Sunday, February 24, 2008

Smirnoff Experience !!!!!

எப்படி இருக்கீங்க எல்லோரும்… சாப்பிட்டாச்சா?? அப்படி'னு உங்களை எல்லாம் கேட்டு எத்தனை நாள் ஆச்சி? ( மனோரமா இல்லை)

என்னங்க பண்ணுறது (குப்பிற படுத்து தூங்கு) எதிர்பார்க்காத வேலை, எதிர்பார்த்த நேரம் வந்துட்டு….அதனால ஏகப்பட்ட வேலை பெண்டிங் ஆகி போச்சி..

முக்கியமா தேவதை நாயகனோட போட இருந்த "காபி வித் கோப்ஸ்" போட முடியாமா போச்சி… அது ஏன்னா, விடிய விடிய சிவாஜி படம் பார்த்துட்டு, விடிஞ்சத்துக்கு அப்புறம் சிவாஜிக்கு ரகுவரன் மாமாங்கற கதை மாதிரி மாங்கு மாங்கு'னு மங்காத்தா ஆடுற மாதிரி (மலேஷியா மாரியாத்தா இல்லைங்கோ), 4 நாள் செலவிட்டு கேள்வி எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு memory stick'ல save பண்ணிட்டு அடுத்த நாள் வந்து கொஞ்சம் எடிட் பண்ணி கேள்வி எல்லாத்தையும் அனுப்பலாம்'னு இருந்தப்போ, சொல்லி வைக்காத மாதிரி அடுத்த நாள் என் memory stick காணாம போச்சி.. கொக்கமக்கா எப்படி/ எங்க தொலைச்சேனே தெரியல... So sad, அதுல என் 2 வருஷம் எடுத்து வைத்து இருந்த போட்டோ எல்லாம் போயிந்தே.... :(

என்னத்த செய்ய, போறது போகாம இருக்காது ஹி ஹி ஹி.. இது புதுசு :P

இருக்கிற வேலைய பார்க்கவே நேரம் பத்தலை….. இப்ப கொடுத்து இருக்குற வேலைக்கு, நேரத்துக்கு நான் எங்க போவேன்…. சீரியஸா 24 மணி நேரம் பத்தலை… ஹி ஹி ஹி ஹி.. (இப்படி எல்லாம் நான் dialogue விடுறத பார்த்து நீங்க என்னை ஞானப்பழம் ரேஞ்சுக்கு நினைச்சிடாதீங்க….)

ஏன்னா, நான் டைம் இல்லை'னு சொல்லுறது only for orkut, Yahoo msgr, Gmail, blog etc etc க்கு தான்… ஹி ஹிஹி… (நோ காரி துப்பிங்க்ஸ்).

இப்ப சொல்லுங்க ஐ டோண்ட் கேர்' ங்கற மாதிரி….மொக்கை போட முடியாம, பிளாக்ல ஒரு போஸ்ட் போட முடியாம, நண்பர்கள் எழுதின போஸ்ட்க்கு கமெண்ட் போட முடியாம நான் தவிக்கிறா தவி, சத்தியமா அந்த இதயம் நல்லென்ணை காரன் கூட தவிச்சி இருக்க மாட்டான்….. ஹி ஹி ஹி…

அப்போ அப்போ gmail'la மட்டும் ஆன்லைன்'ல இருப்பேன்… அப்படி இருக்கும் போது ஒரு நாள் நம்ம போல்ட் பிரதர் (அலோ நான் போல்டு'னு சொல்லுறனால அவர மெக்கானிக் லிஸ்ட்'ல சேர்த்துறாதீங்க)

