Thursday, May 20, 2010

fwd மெஸேஜாம்

ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு 20 எஸ்எம்எஸ் வந்து சேருது நம்ம ரோமிங் லைன்'ல.. உட்கார்ந்து படிச்சிட்டு யோசித்து பார்த்தா, இந்த மெஸேஜ் எல்லாம் யாரு மொதல்ல அடிச்சி யாருக்கு அனுப்பி இருப்பாங்க? இதை இவருக்கு தான் அனுப்பனும்'னு யோசிச்ச அந்த நபர், அனுப்பினத்துக்கு அப்புறம் ஒரு மாசம் கழித்து யோசித்து பார்த்து இருப்பாரா எதுக்கு அனுப்புனோம்'னு? இல்ல என்ன தான் அனுப்புனோம்'னு நினைச்சாச்சும் பார்த்து இருப்பாரா?

எது எப்படியோ நாம அனுப்புற மெஸேஜ் மத்தவங்களுக்கு புரியுதோ இல்லையோ, செல் போன் கம்பெனிகாரனுக்கு லாபமா இருக்கே... அவனுக்கு நஷ்டமா இருந்தா அப்புறம் நமக்கு எப்படி ஒ.சி.'ல எஸ்.எம்.எஸ் கிடைக்கும்…

அதனால குறை சொல்லாம, நூற்றுக்கும் மேலான மெஸேஜ்'ல இருந்து கொஞ்சத்தை வடிக்கட்டி டிகாஷன் கம்மியாக ரசித்ததை இதோ என் பயணத்தில்
நட்பு என்பது நடிப்பல்ல அது நாடி துடிப்பு

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..

மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings

காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உண்ர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….

உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்

செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

தண்ணி மேல போனா தான்டா அது ஷிப். தண்ணி அடிச்சா தான்டா அது பிரண்ட்ஷிப்… so keep drinking

உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல

மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெறியது.. So don’t worry about anything..

என் இதயத்தில் ஒட்டை என்று டாக்டர் சொன்னார்..பாவம் அவருக்கு என்ன தெரியும் அது என் நண்பன் வரும் வாசல் என்று..

வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன்

ஆயிரம் சொல்லுங்க , அட என்னங்க ஆயிரம் சொல்லுங்க'னு ஒரு பேச்சுக்கு சொன்னா அதுக்குனு ஆயிரம்'னு சொல்லனுமா? வர வர எல்லாதுக்கும் தமாசு ஜாஸ்தி ஆகிடுச்சி :)

இது மாதிரி தமிழ்'ல fwd sms வந்து படிச்சாலே ஒரு தனி இன்பம் தான்… அந்த ஒரு செகன்ட் முகத்துல ஒரு சிரிப்பு வரும் பாருங்க priceless

மொக்கையுடன்
கோப்ஸ்


இந்த வாரம் மிகவும் ரசித்த பாட்டுகள்

பானா காத்தாடி - தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே.. பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே. கோர்த்ததை பூ ஏத்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே. வார்த்தையில் தான் பார்வையில் தான் வாயிக்கலாம் ஒர் வாழ்க்கையை.யாரோடு யாறென்று யார் தான் சொல்வாரோ.

மெட்ராஸ் பட்டினம் - வாம்மா துரையம்மா

Monday, May 03, 2010

பொண்ணு பார்க்க - 2
வாங்க ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க போல…

அத நான் கேட்கனும் உங்க கிட்ட…

ஹலோ இது எங்க வீடு .. நான் இங்கயே தான் இருக்கேன்..

இல்லங்க நான் அத சொல்ல வரலை

தெரியும் நீங்க அத சொல்ல வரலை என்னை பார்க்க தான் வந்தீங்கனு…

பல்ப் (பேச சந்தர்ப்பமே கொடுக்க மாட்டேங்குறாளே)


so, how are u? what u do ?

நீங்க டெக்ஸாஸ் ரிடர்னா?

இல்லையே ஏன்?

அப்புறம் ஏன் ஆங்கிலத்துல கேள்வி கேட்குறீங்க…

ஒ அதுவா, கவிதை எழுதும் போது மானே தேனே'னு சொல்லிக்கிற மாதிரி, அப்போ அப்போ இங்கிலிபிக்கிஸ்'ல ரெண்டு மூனு வார்த்தை போட்டுக்கலாம்'னு பார்த்தேன்… நோ வர்ரீஸ்… காரி ஆன்…


ம் சொல்லுங்க என்ன திடீர்னு காலங்காத்தால என்னை பார்க்க வீடு தேடி வந்துட்டீங்க..

