Monday, May 03, 2010

பொண்ணு பார்க்க - 2
வாங்க ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க போல…

அத நான் கேட்கனும் உங்க கிட்ட…

ஹலோ இது எங்க வீடு .. நான் இங்கயே தான் இருக்கேன்..

இல்லங்க நான் அத சொல்ல வரலை

தெரியும் நீங்க அத சொல்ல வரலை என்னை பார்க்க தான் வந்தீங்கனு…

பல்ப் (பேச சந்தர்ப்பமே கொடுக்க மாட்டேங்குறாளே)


so, how are u? what u do ?

நீங்க டெக்ஸாஸ் ரிடர்னா?

இல்லையே ஏன்?

அப்புறம் ஏன் ஆங்கிலத்துல கேள்வி கேட்குறீங்க…

ஒ அதுவா, கவிதை எழுதும் போது மானே தேனே'னு சொல்லிக்கிற மாதிரி, அப்போ அப்போ இங்கிலிபிக்கிஸ்'ல ரெண்டு மூனு வார்த்தை போட்டுக்கலாம்'னு பார்த்தேன்… நோ வர்ரீஸ்… காரி ஆன்…


ம் சொல்லுங்க என்ன திடீர்னு காலங்காத்தால என்னை பார்க்க வீடு தேடி வந்துட்டீங்க..

என்னங்க செய்யறது, இதுவே தமிழ் சினிமா'வ இருந்தா, உனக்கு'னு பிறந்தவ எங்க, என்ன பண்ணிக்கிட்டு இருக்காளோ'னு பாட்டி கூவி முடிக்கிறத்துக்கு முன்னாடியே, எனக்கு'னு பிறந்தவ ஷா'ல'லா ஷா'ல'லா'னு திரிஷா மாதிரியோ, கொஞ்சும் மயினாக்கலே கொஞ்சும் மயினாக்கலே'னு ஜஸ்வர்யா ராய் மாதிரியோ ஒரு பியூட்டி குயின்ஸ் பாடி, ஆடி இருக்கும், நமக்கும் வேலை மிச்சம்'னு ஸ்கிரீன்'ல பார்த்துட்டு ஓகே சொல்லி இருக்கலாம்.. பட் என்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே, இப்படி கற்பனை கழுதைய எதுவும் தட்டி விட்டா நேரா அது எங்கயாவது போய் "என் புருஷன் தான் , எனக்கு மட்டும் தான் ரேஞ்சுல எவளையாவது அள்ளிக்கிட்டு வந்துட்டா.. அதுதான் வரும் முன் காப்போம்'னு நானே சன் டைரக்ட் மாதிரி டைரக்ட்டா வந்துட்டேன்..ஹி ஹி

அதுவும் சரி தான் சட்டி'ல இருக்கிறது தானே கரண்டில வரும்…

கண்டிப்பா ஜாடிக்கு ஏத்த மூடி தான் எங்கேயும் எப்போதும்.

????

இல்ல, கரண்டி'ல இருக்கிறது எல்லாமே தட்டுக்கு வந்துடுமே.. அதுக்கு என்ன சொல்லுறீங்க

ஸ்ஸ்ஸ்ப்பா, நீங்க எவர்சில்வர் கடையில எதுவும் பார்ட் டைம் வேலை பார்க்குறீங்களா?

என்ன பார்த்தா அப்படியா தெரியுது?

பார்த்தா அப்படி தெரியல, பட் வாயை திறந்தா அம்மாடி.

ஏங்க

இல்ல ஒரு கேள்வி கேட்டா ஒரு பதில் தான் சொல்லனும், நீங்க என்ன'னா கோனார் தமிழ் உரை மாதிரி பத்து விதமான பதில் சொல்லுறீங்க, அது மட்டுமா? நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி சொல்லிட்டு அந்த பதில்'ல எனக்கு ரெண்டு கேள்விய கேட்டு புடுறீங்க…. என்ன கொடுமை கோப்ஸ் இது...

