Sunday, March 23, 2008

பிறந்தநாள் - 2008

அந்தா இந்தா'னு இதோ (எங்க'னு தேடாதீங்க) இன்னைக்கு ஒரு போஸ்ட் போட வந்துட்டேன் (காக்கி உடை அணியாம) ஹி ஹி….

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன உள்ளங்களுக்கும்,
வாழ்த்து சொல்ல நினைத்து மறந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றியை (ஓமம் வளர்த்து பின்பு மஞ்சத் தண்ணியை தெரிச்சி விடுற மாதிரி) தெரிச்சி விட்டுக்கிறேன்..


வெற்றிகரமா 6 வருஷமாக அவுட்சயிட் த ஆப் ஸ்டம்பாக இந்த வருஷமும் என் பிறந்த நாளை குவைத்துல தான் கொண்டாடினேன்

பிறந்தநாள் கொண்டாட்டம்/திண்டாட்டம்

இந்திய நேரம் 12.00am படி/லிப்ட் கரெக்ட்டா டாட்டா கம்பெனி'ல வேலை செய்யற மாதிரி நம்ம G3 அக்கா கொக்கமக்கா'னு போன் கால் அடிச்சிட்டாங்க….டேய், உன் குவைத்து நேரம்12am க்கு தான் உனக்கு போன் பண்ணி இருப்பேன்.. பட்,பாவம் நீ தூங்கனும்'னு தான் இப்போவே போன் பண்ணுறேன்'னு ஒரு டகால்டி டயலாக் வேற ஹி ஹி ஹி... நன்றி அக்கோவ் டீரிட்'ய வழக்கம் போல கணக்கு'ல வச்சிகோங்க'னு நம்ம side'ல இருந்து ஒரு டகால்டி'ய காட்டிட்டு நம்ம வேலைய பார்க்க ஆரம்பித்தேன்

11மணிக்கு நம்ம CVR தம்பிகிட்ட ஒரு கால்.. அண்ணாத்தே உங்களுக்கு 12மணிக்கு தான் போன் பண்ண இருந்தேன், ஆனா அப்போ நீங்க பிஸியா இருப்பீங்க, அதுதான் இப்போவே பண்ணிட்டேன்'னு இதயம் நல்லெண்னை'ய விட நல்ல எண்ணத்துடன்
வாழ்த்து சொல்லிட்டு வச்சிட்டாரு


கரெக்ட்டா 12 மணிக்கு லண்டன்'ல இருந்து நம்ம போல்ட் பிரதர் K4K , டேய் தம்பி நல்லா இருடா'னு அவரு ஸ்டையில்'ல வாழ்த்த சொல்லிட்டு, டேய் ஆர்குட்'ல எங்க போனாலும் பத்து'ல ஒரு முகம் உன் முகமா இருக்கு.. ஓவர் மொக்கை உடம்புக்கு ஆகாது, பார்த்து இருந்துக்கோ'னு அன்பு கட்டளை விட்டுட்டு போனை வச்சிட்டாரு.. ஹி ஹி ஹி..

அப்புறம் படுத்து தூங்கிட்டு இருக்கும் போது, 3am மணிக்கு என் உயிர் நண்பண் இந்தியாவுல இருந்து வாழ்த்து சொல்லுறேன்'னு ஒரு 35 நிமிஷம் மொக்கை….டேய் உனக்கு வாழ்த்து சொல்ல டைமே கிடைக்கலையானு கேட்டா, மாப்பு உனக்கு எல்லாம் ஆப்பு இப்படி தான் டா வைக்கனும்'னு நாக்கு மேல பல்லை போட்டு சொல்லிப்புட்டான்...
( என்னங்க பண்ணுறது, நானும் 2am,4am 'னு தான் அவனுக்கு வாழ்த்து சொல்லி பழக்கம்.. பின்ன, நம்ம சொல்லுற வாழ்த்தை அவ்வளவு சீக்கிரம் மறந்துட கூடாது இல்லையா?)
(முற்பகல் Do , பிற்பகல் Repeatu…)