டேய் தம்பி என்னடா நீ மாயாவி மாதிரி வர, then கொட்டாவி விடுற நேரத்தில ஆவி மாதிரி போறீயே அடப்பாவி'னு கேட்டுட்டார்.. சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை'னு போஸ்ட் போடுறேன் அதுல பார்த்துக்கோங்கனு, இங்குட்டு பார்த்தா, நம்ம G3 அக்கா, டேய் 4 வாராமா டெம்ளேட் மாத்தி தர சொன்ன, நானும் உனக்காக சாப்பிடுற பிளேட் கூட மாத்தாம 4 வேளை சாப்பிடுறதை 5 வேளையா குறைச்சிக்கிட்டு உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா நீ எங்கடா எஸ்கேப் ஆகிக்கிட்டே இருக்க'னு பாசமா (மிரட்டல் இல்லை) கேட்க , அவங்களுக்கும் என் போஸ்டை பாருங்க'னு சொல்லிட்டேன்.... (யக்கா, அதுக்கு'னு போஸ்ட்மேனை எதிர் பார்க்க கூடாது..)

சரி சரி, மேட்டருக்கு வரேன்...(அப்போ இது வரைக்கும் நீ சொன்னது? முன்னுரையா?) (அப்பாடா'னு மூச்சு விடுறது எனக்கு கேட்குது) சரி சரி.....என் career'a நான் ஸ்டார்ட் பண்ணுனது ஒரு 4 star hotel'la Receptionist ah தான்.... அப்படி இப்படி'னு மேனேஜ் பண்ணி காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கும்போது, 2 வருஷத்தில், நம்ம திறமைய பார்த்துட்டு கணக்குப்புள்ளையா வேலை பாருனு என் நலம்விரும்பி வேலை மாறுதல் கொடுத்தாரு.....

4 வருஷத்திற்க்கு அப்புறம் ,

என் கம்பெனி'ல இன்னொரு 4 star hotel'la ஒன்றை போன மாதம் திறந்தார்கள்.
(சாவி போடாம தான்)

10 நாளுக்கு முன்னாடி, என் மேலதிகாரி என்னை கூப்பிட்டு, புது ஒட்டல் ஒன்னு திறந்திருக்கோம்'ல அதுக்கு Front Office ah form பண்ணனும், ஆள் இல்லை, புது ஆள் வர வரைக்கும் நீ தான் அதை பார்த்துக்கொள்ளனும்'னு அன்பு கட்டளை கொடுத்துட்டார்.....

நாம எள்ளுனா எண்ணையா நின்ன காலம் எல்லாம் பிளைட் பிடிச்சி போய் பல காலம் ஆகிடுச்சி.. அதனால , இப்ப எல்லாம் எள்ளுனா முடிஞ்ச வரைக்கும் அடுத்தவனை பிடிச்சி தள்ளு, இல்ல, சொல்லிடு வலிக்குது பல்லு'னு.. சாரி சார், கணக்கு பண்ணுற வேலையே தலைக்கு மேல போய் தோனி முடி மாதிரி கீழ வர ஆரம்பிச்சிடுச்சி, இதுக்கு மேல எப்படி சார் நான் போய் அப்படினு என் நிலமையை எடுத்து சொல்ல, அவரோ, என்னதான் BMW கார் வச்சி இருந்தாலும் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் தாம்ப்பா உதவும்'னு எனக்கே டயலாக் விட, சரி சரி, நம்ம மேல இவ்வளவு நம்பிக்கையா'னு ஒரு குழப்பத்துடன் சரி'னு சொல்லிட்டு,

அடுத்த நாள் கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு சிங்க நடை போட்டு (நாலு காலுல இல்லைப்பா) வந்தா, என்னை பார்த்தவங்க எல்லாம், அழகு நீ நடந்தால் தரை அழகு, அழகு நீ சிரித்தால் பக்கத்துல உள்ளவங்க அழகு'னு ஒரே பேக்கிரவுண்ட் மியூசிக் வேர,... சரி சரி 'னு Reception உள்ள போனா, அங்க அழகா??? மூனு பொண்ணுங்க.அட்ரா அட்ரா நான் அவங்களுக்கு டிரெயினிங் கொடுக்கனுமாம்...Actually Speaking, எனக்கு ஒன்னுமே தெரியாது, நானே டிரெயினிங் எடுக்க தான் போனேன்... லூஸ்'ல வுட்டுக்கடா கோப்ஸ்'னு போய், செல்ப் இன்ட்ரோ சான்ட்ரோ கார் மாதிரி கொடுத்துட்டு, எங்க உங்களுக்கு தெரிஞ்சது எல்லாத்தையும் சொல்லுங்க'னு சொல்ல சொல்லி என்னமோ எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி ஆக்ட் கொடுத்துட்டு எல்லாத்தையும் பழகிட்டேன்....ஆல் இன் த கேம்....Ducalty speaking here :D