ஒ நீங்க அத சொல்லுறீங்களா, non stop'ah பேசுறது manufactured defect ங்க.. செய்யறதுக்கு ஒன்னும் இல்லை…

ம்ம்ம் ஆமா நீங்க பி.காம் எந்த கிலாஸ்'ல பாஸ் பண்ணுனீங்க?

A section'ல பாஸ் பண்ணுனேன்…

A section'na 1st கிரேட்?

சான்சே இல்ல, நான் சொன்னது என் கிலாஸ் section ah

&$^#( யோவ் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்ல மாட்டியா?

Y டூ மச் டென்ஷன்? கூல்.. ஒழுங்க எனக்கு புரியர மாதிரி கேளுங்க.

சரிங்க சார், தாங்கள் பி.காமில் எத்தனை சதவீதம் எடுத்தீர்கள்?

ஒ அதுவா? அளவுக்கு அதிகமா சொத்து சேர்க்கிறது ஒரு ஆண் பிள்ளைக்கு நல்லது இல்லை'னு நம்ம சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்காரு.. அதனால 51 சதவீதத்துக்கு மேல நான் தாண்டல…

தாண்ட முடியல'னு சொல்லுங்க..

அப்படி இல்லைங்க…

பின்ன எப்படிங்க…

பக்கம் பக்கமா நான் எழுதறனால, கட்டு கட்டா பேப்பர் காலியாகுதுனு எங்க காலேஜ் எக்கானாமி தலை, என்னை மட்டும் எல்லா கேள்விக்கும் ஒத்த வரி'ல விடை அளி'னு எல்லா கேள்விக்கும் சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்'னு கொடுத்துட்டாரு..

அய்யோ அது ரொம்ப ஈஸியா இருந்து இருக்குமே..

அட ஏங்க நீங்க வேற, தக்குடு மாதிரி டாலண்டா இங்கி பிங்கி பாங்கி போட தெரியலங்க எனக்கு, அது மட்டும் இல்லாம வைஷ்னவி மாதிரி ஒரு பச்சைக்கிளி பாப்பா வேற பக்கத்துல இல்லை.. சோ, என்னால ஒழுங்க கதை எழுத முடியல பரிட்சைல, அதனால 50 ய தாண்ட முடியல..

அது யாருங்க தக்குடு, வைஷ்னவி? லவ்வர்ஸா?

black moon

அப்படினா?

பிலாக், அப்பாவி தங்கமணி, tag, பொண்ணு பார்க்க, உங்க வீடு, பால்க்காரன், சன் டிவி, நீங்க, நான், இந்த மொக்கை எல்லாமே ஒரு கறுப்பு நிலா'ங்க…

சுத்தமா புரியல காலை'ல 10 மணிக்கே இப்படியா? Btw, என் ஆத்தா டிபன் கொடுத்தாளா உங்களுக்கு?

ஒ பல்லு டாக்டர் மாதிரி கொஞ்சம் எட்டி என் வாய்க்குள்ள பாருங்க , 3 ஈடூ இட்லி, 2 தட்டு கேசரி எல்லாம் தெரியும்…

உங்க கிட்ட ஒன்னு பேச முடியல எதுக்கெடுத்தாலும் ………

ஆண்டவா


சரி சரி பொண்ணு பார்க்க வந்தீங்களே வெறும் கையோ'டையா வந்தீங்க?

அப்படி டிசெண்ட் இல்லாம் இருப்போமா.. இதோ பாருங்க ஒரு கிலோ ஆப்பிள் , சாத்துக்குடி வாங்கியாந்து இருக்கேன்..

என்ன'ங்க இவ்வளவு சின்ன பார்சலா இருக்கு?

