Tuesday, August 12, 2008

பரப்பரப்பு வச்சிடும்மா ஆப்பு !!!!!!!

இந்த வருஷம் ஆரம்பத்தில இருந்தே என் "MY DAYS" பிஸி Days ah வே போய்கிட்டு இருக்கு…..

சொல்லுறத்துக்கு ஒன்னு இல்லாட்டியும் பல விஷயங்கள் இருக்கு.. ஹி ஹி ஹி.. சரி சரி…

ஆஹா ஆஹா அதுக்குள்ள இந்த வருஷத்தில 7 மாதம் ஓடி போயிட்டு….. என்னத்த செஞ்சோம் இந்த 7 மாத்த்துல'னு பார்த்தா..

கோபால் பற்பொடி மாதிரி உருப்படியா ஒன்னுமே பண்ணவே இல்லை. ஹி ஹி ஹி
(உருப்படி தான் உருப்படியா ஏதாவது செய்யும், உன்னை மாதிரி உருப்படி செருப்படி வாங்காத வரைக்கும் நல்லது தான் அப்படி'னு யாராவது சொல்லுவாங்குவாங்க?????)

இந்த வருஷம் ஆரம்பத்திலையே எனக்கு "Jaundice" வந்து 2 மாதம் படுக்க வச்சிடுச்சி…
அந்த இரண்டு மாதமும், என்ன பண்ணுறது'னு தெரியாமலையே காலை டூ மாலை ஒன்லி டிவி வாச்சிங்'ல இருந்துட்டேன்..பத்திய சாப்பாடு தான் .. நம்ம ரூம் மேட் ஒருத்தர் தான் நமக்கு "dietician"… சும்மா சொல்ல கூடாது நல்லாவே கவனிச்சிக்கிட்டாரு..
டேய் அதை சாப்டாத இதை சாப்டாத'னு , இது தான்டா சந்தர்ப்பம்'னு (தெலுங்கு பட டைட்டில் இல்லைங்கோ) நல்லா (சத்தியமா என்னை பழி வாங்கலை) கவனிச்சிக்கிட்டாரு…இதுல என்ன ஹைலைட்'னா ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல.. ஹி ஹி ஹி
ஆல் இன் தி கேம்…..இன்னொரு ரூம் மேட் தான் எனக்கு குக்.. தினமும் கஞ்சி வச்சி கொடுத்து, பழம் வெட்டி கொடுத்து, என் டார்ச்சரை நல்லாவே தாங்கிக்கிட்டாரு…

ஆனா பாருங்க அந்த ரெண்டு மாதமும், நான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருந்த சமயம், நம்ம ரூம்மேட்ஸ் தினமும் விதம் விதமா சமைச்சி சாப்பிட்டு கிட்டு இருந்த பசங்க நான் நார்மலா ஆன பிறகு காஸ் சிலிண்டரையே கழட்டி வித்துப்புட்டான்ங்கே… என்னத்த சொல்ல
எதுக்கும் எதுக்கோ முடிச்சி போட்டு பார்த்தா, அவங்க பாசமும் நேசமும் பால் பாயாசம் மாதிரி ம்ம்ம்ம்ம்மா
(இந்த ரெண்டு மாத வேலையும் அப்படியே carry forward ஆகி)

அப்பால நல்லா குணமாகி வேலைக்கு வந்தா, Task Force மாதிரி திடீர்'னு ரிஷப்ஷன்'ல ஒரு மாதம் வேலை செய்'னு மேலிடம் உத்தரவு தர,அந்த ஒரு மாதம் ரெண்டு மாதமா ஆகிடுச்சி.. ஹி ஹி……….

அது முடிச்சிட்டு, ஒரு வழியா குறுக்கு வழில நம்ம ஆபிஸ் வந்து சேர, ஏப்ரல் மாதம் ஆகிடுச்சி…. வந்த டயர்ட்ல ஒரு வாரத்தில எங்க தல தேர்தல்'ல போட்டியிட்டாரு…. உனக்கு தேர்தல் முடியிற வரைக்கும் அங்க தான் வேலை'னு ( போஸ்டர், லவுட் ஸ்பீக்கர்'ல கத்துற வேலை எல்லாம் இல்லைங்கோ) சொல்லிட்டாங்க.....
அட்ரா அட்ரா 'னு நல்லா ஓ.பி. அடிக்கலாம்'னு பார்த்தா, அடிக்கிற வெயில்'ல நல்லாவே பட்டைய கிளப்பியாச்சி….

