Thursday, December 31, 2009

வருஷம் முடிஞ்சி போச்சு

என்னத்த சாதிச்சோம்'னு நினைக்கிறதுக்கு முன்னாடி என்னத்த சாதிக்க போறோம்'னு யோசிக்க ஆரம்பிக்கிறத்துக்குள்ள கொய்யாலே கொய்யாலே'னு வருஷமே அவரசமா ஓடிடுது…..வருத்தபடுறதுக்கு ஒன்னுமே இல்லை.. ஏன்னா நாட்டாமை காலத்துக்கு முன்னால இருந்து இப்ப வரைக்கும், என்னைக்குமே நாம தான் பஸ் ஸ்டாப்'ல பொண்ணுங்களுக்காக நிக்கனும்., நம்மளுக்காக அவங்க யாரும் நிக்க மாட்டாங்க.. ஹி ஹி ஹி…


எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. தனக்கு'னு வந்துட்டா தான் தன் சுயரூபம் தெரிய வரும்.. என்னையும் சேர்த்து தான்…
இந்த வருஷம் நான் கத்துக்கிட்ட பாடம்.. ஒருத்தருக்கு உதவி செய்ய போனா, ஆரம்பம் எப்படி வேணுமானாலும் இருக்கலாம்., ஆனால், முடிவு கண்டிப்பா அவங்களுக்கு சாதகமா இல்லாட்டி, மவனே நமக்கு சங்குதான்…. இங்க ratio analysis எல்லாம் வேலைக்கு ஆகாது.. நான் ஆரம்பத்துல்ல 80% செஞ்சேன், கடையிசிலே சந்தர்பமே அமையல உதவி செய்யிறத்துக்கு'னு எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஹி ஹி ஹி ஹி, எனக்கு கிடைச்ச அவார்ட் நன்றி கெட்டவன்... அது வரைக்கும் என் கூட நல்லா இருந்தவங்க எல்லோரும் காரணமே இல்லாம ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க....அவங்கள சொல்லி குற்றம் இல்லை.. அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணுனா அவங்களுக்கும் அதே அவார்ட் தான்....practicality ரொம்ப தெரிஞ்சவன் நான். ஆனால் அவங்க மேல உள்ள அன்பை அவங்க புரிஞ்சிக்கவே இல்லை....சொன்னாலும் அலட்டிக்கவே இல்லை... அது என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி...actually, i hate to lose peoples. but, நடக்கிறது நடக்காம இருக்காது.... அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். இந்த நிலையும் மாறும்'னு நானும் ஒதுங்க ஆரம்பிச்சிட்டேன்.... நீச்சல் தெரிஞ்சவன் கடலை பார்க்கிறத்துக்கும், நீச்சல் தெரியாதவன் கடலை பார்க்கிறத்துக்கும் வித்தியாசம் ரொம்பவே இருக்கு. அனுபவம் தான் எப்போதுமே நல்ல பாடம்...Realities .. அளவோட இருந்துட்டா அமிர்தம் நஞ்சாக மாற வாய்பே இல்லை......


இந்தியா'க்கு போனது தான் ஹைலைட்'யே… எப்போதும் விடுமுறைக்கு மட்டுமே போன நான், இந்த தடவை பல் சிகிச்சை'காக போனேன்… ஏன்டா டேய், படிக்கிறதுக்கும் பல்லுக்கும் மட்டும் தான் இந்தியா'வா? அப்படி'னு கேட்காதீங்க….. ஒகே?
பல்லு வலியும் வயித்து வலியும் தனக்கு வந்தா தான் தெரியும்'னு சும்மா வா சொல்லி இருக்காங்க.. ஒரு நாள் திடீர்'னு பல்லு வலி ஸ்டார்ட் ஆகிடுச்சி…நானும் என்னமோ பண்ணி பார்த்துட்டேன் ஒன்னும் கதைக்கு ஆகல….. Night full ah செம வலி.. தூங்கவும் முடியல… கூடவே தலைவலியும் வந்துடுச்சி..... காலங்காத்தால முதல் வேலையா அரசு மருத்துவமனைக்கு போனா ஸ்ஸ்ஸ்ப்பா பல்லை கூட பார்க்காம, panadol மாத்திரை கொடுத்தாங்க பாருங்க, சும்மா நொந்திட்டேன்..... சரி, பிரைவேட் கிளினிக்'கு போகலாம்'னா அவன் சொன்ன பில்லுக்கு நம்ம சொத்தையே எழுதி வச்சா தான் உண்டு..... நம்ம கிட்ட இருக்கிறதோ சொத்தை மட்டும் தான்.. அதுவும் பல்லு'ல அதை வச்சிக்கிட்டு என்ன பண்ணுவான் அவன் பாவம்.. அதனால், புக் பண்ணுடா டிக்கெட்டை'னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, கம்பெனி'ல மூச்ச்சை போட்டு ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்.அடுத்த நாளே, பெசண்ட் நகர்'ல இருக்கிற ஒரு நல்ல டாக்ட்ரை எங்க அண்ணன் refer பண்ண day 3'ல இருந்து டிரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணியாச்சி….. டாக்டர் கிட்ட் சொன்னது ஒன்னே ஒன்னு தான், சார் திரும்பி நான் குவைத் போனா வலி வந்துட கூடாது'னு தான்….கிட்ட தட்ட 22 நாள் அங்க போகனும், ஒரு மினி சர்ஜரி, 64 தையல் வாய்க்குள்ள, யப்பா 45 நாள் நீர் ஆகாரம் மட்டுமே…. வாயை திறந்தா எங்க தையல் அப்பீட் ஆகிடும்'னு ஸ்டிரா வச்சே டீ, கஞ்சி எல்லாத்தையும் குடிச்சாச்சி ஹி ஹி ஹி…. எங்க போனாலும் நோ மொக்கையிஸ்…. நல்ல அனுபவமா இருந்துச்சி…… எந்த நண்பர்களையும் பார்க்கல, யார் வீடுக்கும் போகல, அப்படியே போனாலும், தண்ணி கூட குடிக்காம வூட்டுக்கு வந்துடுவேன்.தையல் பிரிச்சி நாலாவது நாள் இங்க வந்துட்டேன்…… இப்ப நோ வலி, ஆனால் soft ஆன சாப்பாடு மட்டுமே eating.. ஒருத்தனுக்கு பல் எவ்வளவு முக்கியம்'னு எனக்கு இப்போ புரியுது ஹி ஹி ஹி..

