Sunday, August 31, 2008

சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!

Gops:- அண்ணா வணக்கம்….

K4k:- வாடா தம்பி எப்படி இருக்க?

Gops:- நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க ? சாப்பிட்டாச்சா?

K4k:- ம்ம்ம் இப்படி எல்லாத்துக்கிட்டையும் நீ கேட்க ஆரம்பிச்சிட்டு நீ அப்படியே எஸ்கேப் ஆகிட்ட, இப்ப யாரை பார்த்தாலும் இதை தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க….

Gops:- சரி சரி என்ன இந்த பக்கம் அதிசியமா?

K4k:- எந்த பக்கம்'டா என் தம்பி

Gops:- அது தான் ஜிடாக் பக்கம்…

K4k:- ம்ம் அதை நான் கேட்கனும்…

Gops:- அதை தான் நான் கேட்டுட்டேனே… பதிலை சொல்லுங்க….

K4k:- அடேய், ஹிடாக் ல குசேலன் படமா பார்க்க வருவாங்க…. எல்லாம் ஒரு விஷயமா தான்…


Gops:- அந்த ஒரு விஷயம் என்னது அண்ணே???

K4k:- உனக்கு எல்லாத்தையும் விளக்கெண்ணைய போட்டு விளக்குனா தான் விளங்கும்……


Gops:-ஓ விளக்கை விளக்க போறீங்களா? இல்லை என்னை'ai விளக்குனு விளக்க போறீங்களா?


K4k:- அடேய் விளக்கெண்னெய் தம்பியே..


Gops:- அப்போ நான் விளக்கு இல்லையா?


K4k:- ஸ்ஸ்ப்பா முடியலடா.. நானே ஓசி சோறு சாப்பிட்டுட்டு நம்ம சொர்னாக்கா (alias) காயத்திரிய பற்றி ஒரு போஸ்ட் போடலாம்'னு வந்தா, நீ விளக்குல போட்ட திரி மாதிரி என்னைக்கும் இல்லாம இப்படி கொழுந்து விட்டு சந்தேகத்தை கேட்குறேயே ராசா..எப்படிடா?

Gops:- என்னது நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'வ பற்றி போஸ்ட்டா? எதுக்குனா?

k4k:- ஆரம்பிச்சிட்டான்டா..நாட்டுல மழை பெய்தோ இல்லையோ இனி எதுக்கு, எப்ப, எப்படி'னு உன் கேள்வி மழை வெள்ளமா பெருக்கெடுத்து ஓட போகுது பாரு...

Gops:-அண்ணா என்ன அண்ணா எதுக்கு போஸ்ட்னு தானே கேட்டேன்.. நீங்க எதுக்கு வானிலை அறிக்கை வரைக்கும் கோயிங்?

k4k;- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..டேய் வெண்னெய்

Gops:- அண்ணா, முதல்'ல விளக்கெண்னெய் னு சொன்னீங்க.. இப்போ வெண்ணெய்'னு சொல்லுறீங்க…. ஒரே குழம்பா இருக்கு...

k4k:- டேய் என்னது குழம்பா?

Gops:- சே செ, குழம்பு இல்லை, G3 பற்றி பேசினாலே ஒரே சாப்பாடு நியாபகம் தான் பிரதர்….

k4k:- ஹி ஹி ஹி ஹி இருக்காதா பின்னே…..

Gops:- இல்லை அண்ணா முன்ன தான் இருக்கும்….

k4k:- போடாங்

Gops:- எதுக்கு G3 பற்றி போஸ்ட் புட்டிங் பிரதர்..

k4k:- இன்னும் நீ இந்த பற்றி ய விடலையா?

Gops:- அண்ணே குட் யூ பிளிஸ்

k4k:- சரி சரி பீட்டர் மச்சானை கூப்பிடாதை….நான் மேட்டரை சொல்லிடறேன்

Gops:-சொல்லவே இல்லை…

k4k:- இனிமேல் தான்'டா சொல்லவே போறேன்….
(தெலுங்கு பட டைட்டில் இல்லை)

gops:- நான் அதை கேட்கல..

k4k:- அப்போ?? எதை பற்றி சொல்லுற?

gops:- அதுதான் பீட்டர் உங்களுக்கு மச்சான்'னு சொல்லவே இல்லை

k4k:-டேய் வேணாம்

gops:- கூல் பிரதர்…….

k4k:-ஒகே ஒகே ஏசி'ய போடு….