அந்தா இந்தா'னு தேர்தல் முடிஞ்சி (ரிசல்ட் ஊ ஊ ) முடிஞ்சி, சரி வேலைய பார்க்கலாம்'னு நம்ம தொகுதிக்கு வந்து ஒரு வாரத்துல ஆடிட்டிங்க ஆளுங்க வந்து பச்சை தண்ணீர்ல ஜிலேபி சுடாத கதை தான்….

இதோ இன்னைக்கு காலை'ல தான் எல்லாத்தையும் முடிச்சிட்டு மூட்டை( லாப்டாப்) முடிச்சி கட்டிட்டு கிளம்பி போனாங்க…..

அட்ரா அட்ரா இன்னைக்கு வேலையே செய்ய கூடாது'னு இதோ பிலாக்'ல blog எழுத கிளம்பிட்டேன்……

இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(


இந்த இடைப்பட்ட (சிம்ரனை யாரும் நினைக்க கூடாது) மாத'த்துல பல மாற்றங்கள்….

எல்லா நண்பர்களும் நம்ம'ல போல பிஸியாகி பிளாக் எழுதுறதையே நிப்பாட்டிட்டாங்க……. ஏன் எதுக்கு'னு காரணம் கேட்க கூட முடியாம போச்சி……

ரொம்ப நல்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்தவரு சட்டுனு, என்னால இனி கவிதை எழுத முடியாது, எழுத வர மாட்டேங்குது'னு ஆங்கிலத்துல முடிவுரைய முடிச்சி போட்டு முற்று வச்சிட்டு முடிக்க தெரியாம முடிக்கமுடியாம எஸ்கேப் ஆகிட்டாரு….
அவரை பிலாக்,ஜிமெயில்,yahoo.னு எங்கையுமே புடிக்க முடியல……
எதுக்காக இப்படி, என்ன பிண்ணனி'னு அவரு சொல்லாட்டியும், நம்மாலா புரிஞ்சிக்குவோம்'னு ஒரு hint கொடுத்துட்டு போனதை பார்த்தா, அவரை பாராட்ட தான் தோனுது……
அட அது தாங்க, கவிதை எழுத வராத்த்துக்காக அவரு 2 வருஷம் அனுபவச்சி, சிந்திச்சி, ஆர்வத்தோட எழுதுன பிளாக்யை Jst like tht தூக்கி கிடாச்சிட்டு போனாரு பாருங்க, he is really great…
hats off

வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடுல்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....அவசரமான உலகத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் பிரேக் கொடுத்தா, அந்த விஷயம் mostly பிரேக் ஆகிடும் தான்….அதே மாதிரி ஒருத்தனுக்கு நேரம் சரி இல்லாட்டி, சத்தியமா அவன் இட்லி மாவு'ல இட்லி சுட்டாலும் ஏன்'டா மைதா மாவுல சுட்ட'னு கேள்வி கேட்க கண்டிப்பா ஆள் இருக்கும்….

அதுவும் குறை சொல்லுறவங்க, நாம நம்ம மேல வச்சி இருக்கிற confident ய விட அவங்க நம்ம மேல ரெம்ப நல்லா வச்சி இருப்பாங்க….

என்னத்த சொல்ல….என்னத்த சொல்ல நல்ல விஷயத்துக்கு வச்சாலும் பரவாயில்லை, தேவையில்லாத எரிச்சல் வர வைக்கிற விஷயத்துக்கு வச்சி என்ன பிரயோஜனம்?

உதாரணம்:- என் நண்பன் நாலு தபா தொடர்ந்து மொபைல்'ல கால் பண்ணுனான்…. என்ன மாயமோ தெரியல, அவன் கால் பண்ணுன நாலு தபாவும் நான் டிரைவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்… இருடா ஆபிஸ் போயிட்டு கால் பண்ணுறேன்'னு சொல்லிட்டு, வேலை எல்லாம் முடிச்சிட்டு அவனுக்கு கால் பண்ண மறந்துட்டேன்….