அடுத்த நாள் நானும் படிக்கிற ஆர்வக்கோளாரு'ல அந்த மூனு பொண்ணுங்ககிட்டையும் பேசவே இல்லை அவ்வளவா..... உடனே என்னை பத்தி staff cafeteria la அவரு ஒரு ரிசர்வ்ட் டைப், பேசவே மாட்டேங்குறாருனு கதை வேற..... அது எனக்கு தெரியாது....

மூனாவது நாள் தான் நம்ம கைவரிசையை, சாரி வாய் வரிசையை ஸ்டார்ட் பண்ணினேன்..... மொக்கைனாலும் மொக்கை செம மொக்கை..... யப்பா, நீ இவ்வளவு பேசுவியா'னு அவங்க கால் விரல்லையே மூக்கை தொடர அளவுக்குனா பார்த்துகோங்களேன்.... அதுல ஒரு பொண்ணு, யூ ஆர் டூ டாக்கடிவ்....நாட் givingg மீ டைம் டூ answer யூ பேக்'னு அழுதுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சிடுச்சி....

5 நாளுல, நான் இல்லாட்டி அவங்களுக்கு ரெம்ப போர் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சி.... என்னத்த சொல்ல, நம்ம மொக்கைக்கு இவ்வளவு வரவேற்ப்பா அப்படி'னு எனக்கே கொஞ்சம் டவுட்..... இருந்தாலும் நமக்கும் டைம் பாஸ் ஆகனுமே?? (இங்க தான் நீங்க நல்லா நோட் பண்ணனும், நான் போடுறது கடலை இல்லை, மொக்கை )

ஒரு வாரத்திற்க்கு அப்புறம், எல்லோரும் நம்ம கூட ஓவர் குளோஸ் ஆகிட்டாங்க.... மொக்கை பிடிச்சி போய் லீவு நாளுலையும் நம்ம'ல டூயூடிக்கு வர சொல்லி நம்ம மொக்கைய போட சொல்லுறாங்க..... (நம்மள பத்தி இன்னும் தெரியல அவங்களுக்கு போல). நாம் இன்சார்ஜ் வேறையா, சோ போயே தான் ஆகனும்.....

இத எல்லாம் பார்த்துட்டு, வழக்கம் போல காதுல புகை ஓடுற ஆசாமிங்க எல்லாம், ராசா, இப்ப எல்லாம் Reception'ey கதி'nu இருக்க போல, வீடுங்கறதை மறந்துட்டியா? அப்படினு ஆரம்பிச்சி, உன் முகத்துல இப்ப எல்லாம் ஒரே புன்னைகையா இருக்கே, புது சூட்டு , புது வேலை, புது _______ கலக்குற கோபி நடத்து நடத்து'னு ஒரே கேலி தான்....

நான் என்ன பண்ணுவேன்? எனக்கு வாய்ச்சது அப்படி, சின்சியரா வேலை செஞ்சாலும் இந்த உலகம் நம்மலை இப்படி தான் பார்க்குது.... ( சரி சரி இப்ப என்ன சொல்லிட்டேனு இப்படி உருண்டுக்கிட்டு சிரிக்கிறீங்க?? )

The Fact

1.ஷிப்ட்ல இருக்கும் போது, வெளில இருந்து முதலில் யாரு வந்தாலும் அவங்க பேசுறது ரிஷப்சன் ல பொண்ணுங்க கூட தான்...