gops:-எதுக்கு?

k4k:-கூல் 'னு நீ தானே சொன்ன…

gops:-ஹி ஹி ஹி பிரதர் நான் சொன்னது fridge ah .. அய்யோ அய்யோ….

k4k:- போதும் நிறுத்து உன் அளப்பரையை…

gops:- இன்னும் நீங்க G3 க்கு எதுக்கு போஸ்ட் னு சொல்லவே இல்லை…

k4k:- டேய் விட்டா நீ என்னை பேசவுடாம எதுக்கு போஸ்ட் எதுக்கு போஸ்ட்'னு கேட்டுக்கிட்டே மொக்கை போட்டுருவ.. சோ மீ த டெல்லிங்..

நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'க்கு நாளைக்கு செப்டம்பர் 1 பிறந்தநாள் டா என் அருமை எருமை தம்பியே..

gops:- அண்ணா சொல்லவே இல்லை..

k4k:- டேய் உனக்கு அவ்வளவா கேட்க்காதா., இல்லை அவ்வளவும் கேட்காதா?

gops:-ஏன் ஏன் ஏன்?

k4k:-இப்ப தானேடா சொன்னேன் அக்காவுக்கு பிறந்த நாள்'னு இப்போ again யூ ஆர் டெல்லிங்க் சொல்லவே இல்லை'nu யூ பிளடி ராஸ்கோல்…

gops:- அய்யே இதோடா …..

k4k:- சரி சரி அக்கா பிறந்த நாளுக்கு என்ன பண்ண போற தம்பி?

gops:- ஹி ஹி ஹி அங்க எப்படி?

k4k:-குட் question. நம்ம இந்திய வரைபடம் இருக்கா உன் கிட்ட?

gops:- அண்ணா நோ..

k4k:- சரி சரி, நீ G3 யை பற்றி கொஞ்சமா, டேய் நல்லா கவனி, கொஞ்சமா நம்ம மக்களுக்கு எடுத்து கூறிட்டு, முடிவுரை'ல இந்த அண்ணன் பெயரையும் சேர்த்துக்கோ சரியா'டா என் தம்பி?

ஒகே அண்ணா இதோ G3 யை பற்றி1.கிபீ ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏதோ ஒரு ஆண்டுல எல்லாத்துக்கும் தொல்லை கொடுக்காம காயத்திரி அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த உலகத்துல வீச் வீச் னு கத்தாம , வீல் சிப்ஸ் வீல் சிப்ஸ் னு சொல்லிக்கிட்டே பிறந்தாள்..
(வீல் சிப்ஸ் => வீல் ஷேப் ல இருக்குமே)

2. சிறு வயது முதல் காலேஜ் படிச்சி முடிச்சி வேலை சேரும் வரை ஐ த டோண்ட் நோ த டீடெயிலு….
(என்னத்த படிச்சாங்க, கிழிச்சாங்க'னு நீங்களே அக்கா கிட்ட கேட்டுக்கோங்க. )


3.சாதா காயத்திரியா இருந்த நம்ம அக்கா பிலாக் உலகம் மூலமா ( இது அந்த மூலம் இல்லைங்கோ) நம்ம எல்லாத்துக்கும் G3 என்கிற சொர்ணாக்காவாக பிரபலம் அடைந்தார்…


4. நம்ம கைப்புள்ள மாதிரி நம்ம சொ.அக்காவும் எவ்வளவு ஓட்டுனாலும் சிரித்த முகத்துடன் எல்லா டேமேஜ்யையும் ஏற்று கொள்வது இவங்களது சிறப்போ சிறப்பு.. (அதுக்கு'னு கொஞ்சம் ஓவரா போனா செருப்பு வருவது உறுதியே..)


5. என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…

6. எப்பேர் பட்ட பிளாகர்ஸ் மீட்'னாலும் முன்ன நாளே போய் இடத்தை பிடித்து சிக்கன் கெடாவுடன் பல போர் புரிந்து வெற்றி பெற்றே திரும்பி வருவது நம்ம G3 ஸ்பெஷல்..

7. வெளிநாடு வாழ் இந்திய தமிழ் பிளாகர்களுக்கு சக பிளாகர் வீட்டு விசேஷங்களுக்கு பரிசு பொருள் வாங்க இவங்களே காசும் கொடுத்து, அதை திருப்பி தந்தால் வாங்கவும் மறுக்கும் நல்ல அக்கா எங்கள் அக்கா சொர்ணாக்கா..
(நான் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி'னு யாரும் நினைச்சிடாதீங்க பிளீஸ்)


8. எந்த ஒரு விசேஷத்துக்கும் முதல் ஆளா இருந்து விஷ் பண்ணும் அக்கா….


