Sunday, January 23, 2011

நேற்றைய பொழுது நெஞ்சோடு - 1


ரொம்ப நாள்ளாச்சி இந்த பக்கம் வந்து... யூசர் ஜடி , பாஸ்வேர்ட் - பெயில்வேர்ட் ஆகுறத்துக்கு முன்னாடி ஒரு டச்சப் பண்ணிக்கலாம்'னு இதோ ஒரு சலாம் குலாம்......

கடந்த ஆறு மாசத்துல எவ்வளவோ மாறுதல்கள்... ஜீலை மாசம் தாய்நாட்டுக்கு போயிட்டு வந்த அடுத்த நாள் என்னுடைய மேல் அதிகாரி, நண்பா எனக்கு கழுத்து வலி ஜாஸ்தியா இருக்கு ஊருக்கு போய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டு அப்படியே ரமதான் பண்டிகையும் முடிச்சிட்டு வந்துடறேன்'னு ஓவர் த போன் மூலமா சொல்லிக்கிட்டு எஸ் ஆகிட்டாரு.. நானும் ஊருக்கு போயிட்டு வந்த வீட்டு சிக்கு'ல (அதான் homesick) கிக்கே இல்லாம சரி'னு சொல்லிட்டு ஆஜர் ஆகிட்டேன்.....ஆனா பாருங்க, (இல்ல ஆவனா இல்லாடியும் உங்கனால பார்க்க முடியாது'னு நான் சொல்ல'ல) ஊருக்கு போனவரு போனவராவே இருந்துட்டாரு....... இதோ வரேன் அதோ ஏர்ப்போர்ட்'க்கு வந்துட்டேன் அப்படி இப்படி'னு டிகாஷன் போட்ட டகால்டியா டால்ட்டா டப்பாவோட டாப்பா டபாச்சிட்டாரு...... கடைசி வரைக்கும், (உண்மைய சொல்ல போனா, ஆரம்பத்தில இருந்தே) அவரு வரவே இல்லை.......காரணத்தையும் சொல்ல'ல ஒன்னத்தையும் சொல்ல'ல....

கம்பெனி'ல எவன் என்ன எப்ப பார்த்தாலும், நேரம் காலம் தவறாம, என்னாச்சி அவருக்கு? இன்னும் வரலையா? போன் பண்ணி பார்த்தியா'னு சேம் டயலாக் சேம் பிலட்.... " (நல்லா தான் இருந்தாங்க, திடிர்'னு நெஞ்சி வலிக்குது, தண்ணி கொண்டுவா'னு சொன்னாங்க" ஒரு படத்துல டேப் ரிகார்டர்'ல ரிப்பீட் செய்வாங்களே அது மாதிரி தான் இங்கையும்),... என்ன கொடுமை சார் இது....

பொறுமை தாங்காம, நானும் 4 மாதம் கழிச்சி எல்லாத்துக்கும், அவரு இனிமேல் வரமாட்டாரு அப்படி'னு மெயில் தட்டிவிட்டா, கொய்யால எல்லாரும் சொல்லி வச்சா மாதிரி, டயலாக்கை சேஞ்ச் பண்ணி, "ஏன் அவரு வராம விட்டாரு? உடம்பு ரொம்ப முடியாம போச்சோ? எனக்கு அப்பவே தெரியும் அவரு வர மாட்டாருனு, டயலாக்கை மாற்றி சேம் பிலட் ஆக்கிட்டாங்க.... என்ன இன்னொரு கொடுமை சார் இது....

போங்கடா போங்க'னு மொக்கை போடுற நானே இப்ப இவங்க மொக்கை தாங்காம எஸ் ஆகிடுறது.....

இவ்வளவையும் பொறுத்துக்கிட்டு, ஒரு நாள் பொறுமை தாங்காம அவருக்கு போன் போட்டா, தம்பி எனக்கு வேலைக்கு வர விருப்பம் இல்லை... நீயே மேனேஜ் பண்ணிக்கோ'னு கூலா சொல்லி ஆப் ஆகிட்டாரு.... கம்பெனியிலும், அவரை வேலைய விட்டு தூக்கிட்டோம், அவருக்கு பதிலா நீயே இருந்துக்கோ'னு சொல்லிட்டாங்க...... திறமையை காட்டி மேல வரத்துக்கும், இன்னொருவருக்கு பதிலா அந்த இடத்துக்கு போறத்துக்கும் குமுதத்தில் வர 6 வித்தியாசத்துகும் மேல நிறைய வித்தியாசம் இருக்குங்கோ...

எது எப்படியோ கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.....

2008'ல ஊருக்கு போய் படிக்க போறேன்... அதனால 1 வருஷம் கம்பெனி'ல லீவு கேட்டு அவரு கிட்ட approval'ku போன என்னை, 3 மாசம் வெயிட் பண்ணு, நான் ஊருக்கு லீவுக்கு போயிட்டு வந்துடறேன், அதுக்கு அப்புறம் நீ போ'னு சொன்ன பேச்சை கேட்டு, நானும் ஒகே சொல்லி வெயிட் பண்ணி அதுக்கு அப்புறம் வேறு ஒரு காரணத்துகாக அந்த " படிக்க போறேன்" காரணத்தை தள்ளி போட வேண்டிய கட்டாயம்... வாழ்க்கையில ஒரு சில மாற்றத்துக்கு காரணமே இருக்காது..... Whatever Happens, Happens for a reason...

அவரு நடத்துன நாடகத்துகாக, அவருக்காக நான் இங்க இருந்து வாங்கின 3 ஏர் டிக்கெட் இப்போ என் கணக்குல... நண்பேன்டா நீ என் நண்பேன்டா........

எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா????????

டூ பி தொடரும்.

கோப்ஸ்....