அதுக்கப்புறம் எங்கத்த தூங்க, லெப்ட் அண்ட் ரைட் turn பண்ணிக்கிட்டே இருந்தேன், சட்டுனு டைம்யை பார்த்தா 5am ( நான் இதே திரும்பை ஊட்டில திரும்பி இருந்தா இந்நேரம் தொட்டபெட்டா'வே வந்து இருக்கும்.. ஹி ஹி ஹி)அப்பால ரெடி ஆகி என் நலம் விரும்பிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு அப்படியே கார்'ல வந்துக்கிட்டு இருக்கும் போது
நம்ம பில்லு பரணி கிட்ட இருந்து ஒரு கால்..
அவன் கிட்ட ஒரு 5 நிமிஷம் மொக்கைய போட்டு வைக்கும் போது ஒரு
அட்வைஸ் அவன் கிட்ட இருந்து , டேய், இந்த வருஷமாச்சும் ஒரு பிகரை பிக்கப் பண்ணுடா'னு …..என்னத்த சொல்ல (இக்கரைக்கு அக்கரை வெரும் மணல்'னு சும்மாவா சொல்லி இருக்காங்க.) தமிழனா பொறந்துட்டாலே இப்படி தான் அட்வைஸ் பண்ணனும்/கேட்கனும் போல'னு bye சொல்லிட்டு ஆபிஸ்க்கு போயிட்டேன்..

ஆபிஸ் வந்தோன எல்லாத்துக்கிட்டையும் இருந்து வாழ்த்துகள்.. அட்ரா அட்ரா…
staff cafeteria 'ல எனக்கு இன்னைக்கு பிறந்த நாள்'னு நோட்டீஸ் வேற.. ஹி ஹி ஹி..

சரியா 9.30am க்கு பேங்க போனும்'னு ஆபிஸ்'ல சொல்ல, ஒகே ஒகே னு நம்ம காரை ஓட்டிக்கிட்டு ஒரு 2 கீமி போய் இருப்பேன் உடனே நம்ம டார்லிங்க் ஓவர் ஹீட்டாகி நடு ரோடு'னு கூட பார்க்காம நின்னுட்டாரு…. அடடா'னு ஓரமா நின்னு ஒரு கிரேனை வரவழைத்து நம்ம காரை ஏற்றி மெக்கானிக் கடைக்கு போக டைம் 2 ஆகிடுச்சி… ஆஹா ரெம்ப நாளா நம்ம டார்லிஙகை கவனிக்கவே இல்லை'ல அது தான்….. சமயம் பார்த்து டகால்டி காட்டிட்டார்..
அதுக்கு அப்புறம் ஒரு டாக்ஸியை புடிச்சி ஆபிஸ் வர 3 மணி ஆகிட்டு…அன்னைக்கு லஞ்ச் கட்..

அப்படியே ஒரு காபியை குடிச்சிட்டு இனையதளத்தை திறந்தா,page cannot be displayed'nu ஒரு நோட்டீஸ்…. போச்சிடா,சரி வேலை செய்யிற மூட்டே இல்லை
(என்னைக்கு இருந்து இருக்கு'னு சொல்லுறீங்களா??)

அப்படியே ரிஷப்ஷன் பக்கம் போனா, நம்ம 3 தே(ராத)வதைகள், ராசா பிறந்த நாளுக்கு ரோல்கேப் மாதிரி வெடிக்காம, புஸ்வானம் போல எஸ்கேப் ஆகிட்டையே'னு ஒரே நக்கலு… ஹி ஹி ஹி ஹி..சரி சரி'னு அவங்களுக்கு மட்டும் KFC ஆர்டர் பண்ணுங்க, வந்தோன காசு கொடுக்கிறேனு.. அப்படியே ஒரு நம்ம ஆபிஸ்க்கு போனா சீக்கிரம் ஒருத்தரை கம்பெனி கார்'ல ஏர்ப்போர்ட்'ல டிராப் பண்ணு'னு ஒரு வேலைய கொடுத்துட்டாங்க…..
KFC ய மறந்துட்டு அப்படியே நானும் போயிட்டேன்……

வேலைய முடிச்சிட்டு ஆபிஸ் வரும் போது மணி 6.. ஆபிஸ்க்கு வந்து ஒரு 10 நிமிஷத்துல சட்டுனு கரெண்ட் கட்…. ஆஹா என்னடா'னு பார்த்தா,

ஆபிஸ் மக்கள் ஹாப்பி பர்த்டே பாடிக்கிட்டே ஒரு கேக்கை கொண்டு வந்து வெட்ட சொல்லி ஆச்சிரிய படுத்திட்டாங்க..சும்மாவா பின்ன, எனக்கு தெரிஞ்சி நான் வெட்டுற முதல் கேக் இது தான்…
so, கொஞ்சம் excited ஆகிட்டேன்… அப்பால பார்த்தா நம்ம ஆபிஸ் மக்களே pizza ஆர்டர் பண்ணி பில்லை மட்டும் நம்ம கைல கொடுத்துட்டாங்க…..
(ரெம்ப தெளிவு தான் ஹி ஹிஹி)

