Thursday, August 13, 2009

மொக்கைனா சும்மா இல்லை.....

எல்லோரும் இந்த மொக்கைய படிச்சி முடிச்சிட்டு இப்படி முக்காடு போட்டுட்டு போங்க…பொறுக்கி:- சார், உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை

கிறுக்கன்: ஏன்? என் பெயர் பந்த் இல்லையே…

பொறுக்கி:- உங்க பெயரை பற்றி நான் கேட்கவே இல்லையே?

கிறுக்கன்: இல்ல, பந்த்'னா தான் எதுவுமே ஓடாது.. அதான்..

பொறுக்கி:- ஹி ஹி உண்மைக்குமே உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை சார்

கிறுக்கன்: வேணும்னா ரெண்டு ஆட்டோ'வ கேப்'ல விட்டு ஒட விடுவோமா?

பொறுக்கி:- விட்டா, கெடா வெட்டி பொங்கல் வைப்பீங்க போல… ஓவர் பால் போட்டா, பாயாசத்துக்கு நல்லது இல்லை…..

கிறுக்கன்: அய்யோடா, சுடு தண்ணிர் வைக்கிறவன் எல்லாம் இப்போ பால் பாயாசம் ரேஞ்ச்'க்கு போயிட்டான்…. என்னத்த சொல்ல..

பொறுக்கி:- நீங்க ஒன்னுமே சொல்ல வேணாம் சார்…….சும்மா இருந்தீங்கனாலே போதும் :)

கிறுக்கன்: சும்மா இருக்கிறது'னா நான் வீட்லையே இருந்து இருப்பேன்'ல எதுக்கு வர சொன்ன?

பொறுக்கி:- கொஞ்சம் தனியா பேசனும் அதுதான்…….

கிறுக்கன்: தனியா பேசனும்னா பாத்ரூம் உள்ளே போய் வாஷ்பேசினோட பேசிக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு..

பொறுக்கி:- சார், என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா FM மாதிரி சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க...

கிறுக்கன்: ஏன் சொல்ல மாட்ட, முதல்'ல என்னை வர சொன்ன, அப்புறம் தனியா பேசனும்'ன, இப்ப சம்பந்தம் கூட பேசனும்ங்கற….முதல்'ல ஒரு முடிவுக்கு வா பேசிக்கலாம்

பொறுக்கி:- சார், முதல்'யே எப்படி சார் முடிவு வரும்?

கிறுக்கன்: ஏன் வராதா?

பொறுக்கி:- கண்டிப்பா வராது, ஏன்னா முதல்'ல வந்தா முன்னுரை கடைசில வந்தா

கிறுக்கன்: கட்டுரையா?

பொறுக்கி:- இப்ப தெரியுது, எப்படி நீங்க பத்தாங் கிலாஸை கூட தாண்டலைனு.…

கிறுக்கன்: ஏன் அந்த கட்டுரை'ல எழுதி இருக்காங்களா என்னை பற்றி?

பொறுக்கி:- அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு? போடுறது மொக்கை அது என்னை தவிற வேற யாருக்குமே புரியாது….

கிறுக்கன்: ஸ்ஸஸஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா… டேய் நீ தனியா பேசுவியோ, இல்ல தண்ணிய போட்டுட்டு பேசுவியோ எனக்கு தெரியாது. நான் கிளம்புறேன் இப்போ..

பொறுக்கி:- பிரதர் கொஞ்சம் நேரம் லொட லொட'னு ஸ்டார்ட் பண்ணுன டாடா வேன் மாதிரி இல்லாம அமைதியா இருந்தீங்கனா.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுவேன்..

கிறுக்கன்: டேய், அவ்வளவு ஈசியா நீ சொல்லிட்டு போயிட முடியாது சொல்லிட்டேன்…

பொறுக்கி:- நான் தானே சொல்லுறேனு சொன்னேன்? இப்போ நீங்க சொல்லிட்டேனு சொல்லுறீங்க?

கிறுக்கன்: எனக்கு குழப்பமா இருக்கா இல்லை நீ என்னை குழப்புறீயானே தெரிய மாட்டேங்குது…

பொறுக்கி:- நீங்க குழம்பி இருக்கீங்க அதுதான்…

கிறுக்கன்: ?????

பொறுக்கி:- கல்யாண வீட்டுல மூனாவது பந்திக்கு மேல சாம்பார் கேட்டா, எப்படி கரண்டி மட்டும் வாலி'ல இருந்து எட்டி பார்க்குமோ அதே மாதிரி, நான் உங்க கிட்ட எப்படி இருக்கீங்கனு கேட்டா நீங்க உங்க பாட்டிக்கு நாக்கு'ல சுளுக்குனு பதில் சொல்லிறீங்க.. விளங்குமா? …

கிறுக்கன்: பதஸ்டத்தை கொஞ்சம் லெஸ் பண்ணிக்கோ

பொறுக்கி:- ஒரு அவசரத்துக்கு உங்க கிட்ட பேச முடியுதா? அப்படியே பேசுனாலும் ஒரே அட்டம்ட்'ல புரிஞ்சிடுமா உங்களுக்கு? எப்படி சார் இப்படி ?

