Thursday, December 31, 2009

வருஷம் முடிஞ்சி போச்சு

என்னத்த சாதிச்சோம்'னு நினைக்கிறதுக்கு முன்னாடி என்னத்த சாதிக்க போறோம்'னு யோசிக்க ஆரம்பிக்கிறத்துக்குள்ள கொய்யாலே கொய்யாலே'னு வருஷமே அவரசமா ஓடிடுது…..வருத்தபடுறதுக்கு ஒன்னுமே இல்லை.. ஏன்னா நாட்டாமை காலத்துக்கு முன்னால இருந்து இப்ப வரைக்கும், என்னைக்குமே நாம தான் பஸ் ஸ்டாப்'ல பொண்ணுங்களுக்காக நிக்கனும்., நம்மளுக்காக அவங்க யாரும் நிக்க மாட்டாங்க.. ஹி ஹி ஹி…


எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. தனக்கு'னு வந்துட்டா தான் தன் சுயரூபம் தெரிய வரும்.. என்னையும் சேர்த்து தான்…
இந்த வருஷம் நான் கத்துக்கிட்ட பாடம்.. ஒருத்தருக்கு உதவி செய்ய போனா, ஆரம்பம் எப்படி வேணுமானாலும் இருக்கலாம்., ஆனால், முடிவு கண்டிப்பா அவங்களுக்கு சாதகமா இல்லாட்டி, மவனே நமக்கு சங்குதான்…. இங்க ratio analysis எல்லாம் வேலைக்கு ஆகாது.. நான் ஆரம்பத்துல்ல 80% செஞ்சேன், கடையிசிலே சந்தர்பமே அமையல உதவி செய்யிறத்துக்கு'னு எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஹி ஹி ஹி ஹி, எனக்கு கிடைச்ச அவார்ட் நன்றி கெட்டவன்... அது வரைக்கும் என் கூட நல்லா இருந்தவங்க எல்லோரும் காரணமே இல்லாம ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க....அவங்கள சொல்லி குற்றம் இல்லை.. அவங்க எனக்கு சப்போர்ட் பண்ணுனா அவங்களுக்கும் அதே அவார்ட் தான்....practicality ரொம்ப தெரிஞ்சவன் நான். ஆனால் அவங்க மேல உள்ள அன்பை அவங்க புரிஞ்சிக்கவே இல்லை....சொன்னாலும் அலட்டிக்கவே இல்லை... அது என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சி...actually, i hate to lose peoples. but, நடக்கிறது நடக்காம இருக்காது.... அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். இந்த நிலையும் மாறும்'னு நானும் ஒதுங்க ஆரம்பிச்சிட்டேன்.... நீச்சல் தெரிஞ்சவன் கடலை பார்க்கிறத்துக்கும், நீச்சல் தெரியாதவன் கடலை பார்க்கிறத்துக்கும் வித்தியாசம் ரொம்பவே இருக்கு. அனுபவம் தான் எப்போதுமே நல்ல பாடம்...Realities .. அளவோட இருந்துட்டா அமிர்தம் நஞ்சாக மாற வாய்பே இல்லை......