இதுக்கு மேலையும் நிறைய இருக்கு இவங்களை பற்றி சொல்ல.. பட் உங்களுக்கு தெரிந்தையும் கமெண்ட்'ல சொன்னா, நம்ம அக்கா சந்தோஷ படுவாங்களாக… ஹி ஹி


இனி கொஞ்சம் சீரியஸாக

actual ah , பிளாக் உலகத்துல இவங்க நட்பு கிடைத்ததுக்கு அப்புறம் தான என்னையும் சேர்த்து பல நண்பர்களின் மொக்கை திறன் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.. கொஞ்சமா நஞ்சமா, ஏகப்பட்ட காமெடிக்கள் நடந்து இருக்கு... யாரும் ஆப்செண்ட் ஆனா உடனே கால் பண்ணி டேய் ஒழுங்க மொக்கைக்கு வந்து சேரு'னு எல்லாத்துகூடையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டச்'யோட இருக்க வச்சாங்க…. ஆனா இப்ப அப்படி இல்லை.. அக்காவுக்கு பதவி உயர்வு வந்து , அவங்களை , அவங்க பிளாக்யை மொக்கை'யை அடியோடு ஸ்டாப் பண்ண வைத்துவிட்டது.. என்னத்த சொல்ல.. காலம் அதன் போக்குல தானே போகும்…… அக்கா இல்லாதது எங்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு…… நோ சாயிஸ் ஏன்னா, பெப்சி உங்கள் சாய்ஸ் உமாவே இப்போ சன் டிவில இல்லாயாமே? ஹி ஹி ஹி


அக்கா நீங்க நல்லா இருப்பீங்க….வீ மிஸ் யூ இன் பிலாக் உலகத்தில்....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா…அன்பு தம்பிகள்
கோப்ஸ் அண்ட் K4K அண்ணன்.


தலைப்புக்கு விளக்கம்..

இப்ப எல்லாம் நம்ம அக்காவை ஆன்லைன்'ல கூட பிடிக்க முடியவில்லை... அவ்வளவு பிஸி ஆகிட்டாங்க... அது தான் "சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!"

நம்ம k4k பிரதர் சொன்ன தலைப்பு தான் ஹி ஹி ஹி

Tuesday, August 12, 2008

பரப்பரப்பு வச்சிடும்மா ஆப்பு !!!!!!!

இந்த வருஷம் ஆரம்பத்தில இருந்தே என் "MY DAYS" பிஸி Days ah வே போய்கிட்டு இருக்கு…..

சொல்லுறத்துக்கு ஒன்னு இல்லாட்டியும் பல விஷயங்கள் இருக்கு.. ஹி ஹி ஹி.. சரி சரி…

ஆஹா ஆஹா அதுக்குள்ள இந்த வருஷத்தில 7 மாதம் ஓடி போயிட்டு….. என்னத்த செஞ்சோம் இந்த 7 மாத்த்துல'னு பார்த்தா..

கோபால் பற்பொடி மாதிரி உருப்படியா ஒன்னுமே பண்ணவே இல்லை. ஹி ஹி ஹி
(உருப்படி தான் உருப்படியா ஏதாவது செய்யும், உன்னை மாதிரி உருப்படி செருப்படி வாங்காத வரைக்கும் நல்லது தான் அப்படி'னு யாராவது சொல்லுவாங்குவாங்க?????)

இந்த வருஷம் ஆரம்பத்திலையே எனக்கு "Jaundice" வந்து 2 மாதம் படுக்க வச்சிடுச்சி…
அந்த இரண்டு மாதமும், என்ன பண்ணுறது'னு தெரியாமலையே காலை டூ மாலை ஒன்லி டிவி வாச்சிங்'ல இருந்துட்டேன்..பத்திய சாப்பாடு தான் .. நம்ம ரூம் மேட் ஒருத்தர் தான் நமக்கு "dietician"… சும்மா சொல்ல கூடாது நல்லாவே கவனிச்சிக்கிட்டாரு..
டேய் அதை சாப்டாத இதை சாப்டாத'னு , இது தான்டா சந்தர்ப்பம்'னு (தெலுங்கு பட டைட்டில் இல்லைங்கோ) நல்லா (சத்தியமா என்னை பழி வாங்கலை) கவனிச்சிக்கிட்டாரு…இதுல என்ன ஹைலைட்'னா ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல.. ஹி ஹி ஹி
ஆல் இன் தி கேம்…..இன்னொரு ரூம் மேட் தான் எனக்கு குக்.. தினமும் கஞ்சி வச்சி கொடுத்து, பழம் வெட்டி கொடுத்து, என் டார்ச்சரை நல்லாவே தாங்கிக்கிட்டாரு…

