நீ மாயாவி மாதிரி வர, then கொட்டாவி விடுற நேரத்தில ஆவி மாதிரி போறீயே அடப்பாவி'னு கேட்டுட்டார்.. சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை'னு போஸ்ட் போடுறேன் அதுல பார்த்துக்கோங்கனு, இங்குட்டு பார்த்தா, நம்ம G3 அக்கா, டேய் 4 வாராமா டெம்ளேட் மாத்தி தர சொன்ன, நானும் உனக்காக சாப்பிடுற பிளேட் கூட மாத்தாம 4 வேளை சாப்பிடுறதை 5 வேளையா குறைச்சிக்கிட்டு உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா நீ எங்கடா எஸ்கேப் ஆகிக்கிட்டே இருக்க'னு பாசமா (மிரட்டல் இல்லை) கேட்க , அவங்களுக்கும் என் போஸ்டை பாருங்க'னு சொல்லிட்டேன்.... (யக்கா, அதுக்கு'னு போஸ்ட்மேனை எதிர் பார்க்க கூடாது..)

சரி சரி, மேட்டருக்கு வரேன்...(அப்போ இது வரைக்கும் நீ சொன்னது? முன்னுரையா?) (அப்பாடா'னு மூச்சு விடுறது எனக்கு கேட்குது) சரி சரி.....என் career'a நான் ஸ்டார்ட் பண்ணுனது ஒரு 4 star hotel'la Receptionist ah தான்.... அப்படி இப்படி'னு மேனேஜ் பண்ணி காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கும்போது, 2 வருஷத்தில், நம்ம திறமைய பார்த்துட்டு கணக்குப்புள்ளையா வேலை பாருனு என் நலம்விரும்பி வேலை மாறுதல் கொடுத்தாரு.....

4 வருஷத்திற்க்கு அப்புறம் ,

என் கம்பெனி'ல இன்னொரு 4 star hotel'la ஒன்றை போன மாதம் திறந்தார்கள்.
(சாவி போடாம தான்)

10 நாளுக்கு முன்னாடி, என் மேலதிகாரி என்னை கூப்பிட்டு, புது ஒட்டல் ஒன்னு திறந்திருக்கோம்'ல அதுக்கு Front Office ah form பண்ணனும், ஆள் இல்லை, புது ஆள் வர வரைக்கும் நீ தான் அதை பார்த்துக்கொள்ளனும்'னு அன்பு கட்டளை கொடுத்துட்டார்.....

நாம எள்ளுனா எண்ணையா நின்ன காலம் எல்லாம் பிளைட் பிடிச்சி போய் பல காலம் ஆகிடுச்சி.. அதனால , இப்ப எல்லாம் எள்ளுனா முடிஞ்ச வரைக்கும் அடுத்தவனை பிடிச்சி தள்ளு, இல்ல, சொல்லிடு வலிக்குது பல்லு'னு.. சாரி சார், கணக்கு பண்ணுற வேலையே தலைக்கு மேல போய் தோனி முடி மாதிரி கீழ வர ஆரம்பிச்சிடுச்சி, இதுக்கு மேல எப்படி சார் நான் போய் அப்படினு என் நிலமையை எடுத்து சொல்ல, அவரோ, என்னதான் BMW கார் வச்சி இருந்தாலும் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் தாம்ப்பா உதவும்'னு எனக்கே டயலாக் விட, சரி சரி, நம்ம மேல இவ்வளவு நம்பிக்கையா'னு ஒரு குழப்பத்துடன் சரி'னு சொல்லிட்டு,

அடுத்த நாள் கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு சிங்க நடை போட்டு (நாலு காலுல இல்லைப்பா) வந்தா, என்னை பார்த்தவங்க எல்லாம், அழகு நீ நடந்தால் தரை அழகு, அழகு நீ சிரித்தால் பக்கத்துல உள்ளவங்க அழகு'னு ஒரே பேக்கிரவுண்ட் மியூசிக் வேர,... சரி சரி 'னு Reception உள்ள போனா, அங்க அழகா??? மூனு பொண்ணுங்க.அட்ரா அட்ரா நான் அவங்களுக்கு டிரெயினிங் கொடுக்கனுமாம்...Actually Speaking, எனக்கு ஒன்னுமே தெரியாது, நானே டிரெயினிங் எடுக்க தான் போனேன்... லூஸ்'ல வுட்டுக்கடா கோப்ஸ்'னு போய், செல்ப் இன்ட்ரோ சான்ட்ரோ கார் மாதிரி கொடுத்துட்டு, எங்க உங்களுக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லுங்க'னு சொல்ல சொல்லி என்னமோ எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி ஆக்ட் கொடுத்துட்டு எல்லாத்தையும் பழகிட்டேன்....ஆல் இன் த கேம்....Ducalty speaking here :D

அடுத்த நாள் நானும் படிக்கிற ஆர்வக்கோளாரு'ல அந்த மூனு பொண்ணுங்ககிட்டையும் பேசவே இல்லை அவ்வளவா..... உடனே என்னை பத்தி staff cafeteria la அவரு ஒரு ரிசர்வ்ட் டைப், பேசவே மாட்டேங்குறாருனு கதை வேற..... அது எனக்கு தெரியாது....