இந்தியா'க்கு போனது தான் ஹைலைட்'யே… எப்போதும் விடுமுறைக்கு மட்டுமே போன நான், இந்த தடவை பல் சிகிச்சை'காக போனேன்… ஏன்டா டேய், படிக்கிறதுக்கும் பல்லுக்கும் மட்டும் தான் இந்தியா'வா? அப்படி'னு கேட்காதீங்க….. ஒகே?
பல்லு வலியும் வயித்து வலியும் தனக்கு வந்தா தான் தெரியும்'னு சும்மா வா சொல்லி இருக்காங்க.. ஒரு நாள் திடீர்'னு பல்லு வலி ஸ்டார்ட் ஆகிடுச்சி…நானும் என்னமோ பண்ணி பார்த்துட்டேன் ஒன்னும் கதைக்கு ஆகல….. Night full ah செம வலி.. தூங்கவும் முடியல… கூடவே தலைவலியும் வந்துடுச்சி..... காலங்காத்தால முதல் வேலையா அரசு மருத்துவமனைக்கு போனா ஸ்ஸ்ஸ்ப்பா பல்லை கூட பார்க்காம, panadol மாத்திரை கொடுத்தாங்க பாருங்க, சும்மா நொந்திட்டேன்..... சரி, பிரைவேட் கிளினிக்'கு போகலாம்'னா அவன் சொன்ன பில்லுக்கு நம்ம சொத்தையே எழுதி வச்சா தான் உண்டு..... நம்ம கிட்ட இருக்கிறதோ சொத்தை மட்டும் தான்.. அதுவும் பல்லு'ல அதை வச்சிக்கிட்டு என்ன பண்ணுவான் அவன் பாவம்.. அதனால், புக் பண்ணுடா டிக்கெட்டை'னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, கம்பெனி'ல மூச்ச்சை போட்டு ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன்.அடுத்த நாளே, பெசண்ட் நகர்'ல இருக்கிற ஒரு நல்ல டாக்ட்ரை எங்க அண்ணன் refer பண்ண day 3'ல இருந்து டிரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணியாச்சி….. டாக்டர் கிட்ட் சொன்னது ஒன்னே ஒன்னு தான், சார் திரும்பி நான் குவைத் போனா வலி வந்துட கூடாது'னு தான்….கிட்ட தட்ட 22 நாள் அங்க போகனும், ஒரு மினி சர்ஜரி, 64 தையல் வாய்க்குள்ள, யப்பா 45 நாள் நீர் ஆகாரம் மட்டுமே…. வாயை திறந்தா எங்க தையல் அப்பீட் ஆகிடும்'னு ஸ்டிரா வச்சே டீ, கஞ்சி எல்லாத்தையும் குடிச்சாச்சி ஹி ஹி ஹி…. எங்க போனாலும் நோ மொக்கையிஸ்…. நல்ல அனுபவமா இருந்துச்சி…… எந்த நண்பர்களையும் பார்க்கல, யார் வீடுக்கும் போகல, அப்படியே போனாலும், தண்ணி கூட குடிக்காம வூட்டுக்கு வந்துடுவேன்.தையல் பிரிச்சி நாலாவது நாள் இங்க வந்துட்டேன்…… இப்ப நோ வலி, ஆனால் soft ஆன சாப்பாடு மட்டுமே eating.. ஒருத்தனுக்கு பல் எவ்வளவு முக்கியம்'னு எனக்கு இப்போ புரியுது ஹி ஹி ஹி..

நம்ம ஊருல பட்டைய கிளப்புறது இப்போ ஹைவே'ஸ் ரோட் தான்…. Mostly, தமிழநாடு முழுசா 2 way ரோட் தான்.. சான்சே இல்லை…. திருச்சி டூ சென்னை பஸ்'லையே 5 hrs தான்… கார்'ல இந்த தபா நான் சென்னை டூ திருச்சி 3.45 hrs'ல போய் ரெக்கார்ட் வச்சிட்டேன்.. My previous best was 4.40 hrs.. அதே மாதிரி திருச்சி டூ மதுரை அண்ணாநகர் ஒன்லி 1.35 hrs prevoius best 2.20hrs.இது என்ன சின்ன புள்ளைதனமா'னு நினைக்காதீங்க, வாழ்க்கை'ல வரலாறு ரெம்ப முக்கியம்.. என்ன நான் சொல்லுறது?


மஹாலெட்சுமி….எங்க அப்பா எனக்காக அலைஞ்சி திரிஞ்சி வாங்கின கார் இது…. Actually எனக்கு இந்த கார்'னா ரெம்ப இஷ்டம்.. ஏன்'னு தெரியாது எனக்கு இந்த காரையும் புடிக்கும், நடிகை நதியா'வையும் புடிக்கும்…. அந்த காலத்துல (1985 ) இந்த கார் மாதிரி தான் நதியா எல்லா
படத்துலையும் ஒட்டிட்டு வருவாங்க… சோ, காரணம் தெரியாம'லையே இவங்க ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கும்..
இந்த கார் 1985'ல வந்த கார்.. அதனால எல்லா இடத்துலையும் இந்த காரை பார்க்க முடியாது.. நானும் 3 வருஷமா இந்த மாடல் காரை தேடி தேடி இப்ப தான் கிடைச்சி இருக்கு…. இத என் டேஸ்டுக்கு அடுத்த வருஷம் தான் ரெடி பண்ணனும்….இந்த கார்'ல தான் சென்னை'ல வலம் வந்துக்கிட்டு இருந்தேன்……லிட்டருக்கு 18கிமி கொடுக்கும்…. 75ரூபாய்'க்கு ஒரு FM player வாங்கி மாட்டினேன்…
கார்'ல ஏசி இல்லாத குறையை நம்ம கார்'ல உள்ள கரல் புடிச்ச ஓட்டைகள் நிறைவேத்திவிடும்.. Front bonnet ய திறந்தா உள்ள எட்டு கால் பூச்சி வீட்டை பார்க்கலாம் வித் வேப்பை மரம் தோட்ட்த்தோடு…..உங்களுக்கு கொடுப்பினை இருந்தால் பல்லி கூட பார்க்கலாம் ஹி ஹி ஹி…
ஒரு தபா பெஸண்ட் நகர்'ல இந்த கார்'ய பார்க் பண்ணிட்டு கீரின் வேய்ஸ் கிட்ட நண்பர்கள் கூட பேசிக்கிட்டு இருக்கும் போது, டேய் அங்க பாருடா சின்ன மணி குயிலே பாட்டுல வர கார், இத எல்லாம் இன்னும் ரோட்ல ஓட்டிக்கிட்டு இருக்காங்கே'னு என்னை பார்த்து சொன்னாங்க பாருங்க…. கடைசியில அவங்கள அந்த கார்'ல ஒரு ரவுண்டு கூட்டிட்டு போய் அவங்கள சமாதனம் படுத்திட்டேன்… உண்மைய சொல்லனும்'னா இந்த கார் 100% pollution free car…. அப்படி maitain பண்ணி இருக்காங்க…
சென்னை'ல இருந்து திருச்சிக்கு இந்த காரை கொண்டு போனேன்… 8 மணி நேரம் ஆச்சி….. டாப் ஸ்பீட் 90கிமி வரைக்கும் போனது..எங்க போனாலும் என்னையும் இந்த காரையும் திரும்பி பார்க்காதவங்களே இல்லை…. எல்லா முகத்துலயும் ஒரு சிரிப்பு வரும் பாருங்க.. ஹி ஹி ஹி…….never mind, நமக்கு புடிச்சத செஞ்சா தப்பு ஒன்னும் இல்லைங்களே. என்ன நான் சொல்லுறது…நம்ம் நண்பர்களை இந்த கார்ல பார்க்க போன், வந்துடான்'டா கரக்காட்டகாரனு நக்கல் அடிப்பாங்க…. ஹி ஹி ஹி…. Publicity ஒசி'ல கிடைக்கும் போது எதுக்கு தடுக்கனும்… ஹி ஹி ஹி

