Thursday, April 10, 2008

அவன் அப்படி தான் !!!

பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு கேட்க்கும்
இதயத்தில் இடமிங்கு இல்லையே
அதை இடித்தவள் கொடுக்கவே இல்லையே..அவன்:- ஒன்னு சொல்லவா,
அவள்:- ரெண்டே சொல்லு நான் இப்போ free தான்
அவன்:- வசதியா போச்சி….
அவள்:- என்ன?????
அவன்:- ஒன்னும் இல்லை
அவள்:- அப்போ ஒன்னு இருக்குனு சொன்ன??
அவன்:- ஒ அதுவா?
அவள்:- அதுவா'னு எனக்கு தெரியாது, நீ தான் சொல்லனும்..
அவன்:_ சரி இப்ப சொல்லவா?
அவள்:- ஸ்ஸ்ஸப்ப்பா இதையே எத்தனை தபா சொல்லிக்கிட்டே இருப்ப.. சொல்ல வந்ததை சொல்லு முதல்'ல
அவன்:- முதல்'ல இருந்தா?
அவள்:- முடியல சத்தியமா….
அவன்:- ஒகே.. ஒகே.. நோ டென்ஷன்…
அவள்:- நோ ஆம் நாட்… யூ கேரி ஆன்.
அவன்:- நீ ரெம்ப அழகா இருக்க..

அவள் இவனையே பார்க்க

அவன்:- நீ பேசும் போது அசைகின்ற கண்கள், தப்பு செஞ்சா உதடு கடிக்கிறது, சந்தேகம்னா புருவத்தை உயர்த்துவது, எதையாவது success ah முடிச்சிட்டு ஒற்றை கண்ணை அடிக்கிறது, அடிக்கடி முடியை கோதி காது கேப்'ல சொருவுறது'னு, நீ எத செஞ்சாலும் ரசிக்க தோனுது.. அவ்வளவு அழகா இருக்க நீ…

அவள்:- ஆக மொத்தம், எப்போதுமே என்னையே தான் பார்த்துக்கிட்டு இருந்தியா……
அவன்:- சே சே அப்படி எல்லாம் இல்லவே இல்லை'னு நான் பொய் சொல்ல மாட்டேன்….
அவள்:- எதுனால அப்படி?
அவன்:- ஏன்னா நீ அவ்வளவு அழகா இருக்கியே…
அவள்:- இல்ல இல்ல நான் அப்படி இல்லை……
அவன்:- ஹி ஹி ஹி .. ஏன் இப்படி பயப்படுற?
அவள்:- ஜ ஜஸ்ட் டோன் லைக் பீபிள் அட்மைரிங் மீ பார் நத்திங்….
அவன்:- அழகா இருந்தாலே, யூ காட் டூ டேக் திஸ்…. :)

அவள்:- ஹி ஹி ஹி, இப்படி எல்லாம் பேசி என்னை கரெக்ட் பண்ணலாம்'னு பார்க்கிறீயா.. சான்ஸே இல்லை.. ஐ ஆம் ஆல்ரெடி கமிடெட்..

அவன்:- ஹா ஹா , நீ அழகா இருக்கனு மட்டும் தானே சொன்னேன்… ஐ லவ் யூ சொல்ல போறேனா'னு நினைச்சிட்டியோ???

அவள்:- நீ பேசுறது அப்படி தானே இருந்தது..

அவன்:- நான் உண்மைய சொன்னேன்….

அவள்:- புரியல


அவன்:- நீ அழகா இருக்க, சோ பார்த்துக்கிட்டே இருக்கலாம் னு சொன்னேன்…லைக் nature

அவள்:- ம்ம்ம்ம்ம்

அவன்:- பட், அதுக்குனு உன்னை nature ஓட கம்பேர் பண்ண முடியாது… ஏன்னா, nature வேற நீ வேற…

அவள்:- ஹி ஹி ஹிஹி ஏன் இப்படி புலம்பிக்கிட்டு இருக்க????? சம்பந்தமே இல்லாம? காலையிலே புல்லா அடிச்சிட்டியா???