நம்ம ஊருல பட்டைய கிளப்புறது இப்போ ஹைவே'ஸ் ரோட் தான்…. Mostly, தமிழநாடு முழுசா 2 way ரோட் தான்.. சான்சே இல்லை…. திருச்சி டூ சென்னை பஸ்'லையே 5 hrs தான்… கார்'ல இந்த தபா நான் சென்னை டூ திருச்சி 3.45 hrs'ல போய் ரெக்கார்ட் வச்சிட்டேன்.. My previous best was 4.40 hrs.. அதே மாதிரி திருச்சி டூ மதுரை அண்ணாநகர் ஒன்லி 1.35 hrs prevoius best 2.20hrs.இது என்ன சின்ன புள்ளைதனமா'னு நினைக்காதீங்க, வாழ்க்கை'ல வரலாறு ரெம்ப முக்கியம்.. என்ன நான் சொல்லுறது?


மஹாலெட்சுமி….எங்க அப்பா எனக்காக அலைஞ்சி திரிஞ்சி வாங்கின கார் இது…. Actually எனக்கு இந்த கார்'னா ரெம்ப இஷ்டம்.. ஏன்'னு தெரியாது எனக்கு இந்த காரையும் புடிக்கும், நடிகை நதியா'வையும் புடிக்கும்…. அந்த காலத்துல (1985 ) இந்த கார் மாதிரி தான் நதியா எல்லா
படத்துலையும் ஒட்டிட்டு வருவாங்க… சோ, காரணம் தெரியாம'லையே இவங்க ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கும்..
இந்த கார் 1985'ல வந்த கார்.. அதனால எல்லா இடத்துலையும் இந்த காரை பார்க்க முடியாது.. நானும் 3 வருஷமா இந்த மாடல் காரை தேடி தேடி இப்ப தான் கிடைச்சி இருக்கு…. இத என் டேஸ்டுக்கு அடுத்த வருஷம் தான் ரெடி பண்ணனும்….இந்த கார்'ல தான் சென்னை'ல வலம் வந்துக்கிட்டு இருந்தேன்……லிட்டருக்கு 18கிமி கொடுக்கும்…. 75ரூபாய்'க்கு ஒரு FM player வாங்கி மாட்டினேன்…
கார்'ல ஏசி இல்லாத குறையை நம்ம கார்'ல உள்ள கரல் புடிச்ச ஓட்டைகள் நிறைவேத்திவிடும்.. Front bonnet ய திறந்தா உள்ள எட்டு கால் பூச்சி வீட்டை பார்க்கலாம் வித் வேப்பை மரம் தோட்ட்த்தோடு…..உங்களுக்கு கொடுப்பினை இருந்தால் பல்லி கூட பார்க்கலாம் ஹி ஹி ஹி…
ஒரு தபா பெஸண்ட் நகர்'ல இந்த கார்'ய பார்க் பண்ணிட்டு கீரின் வேய்ஸ் கிட்ட நண்பர்கள் கூட பேசிக்கிட்டு இருக்கும் போது, டேய் அங்க பாருடா சின்ன மணி குயிலே பாட்டுல வர கார், இத எல்லாம் இன்னும் ரோட்ல ஓட்டிக்கிட்டு இருக்காங்கே'னு என்னை பார்த்து சொன்னாங்க பாருங்க…. கடைசியில அவங்கள அந்த கார்'ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போய் அவங்கள சமாதனம் படுத்திட்டேன்… உண்மைய சொல்லனும்'னா இந்த கார் 100% pollution free car…. அப்படி maitain பண்ணி இருக்காங்க…
சென்னை'ல இருந்து திருச்சிக்கு இந்த காரை கொண்டு போனேன்… 8 மணி நேரம் ஆச்சி….. டாப் ஸ்பீட் 90கிமி வரைக்கும் போனது..எங்க போனாலும் என்னையும் இந்த காரையும் திரும்பி பார்க்காதவங்களே இல்லை…. எல்லா முகத்துலயும் ஒரு சிரிப்பு வரும் பாருங்க.. ஹி ஹி ஹி…….never mind, நமக்கு புடிச்சத செஞ்சா தப்பு ஒன்னும் இல்லைங்களே. என்ன நான் சொல்லுறது…நம்ம் நண்பர்களை இந்த கார்ல பார்க்க போன், வந்துடான்'டா கரக்காட்டகாரனு நக்கல் அடிப்பாங்க…. ஹி ஹி ஹி…. Publicity ஒசி'ல கிடைக்கும் போது எதுக்கு தடுக்கனும்… ஹி ஹி ஹி

இந்த தபா நண்பர்கள் வற்புறுத்தியதால் (cough cough) ஒரு புதன்கிழமை டிஸ்கோ'க்கு போனேன்.. புதன்கிழமை லேடிஸ்'க்கு free entry ஆம்..
ஒரு couples போனா, stag'ah ஒருத்தரை உள்ள விடுவாங்கலாம்.. அதனால, நானும் உள்ள பூந்துட்டேன்… கண்டிப்பா எனக்கு கட்டிணம் உண்டு..
அங்க போனா பரவாயில்லை இப்ப இருக்கிற generations நல்லாவே இருக்காங்க.. * சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை*… .