அடுத்த நாள் அவனே எனக்கு கால் பண்ணி, நீ பெரிய ஆள் ஆகிட்ட, மதிக்க மாட்டேங்குற, பேச விருப்பம் இல்லாட்டி பேச வேணாம்'னு சொல்லுடா, அத விட்டுப்புட்டு அந்தா பண்ணுறேன் இந்தா பண்ணுறேனு அலப்பரைய கொடுக்காத.. சரியா? இனி எனக்கு போன் பண்ணாதை எதுவா இருந்தாலும் இந்தியா வந்து நேர்ல் பேசிக்குவோம்'னு அவனே தீர்ப்பை சொல்லி முடிச்சிட்டான்....

நான் எவ்வளவு சொல்லியும் நான் சொன்னது பொய்'னு அவனே முடிவு பண்ணிக்கிட்டு சே சே… என்ன இது சின்ன புள்ளை தனமா'னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு சிரிக்கிட்டு இருக்கேன்… கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்?

இது ஒரு சின்ன example தான்… இது மாதிரி இந்த 3 மாதத்துல தினமும் ஏதாச்சும் நடக்கும் , அது எனக்கு எதிரா தான் இருக்கும்…

பல குழப்பங்கள், பல திருப்பங்கள், எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாம இருக்கிற வரை நான் தப்பிச்சேன்… ஹி ஹி ஹி.. இந்த நிலையும் கண்டிப்பா மாறும்…. :)

ஆட்டுகறிய மாட்டுகறினு சொல்லி விக்கலாம்.. ஆனால், மாட்டுகறிய வடக்கறி, அடுப்புக்கறி'னு சொல்லி விக்க முடியுமா? ஹி ஹி ஹி


இந்த 4 மாதத்தில் நான் பார்த்த ஒரே படம், தசவதாரம்….
நம்புவோமாக..

ரெம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு
தோஸ்து படா தோஸ்து - சரோஜா..
( என்ன இருக்குனு தெரியல இந்த பாட்டுல….. )


ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது,

இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….

எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை வச்சிக்கிட்டு அப்பீட்டு கொடுக்கிறேன்…

cheers
கோப்ஸ்!!!!!!!!!!!!!!!

53 comments:

Divya said...

வாங்கோ வாங்கோ கோப்ஸ் அன்னாச்சி!
ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கிறீங்க.....சூப்பரு!!

Divya said...

\\ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல..\\

ரெண்டு நாளாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பார் உங்க ரூம் மேட்:))

Divya said...

\இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….\

தொடருங்கள்:))

Divya said...

\வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடுல்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....\

:))

CVR said...

///
ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது, ////
எழுத வராமையே இம்புட்டா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Welcome back annachi!! :D

Sumathi. said...

ஹலோ கோப்ஸ்,

வா ராசா வா, எப்டி கீற கண்ணா?

//கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்? ஏதாச்சும் நடக்கும் , அது எனக்கு எதிரா தான் இருக்கும்…//

அப்படியா?ஆமாமாமாம், அதனலதானே நீ என்கிட்ட பேசாம டிடி அக்கா கிட்ட மட்டும் பேசற, கேட்டா ஹி ஹி ஹி...அப்படியா ன்னு அவங்க கிட்டயே சொல்லறே,
என் கிட்ட வேற மாதிரி ரீலு சுத்தறே...
ம்ம்ம் என்னமோப்பா...ஒன்னும் பிரியல.
நல்லா இரு..

k4karthik said...

தம்பி இந்தே உலகத்துலே தான் இருக்க போல....

k4karthik said...

//இந்த வருஷம் ஆரம்பத்தில இருந்தே என் "MY DAYS" பிஸி Days ah வே போய்கிட்டு இருக்கு….//

யு மீன் சனவரி ஒன்னு..

k4karthik said...

//சொல்லுறத்துக்கு ஒன்னு இல்லாட்டியும் பல விஷயங்கள் இருக்கு.. ஹி ஹி ஹி.. சரி சரி…//

ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஅ ஆரம்பிசுடான்யா

k4karthik said...

//இதுல என்ன ஹைலைட்'னா ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல.. //

அந்த மகாராசன் நல்லா இருக்கனும்

k4karthik said...