2. அடிக்கடி லான்ட்லைன்க்கே மிஸ்டு கால் கொடுக்கிறது இங்க பார்க்கலாம்....

3. பொண்ணுங்க இருந்தாங்கனா, வெட்டியா இருக்கிற டைம்'ல போன், டெஸ்க் எல்லாத்தையும் கிளீன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க....

4. என்ன அர்ஜென்ட்னாலும், மிஸ்டுகால் கொடுக்கிறதையே பழக்கமா கத்துக்கிட்டு வச்சி இருக்காங்க...

5. colleagues பொண்ணுங்களா இருந்தா, நாம எப்போதும் fresh இருப்போம்... எப்படினு தான் தெரியல...

இன்னும் சொல்லாம்... பட் இப்ப தானே 10 நாள் முடிஞ்சி இருக்கு, போக போக பார்ப்போம்..... இன்னும் மாக்சிமம், 15 days தான் இந்த டூயூட்டி, அதுக்கு அப்புறம் நம்ம பழைய வேலை தான்....

போஸ்ட் இனிமேல் ரெகுலரா போடனும், போடுவேன்.... அது வரைக்கும் இந்த மொக்கைய படிச்சிட்டு, கமெண்ட் (முடிஞ்சா) போட்டுட்டு போங்க...

cheers!!!!!!!!!!!!
gops..

45 comments:

Dreamzz said...

adapaaavi gops, busy busy nu solluviyee ithu thaana athu!

lol

Dreamzz said...

haha :) kalakara makka!

Dreamzz said...

ithu extraaa

Anonymous said...

\\ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி ஆக்ட் கொடுத்துட்டு எல்லாத்தையும் பழகிட்டேன்....\\

செம ஸ்பீடா பழகுறியேபா....பார்த்துபா ராசா!

Anonymous said...

\\சரி சரி, மேட்டருக்கு வரேன்...(அப்போ இது வரைக்கும் நீ சொன்னது? முன்னுரையா?) (அப்பாடா'னு மூச்சு விடுறது எனக்கு கேட்குது) சரி சரி..... \

என்னிக்கு நீங்க முதல் பேராவிலேயே 'மேட்டருக்கு' வந்திருக்கிறீங்க.......உங்க போஸ்ட் எல்லாம் கட கடன்னு scroll பண்ணி லாஸ்ட் ரெண்டு பேரா படிச்சா போதும்,
ஏன்னா அங்கே மட்டும் தான் ஏதோ கொஞ்சமாச்சும் மொக்கைக்கு நடுவுல மேட்டர் இருக்கும்!

ambi said...

//மூனு பொண்ணுங்க.அட்ரா அட்ரா நான் அவங்களுக்கு டிரெயினிங் கொடுக்கனுமாம்//

அடடா! அடடா! படிக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? தம்பி கோப்ஸ்! இப்ப தான் அண்ணன் பேரை காப்பாதிட்டே!

பாலைவனமா இருந்த உன் அமீரக வாழ்க்கையில இப்படி மூணு பேரீச்சம்பழங்களா? நடத்து ராசா! நடத்து! :))

ambi said...

நம்ம யூனியனுக்கு சீக்ரம் ஓட்டு போடு ராசா! விவரம் எல்லாம் என் பதிவுல இருக்கு, கடைசி நாள் 29 பிப்ரவரி

Senthil said...

Summa Kalakkareenga....

Anonymous said...

அண்ணா
நீங்க அப்பாவியா இல்லை அடிப்பாவியா ன்னு தெரியவில்லையே

k4karthik said...

//எப்படி இருக்கீங்க எல்லோரும்… சாப்பிட்டாச்சா?? அப்படி'னு உங்களை எல்லாம் கேட்டு எத்தனை நாள் ஆச்சி?//

இதே தானே தினமும் என்னை கேட்டு தொலைக்குரே..

k4karthik said...

//கேள்வி எல்லாத்தையும் அனுப்பலாம்'னு இருந்தப்போ, சொல்லி வைக்காத மாதிரி அடுத்த நாள் என் memory stick காணாம போச்சி..//

தேவதை நாயகனுக்கு நல்ல நேரம்...!!

k4karthik said...