அப்படியா, சரி வுடுங்க அடுத்த தபா வரும் போது ஒரு MRF heavy duty டயர் ஒன்னு வாங்கியாந்துறேன்… பார்க்க பெருசா இருக்கும் ஒகே…

எதுக்கெடுத்தாலும் உங்க கிட்ட ஒரு பதில் இருக்கு.. எப்படிங்க இப்படி?

:)

சரி அதை விடுங்க கேட்குற கேள்விக்கு ஒழுங்க ஒத்த வரில பதில் சொல்லனும் ஒகே? ஐ மீன் ஜஸ்ட் ஒன்லி ஒன் வோர்ட் ஆன்ஸர்ஸ் ஒகே ?
ஒகே..

உங்களுக்கு கவிதை எழுத வருமா?

வராது…

ஏன்?

இப்ப கவிதை எழுத வருமா'னு கேட்பீங்க, அப்புறம் கதை எழுத வருமா'னு கேட்பீங்க, கடைசியில என்னை வச்சி படம் எடுக்க சொல்லுவீங்க.. தேவையா இது? ஆரம்பத்திலேயே ஒன்னும் தெரியாது'னு தன்னடக்கத்தோட சொல்லிட்டோம்'னா பின்னால் கோர்ட் கேஸு'னு அலைய தேவலை பாருங்க..

உங்களுக்கு ஒரு தபா சொன்னா புரியாதா? ஜ ஜஸ்ட் நீட் ஓன்லி ஒன் வோர்ட் ஆன்ஸர் டார்லிங்…

அய்யே என்ன'ங்க இது டார்லிங் பிரில் இங்க்'னு எனக்கு வெக்கமா இருக்குங்க…

இதோடா, சரி அடுத்த கேள்வி..

உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்தது உண்டா?

ஒ தமிழ்'ல நாலு, கொல்டி'ல ரெண்டு, மல்லு'ல ரெண்டு, மஹாராஸ்டிரா'ல ஒன்னு, கன்னடத்துல ஒன்னு', வெளிநாட்டுல ஜந்து'னு, இருந்தாங்க, ஆனா பாருங்க அத்தனை பேருக்கும் நான் அவங்க பாய் பிரெண்டா இல்லாம போயிட்டேன்…

மொக்கை டூ பீ தொடரும்…
கோப்ஸ்

17 comments:

Porkodi (பொற்கொடி) said...

aha ramarajan poto veraya!!!

Porkodi (பொற்கொடி) said...

//அய்யோ அது ரொம்ப ஈஸியா இருந்து இருக்குமே..

அட ஏங்க நீங்க வேற, தக்குடு மாதிரி டாலண்டா இங்கி பிங்கி பாங்கி போட தெரியலங்க எனக்கு, அது மட்டும் இல்லாம வைஷ்னவி மாதிரி ஒரு பச்சைக்கிளி பாப்பா வேற பக்கத்துல இல்லை.. சோ, என்னால ஒழுங்க கதை எழுத முடியல பரிட்சைல, அதனால 50 ய தாண்ட முடியல..

அது யாருங்க தக்குடு, வைஷ்னவி? லவ்வர்ஸா?

black moon

அப்படினா?

பிலாக், அப்பாவி தங்கமணி, tag, பொண்ணு பார்க்க, உங்க வீடு, பால்க்காரன், சன் டிவி, நீங்க, நான், இந்த மொக்கை எல்லாமே ஒரு கறுப்பு நிலா'ங்க…

சுத்தமா புரியல காலை'ல 10 மணிக்கே இப்படியா? Btw, என் ஆத்தா டிபன் கொடுத்தாளா உங்களுக்கு?

ஒ பல்லு டாக்டர் மாதிரி கொஞ்சம் எட்டி என் வாய்க்குள்ள பாருங்க , 3 ஈடூ இட்லி, 2 தட்டு கேசரி எல்லாம் தெரியும்…

உங்க கிட்ட ஒன்னு பேச முடியல எதுக்கெடுத்தாலும் ………

ஆண்டவா
//

ஆண்டவா!!!!! rotfl gops!