அவன்:- சே சே.. நீ ரெம்ப அழகா இருக்க, உன்னை எப்படி எல்லாம் பார்த்து ரசிச்சி கிட்டு இருக்கேனு உன் கிட்ட சொன்னேன். :)

அவள்:- எதுக்கு என் கிட்ட இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்க?
அவன்:- சும்மா டைம் பாஸுக்கு தான்…..
அவள்:- நான் கேட்டேனா?
அவன்:- இல்ல

அவள்:- அப்போ எதுக்கு என் கிட்ட சொன்ன? நீ ரெம்ப காஸுவலா அல்வா சாப்பிடுற மாதிரி சொல்லிட்ட, நாளை'ல இருந்து நீ என்னை பார்த்தாலே எனக்கு நீ என்னை சைட் அடிக்கிற மாதிரி தான் இருக்கும்… uneasy யா இருக்கும் எனக்கு..

அவன்:- நீ அப்படி நினைச்சிட கூடாது'னு தான் நான் அப்படி சொன்னேன்…
அவள்:- போடாங்… எனியவ் ஆம் மூவிங் நவ்.. காட்ச் யூ லேட்டர்ஸ் …. Bye
bye

அடுத்த ஒரு நாலு நாள் அவனுக்கு விடுமுறை, அதுக்குள்ள 13 போன் கால் பண்ணியும் நோ ஆன்ஸர்..

ஒரு வாரத்திற்க்கு பிறகு

அவன்:- ஹாய் எப்படி இருக்க… தாங்க்ஸ் பார் நாட் பாதரிங் மீ ஆல் தீஸ் டேய்ஸ்….
அவள்:- இட்ஸ் மை Pleasure..

அவன்:- ஏன் சொல்ல மாட்ட.. என்னாச்சி கால் அட்டெண்ட் பண்ணல.. மிஸ்டு கால் பண்ணியும் , கால் பேக் பண்ணல…. வாட்ஸ் அப்…

அவள்:- நத்திங்….. இந்த நாலு நாள்'ல என்னை மிஸ் பண்ணுனியா?
அவன்:- ம்ம்ம்ம்ம் உன்னை மிஸ் தானே பண்ண முடியும்……
அவள்:- ஏன்????????????????????????
அவன்:- ஏன்னா நீ மிஸ் தானே…
அவள்:- முடியல சத்தியமா.. பீ சீரியஸ்….
அவன்:- சத்தியமா உன்னை மிஸ் பண்ணவே இல்லை..
அவள்:- ரியலி?
அவன்:- I swear.mmmmm….y ஆல் ஆப் அ த சடன் இப்படி கேட்குற?
அவள்:- சும்மா தான்.
அவன்:- ஆங் நீ சொல்லு, எதுக்கு கால் அட்டெண்ட் பண்ணல?
அவள்:- உன்னை மாதிரி உண்மைய சொல்லவா?
அவன்:- பிளீஸ்
அவள்:- தட் டே நீ என்கிட்ட என்னை பத்தியே சொன்னத ஐ காண்ட் டேக் இட்..
அவன்:- இட்ஸ் இட்?
அவள்:- ஆமா அது தான் உன்னை நான் அவாயிட் பண்ணலாம்'னு இருக்கேன்…

அவன்:- ஆஹா…. ஹி ஹி ஹி ஹி எப்ப'ல இருந்து இப்படி லூஸா மாறுன?
நான் உண்மை சொன்னேன்.. அது இந்த அளவுக்கு உன்னை பாதர் பண்ணும்'னு நான் எதிர் பார்க்கவே இல்லை…ஸ்டில், காஸுவலா இரு….. இனி நான் உன்னை பார்க்க வர மாட்டேன்…… டேக் கேர்…

பத்து நாட்களுக்கு அப்புறம்

பஸு'ல அவன் உட்கார்ந்து இருக்க , அவளும் அதே பஸுல ஏற, அவனை பார்த்ததும் அவன் பக்கத்துல போய் உட்கார்ந்து…

அவள்:- ஏய், எங்கடா போன? என்னை பார்க்கவே வரல..
அவன்:- நான் உன்னை பார்த்தா தான் உனக்கு பிடிக்காதே அதுதான் வரல..
அவள்:- அதுக்குனு அப்படியே எப்படிடா வுட்ட???

அவன்:- ஹி ஹிஹி.. வந்தா வரவேற்கனும், போனா bye சொல்லனும் அதுதான் நம்ம பாலிசி….டேக் இட் ஈஸி பாலிசி தான் நம்மளது…எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாது எனக்கு… நான் வளர்ந்தது அப்படி…. சோ…

அவள்:- அப்போ இனிமேல் என்னை பார்க்கவே வர மாட்ட?

