Wednesday, February 24, 2010

சச்சின் கிரிக்கெட்டின் கடவுளுக்கு வாழ்த்துக்கள் :)

மதிய சாப்பாட்டை முடிஞ்சி ஆபிஸ் வந்து Cricinfo வ திறந்து பார்த்தா நம்ம சச்சின் 156 நாட் அவுட் ல இருந்தாப்'ல, ஆகா, இன்னைக்கு சரித்தரத்துல ஒரு நாள் அத மிஸ் பண்ண கூடாது'னு உள்ள முழிச்சி தூங்கி கிட்டு இருக்கிற பச்சி சொல்லவும், எப்படி ஆபிஸ்'ல இருந்து 420 காட்டி அப்பீட் ஆகலாம்'னு யோசனை பண்ணி, ஆங் என் நண்பர் ஒருவர் ஊருக்கு ஊறுகாய் போட போறாரு சோ அவர பார்த்து ஒரு கடிதம் கொடுத்துட்டு வந்துடறேன்'னு இதயம் நல்லெண்ணை மாதிரி சுத்தமா சுகாதாரமா ( ஒரு ரூபாய் பாக்கெட் எல்லாம் இங்கு இல்லை) ஒரு நல்ல பொய்யை டேமேஜர் கிட்ட கூவிட்டு எஸ்கேப் டூ த ஜ.டி. மானேஜர் வூட்டாண்ட.....

அங்க போனா ஸ்டேடியத்தை விட கூட்டம்.. டேய் உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையடா'னு நான் அவங்கல பார்த்து கேட்கிற மாதிரி ஒரு பார்வை. அந்த சைடு இருந்தும் அதே ரீப்பீட்டு.. என்னத்த செய்ய கிரிக்கெட் கடவுள் டெண்டுல்கர்'னா யாருக்குக்கு தான் காரணம் கிடைக்காதுங்குறேன்....ஒரு வழியா குறுக்கு வழி மூலமா (அய்யோ உட்கார இடத்துல இல்லப்பா) டிவி பொட்டி முன்னாடி உட்கார்ந்து மேட்ச'ய வாட்ச் பண்ண (ரிஸ்ட் வாச்சும் இல்லைப்பா) ஆரம்பிச்சா டெண்டுல்கர் ஸ்கோர் 180 .. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கடவுள் 191 ரன்ஸ் வந்தோன நீச்சல் தெரியாதவன் தண்ணியுள்ள கிணற்றுல விழுந்த மாதிரி ஓவர் பிரஷாராகிடுச்சி.... 194 அடிப்பாரா? அதுக்கு அப்புறம் 200 அடிப்பார.. சச்சின் கடவுளுக்கு கூட அந்த பிரஷர் இருந்து இருக்காது...194 கிராஸ் பண்ணுனோன அய்யோ நான் என்னையும் மறந்து கத்தி குதிச்சிட்டேன்... அவ்வளவு எக்ஸைடட் ஆகிட்டேன்.. எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க . who cares, அடுத்து 200 அடிக்கிறதுக்குள்ள அந்த டோனி பய விடுவேனானுட்டான்.. கடைசி ஓவர்'ல தான் சச்சின் கடவுள் ரெட்டை சதம அடிச்சாரு...

40 வருஷ ஒன் டே கிரிக்கெட்'ல நம்ம சச்சின் கடவுள் தான் முதல் நபர் 200ரன்ஸ் எடுக்கிறதுஅப்பாடா , எனக்கு ஏற்ப்பட்ட சந்தோஷம், சான்ஸே இல்லை.... ஏதோ நானே பேட் செஞ்சி ஸ்கோர் பண்ணுன பீலிங்க்ஸ்... மறக்க முடியாத நாள் இன்று... சச்சின் கடவுள் இன்னிங்க்ஸ்'ய பார்க்காம விட்டு இருந்தா, சரிந்தரத்துல நான் மிஸ் ஆகி இருப்பேன்்... ஐ லவ் சச்சின் டெண்டுல்கர்... ரொம்ப பெருமையா இருக்கு....