என்னங்க செய்யறது, இதுவே தமிழ் சினிமா'வ இருந்தா, உனக்கு'னு பிறந்தவ எங்க, என்ன பண்ணிக்கிட்டு இருக்காளோ'னு பாட்டி கூவி முடிக்கிறத்துக்கு முன்னாடியே, எனக்கு'னு பிறந்தவ ஷா'ல'லா ஷா'ல'லா'னு திரிஷா மாதிரியோ, கொஞ்சும் மயினாக்கலே கொஞ்சும் மயினாக்கலே'னு ஜஸ்வர்யா ராய் மாதிரியோ ஒரு பியூட்டி குயின்ஸ் பாடி, ஆடி இருக்கும், நமக்கும் வேலை மிச்சம்'னு ஸ்கிரீன்'ல பார்த்துட்டு ஓகே சொல்லி இருக்கலாம்.. பட் என்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே, இப்படி கற்பனை கழுதைய எதுவும் தட்டி விட்டா நேரா அது எங்கயாவது போய் "என் புருஷன் தான் , எனக்கு மட்டும் தான் ரேஞ்சுல எவளையாவது அள்ளிக்கிட்டு வந்துட்டா.. அதுதான் வரும் முன் காப்போம்'னு நானே சன் டைரக்ட் மாதிரி டைரக்ட்டா வந்துட்டேன்..ஹி ஹி

அதுவும் சரி தான் சட்டி'ல இருக்கிறது தானே கரண்டில வரும்…

கண்டிப்பா ஜாடிக்கு ஏத்த மூடி தான் எங்கேயும் எப்போதும்.

????

இல்ல, கரண்டி'ல இருக்கிறது எல்லாமே தட்டுக்கு வந்துடுமே.. அதுக்கு என்ன சொல்லுறீங்க

ஸ்ஸ்ஸ்ப்பா, நீங்க எவர்சில்வர் கடையில எதுவும் பார்ட் டைம் வேலை பார்க்குறீங்களா?

என்ன பார்த்தா அப்படியா தெரியுது?

பார்த்தா அப்படி தெரியல, பட் வாயை திறந்தா அம்மாடி.

ஏங்க

இல்ல ஒரு கேள்வி கேட்டா ஒரு பதில் தான் சொல்லனும், நீங்க என்ன'னா கோனார் தமிழ் உரை மாதிரி பத்து விதமான பதில் சொல்லுறீங்க, அது மட்டுமா? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி சொல்லிட்டு அந்த பதில்'ல எனக்கு ரெண்டு கேள்விய கேட்டு புடுறீங்க…. என்ன கொடுமை கோப்ஸ் இது...

ஒ நீங்க அத சொல்லுறீங்களா, non stop'ah பேசுறது manufactured defect ங்க.. செய்யறதுக்கு ஒன்னும் இல்லை…

ம்ம்ம் ஆமா நீங்க பி.காம் எந்த கிலாஸ்'ல பாஸ் பண்ணுனீங்க?

A section'ல பாஸ் பண்ணுனேன்…

A section'na 1st கிரேட்?

சான்சே இல்ல, நான் சொன்னது என் கிலாஸ் section ah

&$^#( யோவ் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்ல மாட்டியா?

Y டூ மச் டென்ஷன்? கூல்.. ஒழுங்க எனக்கு புரியர மாதிரி கேளுங்க.

சரிங்க சார், தாங்கள் பி.காமில் எத்தனை சதவீதம் எடுத்தீர்கள்?

ஒ அதுவா? அளவுக்கு அதிகமா சொத்து சேர்க்கிறது ஒரு ஆண் பிள்ளைக்கு நல்லது இல்லை'னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்காரு.. அதனால 51 சதவீதத்துக்கு மேல நான் தாண்டல…

தாண்ட முடியல'னு சொல்லுங்க..

அப்படி இல்லைங்க…

பின்ன எப்படிங்க…

பக்கம் பக்கமா நான் எழுதறனால, கட்டு கட்டா பேப்பர் காலியாகுதுனு எங்க காலேஜ் எக்கானாமி தலை, என்னை மட்டும் எல்லா கேள்விக்கும் ஒத்த வரி'ல விடை அளி'னு எல்லா கேள்விக்கும் சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்'னு கொடுத்துட்டாரு..