மூனாவது நாள் தான் நம்ம கைவரிசையை, சாரி வாய் வரிசையை ஸ்டார்ட் பண்ணினேன்..... மொக்கைனாலும் மொக்கை செம மொக்கை..... யப்பா, நீ இவ்வளவு பேசுவியா'னு அவங்க கால் விரல்லையே மூக்கை தொடர அளவுக்குனா பார்த்துகோங்களேன்.... அதுல ஒரு பொண்ணு, யூ ஆர் டூ டாக்கடிவ்....நாட் givingg மீ டைம் டூ answer யூ பேக்'னு அழுதுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சிடுச்சி....

5 நாளுல, நான் இல்லாட்டி அவங்களுக்கு ரெம்ப போர் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சி.... என்னத்த சொல்ல, நம்ம மொக்கைக்கு இவ்வளவு வரவேற்ப்பா அப்படி'னு எனக்கே கொஞ்சம் டவுட்..... இருந்தாலும் நமக்கும் டைம் பாஸ் ஆகனுமே?? (இங்க தான் நீங்க நல்லா நோட் பண்ணனும், நான் போடுறது கடலை இல்லை, மொக்கை )

ஒரு வாரத்திற்க்கு அப்புறம், எல்லோரும் நம்ம கூட ஓவர் குளோஸ் ஆகிட்டாங்க.... மொக்கை பிடிச்சி போய் லீவு நாளுலையும் நம்ம'ல டூயூடிக்கு வர சொல்லி நம்ம மொக்கைய போட சொல்லுறாங்க..... (நம்மள பத்தி இன்னும் தெரியல அவங்களுக்கு போல). நாம் இன்சார்ஜ் வேறையா, சோ போயே தான் ஆகனும்.....

இத எல்லாம் பார்த்துட்டு, வழக்கம் போல காதுல புகை ஓடுற ஆசாமிங்க எல்லாம், ராசா, இப்ப எல்லாம் Reception'ey கதி'nu இருக்க போல, வீடுங்கறதை மறந்துட்டியா? அப்படினு ஆரம்பிச்சி, உன் முகத்துல இப்ப எல்லாம் ஒரே புன்னைகையா இருக்கே, புது சூட்டு , புது வேலை, புது _______ கலக்குற கோபி நடத்து நடத்து'னு ஒரே கேலி தான்....

நான் என்ன பண்ணுவேன்? எனக்கு வாய்ச்சது அப்படி, சின்சியரா வேலை செஞ்சாலும் இந்த உலகம் நம்மலை இப்படி தான் பார்க்குது.... ( சரி சரி இப்ப என்ன சொல்லிட்டேனு இப்படி உருண்டுக்கிட்டு சிரிக்கிறீங்க?? )

The Fact

1.ஷிப்ட்ல இருக்கும் போது, வெளில இருந்து முதலில் யாரு வந்தாலும் அவங்க பேசுறது ரிஷப்சன் ல பொண்ணுங்க கூட தான்...

2. அடிக்கடி லான்ட்லைன்க்கே மிஸ்டு கால் கொடுக்கிறது இங்க பார்க்கலாம்....

3. பொண்ணுங்க இருந்தாங்கனா, வெட்டியா இருக்கிற டைம்'ல போன், டெஸ்க் எல்லாத்தையும் கிளீன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க....

4. என்ன அர்ஜென்ட்னாலும், மிஸ்டுகால் கொடுக்கிறதையே பழக்கமா கத்துக்கிட்டு வச்சி இருக்காங்க...

5. colleagues பொண்ணுங்களா இருந்தா, நாம எப்போதும் fresh இருப்போம்... எப்படினு தான் தெரியல...

இன்னும் சொல்லாம்... பட் இப்ப தானே 10 நாள் முடிஞ்சி இருக்கு, போக போக பார்ப்போம்..... இன்னும் மாக்சிமம், 15 days தான் இந்த டூயூட்டி, அதுக்கு அப்புறம் நம்ம பழைய வேலை தான்....

