Thursday, April 10, 2008

அவன் அப்படி தான் !!!

பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு கேட்க்கும்
இதயத்தில் இடமிங்கு இல்லையே
அதை இடித்தவள் கொடுக்கவே இல்லையே..அவன்:- ஒன்னு சொல்லவா,
அவள்:- ரெண்டே சொல்லு நான் இப்போ free தான்
அவன்:- வசதியா போச்சி….
அவள்:- என்ன?????
அவன்:- ஒன்னும் இல்லை
அவள்:- அப்போ ஒன்னு இருக்குனு சொன்ன??
அவன்:- ஒ அதுவா?
அவள்:- அதுவா'னு எனக்கு தெரியாது, நீ தான் சொல்லனும்..
அவன்:_ சரி இப்ப சொல்லவா?
அவள்:- ஸ்ஸ்ஸப்ப்பா இதையே எத்தனை தபா சொல்லிக்கிட்டே இருப்ப.. சொல்ல வந்ததை சொல்லு முதல்'ல
அவன்:- முதல்'ல இருந்தா?
அவள்:- முடியல சத்தியமா….
அவன்:- ஒகே.. ஒகே.. நோ டென்ஷன்…
அவள்:- நோ ஆம் நாட்… யூ கேரி ஆன்.
அவன்:- நீ ரெம்ப அழகா இருக்க..

அவள் இவனையே பார்க்க

அவன்:- நீ பேசும் போது அசைகின்ற கண்கள், தப்பு செஞ்சா உதடு கடிக்கிறது, சந்தேகம்னா புருவத்தை உயர்த்துவது, எதையாவது success ah முடிச்சிட்டு ஒற்றை கண்ணை அடிக்கிறது, அடிக்கடி முடியை கோதி காது கேப்'ல சொருவுறது'னு, நீ எத செஞ்சாலும் ரசிக்க தோனுது.. அவ்வளவு அழகா இருக்க நீ…

அவள்:- ஆக மொத்தம், எப்போதுமே என்னையே தான் பார்த்துக்கிட்டு இருந்தியா……
அவன்:- சே சே அப்படி எல்லாம் இல்லவே இல்லை'னு நான் பொய் சொல்ல மாட்டேன்….
அவள்:- எதுனால அப்படி?
அவன்:- ஏன்னா நீ அவ்வளவு அழகா இருக்கியே…
அவள்:- இல்ல இல்ல நான் அப்படி இல்லை……
அவன்:- ஹி ஹி ஹி .. ஏன் இப்படி பயப்படுற?
அவள்:- ஜ ஜஸ்ட் டோன் லைக் பீபிள் அட்மைரிங் மீ பார் நத்திங்….
அவன்:- அழகா இருந்தாலே, யூ காட் டூ டேக் திஸ்…. :)

அவள்:- ஹி ஹி ஹி, இப்படி எல்லாம் பேசி என்னை கரெக்ட் பண்ணலாம்'னு பார்க்கிறீயா.. சான்ஸே இல்லை.. ஐ ஆம் ஆல்ரெடி கமிடெட்..

அவன்:- ஹா ஹா , நீ அழகா இருக்கனு மட்டும் தானே சொன்னேன்… ஐ லவ் யூ சொல்ல போறேனா'னு நினைச்சிட்டியோ???

அவள்:- நீ பேசுறது அப்படி தானே இருந்தது..

அவன்:- நான் உண்மைய சொன்னேன்….

அவள்:- புரியல


அவன்:- நீ அழகா இருக்க, சோ பார்த்துக்கிட்டே இருக்கலாம் னு சொன்னேன்…லைக் nature

அவள்:- ம்ம்ம்ம்ம்

அவன்:- பட், அதுக்குனு உன்னை nature ஓட கம்பேர் பண்ண முடியாது… ஏன்னா, nature வேற நீ வேற…

அவள்:- ஹி ஹி ஹிஹி ஏன் இப்படி புலம்பிக்கிட்டு இருக்க????? சம்பந்தமே இல்லாம? காலையிலே புல்லா அடிச்சிட்டியா???

அவன்:- சே சே.. நீ ரெம்ப அழகா இருக்க, உன்னை எப்படி எல்லாம் பார்த்து ரசிச்சி கிட்டு இருக்கேனு உன் கிட்ட சொன்னேன். :)

அவள்:- எதுக்கு என் கிட்ட இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்க?
அவன்:- சும்மா டைம் பாஸுக்கு தான்…..
அவள்:- நான் கேட்டேனா?
அவன்:- இல்ல

அவள்:- அப்போ எதுக்கு என் கிட்ட சொன்ன? நீ ரெம்ப காஸுவலா அல்வா சாப்பிடுற மாதிரி சொல்லிட்ட, நாளை'ல இருந்து நீ என்னை பார்த்தாலே எனக்கு நீ என்னை சைட் அடிக்கிற மாதிரி தான் இருக்கும்… uneasy யா இருக்கும் எனக்கு..