அவன்:- கண்டிப்பா வருவேன்…. பட் கமிட் ஆகிக்க மாட்டேன்….. இதோ இப்படி பார்த்தா பேசிட்டு, நீ அழகா இருக்கனு சொல்லிட்டு போயிடுவேன்…

அவள்:- நீ திருந்தவே மாட்ட. சாரி நான் தப்பா எதுவும் பேசி இருந்தா…

அவன்:- சே சே நான் எனக்கு தோனுனத சொன்னேன் நீ உனக்கு தோனுனதை சொன்ன… தட்ஸ் இட்…கூல்லா இரு…. வரட்டா???

மாரல் ஆப் தி பதிவு :- ???????????????

என்ன'னு சொல்ல முடியுமா உங்கனால? ஹி ஹி ஹி ஹி ஹி...இந்த பதிவை படிச்சிட்டு அதுல மாரல் எல்லாம் எதிரிப்பார்குற பாரு, அங்கன தான்'டா chair போட்டு நிக்குது உன் தன்மானம்'னு யாருப்பா அங்க??????

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி,
வழக்கம் போல துப்பாம போயிடாதீங்க கோப்ஸ் போஸ்ட்டுக்கு காரி....


ஹி ஹி ஹி ஹி ஹி...

வரட்டா.....

cheers!!!!!!!!
கோப்ஸ்.......

53 comments:

k4karthik said...

firstuuuuuuuuu....!!

k4karthik said...

padichitu vandhu kumming....

Dreamzz said...

கோப்ஸ்.. என்ன நம்மளை பத்தி மேட்டர் எல்லாம் இப்படி சொல்லிட்டா.. எப்படி!!!! ஹிஹி!

Dreamzz said...

செம மொக்கை... மாரல் எனக்கு புரிஞ்சுது :) யாருக்கு என்னப்பா சொல்ல வர?

Dreamzz said...

நல்லா இருடே!

Dreamzz said...

இது வரைவந்தாச்சு!

Dreamzz said...

7 அடிச்சிட்டு போவோம்!

Dreamzz said...

//அவன்:- ஒன்னு சொல்லவா,
அவள்:- ரெண்டே சொல்லு நான் இப்போ free தான்
அவன்:- வசதியா போச்சி….
அவள்:- என்ன?????
அவன்:- ஒன்னும் இல்லை
அவள்:- அப்போ ஒன்னு இருக்குனு சொன்ன??
அவன்:- ஒ அதுவா?
அவள்:- அதுவா'னு எனக்கு தெரியாது, நீ தான் சொல்லனும்..//

ஆரம்பம் அமர்க்களம்!

Dreamzz said...

//நீ பேசும் போது அசைகின்ற கண்கள், //
ஏனுங்கன்னா, பேசுமோது, கண்ணு அசையரதயா பார்த்தீங்க!


// எதையாவது success ah முடிச்சிட்டு ஒற்றை கண்ணை அடிக்கிறது,//
எதுக்கு அவுக்க கண்ணை அவிகளே அடிச்சுகிறாங்க? கண் வலியோ?

Dreamzz said...

//நான் வளர்ந்தது அப்படி…. சோ…//

இதுக்கெல்லாம் சோ வரமாட்டாரு! நான் தான் வரணும்! வர்ட்டா!

சத்யா said...

உங்க மொக்கைக்கு நான் அடிமை!

CVR said...

அண்ணாச்சி!!
உங்க வாழ்க்கையின் பக்கங்களில் லேட்டஸ்ட் பல்ப்பு(நீங்க குடுத்தது) இதுவா??

CVR said...

வந்ததுக்கு 13-ஆம் நம்பர் கமெண்ட்டு நமதே!! B-)

G3 said...

//CVR said...

அண்ணாச்சி!!
உங்க வாழ்க்கையின் பக்கங்களில் லேட்டஸ்ட் பல்ப்பு(நீங்க குடுத்தது) இதுவா??//


Posta vida indha commentu toppu :D

G3 said...

evano bijee bijeenu scenea potaan.. aana inga mattum inbuttu perusa mokka podaraan :((

Sen22 said...

உங்ககிட்ட எனக்கு புடிச்சதே
இது தான் Boss .....
இந்த மொக்கதான்....
எப்படி உங்களால மட்டும் முடியுது....Enrun Natpudan,
Senthil, Bangalore

ambi said...