மேன் ஆப் தி மேட்ச்'ல அவரு சொன்னது....

don't know how to react. I'd like to dedicate this double-hundred to the people of India for standing behind me for the last 20 years throughout the ups and downs. have done the best I have for the team; there have been a few bad decisions I have made as a batsman, but I have always thought the best for the team

ஒரே ஆனந்த கண்ணீர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..எனக்கு தான் :)

A big Salute :)

நான் இன்னைக்கு குதிச்ச குதி'ல என் மொபைல் போன் அவுட்..எவ்வளவோ பண்ணியாச்சி நம்ம சச்சின் கடவுளுக்காக இத கூட பண்ண மாட்டோமா?
Sachin Tendulkar = I am realy Proud to be an Indian :).... i am flying high

World Record Holder 200* runs

Wednesday, February 17, 2010

Passionately

ரொம்ப நாளாச்சி இந்த பக்கம் வந்து.. எப்ப எல்லாம் பிலாக் ஆர்வம் நம்மகிட்ட வருதோ அப்ப எல்லாம் என்னையும் அறியாம வேலை ஜாஸ்தி ஆகிடுது... அட போங்கடா நானும் என்னுடைய பிஸியும்....இன்னைக்கு தலைவலி'னு 420 ய காட்டிட்டு இதோ,

அவதார் - என்னை மறந்த அந்த 3 மணி நேரம்.. சான்ஸே இல்லை... முதல் 3D அனுபவம். படம் பார்த்த தியேட்டரும் அப்படி.. செம எபக்ட்...என்னா, கொடுத்த கண்ணாடி தான் கொஞ்சம் பெருசா கே.பி.என் பஸ் கண்ணாடி மாதிரி என் வாயையும் சேர்த்து மறைச்சிடுச்சி.
ஆனாலும் விடுவோமா? கண்ணுல (கண்ணாடி போட்டனால) தண்ணி வர வர படத்தை பார்த்துட்டு முத்தை எடுத்துட்டு வந்தோம்'ல.... நாங்க எல்லாம் யாரு , படத்துல வர இயற்க்கை, பறவை,செடி, கொடி, மரம், தண்ணீர், பூ, மலை. காடு, மேடு, புல், பனி துளி எல்லாமே அத்தனை அழகு.(பயமுறுத்துர மிருகத்தை தவிர்த்து). அட இப்படியும் காட்ட முடியுமா? எப்படி சார்?அதுவும் இவ்வளவு துல்லியமா? இப்பவும் சிலிர்க்குது... படத்துல இடைவேளை இல்லை, ஆனால் எப்படி 3 மணி நேரம் போனதுனே தெரியல.. படம் பார்த்துக்கிட்டு இருக்கும் போது திடீர்னு என் வலது காதோரத்துல ஈரம்.. என்னடா'னு அதிர்ச்சியில திருச்சி போகாம ஸாரி திரும்பி பார்த்தா ஒரு பாப்பா... என்ன'னு விஷயத்தை கேட்டா கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன் நீங்க செவி சாய்க்கவே இல்லை அது தான், உங்க பக்கத்து ஸீட்டு தோழரை கொஞ்சம் என் ஸீட்டை எட்டி உதைக்காம இருக்க சொல்லுறீங்களா'னு ஒரு வேண்டுக்கோள் கொடுத்துட்டு அசால்டா போயிட்டாங்க.. ஆகா, அவங்க வந்தது கூட தெரியாமலா நான் படத்துல மூழ்கி இருந்தேன்....?
அவங்க வந்தது படத்துல தான் யாரோ வராங்க'னு மெய்யாலுமே நினைச்சிட்டேன்... படம் முடிஞ்சி வெளியே வந்தா காதோரத்துல மெரூன் கலர் சாயம்... எல்லாத்துக்கும், அவதார் ஒரு அனுபவம்'னா என்க்கு ரெண்டு அனுபவம் ...