போஸ்ட் இனிமேல் ரெகுலரா போடனும், போடுவேன்.... அது வரைக்கும் இந்த மொக்கைய படிச்சிட்டு, கமெண்ட் (முடிஞ்சா) போட்டுட்டு போங்க...

cheers!!!!!!!!!!!!
gops..

Thursday, February 21, 2008

Missing U Mom!!!

You are Perfect
You are Grand
You are Simply Great
You were always with me
You once held my hand
Teaching me to take steps
watching as i grew
now that i have grown-up
I'm making sure you knew
You have been such a great mom
In each and every way till u were there and even now......
Thanks for all tht you have given to me......

Dear mum,
you would never ever read this message, I know.
It's been years, but I cant even remember the last time I told you that I loved you or gave you a hug.
I guess I took you for granted, or just didn't have the courage to say so.
But I just want to say that your the best Mum a son could ever ask for.

missing u mom.....

Thursday, February 07, 2008

Hobby

Right from the chilhood, we all will be having different kinds of hobbies..

சரி சரி...

எல்லோருக்கும் குழந்தை பருவத்தில இருந்தே பல விதமான ஹாபிஸ் இருக்கும்..
(இப்ப இருக்கிற பருவத்துல நமக்கு நினைவுக்கு வரது ஆபிஸ் மட்டும் தான்.. அது வேற கதை, அதை அப்படியே சாப்பாட்டுல வர கருவேப்பிலை மாதிரி ஒரமா வச்சிடுங்க…)

இப்ப மொக்கை'க்கு போவோம்….

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஹாபிஸ் இருக்கும்.. அதுல முக்கியமா
Stamps, Foreign coins collect பண்ணுறதா (இருந்து) இருக்கும்…. இது மட்டும் இல்லாம, Celebrity posters'la ஆரம்பிச்சி வயசு ஆக ஆக பஸ் ஸ்டாப்'ல சைட் அடிக்கிற பிகர்ஸ் போட்டோ கலெக்கட் பண்ணுற வரைக்கும் வித்தியசமா இருக்கும்…
ஒவ்வொரு ஸ்டேஜ்'லையும் அது மாரிக்கிட்டே (கேப்மாரி மாதிரி இல்லாம) இருக்கும்…..
(எல்லாத்துக்கும்'னு சொல்ல முடியாது)

எனக்கு லாட்டரி சீட் கலெக்ட் செய்றது, Big Fun bubble gum'la வர Cricketers Runs/ wickets ah சேர்க்கிறது, ஒரு ரூபா பெரிய coin'la "H" னு போட்டு வரும், இன்னும் "M" "T" போட்டு இருக்கிற ஒரு ரூபா coin ah கலெக்ட் செய்தா, ஒரு HMT வாட்ச் கொடுப்பாங்கனு ஒரு அல்ப ஆசை'ல அந்த காயினை சேர்த்த்து எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்,

My Hobby is collecting cars…..
அட உண்மையான கார் இல்லைங்க….. அப்படி உண்மையான காரை கலெக்ட் பண்ணுறவனா இருந்தா இந்நேரம் நான் பில்கேட்ஸ் பக்கத்துல உட்கார்ந்து இருப்பேன்… நான் சொல்லுற கார் மெயின்கார்டுகேட்'ல (அப்பாட இங்கையாச்சும் கேட் வந்துச்சே) இருக்குற பர்மா பஜார்'ல விக்கிற scale model cars'ய (miniatures) தான்...

எனக்கு இந்த கார் சேர்க்கிற பழக்கம் ஒன்னாவது படிக்கிற அப்போ'ல இருந்தே இருக்கு…
ஸ்கூல் விட்டு வந்தா நைட் தூங்க போர வரைக்கும் இந்த காரை வைத்து விளையாடுவது தான் என் ஒரே பொழுது போக்கா இருந்தத்து…

வீக்கெண்ட்'ல இருக்கிற கார் எல்லாத்தையும் சோப் தண்ணில ஊர வச்சி கழுவி, ஸ்டிக்கர் கட் பண்ணி காரை shirt button, small hooks, coil wire ய வச்சி modify pannuradhu, அப்புறம் ரொம்ப போர் அடித்தா sample tin paint வாங்கிட்டு வந்து எல்லா காரையும் ரீபெயிண்ட் பண்ணி அழகு (கேவலமா) பண்ணுறது என் இன்னொரு ஹாபியா இருந்தது..
அங்க ஆரம்பிச்சது, நான் படிச்சி முடிக்கிற வரைக்கும் it continued..

