Tuesday, March 30, 2010

பொண்ணு பார்க்க

என்னை பத்தி தெரியாம , நம்ம அப்பாவி தங்கமணி தங்க மனசோட போட்ட tag

நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க


என்னை போல ஒரு பக்கா பேச்சிலரை இப்படி ஒரு டேக் எழுத சொல்லி இருக்காங்க என்னத்த சொல்ல? அட எப்படி சொல்ல? சும்மாவே மொக்கை , இதுல கற்பனை'னு வேற சொல்லிட்டாங்க.. வாட் டு do??? எவ்வளவு தான் யோசிக்கிறது?

சரி ஏதோ என் கற்பனை மொக்கைக்கு ஏற்றது போல
hi ஐ அம் ......

வாங்க ஈவினிங் தான் வருவீங்க'னு சொன்னாங்க, நீங்க என்ன'னா பால்க்காரனை விட அதிகாலை'யே வந்துட்டீங்க...

எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தாங்க... வேணும்'னா நான் போயிட்டு பால்க்காரன் வந்துட்டு போனதுக்கு அப்புறம் வரவா?

ஏன் திடீர்'னு இப்படி கேட்குறீங்க? என்னாச்சி..

இல்ல இன்னும் பால்க்காரன் வரல'னு சொல்லுறீங்க , அப்போ காபி, டீ எதுவும் வராது... காலை'லே வெறும் வயித்துல மொக்கை போட முடியாது பாருங்க அதுக்கு தான்..

அட பால்க்காரன் வராட்டி என்ன? அதுதான் ஜஸ் பொட்டி'ல நேற்று வாங்கின ஆரோக்யா ஆரோக்கியமா இருக்குதே அதுல போட்டு கொடுத்துடுவோம்

டபுள் ஓகே ஆனா அதுக்கு முதல் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்...

என்னா?

உள்ளே வரலாமா? பால்க்காரனை மாதிரி வாசல்'ல வச்சிக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கீங்க

இன்னும் நீங்க அந்த பால்க்காரனை விடவே இல்லையா?

நீங்க இன்னும் உள்ளே கூப்பிடவே இல்லையே?

அட என்னங்க பார்மாலிட்டி எல்லாம், உள்ளே வாங்க...

அப்பாடா உள்ளே விடு வேனான்டான் :)

ம்ம்ம்ம் இப்போ சொல்லுங்க இவ்வளவு சீக்கிரமா வந்து இருக்கீங்க,

உங்க பொண்னை பார்த்து பேச்சிட்டு போகலாம்'னு வந்தேன்

ஈவினிங் தானே வரதா சொல்லி இருந்தாங்க?

இல்ல ஈவினிங் வந்தா கூட்டம் அதிகமா இருக்கும், பொண்ணையும் ஒரிஜனலா பார்க்க முடியாது, நீங்க தர கேசரி, பக்கோடவையும் வெளுத்துக்கட்ட முடியாது அதுதான் இப்பவே அட்டாக் பண்ணிடலாம்'னு

ஓ அப்படி வரீங்களா?

எங்க

என்னாது எங்க?

இல்ல நீங்க சொன்னதுக்கு கேட்டேன்.. எங்க வரனும்'னு

ஸ்ஸ்ப்பா.. முடியல சார் உங்க கிட்ட பேசனும்'னா நான் நாணுறு தபா கிரேசி மோகன் கேஸ்ட்டை கேட்க்கனும் போல...

ஏன் உங்க வீட்டுல சிடி பிளேயர், யூஎஸ்பி பிளேயர் எல்லாம் இல்லையா?

யூஎஸ்பி எல்லாம் இல்லை ஆனா SPB பாட்டுனா எனக்கு ரொம்ப புடிக்கும்...

பொண்னை ஒரிஜனலா பார்க்கனும்'னா எப்படி?

மேக்கப் இல்லாம காலங்காத்தால தூங்கி முழிச்சோனா எப்படி இருப்பாங்கனு பார்க்க ஒரு நப்பாசைங்க அவ்வளவு தான்... ஈவினிங்'னா ஒன்னு பவுடரை முகத்துல அப்பி இருப்பாங்க, இல்லனா பவுடர் டப்பால இவங்க முகத்தை விட்டு இருப்பாங்க... சோ, அந்த இடத்துல ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங்கா இருக்கும் you see....

I no see , you see?

என்னங்க சொல்லுறீங்க?

அது ஒன்னுமில்லைங்க நானே என் பொண்ணை அவ தூங்கி எழுந்தோன பார்த்தது இல்லை.. அதுதான்...

அப்போ?

இல்ல நான் காலை சன் டிவி'ல வர 7 மணி தலைப்பு செய்திக்கு எழுந்திருப்பேன் ஆனா என் பொண்ணு 8.30 மணிக்கு வர மீண்டும் தலைப்பு செய்திக்களுக்கு தான் எழுந்திருப்பா, அதுக்குள்ள நான் ஆபிஸ் கிளம்பிடுவேன் அதை தான் சொல்ல வந்தேன் :)

அப்போ காலை டிபன் முடிஞ்சோன தான் உங்க பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியும்?