ஆமா, உதட்டு சாயம் வாசனையா இருக்குமா? இந்த ஆராய்ச்சி'ய நான் செய்யாம விட்டுடேனே?

Apart from அனுபவம், இந்த படம் ஒரு அருமையான படைப்பு.... Don’t miss it... நான் மூனு தபா பார்த்துட்டேன்.......


வந்துட்டாங்கே லே.. இவங்கே மொக்கை தாங்கலலேகிறுக்கன் :- காதலுக்கு காதலர் தினம் அவசியமா?

பொறுக்கி:- மைசூர் பாகு க்கு மைசூர் அவசியம் இல்லையே

கிருக்கன்:- ஆனா பருப்பு வடைக்கு பருப்பு கட்டாயம் தேவையே?

பொறுக்கி:- திருநெல்வேலிக்கு அல்வ்

கிறுக்கன்:- ஏலேய் முடியல்ல'லே, முடி அள்ள விட்டுடாதே லே..
பொறுக்கி:- என்னத்தவே பார்க்க புலம்ப?

கிருக்கன்:- நான் ஒன்னு சொன்னா நீங்க வேற எதையோ கேட்குறீங்க, எப்போதுமே இப்படி தானா?

பொறுக்கி:- டேய் என்னை குழப்பாதேலே,

கிறுக்கன்:- யாரு? நான்? உன்னை? சும்மா போலே

பொறுக்கி:- சும்மா தானே போய்கிட்டு இருந்தேன். என்னை கூப்பிட்டு கேள்வி கேட்டது நீ தானே லே....

கிறுக்கன்:- கேள்வி கேட்டேனே அதுக்கு பதில் சொன்னியாலே?

பொறுக்கி:- அதை தான் லே திரும்பவும் சொல்லுறேன். நீ கேள்வி கேட்ட, நான் அதுக்கு பதில் சொன்னேன்.


கிருக்கன்:- ??????????


பொறுக்கி:-நீ கேட்டதுக்கு தான் நான் பதில் சொன்னேன்.. ஆனா நீ, "நான் சொன்னதை நீங்க கேட்டீங்களா'னு" எப்படி என்னை பார்த்து கேட்கலாம்?

கிறுக்கன்:- ஸ்ஸ்ஸ்ப்பா...உங்கள செஞ்சாங்களா இல்லை செதுக்குனாங்களா?

பொறுக்கி:- ஆக்சுயலி ஸ்பீக்கிங், மை


கிறுக்கன்:- உங்க ஸ்பீக்கர் வரலாறை எல்லாம் நான் கேட்கல., காதலுக்கு காதலர் தினம் அவசியமா??

பொறுக்கி:- அடேய், காதலுக்கு அவசியம் இல்லை., ஆனா காதலர்களுக்கு ரொம்ப அவசியம்....

கிறுக்கன்:- எதுக்குனே?

பொறுக்கி:- அன்னைக்காச்சும் உன்னை மாதிரி டகால்டி எல்லாம் ஜேப்ல இருந்து பத்து காசு வெளியே எடுத்து ஒரு புளிப்பு முட்டாயோ, ஒரு புளியோதரை பொட்டலமோ காதலிக்கி பரிசா கொடுக்காபாங்கனு ஒரு நப்பாசை தான்டா...

கிறுக்கன்:- அய்யய்யய்யயோ உங்களுக்கு மீனுக்கு இருக்கிற மாதிரியே மூளை ஜாஸ்தினே

பொறுக்கி:- மீனுக்கு ஏதுடா மூளை

கிறுக்கன்:- ஆனா மீன் தொட்டிக்கு இருக்குமே...அய்யோ அய்யோ

சரி சரி அவ்வளவு தான் மக்கா மகா மொக்கை... ஏதோ என்னால முடிஞ்சது... பார்த்து துப்பிட்டு போங்க.......

மேட்டரே இல்லாமல் மொக்கை போடும் சங்கத்தின் சார்பாக
கோப்ஸ்