என் கார் கலெக்ட்ஷைனை என்னை தவிர யாரையும் தொட கூட விட மாட்டேன்…
எனக்கு என் கார்கள் மேல அவ்வளவு லவ்வு…. யாருக்குமே விளையாட கூட தர மாட்டேன்….
ஸ்கூல் விட்டு வந்தோன முதல் வேலை என் கார் எல்லாத்தையும் எண்ணி பார்த்து கரெக்டா இருக்கானு பார்கிறது தான்… அதுக்கு அப்புறம் தான் யூனிபார்மையே கலட்டுவேன்…
(ஒரு சில சமயம் என் உடன்பிறப்புகள் என் காரை ஒழிய வைத்து நான் அழுவதை வேடிக்கை பார்ப்பாங்க)


ட்யூசன் இல்லாத நாளுல, வீட்டில் கண்டிப்பா 6pm to 8pm படிச்சே ஆகனும்….
(அது மாதிரி ஒரு கடி அப்ப்ப்பா…) படிக்கிறது ல இருந்து எஸ்கேப் ஆகறது'ல என்னை மாதிரி ஒரு டகால்டிய பார்க்கவே முடியாது… ஹி ஹி

அடிக்கடி நடக்கும் இது… (around 7pm)

நான்:- அம்மா எனக்கு தூக்கம் தூக்கமா வருதுமா.. நான் தூங்க போறேன்…
அம்மா :- சரி போய் தூங்கு…
நான் தூங்குற மாதிரி ஆக்டிங் கொடுப்பேன்..
உடன்பிறப்புகள் உடனே இந்த பாட்டை பாடுவாங்க.. (நடிக்காதே நீ நடிக்காதே'னு )
எல்லாத்துக்கும் தெரியும் நான் நடிக்கிறேனு… ஒரு 15 நிமிடம் கழித்து என் அம்மா சொல்லுவாங்க,
கோபி தூங்கிட்டான்.. நீங்க (என் உடன்பிறப்புகள்) போய் அவன் காரை எடுத்து விளையாடுங்க'னு ,...

உடனே நான் எழுந்துவிடுவேன்… அம்மா இப்போ தூக்கம் வரல'னு……
ஹி ஹி ஹி அப்புறம் என்ன.? விதியே'னு படிக்கனும் திரும்பி.. படிக்கிற டைம் 8'ல இருந்து 8.30 ஆகிடும்…


எப்போதும் என் கார் எல்லாத்தையும் பீரோ'க்கு அடியில தான் வைப்பேன்…….
நான் 9 வது படிக்கும் போது, எனக்கு ஒரு V.I.P சூட்கேஸ் கிடைச்சது…
அதுல என் கார் எல்லாத்தையும் பார்க் பண்ணி பூட்டி சாவிய எடுத்துட்டு ஸ்கூல் போயிடுவேன்…. அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்…
இரெண்டு சாவியும் என் கிட்ட தான் இருக்கும்…..

நான் காலேஜ் முடிக்கும் போது என் கிட்ட மொத்தம் 73 கார் இருந்த்து…
எல்லாமே என் அப்பா எனக்கு வாங்கிக்கொடுத்தது தான்….

ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு memories இருக்கு :)

நான் இங்கு வரத்துக்கு முன்னாடி பெட்டிய பூட்டிட்டு ஒரு சாவிய இங்க எடுத்துட்டு வந்துட்டேன்.. Safe ah இருக்கட்டும்'னு..

எங்க வீட்டில எல்லாருக்கும் தெரியும் என்னை பற்றி… சோ, யாருக்கும் கார் எடுத்து விளையாட கொடுக்க மாட்டாங்க…..எப்போதும் என் வீட்டிற்க்கு போன் பண்ணினாலும் என் தங்கையிடம் சூட்கேஸ் பத்திரமா இருக்கா?'னு கேட்டுக்குவேன்…


நானும் அப்படி தான்…. இங்க வந்தும் ஒரு 2 வருடத்திற்க்கு சம்பளம் வாங்குனோன கார் வாங்கிக்கிட்டு இருந்தேன்…. ஆனா கொஞ்ச நாளுல அதை வைக்க இடம் இல்லை'னு ஹாபிஸ்யை ஸ்டாப் பண்ணிட்டேன்..

ஒரு நாள் இங்க அப்படி தான் நான் கார் ஒன்னு வாங்கிட்டு ரூம்க்கு வந்தேன்..