ஹஹா! எலே கோப்ஸ், கடந்த கால டைரிய புரட்டி இருக்க போல. :p

நிரஞ்சன் said...

hi gops...
unga blog-a naan konja naala padichukittu varraen.. nice.. nallavae podringa ella mokkaiyum... keep it up.. continue... :)

Divya said...

mokkai toppu tuckeru!

moral than purila Gops!!

My days(Gops) said...

@K4K:- அண்ணாத்தே இன்னும் வந்திங்?

My days(Gops) said...

@dreamz:- // என்ன நம்மளை பத்தி மேட்டர் எல்லாம் இப்படி சொல்லிட்டா.. எப்படி!!!! //

ஆல் இன் தி கேம் பிரதர்... லூஸ்ல வுடுங்க ஹி ஹி ஹி...


//மாரல் எனக்கு புரிஞ்சுது :) யாருக்கு என்னப்பா சொல்ல வர?//
அதே தான் சொல்ல வரேன் ஹி ஹி ஹி..


//நல்லா இருடே!//
உங்க ஆசில கண்டிப்பா :)


//ஏனுங்கன்னா, பேசுமோது, கண்ணு அசையரதயா பார்த்தீங்க//
:) அழகா இருந்தது அண்ணா.. அவ கூட இப்படி கேட்கள.. :)


//எதுக்கு அவுக்க கண்ணை அவிகளே அடிச்சுகிறாங்க? கண் வலியோ//

குட் question.. :D
ஓ ஓ உங்க ஊருல இப்படி தான் நினனச்சிக்குவீங்களா பிரதர்.... எல்லாமே ஒரு மார்கமா தான் இருக்கீங்க.. ஹி ஹிஹிஹி...

My days(Gops) said...

@சத்யா :- //உங்க மொக்கைக்கு நான் அடிமை!//

ஹி ஹி ஹி நன்றியை.....
இங்கு வந்து என் மொக்கையை படித்ததுக்கு மிக்க சந்தோஷம்.. :)

My days(Gops) said...

@cvr :- //அண்ணாச்சி!!
உங்க வாழ்க்கையின் பக்கங்களில் லேட்டஸ்ட் பல்ப்பு(நீங்க குடுத்தது) இதுவா //

rotfl.. நல்ல கேட்குறீங்க டிடெயிலு.. அய்யோ அய்யோ....


//வந்ததுக்கு 13-ஆம் நம்பர் கமெண்ட்டு நமதே!! B-)//
நன்றியை...

My days(Gops) said...

@G3 :- //Posta vida indha commentu toppu ://
அப்போ direct யா கமெண்ட்'ய தான் படிச்சிருக்க போல :D


//evano bijee bijeenu scenea potaan.. aana inga mattum inbuttu perusa mokka podaraan :((//
அட பிலாக்ய அவ்வளவு சீக்கிரம் வுட்டுற முடியுமா :D

My days(Gops) said...

@sen ;_ //உங்ககிட்ட எனக்கு புடிச்சதே
இது தான் Boss .....
இந்த மொக்கதான்....
எப்படி உங்களால மட்டும் முடியுது....//

மிக்க நன்றிங்க.... மொக்கை கூடவே பிறந்திருச்சி.. ஹி ஹி ஹிஹி

My days(Gops) said...

@தல :_ //எலே கோப்ஸ், கடந்த கால டைரிய புரட்டி இருக்க போல. :p
//

ஹிஹி ஹிஹி இல்ல பிரதர்.. இது பிராண்ட் நியூ.... :P

My days(Gops) said...

@நிரஞ்சன் :- //unga blog-a naan konja naala padichukittu varraen.. nice.. nallavae podringa ella mokkaiyum... keep it up.. continue... :)//

ரெம்ப நன்றிங்க.. நீங்களும் இங்க அடிக்கடி வாங்க..

My days(Gops) said...

@திவ்யா :_ //mokkai toppu tuckeru!//
நன்றி நன்றி...

//moral than purila Gops!!//
நமக்கு பிடிச்ச பொண்ணுக்கு நம்மள பிடிக்காட்டி எஸ் ஆகிடனும்'னு நினைக்கிறேன்.... அப்படியா???

Divya said...

\\ My days(Gops) said...
@திவ்யா :_ //mokkai toppu tuckeru!//
நன்றி நன்றி...