அப்போ தான் அங்க ஒரு famous Celebrity ah பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது, படத்துல பார்க்கிறதை விட ரெம்ப அழகா இருந்தாங்க…அதுவும் லட்சனமா சிரிச்ச முகத்தோட….அவங்களா வந்து என் கிட்ட பேசுனாங்க'னு சொன்னா நம்புவீங்களா? No choice you have to … .

ரெம்ப கூலா பேசினாங்க…. சும்மாவே நான் மொக்கை சாமி, விடுவேனா? சுமார் 45mins செம மொக்கை….. So nice of her, என்னையும் மதிச்சி பேசினாங்களே…. ஹி ஹி ஹி..அதுக்கு அப்புறம் இன்னொரு hotel'ku கூட்டிட்டு போனாங்க நம்ம தோழர்கள் தான், அங்க முடிஞ்சோன நேரா சாப்ட போனோம்…. அதிகாலை 3 மணிக்கும் சென்னை'ல ghee roast கிடைக்குத்தப்பா……..


ஏர்டெல்

ஏர்டெல் சேவை ரெம்பவே சுப்பர்…. இண்டர்நேஷனல் ரோமிங்கல sms receiving free… am totally enjoying the service….இந்தியா ஸிம் தான்.. பட் இங்க free ah am receving the sms.. நல்லா இருப்பாங்கே…forward sms ah வந்து பட்டைய கிளப்புது….. உலகம் ரெம்பவே உள்ளங்கைக்கு வந்திடுச்சி….

என்னடா நடக்குது இங்க என் கூட இருந்தவ எங்க

Good girls gives u happiness.Bad girls gives u experience.. So enjoy every girlfriends :) ….. எனக்கு வந்த sms'ல இதுவும் ஒன்னு… ஹி ஹி ஹி….


அவ்வளவு தாங்க இன்னைக்கு மொக்கை.. வருஷத்துல கடைசி நாள்.. ஒரு போஸ்ட் போட்டாசி….

அடுத்த வருஷம் எல்லாத்தையும் மீட் பண்ணுறேன்…..

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்…

cheers
gops13


தமிழ் பிழை இருந்தால் kindly excuse plz…… ஒழுங்கான தமிழ் சாப்ட்வேர் இருந்தால் லிங்க் அனுப்புங்க பிளிஸ்…

Thursday, August 13, 2009

மொக்கைனா சும்மா இல்லை.....

எல்லோரும் இந்த மொக்கைய படிச்சி முடிச்சிட்டு இப்படி முக்காடு போட்டுட்டு போங்க…பொறுக்கி:- சார், உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை

கிறுக்கன்: ஏன்? என் பெயர் பந்த் இல்லையே…

பொறுக்கி:- உங்க பெயரை பற்றி நான் கேட்கவே இல்லையே?

கிறுக்கன்: இல்ல, பந்த்'னா தான் எதுவுமே ஓடாது.. அதான்..

பொறுக்கி:- ஹி ஹி உண்மைக்குமே உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை சார்

கிறுக்கன்: வேணும்னா ரெண்டு ஆட்டோ'வ கேப்'ல விட்டு ஒட விடுவோமா?

பொறுக்கி:- விட்டா, கெடா வெட்டி பொங்கல் வைப்பீங்க போல… ஓவர் பால் போட்டா, பாயாசத்துக்கு நல்லது இல்லை…..

கிறுக்கன்: அய்யோடா, சுடு தண்ணிர் வைக்கிறவன் எல்லாம் இப்போ பால் பாயாசம் ரேஞ்ச்'க்கு போயிட்டான்…. என்னத்த சொல்ல..

பொறுக்கி:- நீங்க ஒன்னுமே சொல்ல வேணாம் சார்…….சும்மா இருந்தீங்கனாலே போதும் :)

கிறுக்கன்: சும்மா இருக்கிறது'னா நான் வீட்லையே இருந்து இருப்பேன்'ல எதுக்கு வர சொன்ன?

பொறுக்கி:- கொஞ்சம் தனியா பேசனும் அதுதான்…….

கிறுக்கன்: தனியா பேசனும்னா பாத்ரூம் உள்ளே போய் வாஷ்பேசினோட பேசிக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு..

பொறுக்கி:- சார், என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா FM மாதிரி சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க...

கிறுக்கன்: ஏன் சொல்ல மாட்ட, முதல்'ல என்னை வர சொன்ன, அப்புறம் தனியா பேசனும்'ன, இப்ப சம்பந்தம் கூட பேசனும்ங்கற….முதல்'ல ஒரு முடிவுக்கு வா பேசிக்கலாம்

பொறுக்கி:- சார், முதல்'யே எப்படி சார் முடிவு வரும்?

கிறுக்கன்: ஏன் வராதா?

பொறுக்கி:- கண்டிப்பா வராது, ஏன்னா முதல்'ல வந்தா முன்னுரை கடைசில வந்தா

கிறுக்கன்: கட்டுரையா?

பொறுக்கி:- இப்ப தெரியுது, எப்படி நீங்க பத்தாங் கிலாஸை கூட தாண்டலைனு.…

கிறுக்கன்: ஏன் அந்த கட்டுரை'ல எழுதி இருக்காங்களா என்னை பற்றி?

பொறுக்கி:- அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு? போடுறது மொக்கை அது என்னை தவிற வேற யாருக்குமே புரியாது….

கிறுக்கன்: ஸ்ஸஸஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா… டேய் நீ தனியா பேசுவியோ, இல்ல தண்ணிய போட்டுட்டு பேசுவியோ எனக்கு தெரியாது. நான் கிளம்புறேன் இப்போ..

பொறுக்கி:- பிரதர் கொஞ்சம் நேரம் லொட லொட'னு ஸ்டார்ட் பண்ணுன டாடா வேன் மாதிரி இல்லாம அமைதியா இருந்தீங்கனா.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுவேன்..