//ரிஷப்ஷன்'ல ஒரு மாதம் வேலை செய்'னு மேலிடம் உத்தரவு தர,அந்த ஒரு மாதம் ரெண்டு மாதமா ஆகிடுச்சி.. ஹி ஹி………. //

ஏன்டா.. அங்க நீ ரிஷப்ஷன் வேலை மட்டுமா பார்த்த???

k4karthik said...

//இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(//

இதுவே பெரிய டுகால்டி

k4karthik said...

இது உனக்கு தான் டா....

k4karthik said...

//ரொம்ப நல்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்தவரு சட்டுனு, என்னால இனி கவிதை எழுத முடியாது, எழுத வர மாட்டேங்குது'னு ஆங்கிலத்துல முடிவுரைய முடிச்சி போட்டு முற்று வச்சிட்டு முடிக்க தெரியாம முடிக்கமுடியாம எஸ்கேப் ஆகிட்டாரு….//

நீ 'காபி வித் கோப்ஸ்' க்கு கேள்வி கேட்டப்போ ஓடி போனவன் தான்...

பாவம்.. அவனுக்கு என்னே பிரச்சனையோ...

k4karthik said...

//எதுக்காக இப்படி, என்ன பிண்ணனி'னு அவரு சொல்லாட்டியும், நம்மாலா புரிஞ்சிக்குவோம்'னு ஒரு hint கொடுத்துட்டு போனதை பார்த்தா, அவரை பாராட்ட தான் தோனுது……//

கொஞ்சம் விளக்கி சொல்றியா?

k4karthik said...

//அட அது தாங்க, கவிதை எழுத வராத்த்துக்காக அவரு 2 வருஷம் அனுபவச்சி, சிந்திச்சி, ஆர்வத்தோட எழுதுன பிளாக்யை Jst like tht தூக்கி கிடாச்சிட்டு போனாரு பாருங்க, he is really great…
hats off//

போனது சரின்னு சொல்ல வரியா?? ஏன்?

k4karthik said...

//கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்?//

தெரியும்டா... இந்தே டயலாக் எதுக்கு வச்சேன்னு...

k4karthik said...

//ரெம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு
தோஸ்து படா தோஸ்து - சரோஜா..
( என்ன இருக்குனு தெரியல இந்த பாட்டுல….. ) //

பாட்டுல என்னே இருக்கும்.. மேட்டு இருக்கும், சரணம் இருக்கும், பல்லவி இருக்கும்... இது தெரியாம என்னெத்த நீ பாட்டு கேக்குறே....???

k4karthik said...

//ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது,//

முதல்ல பென்சிலை நல்லா சீவு...

k4karthik said...

ரவுண்டா இருபது போட்டு போறேன்...

G3 said...

Welcome

G3 said...

back

G3 said...

gops

G3 said...

brother

G3 said...

:))

Quarter century :D

ஷாலினி said...

//ஆஹா ஆஹா அதுக்குள்ள இந்த வருஷத்தில 7 மாதம் ஓடி போயிட்டு….. என்னத்த செஞ்சோம் இந்த 7 மாத்த்துல'னு பார்த்தா//

antha 7 maatham story ya...vokay..vokay.. nadula paatu, fight ellam varuma?:P

ஷாலினி said...

//உருப்படி தான் உருப்படியா ஏதாவது செய்யும், உன்னை மாதிரி உருப்படி செருப்படி வாங்காத வரைக்கும் நல்லது தான் அப்படி'னு யாராவது சொல்லுவாங்க?????)//

ha ha.. yaaravaaatha..illa ellaruma??? he he

ஷாலினி said...

//அந்த இரண்டு மாதமும், என்ன பண்ணுறது'னு தெரியாமலையே காலை டூ மாலை ஒன்லி டிவி வாச்சிங்'ல இருந்துட்டேன்..//

yen? Tv la, enna panrathu nu solvaanga nu paathutey iruntheengala? :P

ஷாலினி said...

//அவங்க பாசமும் நேசமும் பால் பாயாசம் மாதிரி ம்ம்ம்ம்ம்மா//

cho chweeeeeeettttt... :P

ஷாலினி said...

//இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(
//

ennavo december aana maari polambureenga... ithoda.. inum 5 months iruku.. :)

ஷாலினி said...

//உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....//

100% correckitu :) satchithanandha swami ku J!!!

ஷாலினி said...

//அவசரமான உலகத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் பிரேக் கொடுத்தா, அந்த விஷயம் mostly பிரேக் ஆகிடும் தான்….//

entha oru vishayamum iron pola strong ga iruntha..evlo breakuu kuduthaaalum break aagathu.. unless u leave it carelessly.thats when it rusts and breaks :)

vanthathuku oru thathuvam sollama pona enaku no thookam...athan :P

ஷாலினி said...

//ஆட்டுகறிய மாட்டுகறினு சொல்லி விக்கலாம்.. ஆனால், மாட்டுகறிய வடக்கறி, அடுப்புக்கறி'னு சொல்லி விக்க முடியுமா?//

yemaaravanga irukavaraikum...intha maari kooda yemaathalam.. who knows?

ஷாலினி said...

//இந்த 4 மாதத்தில் நான் பார்த்த ஒரே படம், தசவதாரம்….
நம்புவோமாக..
//

which is equal to seeing 10 kamal movies...:)

ஷாலினி said...

//ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது, //

mothalla ink podunga..romba naal aachu la..kaanju poyirukum :P

ஷாலினி said...

//இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….//

intha sevai blog ulaguku romba thevai :)

ஷாலினி said...

//Divya said...
வாங்கோ வாங்கோ கோப்ஸ் அன்னாச்சி!
ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கிறீங்க.....சூப்பரு!!

//

alukaalu annachi nu solreenga...kekumbothey seevanum pola iruku :P

velila mullu maari thondrinaalum ulla fulla sweet nu thaney solla vantha? ;)

My days(Gops) said...

@திவ்யா:- வருவோம்'ல ஹி ஹி வந்துட்டோம் ல :)


//ரெண்டு நாளாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பார் உங்க ரூம் மேட்:))//

எல்லாமே தெளிவா தான் இருக்காங்கே..


//தொடருங்கள்:))//
கண்டிப்பா.. :)

:))

My days(Gops) said...

@CVR:- //எழுத வராமையே இம்புட்டா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Welcome back annachi!! :D
//

தம்பி எப்படிப்பா இருக்கீங்க?

நன்றி நன்றி

My days(Gops) said...

@சுமதி அக்கா:- //வா ராசா வா, எப்டி கீற கண்ணா?//

யக்கா நான் நல்லா இருக்கேனாக்கும்...


//அதனலதானே நீ என்கிட்ட பேசாம டிடி அக்கா கிட்ட மட்டும் பேசற, கேட்டா ஹி ஹி ஹி...அப்படியா ன்னு அவங்க கிட்டயே சொல்லறே,
//

என்னாக்கா என்னை நீங்க நம்பவே மாட்டேங்குறீங்க....:(

My days(Gops) said...

@k4k:- //தம்பி இந்தே உலகத்துலே தான் இருக்க போல//

அண்ணா ஆமா அண்ணா இப்ப தான் எண்ட்றீ கொடுத்தேன். ஹி ஹி

//யு மீன் சனவரி ஒன்னு//
ஐ நாட் மீன். ஐ அம் ய மனுசன் :)

My days(Gops) said...

@K4K:- //ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஅ ஆரம்பிசுடான்யா //


ஹி ஹி ஹி எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)


//அந்த மகாராசன் நல்லா இருக்கனும் ///
வுட்டா இண்ட்ரோ பாட்டே வைப்பீங்க போல?

My days(Gops) said...

@K4K:- //ஏன்டா.. அங்க நீ ரிஷப்ஷன் வேலை மட்டுமா பார்த்த???
//

நீங்க இப்படி மொட்டையா கேட்டா படிக்கிறவங்க நான் ஓட்டடையும் சேர்த்து இல்ல அடிச்சேனு நினைச்சிக்க போறாங்க????


//இதுவே பெரிய டுகால்டி //
சரி சரி :)


//இது உனக்கு தான் டா....//
நம்மை போல நெஞ்சம் கோண்ட.. :)

My days(Gops) said...

@K4K:- //நீ 'காபி வித் கோப்ஸ்' க்கு கேள்வி கேட்டப்போ ஓடி போனவன் தான்... //

இன்னும் நியாபகம் இருக்கா உங்களுக்கு ஹி ஹிஹி

//பாவம்.. அவனுக்கு என்னே பிரச்சனையோ... //

அதுவும் ரைட் தான்....

