Thursday, June 17, 2010

1st?

ராவணன் பார்த்தாச்சி.. படத்துல பெஸ்ட் மலையும் மழை சார்ந்த இடமும் தான்.. மணிரத்னம் கலக்கிட்டாரு சார்.... ஏ.ஆர்.ஆர் சான்சே இல்லை... பிண்ணனி இசை டாப்....

பார்த்துட்டு சொல்லுங்க எப்படி'னு .. எனக்கு படம் ஒகே

Thursday, June 10, 2010

கோவா

கோ என்பது

விடுமுறை நாள் வெள்ளி காலை'ல சுமார் ஒரு பத்து மணிக்கு 45கிமீ தள்ளி இருக்கும் ஒரு இடத்துக்கு பிரியாணி சாப்பிட கூட்டிட்டு போடா'னு நம்ம ரூம் மேட்ஸ் செம டார்ச்சர் கொடுத்துட்டாங்க.... எனக்கோ அடிக்கிற வெயில்'ல அவ்வளவு தூரம் போறது கூட கஷ்டம் இல்லை, பட் பார்க்கிங் தான் பயங்கர பிரச்சினை.. கடை வாசல்'ல கஷ்டமா மூனு கார் நிறுத்துற இடத்துல அவனவன் தாராளமா ஜந்து கார் நிறுத்தி இருப்பாங்க.. குறைந்தது அட்லீஸ்ட் ஒரு அரை மணி நேரம் ஆச்சும் காவல் காத்து கிடக்க வேண்டியது இருக்கும்..... அத நினைச்சாலே பிரியாணி ஆசை அப்படியே சாப்பிடாம அப்பீட் ஆகிடும்.... இருந்தாலும் பசங்கள கூட்டிட்டு போகாட்டி அது உள் நாடு கலவரம் ஆகிடும்.. சரி'னு கிளம்பி பெட்ரோல் போட்டுட்டு போயிடுவோம்'னு பெட்ரோல் பங்க் நெறுங்கும் போது, ஒருத்தி போன் போட்டு ராசா எனக்கு பசிக்குது ஒரு KFC வாங்கிட்டு வந்து தாரியா'னு கெஞ்ச, தாய்குலமாச்சே அதுவும் காவேரி கரை ஊருக்காரன் வேற, ரொம்பவே இழகுன மனசு ( எனக்கு தான்), சரி'னு சொல்லி லைன்'ய கட் பண்ணிட்டு மொபைல்'ல கார் டாப்'ல வச்சிட்டு பெட்ரோல் அடிக்க ஆரம்ப்பிச்சிட்டேன்..( இந்த ஊருல தன் கையே தனக்கு உதவி திட்டம் தான்). அடிக்கும் போது, அங்க வேலை பார்க்கிற பெங்காலி நாட்டுக்காரனிடம் கொஞ்ச நேரம் மொக்கைய போட்டுட்டு, எல்லாம் முடிஞ்சத்துக்கு அப்புறம் காசை கொடுத்துட்டு கிளம்பி நல்லா சிரிச்சி பேசிக்கிட்டு போயிக்கிட்டு இருந்தோம்.. எக்ஸ்பரஸ் வே'ல வண்டி வேகம் 140 கிமீ தொடும் போது டமால் ஒரு சத்தம் என்னடா 'னு வண்டியா ஸ்லோ பண்ணி பார்த்தா ஒன்னுமே இல்லை... வண்டில இருந்து என்னமோ விழுந்த மாதிரி இருந்தது ஆனா எல்லாம் இருந்தது.... உடனே கூட இருந்த ஒருத்தன், டேய், கரக்காட்டகாரன் படத்துல வர மாதிரி டய்ர் எதுவும் ஒடி இருக்க போகுது பார்த்துக்க டா'னு சொல்லவும், டேய் விழுந்தது என் மொபைல் டா அப்படினு வண்டிய ஓரமா நிறுத்தி, முட்டைய வச்சா ஆம்லெட் ஆகுற 50+ அடிக்கிற வெயில்'ல, இறங்கி கிட்டத்தட்ட இரெண்டு கிமீ நடந்து மொபைல்'ல தேடுனா, அது சர்ப் எக்ஸல் மாதிரி நீங்க என்னத்த தேடுனாலும் கிடைக்காது'னு பல்லை காட்ட ஆரம்பிச்சிடுச்சி.. என்னத்த சொல்ல.. நம்ம அப்பாவி தங்கமணி செஞ்ச இட்லி மாதிரி கனத்த இதயத்தோட வண்டி'ல ஏறுனா, எனக்கு சூடு தாங்க முடியல கொஞ்ச நேரம் front ஸீட்'ல உட்கார்ந்து ஏசி காத்து வாங்கிக்கிறேன்'னு ஒரு தோழர் கெஞ்ச, நமக்காக வெயில்'ல மொபைல தேடி இருக்காரு சோ, உட்காருங்க ஆனா ஸீட்'ல இருக்கிர என் கூலிங் கிலாஸை எடுத்து ஓரமா வச்சிட்டு உட்காருங்க'னு கனிவா சொல்லிட்டு அப்படியே குடித்தண்ணிர் வாங்க போயிட்டு வந்து பார்த்தா நம்ம தோழ்ர் அக்கறையே இல்லாம என் கூலிங்கிலாஸ் மேல உட்கார்ந்து அதை உடைச்சிட்டாரு.. ஆசை ஆசையா வாங்குனது அம்பேல் ஆகிடுச்சி.. ஆக மொத்தம் வேண்டாம் வேண்டாம் பிரியாணி திங்க நான் வரல வரல'னு எவ்வளவு சொல்லியும் கேட்காம வழுக்கட்டாயமா என்னை இழுத்துட்டு போன என் அறை தோழர்கள், பிரியாணி சாப்பிட்டு தான் என்னை விட்டாங்க.. நான் தான் பாவம் சோகத்துல ஒன்னுமே சாப்பிடாம, கார்லையே இருந்துட்டேன்... எப்படிங்க சாப்பிட தோணும் , அதான் ஏற்கனவே 105 கேடி அழுத்துட்டேனே :( உன் குத்தமா என் குத்தமா யாரை சொல்லி நான் அழுவேன் போங்கடா போங்க....