//moral than purila Gops!!//
நமக்கு பிடிச்ச பொண்ணுக்கு நம்மள பிடிக்காட்டி எஸ் ஆகிடனும்'னு நினைக்கிறேன்.... அப்படியா???\\


அந்த பையன், அந்த பொண்ணுக்கிட்ட 'அழகா இருக்கிற'ன்னு தான் சொன்னான், பிடிச்சிருக்குன்னு சொல்லவேயில்லை....
அவளும் அவனை பிடிக்கலைன்னு சொல்லவேயில்லை,
already commited ஆ இருக்கிறதால, அந்த பொண்ணு safety cautious ஆ ஒதுங்கி போறா.....

மத்தப்படி இதுல யாரு 'எஸ்' ஆகனும்...ஏன் ஆகனும்??

அப்படின்னா moral of the story என்ன?????

My days(Gops) said...

//அப்படின்னா moral of the story என்ன?????//

adhey thaaan naaaanum ketkiren... he he he he..

தமிழன்... said...

நாலுவாட்டி படிச்சும் புரியல இருங்க இன்னொரு வாட்டி படிச்சுட்டு வந்திர்றேன்...

தமிழன்... said...

கொஞ்சம் புரியறா மாதிரி....
...............
..............
..........
..........
........
.......
......
..
..
ஆ பரியுது பரியுது...

Divya said...

MORAL of the Post....

Bulbu vanga mattum illa , [azhagana!!!]ponnungaluku bulbu kodukkavum paiyannuku theriyum!!!!

ithu correct aa Gops????

தமிழன்... said...

அவன் அப்படித்தான்!!!

யாரு நீங்களா அது...:))))

தமிழன்... said...

///அவன்:- ஒன்னு சொல்லவா,
அவள்:- ரெண்டே சொல்லு நான் இப்போ free தான்
அவன்:- வசதியா போச்சி….
அவள்:- என்ன?????
அவன்:- ஒன்னும் இல்லை
அவள்:- அப்போ ஒன்னு இருக்குனு சொன்ன??
அவன்:- ஒ அதுவா?
அவள்:- அதுவா'னு எனக்கு தெரியாது, நீ தான் சொல்லனும்..
அவன்:_ சரி இப்ப சொல்லவா?
அவள்:- ஸ்ஸ்ஸப்ப்பா இதையே எத்தனை தபா சொல்லிக்கிட்டே இருப்ப.. சொல்ல வந்ததை சொல்லு முதல்'ல
அவன்:- முதல்'ல இருந்தா?
அவள்:- முடியல சத்தியமா….
அவன்:- ஒகே.. ஒகே.. நோ டென்ஷன்…
அவள்:- நோ ஆம் நாட்… யூ கேரி ஆன்.
அவன்:- நீ ரெம்ப அழகா இருக்க..///

நல்லாருக்கு...
இளமை ஊஞ்சலாடுகிறது...

தமிழன்... said...

Moral of the post
அது அது...அட அதாங்க...

(gops ஓட கெத்து...)

My days(Gops) said...

@தமிழன்:- //நாலுவாட்டி படிச்சும் புரியல இருங்க இன்னொரு வாட்டி படிச்சுட்டு வந்திர்றேன்//

அப்போ டீ'யும் போட்டுக்கோங்க...

My days(Gops) said...

//ஆ பரியுது பரியுது//

ஹி ஹி ஹி தமிழன் அது என்ன பரியுது பரியுது? :P

//யாரு நீங்களா அது...:)))///
ஹா ஹா அவன மாதிரியா இருக்கேன் நான் ????


//நல்லாருக்கு...
இளமை ஊஞ்சலாடுகிறது...//
நன்றிங்க...


//அது அது...அட அதாங்க...

(gops ஓட கெத்து...)//
rotfl ரெம்ப நன்றிங்க.. இங்க வந்து என் மொக்கைய படித்ததுக்கு

My days(Gops) said...

@திவ்யா // Bulbu vanga mattum illa , [azhagana!!!]ponnungaluku bulbu kodukkavum paiyannuku theriyum!!!!

ithu correct aa Gops???? //

அட ஆமா இது கூட நல்லா தான்யா இருக்கு... நன்றியை... ஹி ஹி ஹி

நிவிஷா..... said...

நீங்க பல்பு வாங்கின கதையை அப்படியே உல்டா பண்ணி பதிவு போட்டுட்டா....எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதா??

just joking:))

nice mokkais asusuall! njyd reading the post:)))

natpodu
Nivisha.

Aarthy said...