அய்யோயோ அப்படி எல்லாம் முடிவு பண்ணிடாதீங்க..

டர்ச் ஆவாதீங்க சார்... நான் நாலு இட்லிக்கு மேல சாப்ட மாட்டேன்..

நான் அதுக்கு டர்ச் ஆவல..

பின்ன...

இல்ல இன்னும் அரை மணி நேரத்துல என் பொண்ணு ரெடி ஆகி வந்துடுவா ...

காத்து இருப்போம் :)


இதுக்கு மேல அவங்க பேச்சு வேணும்னா சொல்லுங்க அடுத்த பார்ட் போட்டு டூவோம்

மொக்கையுடன்
கோப்ஸ்

Monday, March 22, 2010

சும்மா

டேய் நீ பஸ்'ல இருக்கியா டா?
ஏய் லூசு நான் ஆபிஸ்'ல இருக்கேன் டா..
பஸ்'ல இருந்தா எப்படி டா உன் கிட்ட சாட் பண்ண முடியும்?
கிருக்கா நான் அந்த பஸ்சை கேட்க்கல..
டேய் காலங்காத்தால மொக்கை வேணாம்டா பிஸீஸ்…எந்த பஸ்சை சொல்லுற?
Gமெயில்'ல புதுசா அவுத்து வுட்டு இருக்காங்க டா BUZZ'னு டுவிட்டர் மாதிரி? அத கேட்டேன்
வாங்கிக்க
இது எப்படா ? எப்படி நான் கவனிக்காம விட்டேன்?
அந்த அளவுக்கு இனைய தளத்துல இனையாம இருந்து இருக்கேன் ………


அட்ரா சக்கை ஐ.பி.எல் = எங்க பார்த்தாலும் இங்க ( ஆபிஸ்'ல) ஐ.பி.எல் ஜுரம் தான்.. அது ஏன்'னு தெரியல தமிழனை (சென்னை சூப்பர் கிங்ஸ்) கண்டா எவனுக்குமே புடிக்க மாட்டேங்குது.... அட ஏன்'டா தோனி இந்தியாக்கு விளையாண்டா அவன போல் ஒருவன் இருக்கானா'னு கேட்பீங்க, அதுவே சென்னைக்கு எதிரா விளையாண்டா அவனையும் சரி நம்ம ஊரையும் சரி ஒரு ஏளனமாத்தான் பார்க்குறாங்கே... வச்சோம்'ல ஆப்பை.... எல்லாத்துக்கும் பொறாமை ஸ்டார் பிளேயர் இல்லாமலையே நாம ஒரு தபா பைனலுக்கும், இன்னொரு தபா அரை இறுதிக்கும் இதோ இந்த தபா இதுவரைக்கும் நாலாவது இடத்தில் இருக்கோம்'னு...

அதுலையும், இந்த பஞ்ஜாப்பும் , பரம்பரை பரம்பரையா வாய்க்கால் தகராறு பண்ணிக்கிட்டு வர அழகான பெண்கள் அதிகம் கொண்ட பெண்களூர் சாரி பெங்களுரூம் நம்ம சென்னை'க்கு எதிரா எப்ப விளையாண்டாலும் நல்ல பார்த்தீங்கனா அகோர வெறியோட தான் இருப்பாங்கே.. என்ன கொடுமை சார் இது? உதாரணத்துக்கு நேற்றயை ஆட்டம் பஞ்சாப் Vஸ் சென்னை... கடைசி பந்துல நம்ம யுவிசிங் காட்டுன ஆக்ரோஷம் மிளகு ரசத்தை விட காட்டமா இருந்தது... என்னமோ எட்டு பட்டிக்கும் நடந்த பஞ்சாயத்து தேர்தல்'ல ஜெய்ச்ச எபக்ட் கொடுத்தாறு பாருங்க.. ஆல் இன் தி கேம்.. சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை...

ஜ.பி.எல்'னு வந்துட்டா ஒவ்வொரு ஸ்டேட்டும் நமக்கு ................... நீங்களே பில்ட் அப் பண்ணிக்கோங்க :)

நாளைக்கு வாய்க்கால் தகறார் பண்ணுறவனோட மாட்ச்.... 90% தோல்விக்கு தான் .நாம டிசன்டடா தோற்றா நல்லது .. பார்ப்போம்....

கொசுறு :- டெல்லிக்கும் , மும்பாய்க்கும் ஆரம்பத்துல இருந்து ஒரு வாய்க்கா சண்டை ஓடுதாமே?


"நடப்பதெல்லாம் நன்மைக்கே"னு சொல்லுறாங்களே, ஆனா எத்தனை கிலோ மீட்டர் நடந்தா நல்லதுனு' யாரும் சொல்லலையே'ப்பா..... என்னப்பா செய்யறது........

தெரிஞ்சா சொல்லுங்க.. வரட்டா

என்றும் மொக்கையுடன்
கோப்ஸ்