எல்லாம் முடிய 8.30ஆகி, அப்பால மேலே ரிஷப்ஷன் போன, நம்ம மூனு'ம் KFC ய காலி பண்ணிட்டு நன்றி சொல்லி, பில்லை கேட்டா, சாரி அது எங்க கிப்ட் உனக்கு'னு பாசமலைய மிக்ஸில போட்டு பிளிஞ்சிட்டாங்க.. ஹி ஹிஹி
எவ்வளவோ சொல்லியும் காசு வாங்க மறுத்துட்டாங்க… ஹி ஹி ஹி…… நான் சொல்லுறதை நம்புறீங்க தானே? (ஹமாம் சோப் ஸ்பீக்கிங்)

அன்னைக்கு புல்லா இனையதளத்தை செக் பண்ணவே முடியல…. லேட்டர் அடுத்த ரெண்டு நாளும் லீவா போச்சி……அதுதான் மக்களே உங்க மெயில் எல்லாத்துக்கும் நன்றி சொல்ல தாமதம் ஆகிடுச்சி.

இந்த வருடம் என்னை வாழ்த்தியவர்கள்

Sms = 41
Local Call = 8
Intl Call = 19
Mail = 5
Ecard = 7
நேரடியாக = 32


இந்த வருஷம் என்னை நினைத்து பார்த்தவங்க கொஞ்சம் கம்மிதான்… ஆல் இன் தி கேம்….

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிச்சி போஸ்ட் போட்டவங்களுக்கு என் வாய் சுளுக்கு எடுக்கிற வரை நன்றியை டெல்லிங்... ஹி ஹி

dreamzz
shalini
wallbread
g3

Life is Good, when sumbody remembers. Life is Double the Great whn sumbody remembers with a gift :)..

எதிர் பார்க்காம K4K பிரதர் கிட்ட இருந்து வந்த இந்த கிப்ட்

Message :-

These 5 chocolates were handmade in France by 4 award winning French chocolatiers using 400 year old passionate tradition and zealous adherence to purity. The wooden box is made of Sappeli, a member of the mahogany family and was handmade in the Jura region of France using traditional finger joint assembly. This product was shipped to your attention in Kuwait, Kuwait directly from our gourmet facility in Aix-en-Provence, France.

Gops

Iniya pirandha naal
vazhtukkal! anbudan..

paasamalargal!

A gift from Karthikeyan Darmalingaraja.
5 சாக்லெட்டையும் நானே லபகிட்டேன்.. சுயநலமான உலகம்'ல அதுதான் ஹி ஹி
வெரி டேஸ்டி.... நன்றியை....நம்மை போல நெஞ்சம் கொண்ட அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...

இந்த நாள் இனிய நாளா மாறி, காரி துப்பாம நல்ல படியா சென்றது....

again ஒரு தபா,

என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன உள்ளங்களுக்கும்,
வாழ்த்து சொல்ல நினைத்து மறந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றியை (ஓமம் வளர்த்து பின்பு மஞ்சத் தண்ணியை தெரிச்சி விடுற மாதிரி) தெரிச்சி விட்டுக்கிறேன்
..

டெம்ப்ளேட் மாற்றி தந்த G3 அக்காவுக்கு என் நன்றி'யை.....

நன்றி வணக்கம்..
கோப்ஸ்....

Thursday, March 13, 2008

Its My Day !!!

ஆண்டவன் புண்ணியத்துல, இதோ இன்னொரு புதிய ஆண்டுக்கு தடுக்கி விழுகிறேன்....

12 முடிஞ்சி இதோ 13க்கு அடி எடுத்து வைக்கிறேன்.. எல்லாரும் ஆச்சிரியம் படாதீங்க, என்னடா இவன் இவ்வளவு சின்னவனா'னு.... உண்மைக்குமே கடையில விக்கிற மை வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனா நான் சொல்லுற உண்மை உண்மைக்குமே மெய் தான்.. ஹி ஹி ஹி ஹி..

என்ன இன்னும் நம்பல? ஹமாம் சோப் எங்கப்பா, கொண்டுவாங்க சீக்கிரம்.. ஹி ஹி ஹி..
வேணும்னா இதோ இன்னைக்கு நான் வெட்டுன கேக்கை பாருங்க....

13 candle இருக்கு..

எனக்கு இன்னைக்கு பிறந்த நாள். :)இப்போதைக்கு இதை பாருங்க... அப்பால வந்து முழு கதையும் போடுறேன்....

இப்போ அப்பீட்டு அப்பால ரிப்பீட்டு.......