Thursday, May 20, 2010

fwd மெஸேஜாம்

ஒரு நாளைக்கு எப்படியும் ஒரு 20 எஸ்எம்எஸ் வந்து சேருது நம்ம ரோமிங் லைன்'ல.. உட்கார்ந்து படிச்சிட்டு யோசித்து பார்த்தா, இந்த மெஸேஜ் எல்லாம் யாரு மொதல்ல அடிச்சி யாருக்கு அனுப்பி இருப்பாங்க? இதை இவருக்கு தான் அனுப்பனும்'னு யோசிச்ச அந்த நபர், அனுப்பினத்துக்கு அப்புறம் ஒரு மாசம் கழித்து யோசித்து பார்த்து இருப்பாரா எதுக்கு அனுப்புனோம்'னு? இல்ல என்ன தான் அனுப்புனோம்'னு நினைச்சாச்சும் பார்த்து இருப்பாரா?

எது எப்படியோ நாம அனுப்புற மெஸேஜ் மத்தவங்களுக்கு புரியுதோ இல்லையோ, செல் போன் கம்பெனிகாரனுக்கு லாபமா இருக்கே... அவனுக்கு நஷ்டமா இருந்தா அப்புறம் நமக்கு எப்படி ஒ.சி.'ல எஸ்.எம்.எஸ் கிடைக்கும்…

அதனால குறை சொல்லாம, நூற்றுக்கும் மேலான மெஸேஜ்'ல இருந்து கொஞ்சத்தை வடிக்கட்டி டிகாஷன் கம்மியாக ரசித்ததை இதோ என் பயணத்தில்
நட்பு என்பது நடிப்பல்ல அது நாடி துடிப்பு

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..

மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings

காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உண்ர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….

உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்

செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

தண்ணி மேல போனா தான்டா அது ஷிப். தண்ணி அடிச்சா தான்டா அது பிரண்ட்ஷிப்… so keep drinking

உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல

மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெறியது.. So don’t worry about anything..

என் இதயத்தில் ஒட்டை என்று டாக்டர் சொன்னார்..பாவம் அவருக்கு என்ன தெரியும் அது என் நண்பன் வரும் வாசல் என்று..

வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன்

ஆயிரம் சொல்லுங்க , அட என்னங்க ஆயிரம் சொல்லுங்க'னு ஒரு பேச்சுக்கு சொன்னா அதுக்குனு ஆயிரம்'னு சொல்லனுமா? வர வர எல்லாதுக்கும் தமாசு ஜாஸ்தி ஆகிடுச்சி :)

இது மாதிரி தமிழ்'ல fwd sms வந்து படிச்சாலே ஒரு தனி இன்பம் தான்… அந்த ஒரு செகன்ட் முகத்துல ஒரு சிரிப்பு வரும் பாருங்க priceless

மொக்கையுடன்
கோப்ஸ்


இந்த வாரம் மிகவும் ரசித்த பாட்டுகள்

பானா காத்தாடி - தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே.. பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே. கோர்த்ததை பூ ஏத்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே. வார்த்தையில் தான் பார்வையில் தான் வாயிக்கலாம் ஒர் வாழ்க்கையை.யாரோடு யாறென்று யார் தான் சொல்வாரோ.

மெட்ராஸ் பட்டினம் - வாம்மா துரையம்மா

7 comments:

G3 said...

//இது மாதிரி தமிழ்'ல fwd sms வந்து படிச்சாலே ஒரு தனி இன்பம் தான்… அந்த ஒரு செகன்ட் முகத்துல ஒரு சிரிப்பு வரும் பாருங்க priceless
//

தத்துவ மெசேஜுக்கே புன்னகையா ??? ரைட்டே :)))))

G3 said...

சமீபத்துல அதிகமா சிரிக்க வைச்ச மெசேஜ்..

Arranged marriage is When u r walking, unfortunately a snake bites u

Love marriage is going to the snake and saying.. kothu.. kothu...

:)))))

Anonymous said...

//மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும்//

தலைவா எங்கயோ போயிட்டீங்க..

எனக்கு வந்த ஒரு SMS..

"கோவிலுக்கு சென்றேன் உனக்கு அர்ச்சனை செய்ய..
குருக்கள் கேட்டார் என்ன நட்சத்திரம் என்று..
அவருக்கு எப்படி தெரியும்?
நீ ஒரு நிலவு என்று?"

நல்லா இருக்கா?

Anonymous said...

இன்னொரு sms

"உன்கிட்ட ஒரு உண்மை சொல்லணும்..
அத சொன்னா என்ன விட்டுப் போய்டுவ.
ப்ளீஸ் என்ன விட்டுப் போகமாட்டேனு சொல்லு.
உன்ன பிரிஞ்சு என்னால இருக்க முடியாது.
அந்த உண்மைய நீ எப்படி தாங்கிக்க போறியோ தெரியல..
என்ன விட்டு போக மாட்டேனு நம்மம்ம்பி இந்த உண்மைய சொல்றேன்..

"அம்மன் கோவில்ல பொங்கல் குடுக்குறாங்கலாம்..
ஏய் ஓடாத டா தின்னிப்பண்டாரமே.."

Aarthy said...

Actually this blog is not of gopi's style (mokkai) as its abt fwd messages.
i do like sms like these and vijay mpvies release aagum pothu we will get good laughter msges :)

Regards,
Aarthy.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் டிகாசன்....கொஞ்சம் பால் சேத்துடுங்க... இன்னும் தூக்கலா இருக்கும்... ஹி ஹி ஹி