1.பிரியாணி சாப்பிட போகாம இருந்திருந்தா என் மொபைல் + கூலிங்கிலாஸ் அப்படியே இருந்து இருக்கும் ல?

2.தாய்குலம் KFC கேட்டு போன் பண்ணாம இருந்திருந்தா நான் மொபைல்'ல கார் டாப்புல வச்சி இருக்க மாட்டேன்'ல?

3.அந்த பெங்காலி' கூட மொக்கை போடாம இருந்திருந்தா , என் மொபைல் தப்பிச்சி இருக்கும்'ல

4.ஏசில உட்காரனும்'னு சொன்ன நண்பர்க்கிட்ட கூலிங்கிலாஸை எடுத்துட்டு உட்கார சொல்லி இருந்திருந்தா அட்லீஸ்ட் கூலிங்கிலாஸாச்சும் தப்பி இருக்கும்....

போன பஸ்'க்கு கை காம்மிச்சா நிக்கவா போகுது..... யாம் அறியோம் :)
வா என்பது

இது வரைக்கும் 18 மொபைல் மாத்தியாச்சி இந்த 7 வருஷத்துல.... அதுல தொலைந்து போனது 7 மொபைல், என் கவனக்குறைவால் உடைந்தது 3 மொபைல், சச்சின் டெண்டுல்கர்க்காக உடைத்தது ஒரு மொபைல்...

ஆரம்பத்துல இருந்தே எனக்கு பிடிக்காத மொபைல் அது எதுனா அதுதான் பிலாக் பெர்ரி. டைப் ரைட்டர் மாதிரி கீ பேட், ஒரு எஸ்.எம்.எஸ் அடிக்க ஒரு மணி நேரம் ஆகும், டூ மச் அப்பிளிக்கேஷன்ஸ்., சட்டுனு ஒரு பாட்டு காபி பேஸ்ட் பண்ண முடியாது, பேட்டரி சார்ஜ் பன்ணிக்கிட்டே இருக்கனும், எங்க போனாலும் சார்ஜர்'ய தூக்கிக்கிட்டு அழையனும், இன்னும் இப்படி பல இருக்கு.. என்ன இருந்தாலும் நோக்கியா மாதிரி ஒரு யூசர் பிரண்ட்லிய அடிச்சிக்கவே முடியாதுங்கற முடிவோடு முடிவெடுத்து முடிவெட்டாம second hand மொபைல் ஸ்டோர்'க்கு போயி ஒரு N97 Pearl White colour பிடித்து போய் options'ah செக் பண்ணிக்கிட்டு இருக்கும் போது திடீர்'னு ஒரு பல்ப் மண்டைக்குள்ள எரிய ஆரம்பிச்சி, எப்போதுமே பிடிச்சதையே வாங்கிட்டு இருக்கோமே, for a change, இந்த தபா பிடிக்காததை வாங்கி use பண்ணி பார்ப்போமே'னு சட்டுனு அடுத்த பல்ப் எரியும் முன்னாடி ஒரு பிலாக்பெர்ரிய வாங்கிட்டு இடத்தை காலி செஞ்சிட்டேன்...... ரொம்ப complicated'ah இருக்கு பிலாக்பெர்ரி... இருந்தாலும் பிடிக்காதது கூட காலம் தள்ளுறது வித்தியசமா இருக்கு..

மனம்போல் ஜமாய் பிடிக்கலனாலும் என்ஜாய்..

டிஸ்கி:- எல்லா விஷயத்திலும் இது மாதிரி ட்ரை பண்ண முடியாது'னு எனக்கு நல்லாவே தெரியும்

என்றும் மொக்கையுடன்
கோப்ஸ்..