அய்யோ அது ரொம்ப ஈஸியா இருந்து இருக்குமே..

அட ஏங்க நீங்க வேற, தக்குடு மாதிரி டாலண்டா இங்கி பிங்கி பாங்கி போட தெரியலங்க எனக்கு, அது மட்டும் இல்லாம வைஷ்னவி மாதிரி ஒரு பச்சைக்கிளி பாப்பா வேற பக்கத்துல இல்லை.. சோ, என்னால ஒழுங்க கதை எழுத முடியல பரிட்சைல, அதனால 50 ய தாண்ட முடியல..

அது யாருங்க தக்குடு, வைஷ்னவி? லவ்வர்ஸா?

black moon

அப்படினா?

பிலாக், அப்பாவி தங்கமணி, tag, பொண்ணு பார்க்க, உங்க வீடு, பால்க்காரன், சன் டிவி, நீங்க, நான், இந்த மொக்கை எல்லாமே ஒரு கறுப்பு நிலா'ங்க…

சுத்தமா புரியல காலை'ல 10 மணிக்கே இப்படியா? Btw, என் ஆத்தா டிபன் கொடுத்தாளா உங்களுக்கு?

ஒ பல்லு டாக்டர் மாதிரி கொஞ்சம் எட்டி என் வாய்க்குள்ள பாருங்க , 3 ஈடூ இட்லி, 2 தட்டு கேசரி எல்லாம் தெரியும்…

உங்க கிட்ட ஒன்னு பேச முடியல எதுக்கெடுத்தாலும் ………

ஆண்டவா


சரி சரி பொண்ணு பார்க்க வந்தீங்களே வெறும் கையோ'டையா வந்தீங்க?

அப்படி டிசெண்ட் இல்லாம் இருப்போமா.. இதோ பாருங்க ஒரு கிலோ ஆப்பிள் , சாத்துக்குடி வாங்கியாந்து இருக்கேன்..

என்ன'ங்க இவ்வளவு சின்ன பார்சலா இருக்கு?

அப்படியா, சரி வுடுங்க அடுத்த தபா வரும் போது ஒரு MRF heavy duty டயர் ஒன்னு வாங்கியாந்துறேன்… பார்க்க பெருசா இருக்கும் ஒகே…

எதுக்கெடுத்தாலும் உங்க கிட்ட ஒரு பதில் இருக்கு.. எப்படிங்க இப்படி?

:)

சரி அதை விடுங்க கேட்குற கேள்விக்கு ஒழுங்க ஒத்த வரில பதில் சொல்லனும் ஒகே? ஐ மீன் ஜஸ்ட் ஒன்லி ஒன் வோர்ட் ஆன்ஸர்ஸ் ஒகே ?
ஒகே..

உங்களுக்கு கவிதை எழுத வருமா?

வராது…

ஏன்?

இப்ப கவிதை எழுத வருமா'னு கேட்பீங்க, அப்புறம் கதை எழுத வருமா'னு கேட்பீங்க, கடைசியில என்னை வச்சி படம் எடுக்க சொல்லுவீங்க.. தேவையா இது? ஆரம்பத்திலேயே ஒன்னும் தெரியாது'னு தன்னடக்கத்தோட சொல்லிட்டோம்'னா பின்னால் கோர்ட் கேஸு'னு அலைய தேவலை பாருங்க..

உங்களுக்கு ஒரு தபா சொன்னா புரியாதா? ஜ ஜஸ்ட் நீட் ஓன்லி ஒன் வோர்ட் ஆன்ஸர் டார்லிங்…

அய்யே என்ன'ங்க இது டார்லிங் பிரில் இங்க்'னு எனக்கு வெக்கமா இருக்குங்க…

இதோடா, சரி அடுத்த கேள்வி..

உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்தது உண்டா?

ஒ தமிழ்'ல நாலு, கொல்டி'ல ரெண்டு, மல்லு'ல ரெண்டு, மஹாராஸ்டிரா'ல ஒன்னு, கன்னடத்துல ஒன்னு', வெளிநாட்டுல ஜந்து'னு, இருந்தாங்க, ஆனா பாருங்க அத்தனை பேருக்கும் நான் அவங்க பாய் பிரெண்டா இல்லாம போயிட்டேன்…

மொக்கை டூ பீ தொடரும்…
கோப்ஸ்