ஆனா பாருங்க அந்த ரெண்டு மாதமும், நான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருந்த சமயம், நம்ம ரூம்மேட்ஸ் தினமும் விதம் விதமா சமைச்சி சாப்பிட்டு கிட்டு இருந்த பசங்க நான் நார்மலா ஆன பிறகு காஸ் சிலிண்டரையே கழட்டி வித்துப்புட்டான்ங்கே… என்னத்த சொல்ல
எதுக்கும் எதுக்கோ முடிச்சி போட்டு பார்த்தா, அவங்க பாசமும் நேசமும் பால் பாயாசம் மாதிரி ம்ம்ம்ம்ம்மா
(இந்த ரெண்டு மாத வேலையும் அப்படியே carry forward ஆகி)

அப்பால நல்லா குணமாகி வேலைக்கு வந்தா, Task Force மாதிரி திடீர்'னு ரிஷப்ஷன்'ல ஒரு மாதம் வேலை செய்'னு மேலிடம் உத்தரவு தர,அந்த ஒரு மாதம் ரெண்டு மாதமா ஆகிடுச்சி.. ஹி ஹி……….

அது முடிச்சிட்டு, ஒரு வழியா குறுக்கு வழில நம்ம ஆபிஸ் வந்து சேர, ஏப்ரல் மாதம் ஆகிடுச்சி…. வந்த டயர்ட்ல ஒரு வாரத்தில எங்க தல தேர்தல்'ல போட்டியிட்டாரு…. உனக்கு தேர்தல் முடியிற வரைக்கும் அங்க தான் வேலை'னு ( போஸ்டர், லவுட் ஸ்பீக்கர்'ல கத்துற வேலை எல்லாம் இல்லைங்கோ) சொல்லிட்டாங்க.....
அட்ரா அட்ரா 'னு நல்லா ஓ.பி. அடிக்கலாம்'னு பார்த்தா, அடிக்கிற வெயில்'ல நல்லாவே பட்டைய கிளப்பியாச்சி….

அந்தா இந்தா'னு தேர்தல் முடிஞ்சி (ரிசல்ட் ஊ ஊ ) முடிஞ்சி, சரி வேலைய பார்க்கலாம்'னு நம்ம தொகுதிக்கு வந்து ஒரு வாரத்துல ஆடிட்டிங்க ஆளுங்க வந்து பச்சை தண்ணீர்ல ஜிலேபி சுடாத கதை தான்….

இதோ இன்னைக்கு காலை'ல தான் எல்லாத்தையும் முடிச்சிட்டு மூட்டை( லாப்டாப்) முடிச்சி கட்டிட்டு கிளம்பி போனாங்க…..

அட்ரா அட்ரா இன்னைக்கு வேலையே செய்ய கூடாது'னு இதோ பிலாக்'ல blog எழுத கிளம்பிட்டேன்……

இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(


இந்த இடைப்பட்ட (சிம்ரனை யாரும் நினைக்க கூடாது) மாத'த்துல பல மாற்றங்கள்….

எல்லா நண்பர்களும் நம்ம'ல போல பிஸியாகி பிளாக் எழுதுறதையே நிப்பாட்டிட்டாங்க……. ஏன் எதுக்கு'னு காரணம் கேட்க கூட முடியாம போச்சி……