Porkodi (பொற்கொடி) said...

//ஜ ஜஸ்ட் நீட் ஓன்லி ஒன் வோர்ட் ஆன்ஸர் டார்லிங்…//

டாருலிங்கு? யாரு நீங்க? இந்த ஆச வேறயா இன்னும், ஹைய்யோ ஹைய்யோ!

Anonymous said...

//பக்கம் பக்கமா நான் எழுதறனால, கட்டு கட்டா பேப்பர் காலியாகுதுனு எங்க காலேஜ் எக்கானாமி தலை, என்னை மட்டும் எல்லா கேள்விக்கும் ஒத்த வரி'ல விடை அளி'னு எல்லா கேள்விக்கும் சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்'னு கொடுத்துட்டாரு.. //

//அடுத்த தபா வரும் போது ஒரு MRF heavy duty டயர் ஒன்னு வாங்கியாந்துறேன்… பார்க்க பெருசா இருக்கும்//

//தமிழ்'ல நாலு, கொல்டி'ல ரெண்டு, மல்லு'ல ரெண்டு, மஹாராஸ்டிரா'ல ஒன்னு, கன்னடத்துல ஒன்னு', வெளிநாட்டுல ஜந்து'னு, இருந்தாங்க, ஆனா பாருங்க அத்தனை பேருக்கும் நான் அவங்க பாய் பிரெண்டா இல்லாம போயிட்டேன்… //

உங்கள பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

எப்பா... மொக்கை தாங்க முடியல..

ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு வந்தாலும் அசத்துரிங்களே..

அடிக்கடி ப்ளாக் பக்கம் வாங்க தலைவா..

My days(Gops) said...

@கொடி:- //aha ramarajan poto veraya!!!//


இவர மறக்க முடியுமா :)

//டாருலிங்கு? யாரு நீங்க? இந்த ஆச வேறயா இன்னும், //
ஏதோ, டார்லிங்க்'க்கு ஆசைப்பட்டா தான் ஏதாவது லிங்க் இல்லாட்டி அட்லீஸ்ட் ஒரு "இங்க்" யாவது கிடைக்கும்'னு ஒரு பேராசை

My days(Gops) said...

@இந்து :- //உங்கள பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? //

manufactured defect nu அதான் சொன்னோம்ல

//ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு வந்தாலும் அசத்துரிங்களே//
ஆபிஸ்'ல ஆடிட்டர் வந்துட்டாங்க.. சோ கொஞ்சம் வேலை பார்க்க வேண்டியதா ஆகிடுச்சி :) .. இனி அடிக்கடி வருவோமாக

PPattian : புபட்டியன் said...

ராமராஜன் ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்காரு..

டேய்.. அட சிரிக்காதடா.. நிஜம்மாத்தான் சொல்றென்.. அட இவ்ளோ சத்தமா சிரிக்காதடா.. டேய்..டேய்ய்ய்ய்..

LK said...

அண்ணன் ரொம்ப சூப்பரா எழுதறீங்க.. கலக்குங்க . வாழ்த்துக்கள்

//தக்குடு மாதிரி டாலண்டா இங்கி பிங்கி பாங்கி போட தெரியலங்க எனக்கு, அது மட்டும் இல்லாம வைஷ்னவி மாதிரி ஒரு பச்சைக்கிளி பாப்பா வேற பக்கத்துல இல்லை.. சோ, என்னால ஒழுங்க கதை எழுத முடியல பரிட்சைல, அதனால 50 ய தாண்ட முடியல..

அது யாருங்க தக்குடு, வைஷ்னவி? லவ்வர்ஸா?

black moon

அப்படினா?

பிலாக், அப்பாவி தங்கமணி, tag, பொண்ணு பார்க்க, உங்க வீடு, பால்க்காரன், சன் டிவி, நீங்க, நான், இந்த மொக்கை எல்லாமே ஒரு கறுப்பு நிலா'ங்க…//

இது நான் ரொம்ப ரசிச்ச இடம்

Anonymous said...

hm
hm
hm....

nadakkatum..

nasavelaigal...

engium Terrora????

am escape........