அவன்:- நீ அப்படி நினைச்சிட கூடாது'னு தான் நான் அப்படி சொன்னேன்…
அவள்:- போடாங்… எனியவ் ஆம் மூவிங் நவ்.. காட்ச் யூ லேட்டர்ஸ் …. Bye
bye

அடுத்த ஒரு நாலு நாள் அவனுக்கு விடுமுறை, அதுக்குள்ள 13 போன் கால் பண்ணியும் நோ ஆன்ஸர்..

ஒரு வாரத்திற்க்கு பிறகு

அவன்:- ஹாய் எப்படி இருக்க… தாங்க்ஸ் பார் நாட் பாதரிங் மீ ஆல் தீஸ் டேய்ஸ்….
அவள்:- இட்ஸ் மை Pleasure..

அவன்:- ஏன் சொல்ல மாட்ட.. என்னாச்சி கால் அட்டெண்ட் பண்ணல.. மிஸ்டு கால் பண்ணியும் , கால் பேக் பண்ணல…. வாட்ஸ் அப்…

அவள்:- நத்திங்….. இந்த நாலு நாள்'ல என்னை மிஸ் பண்ணுனியா?
அவன்:- ம்ம்ம்ம்ம் உன்னை மிஸ் தானே பண்ண முடியும்……
அவள்:- ஏன்????????????????????????
அவன்:- ஏன்னா நீ மிஸ் தானே…
அவள்:- முடியல சத்தியமா.. பீ சீரியஸ்….
அவன்:- சத்தியமா உன்னை மிஸ் பண்ணவே இல்லை..
அவள்:- ரியலி?
அவன்:- I swear.mmmmm….y ஆல் ஆப் அ த சடன் இப்படி கேட்குற?
அவள்:- சும்மா தான்.
அவன்:- ஆங் நீ சொல்லு, எதுக்கு கால் அட்டெண்ட் பண்ணல?
அவள்:- உன்னை மாதிரி உண்மைய சொல்லவா?
அவன்:- பிளீஸ்
அவள்:- தட் டே நீ என்கிட்ட என்னை பத்தியே சொன்னத ஐ காண்ட் டேக் இட்..
அவன்:- இட்ஸ் இட்?
அவள்:- ஆமா அது தான் உன்னை நான் அவாயிட் பண்ணலாம்'னு இருக்கேன்…

அவன்:- ஆஹா…. ஹி ஹி ஹி ஹி எப்ப'ல இருந்து இப்படி லூஸா மாறுன?
நான் உண்மை சொன்னேன்.. அது இந்த அளவுக்கு உன்னை பாதர் பண்ணும்'னு நான் எதிர் பார்க்கவே இல்லை…ஸ்டில், காஸுவலா இரு….. இனி நான் உன்னை பார்க்க வர மாட்டேன்…… டேக் கேர்…

பத்து நாட்களுக்கு அப்புறம்

பஸு'ல அவன் உட்கார்ந்து இருக்க , அவளும் அதே பஸுல ஏற, அவனை பார்த்ததும் அவன் பக்கத்துல போய் உட்கார்ந்து…

அவள்:- ஏய், எங்கடா போன? என்னை பார்க்கவே வரல..
அவன்:- நான் உன்னை பார்த்தா தான் உனக்கு பிடிக்காதே அதுதான் வரல..
அவள்:- அதுக்குனு அப்படியே எப்படிடா வுட்ட???

அவன்:- ஹி ஹிஹி.. வந்தா வரவேற்கனும், போனா bye சொல்லனும் அதுதான் நம்ம பாலிசி….டேக் இட் ஈஸி பாலிசி தான் நம்மளது…எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாது எனக்கு… நான் வளர்ந்தது அப்படி…. சோ…

அவள்:- அப்போ இனிமேல் என்னை பார்க்கவே வர மாட்ட?

அவன்:- கண்டிப்பா வருவேன்…. பட் கமிட் ஆகிக்க மாட்டேன்….. இதோ இப்படி பார்த்தா பேசிட்டு, நீ அழகா இருக்கனு சொல்லிட்டு போயிடுவேன்…

அவள்:- நீ திருந்தவே மாட்ட. சாரி நான் தப்பா எதுவும் பேசி இருந்தா…

அவன்:- சே சே நான் எனக்கு தோனுனத சொன்னேன் நீ உனக்கு தோனுனதை சொன்ன… தட்ஸ் இட்…கூல்லா இரு…. வரட்டா???

மாரல் ஆப் தி பதிவு :- ???????????????

என்ன'னு சொல்ல முடியுமா உங்கனால? ஹி ஹி ஹி ஹி ஹி...இந்த பதிவை படிச்சிட்டு அதுல மாரல் எல்லாம் எதிரிப்பார்குற பாரு, அங்கன தான்'டா chair போட்டு நிக்குது உன் தன்மானம்'னு யாருப்பா அங்க??????

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
வழக்கம் போல துப்பாம போயிடாதீங்க கோப்ஸ் போஸ்ட்டுக்கு காரி....


ஹி ஹி ஹி ஹி ஹி...

வரட்டா.....

cheers!!!!!!!!
கோப்ஸ்.......