Thursday, May 29, 2008

என்ன மொக்கை சார் இது ????

விஸ்கி:- ரெம்ப நாளாச்சில மொக்கை போட்டு.. அதுதான் :P


ஓவர் டூ மொக்கை..
பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா

கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?

பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா

கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?

பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..

கிறு:- சரி சரி… லூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..

பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..

கிறு:- இதோடா, எனக்கே வா?

பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..

கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?

பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை…

கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?

பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா…

கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..

பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?

கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..

பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?

கிறு:- ஆம்புலன்ஸ்க்கு…

பொ:- ஏன்?

கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?

பொ:- ராசா பீளிஸ்… உன்னை பற்றி தெரியாம…

கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..

பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..

கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….

பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?

கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?

பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?

கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)


ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்…

பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?

கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….

பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?

கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..

பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?

கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?

பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?

கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..

பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..

கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்…

பொ:- டேய் திரும்பியுமா? ??????

கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்…என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.

பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..

கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா…

பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ…

கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கே… ஹி ஹி ஹி..

பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே…

கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..

பொ:- என்னடா?

கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்…

பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?

கிறு:- சரி சரி இப்ப சொல்லு…

பொ:- இப்ப…

கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு

பொ:- மேல

கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்ட… நான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹி… எப்படி?

பொ:- நான் கிளம்புறேன்'டா…..

கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்… இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்… என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்… உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?

பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?

கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன்…

மாரல் ஆப் தி பதிவு :- ?????? anybody can?

டூ பீ தொடரும்…. :)

மொக்கை மட்டுமே..

துப்பிட்டு போங்க... :)

நன்றி வணக்கம்..
கோப்ஸ்.....

Thursday, May 01, 2008

எட்டை புட்டு வைக்கனுமாம்..

Tagged by பொன்னம்மா In the 8 Facts about Yourself, you share 8 things that your readers don’t know about you. Then at the end you tag at least 8 other bloggers to keep the fun going. Here are the rules.
RULES :

1) Each blogger must post these rules first.
2) Each blogger starts with eight random facts/habits about themselves.
3) Bloggers who are tagged need to write on their own blog about their eight things and post these rules.
4) At the end of your blog, you need to choose eight people to get tagged and list their names.
5) Don’t forget to leave them a comment telling them they’re tagged, and to read your blog.

Know about me:

1.நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன்…..அவர் மேலே எவ்வளவு பைத்தியமா இருந்து இருக்கேனு (இப்பவும் தான்) என் நண்பர்களுக்கு நல்லாவே தெரியும்... அவரை பற்றி யாரு தப்பா பேசுனாலும், நான் விடாமல் argue பண்ணுவேன்..எங்க எப்ப சச்சினை பற்றி பார்த்தாலோ, கேட்டாலோ நான் நின்று கேட்டுட்டு/பார்த்துட்டு தான் போவேன் அது எவ்வளவு பிஸியா இருந்தாலும்…(டெண்டுல்கரை பற்றி பேசினா நான் பேசிக்கிட்டே இருப்பேன்… சோ, நோ ஓவர் டாக்கிங்) வாழ்நாள்'ல ஒரு தடவையாவது டெண்டுல்கரை நேர்'ல பார்த்து , கை குலுக்கி, கூட நின்னு போட்டோ எடுத்து அட்லீஸ்ட் ஒரு ஐந்து நிமிடமாவது அவரு கூட பேசனும்…. நூறு கோடி பேருல எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா????? தெரியல.. நம்பிக்கை தான் வாழ்க்கையே…ஹி ஹி ஹி ஹி

2. எனக்கு ஒரு சில விஷயம் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் அது கடைசி வரைக்கும் எனக்கு வரவே வராது……
Ex:- Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்.. Etc etc

3. எந்த விஷயம் செஞ்சாலும் அதுல 100% commitment ah கொடுக்க விரும்புவேன்…. ஆர்வம் இல்லாட்டி ஆராவாரம் இல்லாம அப்படியே ஆரம்பத்திலையே அப்பீட்டு ஆகிடுவேன்….

4. எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸயாவே எடுத்துக்க மாட்டேன்…அதே மாதிரி பல விஷயங்களுக்கு " I Don’t Care "தான்.. ரொம்ப worry பண்ணிக்க மாட்டேன்.. "Think Practical and Be Positive"

5.Future காக, Present ah waste பண்ண மாட்டேன்… ஒரு சில சந்தோஷம்/moments ஒரு தடவை தான் வரும்…. சோ, Make Hay While Sun Shines policy தான்….

6. எப்போதும், எங்கையும் முடிந்தவரை உண்மையை பேசிடுவேன்….. ஏன்னா, பொய் பேசிட்டா அதுக்கு தனியா உட்கார்ந்து யோசிக்கனும் பாருங்க..
(அட பாவி இப்படி அப்பட்டமா பொய் பேசுறியே'னு அங்க எங்க அண்ணா AK47 சாரி K4K நோ சவுண்ட் பீளிஸ்)

7. A to Z எந்த ஒரு விஷயத்தையும் நல்லா Note பண்ணுவேன்..

8. நிறைய இருக்குங்க என்னை பற்றி சொல்ல… ஆனா பாருங்க.. இல்ல இல்ல கேளுங்க இல்ல இல்ல படிங்க , எல்லாத்தையும் இந்த 8 இட்த்துலையே சொல்ல முடியல….. இன்னொரு tag la உங்களை சந்திக்கிறேன்..

8 பேரை கோத்திவிடுறேன்…

1. திவ்யா
2. நிவிஷா
3.K4K அண்ணாத்தே
4. அவதார் டிரீம்ஸ்
5. தங்கச்சி துர்கா
6. யக்கா G3
7. தல அம்பி
8. யாரு வேணும்னாலும் take this tag :)

அட பார்ப்போங்க யாரு tag எழுதுறாங்கனு....


நன்றி வணக்கம்
கோப்ஸ்...