//என் 2 வருஷம் எடுத்து வைத்து இருந்த போட்டோ எல்லாம் போயிந்தே.... :( //

அப்படியா... அப்போ கண்டிப்பா எடுத்துட்டு போனவன் உனக்கு கொண்டு வந்து குடுத்துருவான்..

k4karthik said...

13.. . உனக்கே

k4karthik said...

//இருக்கிற வேலைய பார்க்கவே நேரம் பத்தலை…..//

ஆனா, வெத்தலை போட மட்டும் நேரம் இருக்கா?

k4karthik said...

// நம்ம போல்ட் பிரதர் (அலோ நான் போல்டு'னு சொல்லுறனால அவர மெக்கானிக் லிஸ்ட்'ல சேர்த்துறாதீங்க) //

படு பாவி.. நல்லா இருடா.. நல்லா இரு

k4karthik said...

//சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை'னு போஸ்ட் போடுறேன் அதுல பார்த்துக்கோங்கனு,//

மூச்சு விடாமே உன் புராணத்தை பாடுனியே.. அதை என்னது அப்போ?

k4karthik said...

//நானும் உனக்காக சாப்பிடுற பிளேட் கூட மாத்தாம 4 வேளை சாப்பிடுறதை 5 வேளையா குறைச்சிக்கிட்டு உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா //

ஐய்யய்யோ... அக்கா என் அப்படி பன்றாங்கா.. ?? கஷ்டமா இருக்குப்பா...

k4karthik said...

//என் career'a நான் ஸ்டார்ட் பண்ணுனது ஒரு 4 star hotel'la Receptionist ah தான்....//

ஹோடேல்ல கேரியர் தூக்குனது எல்லாம் இங்க கேரீர்னு சொல்லிக்குரியா???

k4karthik said...

//இப்ப எல்லாம் எள்ளுனா முடிஞ்ச வரைக்கும் அடுத்தவனை பிடிச்சி தள்ளு,//

வாழ்க நம்ம கொள்கை...

k4karthik said...

//என்னதான் BMW கார் வச்சி இருந்தாலும் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் தாம்ப்பா உதவும்'னு எனக்கே டயலாக் //

லோல்!!
ஹீ ஹீ

k4karthik said...

//அதுல ஒரு பொண்ணு, யூ ஆர் டூ டாக்கடிவ்....நாட் givingg மீ டைம் டூ answer யூ பேக்'னு அழுதுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சிடுச்சி....//

அதுக்கு மூணு நாள் கழிச்சு தான் தெரிஞ்சுச்சா.... லேட் பிக்-அப் டா..!!

k4karthik said...

//நாம் இன்சார்ஜ் வேறையா, சோ போயே தான் ஆகனும்.....//

இது கொஞ்சாம் ஓவேரா இல்ல..

k4karthik said...

//5. colleagues பொண்ணுங்களா இருந்தா, நாம எப்போதும் fresh இருப்போம்... எப்படினு தான் தெரியல...//

வாஸ்தவம் தான்.. அப்போ தான் நம்மக்கே எத்தனை பல்லு இருக்குன்னு தெரியும்..

k4karthik said...

//பட் இப்ப தானே 10 நாள் முடிஞ்சி இருக்கு, //

10 நாளுக்கே 12 எபிசோட் எழுதிட்டே.... இன்னுமா?

k4karthik said...


குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..
குவாட்டர்..


G.Ragavan said...

கலக்கல்... இவ்ளோ காமெடியா ப்ளாக் இது வரைக்கும் பாத்ததேயில்லை....

அது சரி... பெய்லீஸ் ஐரிஷ் கிரீம் கெடைக்குமா? ;)

எகிறிக் குதிச்சா வானம் இடிக்குமா? ;)

CVR said...