ரொம்ப நல்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்தவரு சட்டுனு, என்னால இனி கவிதை எழுத முடியாது, எழுத வர மாட்டேங்குது'னு ஆங்கிலத்துல முடிவுரைய முடிச்சி போட்டு முற்று வச்சிட்டு முடிக்க தெரியாம முடிக்கமுடியாம எஸ்கேப் ஆகிட்டாரு….
அவரை பிலாக்,ஜிமெயில்,yahoo.னு எங்கையுமே புடிக்க முடியல……
எதுக்காக இப்படி, என்ன பிண்ணனி'னு அவரு சொல்லாட்டியும், நம்மாலா புரிஞ்சிக்குவோம்'னு ஒரு hint கொடுத்துட்டு போனதை பார்த்தா, அவரை பாராட்ட தான் தோனுது……
அட அது தாங்க, கவிதை எழுத வராத்த்துக்காக அவரு 2 வருஷம் அனுபவச்சி, சிந்திச்சி, ஆர்வத்தோட எழுதுன பிளாக்யை Jst like tht தூக்கி கிடாச்சிட்டு போனாரு பாருங்க, he is really great…
hats off

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடுல்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....அவசரமான உலகத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் பிரேக் கொடுத்தா, அந்த விஷயம் mostly பிரேக் ஆகிடும் தான்….அதே மாதிரி ஒருத்தனுக்கு நேரம் சரி இல்லாட்டி, சத்தியமா அவன் இட்லி மாவு'ல இட்லி சுட்டாலும் ஏன்'டா மைதா மாவுல சுட்ட'னு கேள்வி கேட்க கண்டிப்பா ஆள் இருக்கும்….

அதுவும் குறை சொல்லுறவங்க, நாம நம்ம மேல வச்சி இருக்கிற confident ய விட அவங்க நம்ம மேல ரெம்ப நல்லா வச்சி இருப்பாங்க….

என்னத்த சொல்ல….என்னத்த சொல்ல நல்ல விஷயத்துக்கு வச்சாலும் பரவாயில்லை, தேவையில்லாத எரிச்சல் வர வைக்கிற விஷயத்துக்கு வச்சி என்ன பிரயோஜனம்?

உதாரணம்:- என் நண்பன் நாலு தபா தொடர்ந்து மொபைல்'ல கால் பண்ணுனான்…. என்ன மாயமோ தெரியல, அவன் கால் பண்ணுன நாலு தபாவும் நான் டிரைவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்… இருடா ஆபிஸ் போயிட்டு கால் பண்ணுறேன்'னு சொல்லிட்டு, வேலை எல்லாம் முடிச்சிட்டு அவனுக்கு கால் பண்ண மறந்துட்டேன்….

அடுத்த நாள் அவனே எனக்கு கால் பண்ணி, நீ பெரிய ஆள் ஆகிட்ட, மதிக்க மாட்டேங்குற, பேச விருப்பம் இல்லாட்டி பேச வேணாம்'னு சொல்லுடா, அத விட்டுப்புட்டு அந்தா பண்ணுறேன் இந்தா பண்ணுறேனு அலப்பரைய கொடுக்காத.. சரியா? இனி எனக்கு போன் பண்ணாதை எதுவா இருந்தாலும் இந்தியா வந்து நேர்ல் பேசிக்குவோம்'னு அவனே தீர்ப்பை சொல்லி முடிச்சிட்டான்....

நான் எவ்வளவு சொல்லியும் நான் சொன்னது பொய்'னு அவனே முடிவு பண்ணிக்கிட்டு சே சே… என்ன இது சின்ன புள்ளை தனமா'னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு சிரிக்கிட்டு இருக்கேன்… கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்?

இது ஒரு சின்ன example தான்… இது மாதிரி இந்த 3 மாதத்துல தினமும் ஏதாச்சும் நடக்கும் , அது எனக்கு எதிரா தான் இருக்கும்…

பல குழப்பங்கள், பல திருப்பங்கள், எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாம இருக்கிற வரை நான் தப்பிச்சேன்… ஹி ஹி ஹி.. இந்த நிலையும் கண்டிப்பா மாறும்…. :)

ஆட்டுகறிய மாட்டுகறினு சொல்லி விக்கலாம்.. ஆனால், மாட்டுகறிய வடக்கறி, அடுப்புக்கறி'னு சொல்லி விக்க முடியுமா? ஹி ஹி ஹி


இந்த 4 மாதத்தில் நான் பார்த்த ஒரே படம், தசவதாரம்….
நம்புவோமாக..

ரெம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு
தோஸ்து படா தோஸ்து - சரோஜா..
( என்ன இருக்குனு தெரியல இந்த பாட்டுல….. )


ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது,

இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….

எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை வச்சிக்கிட்டு அப்பீட்டு கொடுக்கிறேன்…

cheers
கோப்ஸ்!!!!!!!!!!!!!!!