Enna kodumai saravanan ethu

Regards,
Aarthy.

Aarthy said...

In climax i expected the following words:
Na konjam naal esc aahi Blog podalai illaya , appo ethu thaan nadanthuchu .... nadanthathu ethu apdinu oru topic vachrukalam.

-Rt

Syam said...

இம்மாம் பெரிய மொக்கை போட்டுட்டு கடைசில கேட்டீங்களே ஒரு கேள்வி(மாரல்)...அங்க தான் நீங்க நம்ம பிரதர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க...இருந்தாலும் அந்த அழகான பிகர இப்படி கலாச்சு இருக்க வேண்டாம் :-)

My days(Gops) said...

@nivisha //நீங்க பல்பு வாங்கின கதையை அப்படியே உல்டா பண்ணி பதிவு போட்டுட்டா....எங்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதா//

ஹி ஹி ஹி... அப்படி எல்லாம் இல்லைங்க... :)


//nice mokkais asusuall! njyd reading the post:)))//
நன்றிங்க...

My days(Gops) said...

@ஆர்த்தி :_ //Enna kodumai saravanan ethu//

இது கொடுமையாவா இருக்கு :P


//Na konjam naal esc aahi Blog podalai illaya , appo ethu thaan nadanthuchu .... nadanthathu ethu apdinu oru topic vachrukalam.//

rotfl.. எப்படிங்க இப்படி எல்லாம்?

My days(Gops) said...

@syam :-

பிரதர் ரெம்ப நாட்களுக்கு அப்புறம் உங்க கமெண்ட்யை பார்க்க ஆனந்தம் பொங்குது..

///இம்மாம் பெரிய மொக்கை போட்டுட்டு கடைசில கேட்டீங்களே ஒரு கேள்வி(மாரல்)...அங்க தான் நீங்க நம்ம பிரதர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க...இருந்தாலும் அந்த அழகான பிகர இப்படி கலாச்சு இருக்க வேண்டாம் :-)//

ஹி ஹி ஹி.... என்ன பிரதர் பண்ணுறது ஓவர் அழகா இருந்தா புகழ கூடாதா? :P

ஷாலினி said...

moral of the story:

mathavanga namaku bulb kudukarhtuku munnadi namba avangaluku bulb kudukanum..:)

bulb kudukarthu matum illama avanga apo apo meet panni bulb kuduthatha ninaivu paduthanum :P

ஷாலினி said...

//வந்தா வரவேற்கனும், போனா bye சொல்லனும் அதுதான் நம்ம பாலிசி….டேக் இட் ஈஸி பாலிசி தான் நம்மளது…//

nalla policy :) solrathu kekurapa easy ya than iruku..

ஷாலினி said...

//நீ பேசும் போது அசைகின்ற கண்கள், தப்பு செஞ்சா உதடு கடிக்கிறது, சந்தேகம்னா புருவத்தை உயர்த்துவது, எதையாவது success ah முடிச்சிட்டு ஒற்றை கண்ணை அடிக்கிறது, அடிக்கடி முடியை கோதி காது கேப்'ல சொருவுறது'னு, நீ எத செஞ்சாலும் ரசிக்க தோனுது..//

itha padikumbothu... enaku oru song nyabgam varuthu... dont know the movie name.. song ithu than.. ''poi solla intha manasuku theriyavillai, sonnal poi poi thaney'' athula sneha ithellam panuva :)

ஷாலினி said...

intha story ku part 2 iruka?? ;) ila THE END da?

TV Digital said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.

My days(Gops) said...

@shalini :- //mathavanga namaku bulb kudukarhtuku munnadi namba avangaluku bulb kudukanum..:)//

he he he neeenga innoru thaba padinga... rendu perumey at a time sollikitaaanga :)

//bulb kudukarthu matum illama avanga apo apo meet panni bulb kuduthatha ninaivu paduthanum :P//

????? appadiah *sambandham sambandham ilaaama sollureeeenga? :O *

My days(Gops) said...

@shalini :_ //solrathu kekurapa easy ya than iruku..//

ketkuravanukku easy ah kashtama irukaanu , solluravan kavalai pada thevai illai u see :D

//''poi solla intha manasuku theriyavillai, sonnal poi poi thaney'' athula sneha ithellam panuva :)//
naaan appadi oru song ah ketadhey illaingaley.....


//intha story ku part 2 iruka?? ;) ila THE END da?//
idhu short story nga... continuation illai :D