கிறுக்கன்: டேய், அவ்வளவு ஈசியா நீ சொல்லிட்டு போயிட முடியாது சொல்லிட்டேன்…

பொறுக்கி:- நான் தானே சொல்லுறேனு சொன்னேன்? இப்போ நீங்க சொல்லிட்டேனு சொல்லுறீங்க?

கிறுக்கன்: எனக்கு குழப்பமா இருக்கா இல்லை நீ என்னை குழப்புறீயானே தெரிய மாட்டேங்குது…

பொறுக்கி:- நீங்க குழம்பி இருக்கீங்க அதுதான்…

கிறுக்கன்: ?????

பொறுக்கி:- கல்யாண வீட்டுல மூனாவது பந்திக்கு மேல சாம்பார் கேட்டா, எப்படி கரண்டி மட்டும் வாலி'ல இருந்து எட்டி பார்க்குமோ அதே மாதிரி, நான் உங்க கிட்ட எப்படி இருக்கீங்கனு கேட்டா நீங்க உங்க பாட்டிக்கு நாக்கு'ல சுளுக்குனு பதில் சொல்லிறீங்க.. விளங்குமா? …

கிறுக்கன்: பதஸ்டத்தை கொஞ்சம் லெஸ் பண்ணிக்கோ

பொறுக்கி:- ஒரு அவசரத்துக்கு உங்க கிட்ட பேச முடியுதா? அப்படியே பேசுனாலும் ஒரே அட்டம்ட்'ல புரிஞ்சிடுமா உங்களுக்கு? எப்படி சார் இப்படி ?

கிறுக்கன்: சரி சரி கொஞ்சம் சிரி.. எதுக்கு இவ்வளவு சீரீயஸ்? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? சொல்ல வந்ததை சொல்லு

பொறுக்கி:- அப்பாடா.. கடைசியா ஒரு பிரேக் கொடுத்தீங்களே.. நன்றி. இதோ ஐந்து நிமிஷிசத்தில சொல்லிட்டு கிளம்பிடுறேன்……

கிறுக்கன்: பிரதர், நீங்க சொல்லிட்டு அவ்வளவு சுலபமா இங்க இருந்து கிளம்பிட முடியாது…

பொறுக்கி:- ஏன் ??????

கிறுக்கன்: ஏன்னா இது உங்க வீடு, நான் தான் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்.. சோ, நீங்க சொல்லி முடிச்சோன, நான் தான் கிளம்பனும். நீங்க இல்லை… புரிஞ்சதா?????? நீங்க சொல்லிட்டு கிளம்பி போனா, நான் எங்க போறது?

பொறுக்கி:- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
துப்புங்கடா இந்த மொக்கைக்கு காரி……………கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அவ்வளவு தாங்க… இதை விட மொக்கை யாரால போட முடியும்….. இது மாதிரி கண்டிப்பா இனிமேல் தொடரும்……

மொக்கையுடன்
கோபி

Wednesday, August 05, 2009

Expire ஆகல இன்னும் இந்த எருமை :)

வணக்கம் வந்தனம் என் நெற்றியில் இல்லை சந்தனம்…
எத்தனை பேருக்கு என்னை இன்னும் நியாபகம் இருக்கு'னு தெரியல. பட் எனக்கு எல்லாத்தையும் நியாபகம் இருக்கு…எப்படா கஜினி ஆன? அப்படி'னு நீங்க கூவுறது எனக்கு கேட்க்குது..அப்படி எல்லாம் இல்லை…..

வேலை ஜாஸ்தி இல்லாட்டியும் நான் ஆபிஸில காலை 9 டூ மாலை 7.30 மணி நேரம் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. நடுவுல லஞ்ச் பிரேக் மதியம் 1 டு 2..
வாரத்துல ஜந்து நாள் இப்படி தான் ஓடுது வாழ்க்கை… மீதி ரெண்டு நாள் விடுமுறை….அதுலையும் வேலை கண்டிப்பா இருக்கும்…

இப்ப எதுக்கு இதை சொல்லுறேனா, கடந்த 7 மாசமா ஆபிஸ்'ல low profile staff'க்கு இனையதளத்தை கட் பண்ணிட்டாங்க…கேட்டா வேலை நேரத்துல வேலை கெடுதாம்… என்னங்கடா இது இத்தனை வருஷம் இல்லாம இப்ப உங்களுக்கு வேலை கெடுது? சத்தமா கேட்க தான் தோணுது பட் financial crisis'ல நாமலும் ஏன் இன்னொடு victim ஆகனும்'னு பச்சை தண்ணியில பல்லை நனைத்து கூல்' அப்படி சிரிச்சிக்கிறோம்....IT கிட்ட டகால்டி காட்டி எனக்கு மட்டும் இனையதளத்தை கொடுடா'னு கேட்டா, முக்கியமா உனக்கு இனையதளத்தை கொடுத்தா, எனக்கு கண்டிப்பா வேலை போகும்'னு எனக்கு மேலிடம் லெட்டரே அனுப்பி இருக்காங்க'னு ரெம்ப பரிதாபமா நோ சொல்லிட்டான்.. அட அட நம்ம புகழ் எங்க வரைக்கும் போய் இருக்கு….. வாழ்க்கை இனையதளம் இல்லாம ரெம்பவே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி…..எவ்வளவு நேரம் தான் வேலை செய்யறது (நடிக்கிறது)? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை, சொல்லவும் யாரும் இல்லை….. நெருங்கிய நண்பர்களிடம் இருந்து ஆரம்பத்துல என்னடா ஆச்சி'னு பல ஆப் லைன் மெஸேஜ்.. ஒன்னும்க்கும் ரிப்ளை பண்ணவே முடியல அட் ரைட் டைம்… பார்த்தா தானே ஹி ஹி ஹி….என் பிறந்த நாளுக்கு வந்த வாழ்த்துக்கு கூட நன்றி சொல்ல முடியல….இப்படி இயற்க்கையான பல விஷயங்கள் செயற்க்கையா அமைஞ்சிடுச்சி….No Regrets….. பழக பழக பாட்டா செருப்பும் நமக்கே ஒரு நாள் டாட்டா காட்டிட்டு தானே போகும்….