Sema ragalai!!!
ROFL!! :-D

நிவிஷா..... said...

haha.. nalla enjoy panreenga

natpodu
nivisha

G3 said...

aaha.. ithana naala aal busynu upscond aagitirundhadhukku kaaranam idhu dhaana?

edho makkal sandhoshama irundha seri :P

G3 said...

unnoda bijee schedule (kadalai schedule dhaan) therinjitadhaala.. ini naan un template pathi kekka maaten :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இன்னுமா அந்த ஊரு உங்களை நம்புது? :-P

ஷாலினி said...

//colleagues பொண்ணுங்களா இருந்தா, நாம எப்போதும் fresh இருப்போம்... எப்படினு தான் தெரியல...//

ponathum, paaka palichunu and fresh sha smell pannanum nu daily kulipeenga, athan reason :P

ஷாலினி said...

//எப்படி இருக்கீங்க எல்லோரும்… சாப்பிட்டாச்சா?? அப்படி'னு உங்களை எல்லாம் கேட்டு எத்தனை நாள் ஆச்சி? //

ithuku munnadi epo intha kelviya keteenga nu sollunga,na count panni solren :P

ஷாலினி said...

//அதனால ஏகப்பட்ட வேலை பெண்டிங் ஆகி போச்சி.. //

athuku than unga benda nimuthuraangalo? :P

ஷாலினி said...

//அடுத்த நாள் என் memory stick காணாம போச்சி.. கொக்கமக்கா எப்படி/ எங்க தொலைச்சேனே தெரியல... //

so sad :(

ஷாலினி said...

//என்னத்த செய்ய, போறது போகாம இருக்காது ஹி ஹி ஹி.. இது புதுசு :P//

kedaikarthum kedaikaama irukaathu..ithu old naalum gold du...hehe

ஷாலினி said...

//மூனாவது நாள் தான் நம்ம கைவரிசையை, சாரி வாய் வரிசையை ஸ்டார்ட் பண்ணினேன்..... //

rendum nu thairiyama sollunga gops ;)

ஷாலினி said...

//Reception உள்ள போனா, அங்க அழகா??? மூனு பொண்ணுங்க.அட்ரா அட்ரா நான் அவங்களுக்கு டிரெயினிங் கொடுக்கனுமாம்..//

About Me: I do always remember that i'm a very very special person born with some sort of luck.. //

itha than sonnengalaakum luckunu apove ;) lucko lucku :P

ஷாலினி said...

//5 நாளுல, நான் இல்லாட்டி அவங்களுக்கு ரெம்ப போர் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சி.... //

nambitomla ;)

//இருந்தாலும் நமக்கும் டைம் பாஸ் ஆகனுமே?? (இங்க தான் நீங்க நல்லா நோட் பண்ணனும், நான் போடுறது கடலை இல்லை, மொக்கை )//

apo time pass panna pesina mokkai, time pass arathey theriyaama pesina kadalaiyaaa?? :P

ஷாலினி said...

//அழகு நீ நடந்தால் தரை அழகு, அழகு நீ சிரித்தால் பக்கத்துல உள்ளவங்க அழகு'னு ஒரே பேக்கிரவுண்ட் மியூசிக் வேர,... //

rotfl..chance se illa..superruu :)

ஷாலினி said...

//அதுல ஒரு பொண்ணு, யூ ஆர் டூ டாக்கடிவ்....நாட் givingg மீ டைம் டூ answer யூ பேக்'னு அழுதுக்கிட்டே சொல்ல ஆரம்பிச்சிடுச்சி....//

mokkayo..mokkai doi..

antha ponnu azhuthappa kanla kannerku pathila ratham thaney vanthuthu? :P

ஷாலினி said...

ithey pol endrum ungal mokkai podum paniyai inithey thodara en vaazhthukkal gops :)

ஷாலினி said...

13 comments podalam nu pathen...mmm etho solla vanthen athukulla maranthuten...mmm aparam solren ;)

ஷாலினி said...

aaaaha , nyabagam vanthuduchu..13 commets potachu doii..

hehehe..:)

Divya said...

New template nalla iruku Gops:))