ரூம்மேட்ஸ்:- டேய் ஆரம்பிச்சிடான் டா, இப்பவே அவன் புள்ளைக்கு கார் வாங்க…
நான் :- போங்கடா இது எனக்கு மட்டும் தான் வேற யாருக்கும் தரவே மாட்டேன்…
ரூம்மேட்ஸ்:- எதுக்கு டா இப்படி வாங்கி காசை வேஸ்ட் ஆகுற?
நான்:- இட்ஸ் மை ஹாபி…. சின்ன வயசுல இருந்து கூட இருந்த்தை எப்படி விட முடியும்??
ரூம்மேட்ஸ்:- கழுதை வயசாகிடுச்சி இன்னும் என்னா ஹாபி வேண்டிக்கிடக்கு..
போங்கடா உங்களுக்கு எல்லாம் அதன் அருமை தெரியாது… பத்தாவது வரைக்கும் ஸ்டாம்ப் கலெக்ட் பண்ணிட்டு அதுக்கப்புறம் உன் சித்தி/மாமா பையனுக்கு கொடுக்கிற மாதிரி இல்லைடா இது'னு பெரிய சாரி சின்ன ஞானியாட்டம் பேசிட்டு, இப்போ பாருங்க என் ஹாபிஸை அப்படியே விட்டுட்டேன்…..

எனக்கு தெரியாது இன்னும் எத்தனை பேரு அவங்க ஹாபிஸ்யை continue பண்ணுறாங்கனு……(அவரசமான உலகத்துல அதுக்கெல்லாம் எங்க நேரம்/ இடம் இருக்கு?)


but, என் childhood days'ல நான் சேர்த்த கார் இன்னும் பத்திரமா இருக்கு….. எடுத்து பார்த்தா, நான் எப்படி எல்லாம் அதை வைத்து விளையாடி இருக்கேனு சிரிப்பு வந்தாலும், still memories, memories தானே?

சரி உங்க ஹாபிஸ் என்னவா இருந்தது? கமெண்ட்'ல சொல்லுங்க பார்ப்போம்....

வரட்டா....

cheers!!!!!!!!!!!
gops..

Sunday, February 03, 2008

பழைய நினைவுகள்

இவங்க சன் மியூசிக்'ல வரவங்கலாம்.. Photo courtesy:- இந்த மாத "அவள் விகடன்"...

முன் குறிப்பு 1 :- இந்த போட்டோக்கும், இந்த கவிதைக்கும், எனக்கும், சம்மந்தம் இல்லவே இல்லை..

இன்னொரு தபா, நம்ம K4K அண்ணன் மாதிரி (ஓல்டா சாரி டால்டா சாரி) போல்டா சொல்லிக்கிறேன்....

முன் குறிப்பு 1 :- இந்த போட்டோக்கும், இந்த கவிதைக்கும், எனக்கும், சம்மந்தம் இல்லவே இல்லை..என் முதல் காதலி நீ…
உன்னை கண்டால் இன்னும் நான் ஒதுங்கிதான் செல்கிறேன்.
நட்போடு பழகிருந்தால் ஆயுள் வரை பேசி இருக்கலாம்.
நான் காதலை சொல்லி, நீ விருப்பம் இல்லை என விலகி கொண்டாய்.
அப்பொழுதே நசுங்கி போனது நட்பு..
இனிமேல் நாம் சந்தித்து கொண்டாலும் சமாதானம் இருக்காது..
பழைய நினைவுகளை கிளறும். மவுன யுத்தம் தான் நடக்கும்..
அதனால் தான் பெண்ணே,
நீ வரும் திசையில், ஓசை இல்லாமல் ஒதுங்கி செல்கிறேன்..
என்றும், எப்பொழுதும்,
உன் நினைவுகளோடு…அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்...
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா, அதில் கொள்ளை போனது என் தவறா.
பிரிந்து சென்றது உன் தவறா, நான் புரிந்து கொண்டது என் தவறா.
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்...
அட போங்கடா நீங்களும் உங்க....??????

இது காதல் மாதம் இல்ல? அதுதான் கொஞ்சம் லைட்டா ஒரு பிட்டு :)

பின் குறிப்பு :- காதல் மாதத்தை முன்னிட்டு , தேவதையின் காதலனோடு ஒரு சிறப்பு "காபி வித் கோபி". இன்னும் கொஞ்சம் நாட்களில்..... வாட்ச் அவுட்..
(வெளில யாரும் இருக்காங்ளா'னு நான் பார்க்க சொல்ல'ல அய்யோ அய்யோ... இன்னும் சிறுப்பிள்ளை தனமாவே இருக்காங்கே....)

வரட்டா..

cheers!!!!!
gops.....