இதுவரைக்கும் கிட்ட்தட்ட 19 போஸ்ட் ட்ராப்ட்'ல தூங்குது… இன்னைக்கு இதை எழுதலாம், அதை எழுதலாம்'னு அப்ப அப்ப யோசிக்கிறதை எழுத ஆரம்பிச்சா 10 நிமிஷத்துல 4 ஸ்ட்ரோக் பைக்'ல உட்கார்ந்துக்கிட்டு நம்ம கும்மிட போன தெய்வம் "என்னடா இழுவை"'னு கேட்க ஆரம்பிச்சிடுது…. என்னத்த செய்ய??? ஆண்டவா

ஒரு காலத்துல நம்ம பிலாக்'யும் சரி, பக்கத்து பிலாக்'களும் சரி நான் நீ'னு போட்டி போட்டுக்கிட்டு போஸ்ட் போடுறதும், அதுல எங்க எனது புளியோதரை, கொண்டுவா குவாட்டர்,'னு பல பிலாக்'ல பல்லை காட்டுவோம்… அது எல்லாம் அப்போ.. டெஸ்ட் மாட்ச் காலம்.. இப்போ எல்லாம் T20 காலம்.... எல்லோருக்குமே பிஸி.. விட்டா போதும்'னு ஒரே ஒட்டமா ஓடிடுறாங்க.....இனிமேல்/FEMALE னு எல்லாத்தையும் திரும்பி chase பண்ணனும்..... அப்போ தான் நம்ம கடை பக்கம்மும் நமக்கு பிடிச்ச நண்பர்களும் வருவாங்க.. அது ஒரு அழகிய நிலா காலம் :)... anyways.. போன பஸ்'க்கு கை காண்பிச்சா நிக்கவா போகுது :) இல்ல chair போட்டு உட்க்கார போகுதா.. என்ன நான் சொல்லுறது :)

என்ன எழுதுறது ஐ மீன் எதை பற்றி மொக்கை போடுறது'னு தெரியவே மாட்டேங்குது….டூ பீ frank, draft'ல இருக்கிற 19 போஸ்ட்'ய முழுசா கம்பீளிட் பண்ண முடியவே இல்லை….. முதல் மாதிரி யோசிக்க முடியல…but still, முயற்சி செஞ்சிங் ஒரு போஸ்ட் போட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்'னு இதோ..

1.love aaj kal - இந்தி படம்
First Day First Show…. எனக்கு படம் புடிச்சி இருக்கு...உள்ளுக்குள்ள இருக்கிற லவ் feelings ah அழகா சொல்லி இருக்காங்க...தீபிகா செம cute… அவங்க ஏளனமா சிரிக்கிற சிரிப்பு Chancey இல்லை… Chori Bazaari பாட்டுல அவங்க சிரிக்கிட்டே ஆடுற அழகு, பார்த்துக்கிட்டே இருக்கலாம்…..மொத்தத்துல, தீபிகா மட்டும் தமிழ் சினிமா'க்கு வந்தா தலைக்கு பூ வச்சி, மூக்குத்தி குத்தி, சேலை கட்டி குத்துவிளக்கு ஏத்த வச்சிடலாம்.. ஆனா பாருங்க அவங்க height'க்கு stool வச்ச ஹீரோக்களை Google'la இல்லாட்டி surf excel ல தான் தேடனும்..... .ரொம்ப simple ah படத்துல வர இன்னொரு ஹீரோயின்….she is Giselle Monterio an brazilian Model..இவங்களுக்கு இந்தி'யே தெரியாதாம் :)….எப்படியா இப்படி தேடி கண்டுப்பிடிக்கிறீங்க? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை..

2. கந்தசாமி படத்துல வர excuse me பாட்டுக்கு நடுவுல வர சிரிக்கிற பெண் குரல் பேச்சு செம natural…

3. The Other End of the line :- முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தி படம்???????....ரெண்டு நாடு, ரெண்டு கள்ளச்சாராயம் சாரி ரெண்டு கலாச்சாரம், ஒத்த சந்தர்ப்பம் காதலுக்காக அருமையான கதை வித் டூ மச் டகால்டி…ஸ்ரேயா எதார்த்தமா நடிச்சி"cough cough" ருக்காங்க….பார்க்கலாம்...

4. ஜஸ்ட் for ஜிகே:- காலை'ல வீட்டை விட்டு போகும் போது நீங்க எந்த கால்'ல முதல் செருப்பு/shoe போடுவீங்க? அதே மாதிரி முதலில் எந்த காலில் இருந்து கழட்டுவீங்க?

அவ்வளவு தாங்க மொக்கை……. கொஞ்சம் கொஞ்சமா form க்கு வரேன்….. தமிழ்'ல் பிழை இருந்தா மன்னிக்கவும்……

கொத்து பரோட்டாவுடன்
கோப்ஸ்………………..

Thursday, May 21, 2009

என்னங்கய்யா

இந்தியா => unity in diversity,

ஆனா IPL' னு வந்துட்டா? unity யாவது, மசால டீ யாவது..
நான் சென்னை சூப்பர் கிங்கஸ், நீங்க என்னவா இருந்தாலும் இருந்துட்டு போங்க....

தனக்கு'னு வந்துட்டா

சச்சின் அடிச்சி ஆட கூடாது,
யுவராஜ் போல்ட் ஆகனும்,
sreesanth'க்கு hayden இன்னும் கொஞ்சம் காட்டனும்

எல்லாமே possible ah தான் இருக்கனும்'னு நினைப்போம்.. அதுல தப்பு ஒன்னும் இல்லையே..

தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் (disco dance ah என்னா'னு எனக்கு தெரியாது)

இன்னொரு போஸ்ட் ஆன் தி வே, குட் லக் சென்னை சூப்பர் கிங்கஸ்....

விரைவில் ...........

Sunday, February 08, 2009

sInGaThUkU.....

February 9th Pirandha Naal kondaadum "Thennaatu Singam engal annan Thiru K4Karthik'ku" indha thambi'in mana maarndha Pirandha naaal vaazhthukal...

vaazhtha vayadhillai
panchu muttai vaangi kodukka panjam illai
poster adichi otta wall illai
bun thinga tea kadai illai
vodka poda time illlai
odi paada idam illai
photo poda google illai
tamil'il type adika ekalappai illai


ippadi pala illai illaaatium, neeenga thambi ku oru naal ilai pottu soru poduveeenganu G3 yakka maadhiri endha oru suyanalamum ilaaamah,

ungal thambi ungalukkku "Happy Birthday wishes sollikiren"...

One beautiful heart is better than thousand beautiful faces.A pure heart is worth its weight in gold. Thanks for being my Wonderful Brother..Smile always....

Disci:- net center la no tamil fonts, so tanglish la after a long time post poda vendiadha poitu... kindly excuse....

oru pazha mozhi solaamah ponah anna kovichikuvaaru :).

"Dont Expect Oranges when you are under a apple tree"..

Happy Birthday Brother :)

cheers...
gops !!!!!!!!!1

Wednesday, January 21, 2009

நேர்முக தேர்வு..

கம்பெணி பெயர் : தொப்பை அண்ட் கைப்பை Manufacturing Co.

முள்ளைமாரி:- டேமேஜர்
முடிச்சவுக்கி :- அப்பாவி கிறுக்கன்.

வழக்கம் போல நம்ம கிறுக்கன், வேலை தேடி தெரு தெருவா அழையாம Complex complex ah எஸ்கலேட்டர்'ல அழைஞ்சிக்கிட்டு இருக்கும் போது, "இங்கு எல்லா வேலைக்கும் ஆட்கள் தேவை போர்ட்டை பார்த்து நம்ம தொப்பை அண்ட் கைப்பை கம்பெணிக்குள்ள நுழையிறார்..


நேரா ஆபிஸ் பியூனிடம்,

முடி:- மானேஜர் சார் இருக்காங்களா..

பியூன்:- ஓ இருக்காரே காபி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு..எதுவும் வேணுமா?

முடி:- சே சே எனக்கு காபி சாப்பிடற பழக்கம் இல்லை.. எனக்கு வேணாம்…

பியூன்:- தோடா, உன்னை எவன்யா காபி வேணுமா'னு கேட்டா.. மேனேஜர் சார் கிட்டே உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்யா.

முடி:- ஓ அப்படி கேட்டீங்களா..

பியூன்:- நான் ஓ அப்படி கேட்களா.. எதுவும் வேணுமா'னு தான் கேட்டேன்..

முடி:- அ ஆஹா, சும்மா தூங்கிக்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க சார்..

பியூன்:- யோவ், இது என்ன zoo வா? அசிங்கமா பேசாதையா…அலார்ம் கிலாக் கூட என்கிட்ட இல்லை..

முடி:- பாஸ், அசிங்கத்துல அ'வ எடுத்துட்டா சிங்கம் இருக்குமா இருக்காதா?

பியூன்:- கண்டிப்பா இருக்கும்… அதுல என்ன சந்தேகம்..

முடி:- அந்த சிங்கத்தை தான் சார் நான் சொன்னேன்….

பியூன்:- முடியல, எதுக்குயா இங்க வந்த? என்ன வேணும்?

முடி:- அதை நீங்க முதலே கேட்டு இருக்கனும்…

பியூன்:- டேய், அதான் எதுவும் வேணுமா'னு கேட்டேன் ல?

முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..

பியூன்:- எனக்கு வேணும்னா உனக்கு எதுக்கு தரனும்? நானே வச்சிக்க மாட்டேனா?

முடி:- அப்போ வச்சிக்கோங்க… அப்புறம் எதுக்கு என் கிட்ட கேட்குறீங்க?

பியூன்:- சார், உங்களுக்கு என்ன சார் வேணும்?

முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..

பியூன்:- போடாங்க, இப்ப என்ன விஷயமா இங்க வந்து இருக்க?

முடி:- அப்படி நீங்க முதலே கேட்டு இருக்கலாம்'ல?

பியூன்:- அதை தானே கேட்டேன் நானும்?

முடி:- எப்ப சார் கேட்டீங்க? எதுவும் வேணுமா'னு தானே கேட்டீங்க?

பியூன்:- என்னை மன்னிச்சிருங்க சார், இப்ப இங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க?

முடி:- அப்பாடா, அப்படி பாயிண்டுக்கு வாங்க… எந்த வேலைக்கும் ஆட்கள் தேவை'னு போர்ட் பார்தேன், அதுதான் என்ன'னு விசாரிச்சிட்டு போலாம்'னு..

பியூன்:- நீ வேலை தேடி வந்தவனா?

முடி:- இல்ல இல்ல, எந்த வேலையும் தேடி வந்தவன்..

பியூன்:- ஒகே ஒகே நேரா போய் வலது பக்கம் போனீங்கனா அங்க இடது பக்கம் அசின் மாதிரி பிசினா ஒரு பொண்ணு கெட்டப்புல ஒரு 50 வயதுல மேடம் உட்காட்ந்து இருப்பாங்க… அவங்க கிட்ட உங்க பெயரை ரெஜுஸ்டர் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்குங்க, உங்க முறை வரும் போது நீங்க உள்ளே போகலாம்.

முடி:- சார், என் பெயரை நான் பிறந்த அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்.. இப்ப எதுக்கு திரும்பி பண்ணனும்?