இந்த தபா நண்பர்கள் வற்புறுத்தியதால் (cough cough) ஒரு புதன்கிழமை டிஸ்கோ'க்கு போனேன்.. புதன்கிழமை லேடிஸ்'க்கு free entry ஆம்..
ஒரு couples போனா, stag'ah ஒருத்தரை உள்ள விடுவாங்கலாம்.. அதனால, நானும் உள்ள பூந்துட்டேன்… கண்டிப்பா எனக்கு கட்டிணம் உண்டு..
அங்க போனா பரவாயில்லை இப்ப இருக்கிற generations நல்லாவே இருக்காங்க.. * சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை*… .

அப்போ தான் அங்க ஒரு famous Celebrity ah பார்த்தேன்.. சும்மா சொல்ல கூடாது, படத்துல பார்க்கிறதை விட ரெம்ப அழகா இருந்தாங்க…அதுவும் லட்சனமா சிரிச்ச முகத்தோட….அவங்களா வந்து என் கிட்ட பேசுனாங்க'னு சொன்னா நம்புவீங்களா? No choice you have to … .

ரெம்ப கூலா பேசினாங்க…. சும்மாவே நான் மொக்கை சாமி, விடுவேனா? சுமார் 45mins செம மொக்கை….. So nice of her, என்னையும் மதிச்சி பேசினாங்களே…. ஹி ஹி ஹி..அதுக்கு அப்புறம் இன்னொரு hotel'ku கூட்டிட்டு போனாங்க நம்ம தோழர்கள் தான், அங்க முடிஞ்சோன நேரா சாப்ட போனோம்…. அதிகாலை 3 மணிக்கும் சென்னை'ல ghee roast கிடைக்குத்தப்பா……..


ஏர்டெல்

ஏர்டெல் சேவை ரெம்பவே சுப்பர்…. இண்டர்நேஷனல் ரோமிங்கல sms receiving free… am totally enjoying the service….இந்தியா ஸிம் தான்.. பட் இங்க free ah am receving the sms.. நல்லா இருப்பாங்கே…forward sms ah வந்து பட்டைய கிளப்புது….. உலகம் ரெம்பவே உள்ளங்கைக்கு வந்திடுச்சி….

என்னடா நடக்குது இங்க என் கூட இருந்தவ எங்க

Good girls gives u happiness.Bad girls gives u experience.. So enjoy every girlfriends :) ….. எனக்கு வந்த sms'ல இதுவும் ஒன்னு… ஹி ஹி ஹி….


அவ்வளவு தாங்க இன்னைக்கு மொக்கை.. வருஷத்துல கடைசி நாள்.. ஒரு போஸ்ட் போட்டாசி….

அடுத்த வருஷம் எல்லாத்தையும் மீட் பண்ணுறேன்…..

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்…

cheers
gops13


தமிழ் பிழை இருந்தால் kindly excuse plz…… ஒழுங்கான தமிழ் சாப்ட்வேர் இருந்தால் லிங்க் அனுப்புங்க பிளிஸ்…