கிறுக்கன்: சரி சரி கொஞ்சம் சிரி.. எதுக்கு இவ்வளவு சீரீயஸ்? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? சொல்ல வந்ததை சொல்லு

பொறுக்கி:- அப்பாடா.. கடைசியா ஒரு பிரேக் கொடுத்தீங்களே.. நன்றி. இதோ ஐந்து நிமிஷிசத்தில சொல்லிட்டு கிளம்பிடுறேன்……

கிறுக்கன்: பிரதர், நீங்க சொல்லிட்டு அவ்வளவு சுலபமா இங்க இருந்து கிளம்பிட முடியாது…

பொறுக்கி:- ஏன் ??????

கிறுக்கன்: ஏன்னா இது உங்க வீடு, நான் தான் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்.. சோ, நீங்க சொல்லி முடிச்சோன, நான் தான் கிளம்பனும். நீங்க இல்லை… புரிஞ்சதா?????? நீங்க சொல்லிட்டு கிளம்பி போனா, நான் எங்க போறது?

பொறுக்கி:- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
துப்புங்கடா இந்த மொக்கைக்கு காரி……………கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அவ்வளவு தாங்க… இதை விட மொக்கை யாரால போட முடியும்….. இது மாதிரி கண்டிப்பா இனிமேல் தொடரும்……

மொக்கையுடன்
கோபி

Wednesday, August 05, 2009

Expire ஆகல இன்னும் இந்த எருமை :)

வணக்கம் வந்தனம் என் நெற்றியில் இல்லை சந்தனம்…
எத்தனை பேருக்கு என்னை இன்னும் நியாபகம் இருக்கு'னு தெரியல. பட் எனக்கு எல்லாத்தையும் நியாபகம் இருக்கு…எப்படா கஜினி ஆன? அப்படி'னு நீங்க கூவுறது எனக்கு கேட்க்குது..அப்படி எல்லாம் இல்லை…..

வேலை ஜாஸ்தி இல்லாட்டியும் நான் ஆபிஸில காலை 9 டூ மாலை 7.30 மணி நேரம் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்.. நடுவுல லஞ்ச் பிரேக் மதியம் 1 டு 2..
வாரத்துல ஜந்து நாள் இப்படி தான் ஓடுது வாழ்க்கை… மீதி ரெண்டு நாள் விடுமுறை….அதுலையும் வேலை கண்டிப்பா இருக்கும்…

இப்ப எதுக்கு இதை சொல்லுறேனா, கடந்த 7 மாசமா ஆபிஸ்'ல low profile staff'க்கு இனையதளத்தை கட் பண்ணிட்டாங்க…கேட்டா வேலை நேரத்துல வேலை கெடுதாம்… என்னங்கடா இது இத்தனை வருஷம் இல்லாம இப்ப உங்களுக்கு வேலை கெடுது? சத்தமா கேட்க தான் தோணுது பட் financial crisis'ல நாமலும் ஏன் இன்னொடு victim ஆகனும்'னு பச்சை தண்ணியில பல்லை நனைத்து கூல்' அப்படி சிரிச்சிக்கிறோம்....IT கிட்ட டகால்டி காட்டி எனக்கு மட்டும் இனையதளத்தை கொடுடா'னு கேட்டா, முக்கியமா உனக்கு இனையதளத்தை கொடுத்தா, எனக்கு கண்டிப்பா வேலை போகும்'னு எனக்கு மேலிடம் லெட்டரே அனுப்பி இருக்காங்க'னு ரெம்ப பரிதாபமா நோ சொல்லிட்டான்.. அட அட நம்ம புகழ் எங்க வரைக்கும் போய் இருக்கு….. வாழ்க்கை இனையதளம் இல்லாம ரெம்பவே போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி…..எவ்வளவு நேரம் தான் வேலை செய்யறது (நடிக்கிறது)? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை, சொல்லவும் யாரும் இல்லை….. நெருங்கிய நண்பர்களிடம் இருந்து ஆரம்பத்துல என்னடா ஆச்சி'னு பல ஆப் லைன் மெஸேஜ்.. ஒன்னும்க்கும் ரிப்ளை பண்ணவே முடியல அட் ரைட் டைம்… பார்த்தா தானே ஹி ஹி ஹி….என் பிறந்த நாளுக்கு வந்த வாழ்த்துக்கு கூட நன்றி சொல்ல முடியல….இப்படி இயற்க்கையான பல விஷயங்கள் செயற்க்கையா அமைஞ்சிடுச்சி….No Regrets….. பழக பழக பாட்டா செருப்பும் நமக்கே ஒரு நாள் டாட்டா காட்டிட்டு தானே போகும்….