பியூன்:- ஏன்'டா காலங்காத்தால நான் தான் கிடைச்சேனா? போடா சொன்ன'தை செய், இல்லாட்டி என் வேலைய நீ பாரு நான் இப்பவே ராஜினாமா பண்ணிட்டு போறேன்… கொய்யாலே வந்துட்டாங்கே வேலை தேடி நம்ம உயிரை எடுக்க..

முடி:- சார், இது மத்தியானம், நீங்க காலாங் காத்தாலனு சொல்லுறீங்க, உங்க வாட்ச் பர்மா பஜார்'ல வாங்குனதா?

பியூன் த்லை தெரிக்க அந்த இடத்தை விட்டு எஸ்கேப்….
அசின் மாதிரி உள்ள பிசினிடம்

முடி:- மேடம் இங்க பெயரை ரெஜிஸ்டர் பண்ணறுவங்க..


மேடம்:- வேலை தேடி வந்து இருக்கீங்களா? இங்க தான்… உங்க பெயரை சொல்லுங்க பார்ப்போம்.


முடி:- பெயரை சொன்னா கேட்க தான் முடியும் பார்க்க முடியாது..


மேடம்:- அது எங்களுக்கும் தெரியும், ஆனா பெயரை சொன்னவுடன் உன்னை தானே பார்க்கனும், வெறும் பெயரை மட்டும் கேட்டா போதுமா?

முடி:- வெறும் பெயரை மட்டும் சொன்னா போதுமா? அதுவும் ரைட் தான்.. Initial'யோட சொல்லனுமா?


மேடம்:- மிஸ்டர் அதிகம் பேசாதீங்க…கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. சரியா?

முடி:- --------------


மேடம்:- உங்கள தான் சொன்னது கேட்டதா?

முடி:- --------------


மேடம்:- மிஸ்டர் பதில் சொல்லுங்க..


முடி:- நீங்க இன்னும் கேள்வியே கேட்கலையே? அப்புறம் எப்படி பதில் சொல்லுறது?

மேடம்:- தெளிவா தான் இருக்கீங்க..


முடி:- எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லைங்க..

மேடம்:- அப்ப எங்களுக்கு மட்டும் இருக்குதாக்கும்?

முடி:- அதை நீங்க தான் சொல்லனும்…

மேடம்:- யோவ், எதுக்கு இங்க வந்த? வேலை தேடி தானே..உன் பெயரை சொல்லிட்டு அங்க ஓரமா போய் உட்காரு…..மேனேஜர் கூப்பிடுவார் உன்னை…..


சிறிது நேரத்தில் நம்ம முடிச்சவுக்கி, முள்ளமாரியை பார்க்க கோயிங்…

முடி:- உள்ளே வரலாமா சார்..

முள்:- வாங்க, வேணாம்'னு நான் சொல்ல'லை, பட் சூ'வை கழட்டிட்டு வாங்க.. ஒகே.

முடி:- சார் நான் செருப்பு தான் போட்டு இருக்கேன்.. என்ன பண்ணட்டும்?

முள்:- அதை மட்டும் என்ன தலையிலா வச்சிட்டு வருவீங்க….. வெளியே கழட்டிட்டு உள்ளே வாங்க…..

முடி:- கண்டிப்பா உள்ளே வந்துட்டு வெளியே கழட்ட முடியாது பாருங்க..

முள்:- குட். இப்படி தான் ஷார்ப்'பா இருக்கனும்

முடி:- நான் எப்போதுமே ஜில்லெட் தான் யூஸ் பண்ணுறது

முள்:- சுத்தம்…

முடி:- ஆமா சார் சுத்தம்மா இருக்கும் ஜில்லெட்'ல பண்ணுனா..

முள்:- நின்னுக்கிட்டே இருக்கீங்க, உட்காருங்க…..

முடி:- நீங்களும் தான் உட்கார்ந்துக்கிட்டே இருக்கீங்க, நிற்க சொன்ன நிற்பீங்களா?

முள்:- ஏன் கேட்க மாட்ட? இப்ப நிற்க சொல்லுவ அப்புறம் என் வேலையையே தாங்க'னு கேட்ப்ப, தேவையா….

முடி:- சே சே உங்க வேலை எனக்கு வேணாம் சார்….

முள்:- ம்ம்ம்.. என்ன உங்க முகத்துல இவ்வளவு பவுடர் அடிச்சிட்டு வந்து இருக்கீங்க? ஒவர் லேயரிங்க இருக்கு?

முடி:- அந்த பிசின் மேடம் தான், நேர்முக தேர்வு'னு சொன்னாங்க.. எனக்கோ உருண்டை

முகம்.. அதுதான் அவங்க மேக்கப் பவுடர் லைட்'யா அபேஸ் பண்ணி பேஸை நேராக்கி, நேர்முக தேர்வுக்கு வந்துட்டேன்..

முள்:- எப்படி இப்படி எல்லாம்?? நல்லவேளை நீங்க நேரு மாமா முகத்தை கொண்டு வராம விட்டீங்களே.. அது வரைக்கும் சந்தோஷம்..

முடி:- சே மறந்தே போச்சே…

முள்:- ஆமா, தேர்முக தேர்வுனா, தேரோட இங்க வந்து இருப்பீங்களா?

முடி:- அது எப்படி சார் இங்க வர முடியும்.. நேரா கோயிலுக்கு தானே போய் இருப்பேன்..

முள்:- சரி சரி வந்த வேலைய பார்ப்போமா?

முடி:- எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலையே சார்..

முள்:- சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை.

முடி:- பரவாயில்லை சார், அப்போ கேளுங்க…

முள்:- குட். நீங்க என்ன படிச்சீங்க..

முடி:- வீட்டுல சும்மா இருக்கிறனால காலையில டீ கடைக்கு போய் தினமலர் படிக்கிறதுல ஸ்டார்ட் பண்ணி அப்படியே பக்கதுல இருக்கிற சலூன்க்கு போய் அங்க இருக்கிற குமுதம், விகடன்'னு எல்லாத்தையும் படிச்சி முடிச்சிடுவேன் சார்.. நத்திங் பெண்டிங்..