My days(Gops) said...

பிபட்டியன் :- அண்ணா, அழகான சிரிப்பு :)

My days(Gops) said...

//அண்ணன் ரொம்ப சூப்பரா எழுதறீங்க.. கலக்குங்க . வாழ்த்துக்கள்//

நன்றிங்க LK இங்க வந்ததுக்கும் மற்றும் உங்கள் கருத்துக்கும்

நன்றி:)

My days(Gops) said...

//nadakkatum..

nasavelaigal...

engium Terrora????
//

காம்ப்ளேன் பாய், நன்றிங்க ....

Aarthy said...

good imagination.
But gopi real time la epdi blade potratheenga :)

then she will run away....

Regards,
Aarthy.

அப்பாவி தங்கமணி said...

//இப்படி கற்பனை கழுதைய எதுவும் தட்டி விட்டா நேரா அது எங்கயாவது போய் "என் புருஷன் தான் , எனக்கு மட்டும் தான் ரேஞ்சுல எவளையாவது அள்ளிக்கிட்டு வந்துட்டா.. //
மனம் போல் அமைய வாழ்த்துக்கள்... ஹா ஹா ஹா

//ஸ்ஸ்ஸ்ப்பா, நீங்க எவர்சில்வர் கடையில எதுவும் பார்ட் டைம் வேலை பார்க்குறீங்களா?//
சான்சே இல்ல...சூப்பர் timing

//ஒ நீங்க அத சொல்லுறீங்களா, non stop'ah பேசுறது manufactured defect ங்க.. செய்யறதுக்கு ஒன்னும் இல்லை… //
அதான் எங்களுக்கு தெரியுமே... ஹி ஹி ஹி

//அது யாருங்க தக்குடு, வைஷ்னவி? லவ்வர்ஸா?//
நான் ஒண்ணும் சொல்லலப்பா... உண்மை அதா பேசுது

//ஒ பல்லு டாக்டர் மாதிரி கொஞ்சம் எட்டி என் வாய்க்குள்ள பாருங்க , 3 ஈடூ இட்லி, 2 தட்டு கேசரி எல்லாம் தெரியும்…//
3 ஈடு இட்லியா... நான் செய்யலப்பா?

//பிலாக், அப்பாவி தங்கமணி, tag, பொண்ணு பார்க்க, உங்க வீடு, பால்க்காரன், சன் டிவி, நீங்க, நான், இந்த மொக்கை எல்லாமே ஒரு கறுப்பு நிலா'ங்க…//
இந்த ரேஞ்சுல போனா... மொதல்ல சொன்ன கற்பனை பொண்ணு தான் நிச்சியமா... ஹா ஹா அஹ

//அப்படியா, சரி வுடுங்க அடுத்த தபா வரும் போது ஒரு MRF heavy duty டயர் ஒன்னு வாங்கியாந்துறேன்… பார்க்க பெருசா இருக்கும் ஒகே…//
அதுலயே ரெண்டு சாத்து சாத்துவாங்க...ரெடிஆ இருங்க...

//ஆனா பாருங்க அத்தனை பேருக்கும் நான் அவங்க பாய் பிரெண்டா இல்லாம போயிட்டேன்… //
செம கலக்கல் பஞ்ச்... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி said...

சான்சே இல்ல...சூப்பர்... சீக்கரம் அப்புறம் என்ன ஆச்சுனு சொல்லுங்க

தக்குடு said...

Adappaavi makka, yennai vechu inga yella payalukalum cmdy panni kuthaduchurukkaaleyy!!!...:))

அப்பாவி தங்கமணி said...

Post pottu oru varusam aaga innum rendu maasam irukke Thakkudu... ippave yen comment potta...:)))))))