இதுவரைக்கும் கிட்ட்தட்ட 19 போஸ்ட் ட்ராப்ட்'ல தூங்குது… இன்னைக்கு இதை எழுதலாம், அதை எழுதலாம்'னு அப்ப அப்ப யோசிக்கிறதை எழுத ஆரம்பிச்சா 10 நிமிஷத்துல 4 ஸ்ட்ரோக் பைக்'ல உட்கார்ந்துக்கிட்டு நம்ம கும்மிட போன தெய்வம் "என்னடா இழுவை"'னு கேட்க ஆரம்பிச்சிடுது…. என்னத்த செய்ய??? ஆண்டவா

ஒரு காலத்துல நம்ம பிலாக்'யும் சரி, பக்கத்து பிலாக்'களும் சரி நான் நீ'னு போட்டி போட்டுக்கிட்டு போஸ்ட் போடுறதும், அதுல எங்க எனது புளியோதரை, கொண்டுவா குவாட்டர்,'னு பல பிலாக்'ல பல்லை காட்டுவோம்… அது எல்லாம் அப்போ.. டெஸ்ட் மாட்ச் காலம்.. இப்போ எல்லாம் T20 காலம்.... எல்லோருக்குமே பிஸி.. விட்டா போதும்'னு ஒரே ஒட்டமா ஓடிடுறாங்க.....இனிமேல்/FEMALE னு எல்லாத்தையும் திரும்பி chase பண்ணனும்..... அப்போ தான் நம்ம கடை பக்கம்மும் நமக்கு பிடிச்ச நண்பர்களும் வருவாங்க.. அது ஒரு அழகிய நிலா காலம் :)... anyways.. போன பஸ்'க்கு கை காண்பிச்சா நிக்கவா போகுது :) இல்ல chair போட்டு உட்க்கார போகுதா.. என்ன நான் சொல்லுறது :)

என்ன எழுதுறது ஐ மீன் எதை பற்றி மொக்கை போடுறது'னு தெரியவே மாட்டேங்குது….டூ பீ frank, draft'ல இருக்கிற 19 போஸ்ட்'ய முழுசா கம்பீளிட் பண்ண முடியவே இல்லை….. முதல் மாதிரி யோசிக்க முடியல…but still, முயற்சி செஞ்சிங் ஒரு போஸ்ட் போட்டு ஸ்டார்ட் பண்ணிடலாம்'னு இதோ..

1.love aaj kal - இந்தி படம்
First Day First Show…. எனக்கு படம் புடிச்சி இருக்கு...உள்ளுக்குள்ள இருக்கிற லவ் feelings ah அழகா சொல்லி இருக்காங்க...தீபிகா செம cute… அவங்க ஏளனமா சிரிக்கிற சிரிப்பு Chancey இல்லை… Chori Bazaari பாட்டுல அவங்க சிரிக்கிட்டே ஆடுற அழகு, பார்த்துக்கிட்டே இருக்கலாம்…..மொத்தத்துல, தீபிகா மட்டும் தமிழ் சினிமா'க்கு வந்தா தலைக்கு பூ வச்சி, மூக்குத்தி குத்தி, சேலை கட்டி குத்துவிளக்கு ஏத்த வச்சிடலாம்.. ஆனா பாருங்க அவங்க height'க்கு stool வச்ச ஹீரோக்களை Google'la இல்லாட்டி surf excel ல தான் தேடனும்..... .ரொம்ப simple ah படத்துல வர இன்னொரு ஹீரோயின்….she is Giselle Monterio an brazilian Model..இவங்களுக்கு இந்தி'யே தெரியாதாம் :)….எப்படியா இப்படி தேடி கண்டுப்பிடிக்கிறீங்க? சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை..

2. கந்தசாமி படத்துல வர excuse me பாட்டுக்கு நடுவுல வர சிரிக்கிற பெண் குரல் பேச்சு செம natural…

3. The Other End of the line :- முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட இந்தி படம்???????....ரெண்டு நாடு, ரெண்டு கள்ளச்சாராயம் சாரி ரெண்டு கலாச்சாரம், ஒத்த சந்தர்ப்பம் காதலுக்காக அருமையான கதை வித் டூ மச் டகால்டி…ஸ்ரேயா எதார்த்தமா நடிச்சி"cough cough" ருக்காங்க….பார்க்கலாம்...

4. ஜஸ்ட் for ஜிகே:- காலை'ல வீட்டை விட்டு போகும் போது நீங்க எந்த கால்'ல முதல் செருப்பு/shoe போடுவீங்க? அதே மாதிரி முதலில் எந்த காலில் இருந்து கழட்டுவீங்க?

அவ்வளவு தாங்க மொக்கை……. கொஞ்சம் கொஞ்சமா form க்கு வரேன்….. தமிழ்'ல் பிழை இருந்தா மன்னிக்கவும்……

கொத்து பரோட்டாவுடன்
கோப்ஸ்………………..