//கொஞ்சம் விளக்கி சொல்றியா? /
scotchbrite iruka?

My days(Gops) said...

@K4K:- //போனது சரின்னு சொல்ல வரியா?? ஏன்?//

கண்டிப்பா சரி னு நான் சொல்லவே மாட்டேன்... ஹி ஹி ஹி ஹி....

//தெரியும்டா... இந்தே டயலாக் எதுக்கு வச்சேன்னு...
//

நோ உள்குத்தே..... :)//பாட்டுல என்னே இருக்கும்.. மேட்டு இருக்கும், சரணம் இருக்கும், பல்லவி இருக்கும்... இது தெரியாம என்னெத்த நீ பாட்டு கேக்குறே//
ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஅ ஆரம்பிசுடான்யா

//முதல்ல பென்சிலை நல்லா சீவு...//
சீப்பு இல்லையே... :D


20 க்கு நன்றியை

My days(Gops) said...

@G3:- நன்றி அக்கா.

My days(Gops) said...

@ஷாலினி:- /antha 7 maatham story ya...vokay..vokay.. nadula paatu, fight ellam varuma?:P//

வுட்டா டிஸ்கோ வையும் கேட்பீங்க போல? ஹி ஹி


/ha ha.. yaaravaaatha..illa ellaruma??? he he//

எல்லோரும் இருக்கிற யாரவதுல :)

// enna panrathu nu solvaanga nu paathutey iruntheengala? :ப்//
:O இல்லைங்க பண்ணுவாங்கனு பார்த்துக்கிட்டே இருந்துட்டேன்...

My days(Gops) said...

@ஷாலினி:_ //ennavo december aana maari polambureenga... ithoda.. inum 5 months iruku.. :)//

ஒரு சில விஷயங்கள் ரேஸ் மாதிரி, ஸ்டார்டிங்களையே லீட் இல்லாட்டி கடைசி வரைக்கும் லீட்ல வரவே முடியாது.. ஹி ஹி

//100% correckitu :) satchithanandha swami ku J!!!//

நன்றியே....

My days(Gops) said...

@ஷாலினி:- //entha oru vishayamum iron pola strong ga iruntha..evlo breakuu kuduthaaalum break aagathu.. unless u leave it carelessly.thats when it rusts and breaks :)//

அப்படி இல்லைங்க....

இரும்பு என்ன தான் உடைந்தாலும், அதை உருக்கினா தான் மவுசு.. ஹி ஹிஹி


///yemaaravanga irukavaraikum...intha maari kooda yemaathalam.. who knows?//

yemaravanga ellla idathulaium yemaaara maatanga ..:)


//which is equal to seeing 10 kamal movies...:)//
no = 10 small naaadagam... he he he he

//mothalla ink podunga..romba naal //
he he he he he oruthar pencil, neeenga pen nu ninaichi solliteeenga.vogay vogay

My days(Gops) said...

@shaalini:_ //kekumbothey seevanum pola iruku :P
//

????? ennatha??? edha vachi???? edhuku????//velila mullu maari thondrinaalum ulla fulla sweet nu thaney solla vantha? ;)///

oh neeenga pinapple ah soneeengala?

aiyo aiyo.. london kaaaaravanga ila.. .adhu thaaaaan

Divya said...

\\ ஷாலினி said...
//Divya said...
வாங்கோ வாங்கோ கோப்ஸ் அன்னாச்சி!
ரொம்ப நாள் கழிச்சு போஸ்ட் போட்டிருக்கிறீங்க.....சூப்பரு!!

//

alukaalu annachi nu solreenga...kekumbothey seevanum pola iruku :P

velila mullu maari thondrinaalum ulla fulla sweet nu thaney solla vantha? ;)\\

:)))

.:: மை ஃபிரண்ட் ::. said...

எட்டு மாத அப்டேட்ஸை ஒரே பதிவா போட்ட ஒரே பதிவர் சச்சின் கோப்ஸ்தான்.. ;-)

வாழ்க வாழ்க.. ;-)

Divya said...

aduththa post........innum ettu maasam kalichchu thana??