முள்:- நான் எதுவரைக்கும் படிச்சீ இருக்கீங்கனு கேட்டேன்..

முடி:- முக்கால்வாசி முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையுமே படிச்சி முடிச்சிடுவேன்…. ஆனா இந்த வாரம் தான் விகடன்'ல வர அல்லி தொடர் கதையை படிக்க முடியல..

முள்:- அப்போ முக்கால்வாசி முடியாட்டி?

முடி:- இதுவரைக்கும் தெரியல சார்..

முள்:- ரெம்ப முக்கியம். நான் உங்க கிட்ட கேட்டது ஸ்கூல், காலேஜ்'ல என்ன படிச்சீங்க'னு…

முடி:- அப்படி தெளிவா கேளுங்க சார்… ஸ்கூல்'ல கணிதம், ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,புவியியல்,அறிவியல்'னு படிச்சேன் சார்.. காலேஜ்'ல அஸெம்பளி'ல தேசிய கீதம் ஓரே ஒரு தபா படிச்ச நியாபகம் சார்.. அவ்வளவு தான்……முள்:- ம்ம்ம்ம்…. நான் கேட்குறது உங்களுக்கு புரியலையா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேட்குறேனா??

முடி:- சார் நான் சொல்லுறது உங்களுக்கு புரியுதா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் சொல்லுறேனா?

முள்:- வேணாம்யா நீயும் பேச வேணாம் நானும் பேசலை… உன் பைலை கொடு.. அதை வச்சி நான் தெரிஞ்சிக்கிறேன், புரிஞ்சிக்கிறேன்..

முடி:- இந்தாங்க சார்…

முள்:- ஏய் என்ன இது? உள்ளே ஒன்னுமே இல்லை?

முடி:- ஆமா சார் என் திறமையை பார்த்துதான் எனக்கு வேலை கிடைக்கனும்'னு இருக்கேன்….

முள்:- உனக்கு திறமை இருக்கா இல்லையா'னு எனக்கு எப்படி தெரியும்? டிகிரி செர்டிப்பிக்கேட், மார்க் ஷீட்'னு இருந்தா தானே எங்களுக்கும் உன் திறமையை பற்றி தெரியும்???

முடி:- அதுல எனக்கு நம்பிக்கை இல்லை சார்… வெறும் பேப்பரை வச்சி என்னை எடை போடாதீங்க சார்..

முள்:-ஏன் உன்கிட்ட தான் எடை கல்லு இருக்கா? உங்க வூட்டுல சன் டிவி இருக்கா?

முடி:- வீட்டுல BPL டிவி இருக்கு சார்.. ஜன்னலை திறந்தா சன் தெரியும் சார்..

முள்:- சத்தியமா முடியல.. உனக்கு வேலை கொடுத்துட்டேன்….

முடி:- ரெம்ப நன்றி சார்.. என்ன வேலை சார்?

முள்:- டெய்லி 5 ஊருக்கு போயிட்டு கம்பெனிக்கு ஆர்டர் எடுத்துட்டு வரனும்.. அப்படி வந்துட்டனா, உனக்கு ஒரு பை'க்கு ரூபாய் 500 தரேன்…

முடி:- என் மேல நம்பிக்கை வச்சி எனக்கு வேலை தந்ததுக்கு ரெம்ப நன்றி சார்.. நான் வேலையை ராஜினமா செய்யிறேன்..

முள்:- என்னாச்சி?

முடி:- நான் பேசினா யாருமே ஆர்டர் தர மாட்டாங்கனு தெரிஞ்சி வச்சி இருக்கீங்க பாருங்க……அதுக்குதான்….

முள்:- புரிஞ்ச்சிக்கிட்டீங்களே… குட். கிளம்புங்க.. நன்றி வணக்கம்……எங்க கம்பெனிய பற்றி என்ன நினைக்கிறீங்க?

முடி:- கைப்பையை தொப்பை மேல போடலாம்.. பட் தொப்பையை கைப்பை மேல போட முடியாது…

முள்:- முடிவா என்ன சொல்ல வர்றீங்க?

முடி:- முடிவு சொல்ல நான் ஏற்கனவே வந்துட்டேன் சார்… முடிவு சொல்ல மட்டும் நான் வரலை…

முள்:- ஏன்யா நீ எப்போதுமே இப்படி தான் பேசுவியா?

முடி:- அது கேட்குறவங்க கேள்விய பொறுத்து…

முள்:- ரெம்ப கஷ்டம்.. போயிட்டு வாங்க நல்ல படியா…

முடி:- அதுதான் வேலை இல்லையே அப்புறம் என்னத்துக்கு இங்க வரனும்?

முள்:- ஸ்ஸ்ப்ப்பா கிளம்புங்க சார்..

மாரல் ஆப் தி பதிவு :- மொக்கை'னு வந்துட்டா, அது மொக்கையா தான் இருக்கனும்… அது சக்கையா இல்லை பொக்கையா'னு நீங்க தான் சொல்லனும்…. இதை படிச்சிட்டு கல்லை எடுத்து என்னை அடிக்க தேடுனா.. நான் சர்ப் எக்ஸ்ல்.. தேடினாலும் கிடைக்க் மாட்டேன்

ஹி ஹி… ரெம்ப நாள்ளாச்சி'ல அதுதான் டச் விட்டு போயிட்டு :(

அடுத்த மொக்கைல சந்திக்கும் வரை…

என்னதான் நாம சைவம் சாப்பிட்டாலும், சிங்கத்துக்கு முன்னாடி போய் நின்னா அது சும்ம விட்டுறாது… ஹி ஹி ஹி ஹி

கோப்ஸ் எஸ்கேப் :)


Cheers!!!!!!!!!
Lets Makes Things Better :)